தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில மாதங்களுக்கு முன் தன் ரசிகர்களின் வேண்டுகோளுக்குகிணங்க ரசிகர்கள் சந்தித்தார் ரஜினிகாந்த்.
அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது போர் வரும்போது சந்திப்போம். அதுவரை அவரவர் வேலையை பார்ப்போம் என 2.0 மற்றும் காலா படங்களில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.
இனி ரசிகர்களை அடுத்த கட்டமாக எப்போது சந்திப்பார் ரஜினி? என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் இவரின் 67-ஆவது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ரசிகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில் தன் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.