பாசமான விவசாயி… பக்ரீத் விமர்சனம் (3.5/5)

கதைக்களம்…?

விக்ராந்த் அவரது அண்ணன் ஜெயச்சந்திரன்.

அண்ணன் தம்பி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

விக்ராந்த அவரது மனைவி வசுந்த்ரா. அவர்களுக்கு ஒரு 5 வயது மகள்.

விவசாயம் செய்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்கிறார். ஒருமுறை கடன் வாங்க வேண்டி ஒரு முஸ்லீம் பெரியவரிடம் செல்கிறார்.

அங்கு எதிர்பாரா விதமாக அவரிடம் உள்ள குட்டி ஒட்டகத்தை தன் மகளுக்காக வாங்கி வருகிறார். மகளும் அதை அன்பாக வளர்த்து வருகிறார்.

ஆனால் சென்னையில் உள்ள தட்ப வெப்ப காரணமாக ஒட்டகத்தால் இங்கு வாழ முடியவில்லை. அதன்பின்னர் விக்ராந்த் என்ன செய்தார்? ஒட்டகம் என்ன ஆனது? மகள் ஆசை என்னானது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்.?

இதுவரை ரொமான்ஸ், ஆக்சன் என வலம் வந்த விக்ராந்த் இதில் வித்தியாசமாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரு யதார்த்த விவசாயியாகவும், அப்பாகவும், நல்ல கணவனாகவும், பாசமுள்ள மனிதராகவும் என பன்முக நடிப்பை காட்டியுள்ளார் விக்ராந்த். சூப்பர் ப்ரோ.

விவசாயியின் மனைவியாக வசுந்த்ரா. கிராமத்து இல்லத்தரசியாக சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

இவர்களது குழந்தையாக வரும் ஷ்ருத்திகா அழகு தேவதை. அவரின் கண்களும் அவர் பேசும் மழலை பேச்சும் கொள்ளை அழகு.

விக்ராந்தின் அண்ணன் ஜெயச்சந்திரன். பாசத்திலும் கோவத்திலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

லாரி டிரைவர், லாரி கிளீனர், போலீஸ்காரர்கள், முஸ்லீம்பாய், பாரீன்காரன் என அனைவரும் கச்சிதம்.

மோக்லி, ரோகித் பதக் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையில் பாடல்கள் ப்ளஸ். ’ஆலங்குருவிகளா …’ பாடலை கெட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது.

விக்ராந்த் ஒட்டகத்தோடு சேர்ந்து செல்லும் ராஜஸ்தான் பயணம் நம்மையும் அழைத்து செல்கிறது. ஒளிப்பதிவும் சூப்பர்.

ரூபனின் எடிட்டிங்கில் தான் ஒரு குறை. 2ஆம் பாதியை சற்று குறைத்திருக்லாம்.

இயக்கம், ஒளிப்பதிவு என இரண்டையும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு.

ஆடு, மாடு, நாய்களை வீட்டில் ஒரு உயிராகவே சிலர் வளர்க்கின்றனர். அவர்களின் உணர்வுகளை திரையில் கொண்டு வந்துள்ளார்.

சில நேரம் அவை மனிதன் உயிரையும் காக்கும் என்பதையும் அழகாக காட்டியுள்ளார்.

பக்ரீத்.. பாசமான விவசாயி..

Leave a Reply

Your rate

Latest Post

Related News

விக்ராந்த நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும்…
...Read More
“M10 PRODUCTION” சார்பில் M.S.முருகராஜ் தயாரித்து…
...Read More