‘ஸ்பார்க் லைஃப்’ பான் இந்தியா படத்தில் விக்ராந்த் – மெஹ்ரீன் ஜோடி

‘ஸ்பார்க் லைஃப்’ பான் இந்தியா படத்தில் விக்ராந்த் – மெஹ்ரீன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பார்வையாளர்களிடத்தில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை பற்றிய ஒரு அற்புதமான அப்டேட்டை சுவராசியமான போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு வெளியாகிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கையில் முகமுடியுடன் விக்ராந்த் காணப்படுகிறார்.

தற்போது இதன் டீசருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இதில் மெஹ்ரீன் பிர்ஸாதா நாயகியாக நடிக்கிறார்.

இவர் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற F3 எனும் படத்தில் தனது வசீகரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் படமான இந்த படத்தின் மூலம் விக்ராந்த் நாயகனாக அறிமுகமாகிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறது. ‘ஹிருதயம்’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்த தனித்துவம் மிக்க த்ரில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படைப்புகள், உயர்தரத்துடன் சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாரிக்கிறது.

இந்த படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஸ்பார்க் லைஃப்

Vikranth Mehreen starring Spark L.I.F.E teaser on 2nd August

விஷால் அரங்கில் ‘ஜெயிலர்’ பாடல்களை திரையிட்டு கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

விஷால் அரங்கில் ‘ஜெயிலர்’ பாடல்களை திரையிட்டு கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் ஜூலை 28ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு இன்று வரை சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி இருக்கிறது.

தன்னை கழுகு என்பது போல சொல்லிக் கொண்ட ரஜினிகாந்த் யாரை காக்கா என்று குறிப்பிட்டார் என்பது தான் தற்போது கோலிவுட் ஹாட் டாபிக்.

இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் முக்கியமாக விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வருகின்றது.

இது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் பொள்ளாச்சி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் கிளை மன்றங்கள் இணைந்து அங்குள்ள விஷால் சினிமாஸ் என்ற திரையரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

மேலும் அந்த திரையரங்கில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் மற்றும் ஜெயிலர் இன்ட்ரோ ஆகிய காட்சிகளை திரையிட்டு ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்

Rajini fans celebrated Jailer songs at Vishal Cinemas

வேட்டையன் பராக்..; மிரட்டலான ‘சந்திரமுகி 2’ பட இன்ட்ரோ லுக்

வேட்டையன் பராக்..; மிரட்டலான ‘சந்திரமுகி 2’ பட இன்ட்ரோ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Raghava Lawrence’s Chandramukhi 2 first look poster release

இயக்குநர் ரஞ்சித் படத்திற்காக தன் டப்பிங் பணிகளை தொடங்கிய தினேஷ்

இயக்குநர் ரஞ்சித் படத்திற்காக தன் டப்பிங் பணிகளை தொடங்கிய தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தயாரிப்பாளர் என தனது பணிகளை பிசியாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித். ஒரு பக்கம் சீயான் விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். மற்றொரு பக்கம் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பாக வித்தியாசமான திரைப்படங்களை தனது தனது உதவியாளர்கள் மூலம் கொடுத்து வருகிறார் இயக்குனர் ரஞ்சித்.

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தற்போது தனது 2வது படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ‘தண்டகாரண்யம் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒரிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றிருக்கிறது.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்று இன்று முதல் ஜூலை 31 முதல் டப்பிங் பணிகள் துவங்கியிருக்கிறது படக்குழு.

இதில் தினேஷ், கலையரசன், ஷபீர், ரித்விகா, வின்சு, பாலசரவணன், யுவன் மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தினேஷ்

Dinesh started his dubbing for Thandakaaranyam movie

ஒரே நேரத்தில் மூன்று.; ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.150 கோடி.; கல்லா கட்டும் கார்த்தி படங்கள்

ஒரே நேரத்தில் மூன்று.; ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.150 கோடி.; கல்லா கட்டும் கார்த்தி படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார்.

கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், கார்த்தியின் இந்த 25 வது படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

K.E.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் (சூது கவ்வும், காதலும் கடந்து போகும்) புகழ் இயக்குநர் நலன் குமாரசாமியின் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இடையில், ஜப்பான் படத்தின் கடைசி பாடல் காட்சிக்காக நேரம் ஒதுக்கியுள்ளார். ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும் இந்த பிரம்மாண்டமான பாடலை படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது.

பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார்.

இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு, நடிகர் கார்த்தி நவம்பரில் தனது 27வது பட இயக்குனர் பிரேம் குமார் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். #கார்த்தி27 படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னணி ஆளுமையான பிசி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் #கார்த்தி27ஐ தயாரிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் PS1, விருமன் மற்றும் சர்தார் என மூன்று பிளாக்பஸ்டர்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி.

மேலும் 2023 ஆம் ஆண்டை பொன்னியின் செல்வன் 2 எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ஜப்பான் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.

கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த OTT தளங்கள், சாட்டிலைட் சேனல்கள், மியூசிக் லேபிள்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து, தீவிரமாகப் படங்களில் கார்த்தி நடித்து வருவது திரைத்துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Karthi movie pre release business reaches 150c

ஷாருக்கானை ‘வந்த எட(ம்)த்திற்கு அழைத்துச் சென்ற அட்லி – அனிருத்

ஷாருக்கானை ‘வந்த எட(ம்)த்திற்கு அழைத்துச் சென்ற அட்லி – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் “வந்த எடம்” பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது.

கொண்டாட்டமிக்க ‘வந்த எடம்’ பாடல், அனிருத்தின் இசையில் உயிரை அதிரச் செய்யும் ஒலியோசையில், அனைவரையும் உற்சாக ஆட்டமாட வைக்கிறது. இந்த பாடலுக்குப் புகழ்பெற்ற நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார், அவரது நடன அமைப்பு பார்வையாளர்களைத் துள்ளல் நடனம் போட வைக்கிறது.

பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளுடன், அனிருத்தின் சமீபத்திய வெற்றிகளின் வரிசையில் ‘வந்த இடம்’, பாடலும் ஜொலிக்கிறது. ‘ஜவான்’ பட முழு ஆல்பத்திற்கும் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பாடலை தன் குரலில் பாடியுள்ளார் அனிருத்.

படத்தின் துடிதுடிப்பை, துள்ளலை, உணர்வாக வெளிப்படுத்தும் இந்த டான்ஸ் நம்பர் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஜவான்

தலைவர் அலப்பறை, கோவில், வாத்தி கம்மிங், அரபி குத்து போன்ற சமீப காலங்களில் மிகப்பெரிய ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த அனிருத் “வந்த எடம்” பாடல் குறித்துக் கூறுகையில்…

ஜவானின் “வந்த எடம்’’ பாடல் இப்படத்தில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். இந்தப்படத்திற்காக நான் இசையமைத்த முதல் பாடல் இது.

மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு நான் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும், அவர் எங்கள் தலைமுறையின் சின்னமாக விளங்குபவர் அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கு நியாயம் செய்ய வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

இவ்வளவு திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருந்தது, இந்த பாடலை இவ்வளவு பெரிய அளவில் மிகப்பெரிய விஷுவல் விருந்தாக மாற்றியதில், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மிகப்பெரிது.

இது ஒரு சவாலான மற்றும் ஆக்கப்பூர்வமான, நிறைவான பயணம், மூன்று மொழிகளில் இந்தப் படத்திற்கான ஆல்பத்தை உருவாக்கியது சிறந்த அனுபவம். ‘ஜவான்’ படத்தின் இசையை நான் ரசித்த அளவுக்கு மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”

ஜவான் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வந்த எடம்’ பாடலின் படப்பிடிப்பு ஐந்து நாட்கள் நடந்துள்ளது, நடிகர் ஷாருக்கானின் ஈடு இணையற்ற நடன ஆற்றல் மற்றும் 1000க்கும் மேற்பட்ட திறமையான பெண் நடனக் கலைஞர்களும் இணைந்து இந்த பாடல் பிரமாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்ததாக உருவாகியுள்ளது .

ஜவான்

முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் அனிருத்தின் துள்ளல் இசையுடன் இணைந்து அனைவரும் ரசிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது,

இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியாகியுள்ளது , குறிப்பாக இந்தப் பாடல் தமிழில் ” வந்த எடம் ” என்றும், ஹிந்தியில் ” ஜிந்தா பந்தா” என்றும் மற்றும் தெலுங்கில் ” தும்மே துலிபெளா ” என்றும் வெளியாகியுள்ளது.

ஜவான் படத்தின் இந்த ரசனை மிகுந்த பாடலை கேட்கும் அனுபவத்தைத் தவறவிட்டு விடாதீர்கள்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜவான்

Shah Rukh Khan in Vandha Edam Jawan’s First Song out

More Articles
Follows