ரஜினியின் 2.0 பட இசை வெளியீட்டுக்கு 12 கோடி பட்ஜெட்

ரஜினியின் 2.0 பட இசை வெளியீட்டுக்கு 12 கோடி பட்ஜெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 stillsரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் ‘2.0’ படத்தை லைகா புரொடக்‌ஷன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இதன் 3டி மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவினை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழாவுக்கு மட்டும் ரூ.12 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாம் லைக்கா.

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், டிரையிலர் வெளியீட்டை டிசம்பர் மாதம் சென்னையிலும் நடத்தவுள்ளனர்.

அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 26ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

பாஜக பிரமுகர் மூக்கை உடைத்த சந்தானம் மீது மூன்று வழக்கு

பாஜக பிரமுகர் மூக்கை உடைத்த சந்தானம் மீது மூன்று வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamதமிழ் சினிமாவின் பிரபலமான காமெடியன் சந்தானம்.

இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,40. இவர் அதே பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளார் சந்தானம்.

இதன்படி சண்முகசுந்தரத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் சண்முகசுந்தரம் கட்டிட பணியைத் தொடங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக சந்தானம் அவரிடம் கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் காமெடி செய்து வந்தாலும் நிஜத்தில் கராத்தே கற்றவர் சந்தானம்.

எனவே சண்முகசுந்தரத்தை மற்றும் அவரது வக்கீல் பிரேம் ஆனந்ததை கராத்தே பாணியில் தாக்கியுள்ளார்.

எனவே சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார்.

அதுபோல் சந்தானமும் காவல் நிலையத்தில் புகார் செய்து, தனக்கும் காயம் ஏற்பட்டதாக கூறி வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சண்முகசுந்தரம் பாஜ கட்சியை சேர்ந்தவர் என்பதால், சந்தானம் சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையை பாஜக பிரமுகர்கள் முற்றுகையிட்டனர்.

மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மெர்சல் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்ப்பவரா நீங்கள்; இதோ கிப்ட்

மெர்சல் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்ப்பவரா நீங்கள்; இதோ கிப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal plant muthuram cinemaஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே படத்தை திரையிடும் தியேட்டர்கள் ரசிகர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து வருகிறது.

முக்கியமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் முதல்நாள் முதல் காட்சியன்று ஆளப்போறான் தமிழன் மற்றும் மெர்சல் அரசன் ஆகிய இரு பாடல்களை மட்டும் இரண்டு முறை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு பரிசையும் ரசிகர்களுக்கு தரவிருக்கிறார்களாம்.

அதாவது அந்த காட்சிக்கு வரும் ரசிகர்களுக்கு மட்டும் செடி கன்றுகளை இலவசமாக தரவிருக்கிறார்களாம்.

கார்த்திக்-கௌதம் இணையும் படத்தலைப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

கார்த்திக்-கௌதம் இணையும் படத்தலைப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mr chandramouli title posterமுதன்முறையாக கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் இணைந்து நடிக்கின்றனர்.

அப்பா, மகன் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படத்தை திரு என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார்.

இதில் நாயகிகளாக ரெஜினா, வரலட்சுமி இருவரும நடிக்க, காமெடியில் வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘Mr.சந்திரமௌலி’ என தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Karthick Gowtham duo new film titled as Mr Chandramouli Sivakarthikeyan revealed

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்; உருவாகுகிறார் ஜூனியர் சீயான்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்; உருவாகுகிறார் ஜூனியர் சீயான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala and vikramதெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இதன் ரீமேக் உரிமைக்கு தென்னிந்திய அளவில் பலத்த போட்டி உருவானது. தமிழ், மலையாளம் மொழி உரிமையை கேரள நிறுவனமான இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் பெற்றது.

இதில் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார்.

இதன் இயக்குநர் யார் என்பது இதுவரை சஸ்பென்ஸாக இருந்தது.

தற்போது அந்த சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார் விக்ரம்.

தனக்கு முதல் படமான சேது படத்தில் திருப்புமுனையை கொடுத்த இயக்குநர் பாலாவிடம் தன் மகனை ஒப்படைத்துள்ளார் விக்ரம்.

இதில் சேது படத்தில் ஏற்ற சீயான் கேரக்டரே இன்று விக்ரமின் அடைமொழியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலா இயக்கிய பிதாமகன் படம் மூலம் விக்ரம் தேசிய விருதை வென்றார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Bala to direct Vikram son Dhruv in Arjun Reddy Tamil remake

மோடியிடம் ரஜினி-கமல் பேசினால் சினிமா காப்பாற்றப்படும்… பிரபல இயக்குனர்

மோடியிடம் ரஜினி-கமல் பேசினால் சினிமா காப்பாற்றப்படும்… பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alphonse puthrenஇந்திய தலைநகர் புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டன.

அப்போது சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சினை குறித்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துக்கு என் சந்தேகங்கள்

1 . ஏன் ஜிஎஸ்டியில், சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கின்றன?

2 . எப்படி சினிமாவும் சூதாட்டமும் ஒன்றாகும்?

3 . தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? சீட்டாட்டம் ஆடினால் சினிமா எடுத்துவிட முடியுமா?

4 . தாயம் உருட்டும் நேரத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இரண்டுக்கும் ஒரே நேரம் முயற்சி போதுமா?

தமிழ் சினிமா துறையில் நீங்கள்தான் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகள். பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்ஜெட்டில் இருக்கும் இந்த தவறை குறித்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் செய்யும் பேச்சுவார்த்தை மொத்த திரைத்துறையை காப்பாற்றும்.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows