தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘2.0’.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
லைக்கா நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.
நவம்பர் 20ந் தேதி மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெறுகிறது.
லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) இதனை பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர்.
இவ்விழாவை இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
இவ்விழாவில் ரஜினிகாந்துடன் லைக்கா நிறுவனர் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மும்பையை நடந்து வருகிறது.
இதனயைடுத்து விரைவிலேயே தமிழகத்திலும் பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.