*பக்ரீத்* படத்துக்காக ஒட்டகத்துடன் பயணிக்கும் விக்ராந்த்

*பக்ரீத்* படத்துக்காக ஒட்டகத்துடன் பயணிக்கும் விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bakrid stills“M10 PRODUCTION” சார்பில் சிவா மற்றும் சந்தானம் நடித்த “யாயா” திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் M.S.முருகராஜ், இரண்டாவது படைப்பாக “பக்ரீத்” திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ராந்தும், நாயகியாக நடிகை வசுந்தராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

“விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து, இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்கிற முயற்சியிலிருக்கிற நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது. அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூர பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளுமே “பக்ரீத்” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.

மேலும், இந்தியா முழுவதும் பயணிக்கும் இப்படத்தில், அந்தந்த ஊர் பழக்க வழக்கங்கள் மற்றும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்யவிருப்பதாக கூறுகிறார் இயக்குநர். இதற்காக சென்னை, ராஜஸ்தான், கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு தடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணியை முன்னணி படத்தொகுப்பாளர் ரூபன் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக மதன் பணியாற்றுகிறார்.

அதர்வா போன்ற ஒரு நடிகர் கிடைப்பது பேரின்பம்; *பூமராங்* கண்ணன் பேட்டி

அதர்வா போன்ற ஒரு நடிகர் கிடைப்பது பேரின்பம்; *பூமராங்* கண்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaa and director kannanஇடைவிடா தொடர்ச்சியான அடுத்தடுத்த அறிவிப்புகளுடன் அதர்வாவின் சீசன் தற்போது நீண்டிருக்கிறது. அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘பூமராங்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கிய திரில்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் ஆரம்பம் முதல் இந்த நிலை வரை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தனது குழுவினர் தான் காரணம் என பாராட்டுகிறார் இயக்குனர் கண்ணன்.

“சரியான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துக்கு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டுவது என்பது ஒரு வழக்கமான முன்னுதாரணம் ஆகும். ஆனால் என்னை பொறுத்தவரை, ‘பூமராங்’ படத்தின் மொத்த குழுவும் இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள். என்னைப் பற்றிய அவர்களுடைய உறுதியான நம்பிக்கை தான் இந்த படம் சுமூகமாக முடிய காரணம். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த பூமராங் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்துக்குள் முடிந்திருக்காது” என்றார்.

நடிகர்களின் உற்சாகமான ஈடுபாடு குறித்து அவர் கூறும்போது, “அதர்வாவை போன்ற ஒரு நடிகரை கண்டுபிடிப்பது எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு உண்மையான பேரின்பம். அந்த வகையில், ஒரு இயக்குனர், தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியை ஈட்டியுள்ளேன். படத்தின் நாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் ஒவ்வொரு ஃபிரேமிலும் மேம்பட்ட நடிப்பை அளிக்கும் அளவுக்கு அக்கறை காட்டினர். உபென் படேல் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக நடிப்பை வழங்கினார்.

இயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இந்த பூமராங் படத்துக்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே. செல்வா எடிட்டிங்கை கையாள்கிறார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சமந்தாவின் யு-டர்ன் கூட்டணியில் இணைந்தது ஏன்..? – தனஞ்செயன் விளக்கம்

சமந்தாவின் யு-டர்ன் கூட்டணியில் இணைந்தது ஏன்..? – தனஞ்செயன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

U turn movie“யு டர்ன்”படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே இந்த படத்தில் சமந்தாவின் பங்களிப்பு மிக மிக பெரிதாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு. சமீபத்திய டிரெய்லர்களில் நாம் பார்த்தபோது ஒரு அற்புதமான படமாக ‘யு-டர்ன்’ வந்திருப்பது தெரிகிறது. இது மொத்த குழுவுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம்.

கிரியேட்டிவ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் யு-டர்ன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறார்.

இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள ஜி தனஞ்செயன் இது குறித்து கூறும்போது, “எங்கள் நிறுவனமான BOFTAல் எப்போதும் உலகளாவிய பார்வையாளர்களுக்கான தரமான படங்களை எடுக்க ஆர்வமாக உள்ளோம். யு-டர்ன் தயாரிப்பாளர்களுடன் வியாபார ரீதியில் இணைந்தது நிச்சயமாக BOFTAக்கு மிகப்பெரிய சாதனையாகும். குறைந்த காலத்திலேயே யூடியூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த படத்தின் சிறப்பான ட்ரைலர் முதல், இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாமே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கொண்டது. புதுமையான அணுகுமுறையுடன் இந்தத் திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்ல சிறந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களான ஸ்ரீனிவாச சித்தூரி (ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்) மற்றும் ராம்பாபு பண்டாரு (ஒய்.வி கம்பைன்ஸ் மற்றும் BR8 கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி கூறும்போது, “இந்த திரைப்படத்திற்காக தனஞ்செயன் போன்ற ஒரு அனுபமிக்க தயாரிப்பாளருடன் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய கௌரவம். அவரது திரைப்படங்களை மேம்படுத்துவதற்காக புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்கான ஒரு உத்வேகம் அவர். அவரிடம் இருந்து இந்த ” யு-டர்ன்” படத்தை சிறந்த முறையில் கொண்டு சேர்க்க கூடுதலாக விஷயங்களை பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார். தயாரிப்பாளர் ராம்பாபு பண்டாரு கூறும்போது, “நாங்கள் மொத்த குழுவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். தனஞ்செயன் அவர்களின் புதுமையான அணுகுமுறை அவரது மிகப்பெரிய யு.எஸ்.பி. அது இப்போது எங்கள் படத்துக்கும் கிடைத்ததை மதிப்புமிக்க தருணமாக நினைக்கிறேன்” என்றார்.

சமந்தா, ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன் மற்றும் பூமிகா சாவ்லா நடித்துள்ள மர்ம திரில்லர் படம் தான் ‘யு-டர்ன்’. பூர்ணசந்திர தேஜஸ்வி (இசை), சிங்க் சினிமா (ஒலி), பீம் (வசனம்), சுரேஷ் ஆறுமுகம் (எடிட்டிங்) நிகேத் பொம்மி (ஒளிப்பதிவு) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியிருக்கிறது.

Sing along with SeemaRaja; ஆர்.டி.ராஜாவின் அட்வர்டைஸ்மெண்ட் ஹைலைட்ஸ்

Sing along with SeemaRaja; ஆர்.டி.ராஜாவின் அட்வர்டைஸ்மெண்ட் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemarajaபலருக்கு மற்றோர் போட்ட பாதையில் பயணிப்பது பலம். ஒரு சிலருக்கே தங்களுக்கென்ற பாதையை நிர்மானிக்கும் பலம் உண்டு. அந்த சிலரில் முன்னோடியாக இருப்பவர் 24 A M ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர் டி ராஜா. அவருடைய முந்தைய படங்களின் வசூல் சாதனையை தன்னுடைய அடுத்த படம் உடைக்க வேண்டும் என்பதில் தீர்ர்மானமாக உள்ள இவர் , விளம்பர யுத்திகளிலும் ஓவ்வொரு படத்திலும் புதிய யுத்தியை கையாளுவது என்பதில் பிடிவாதமாக இருப்பார். திரை உலகினரும், ரசிகர்களும் இவர் தன்னுடைய அடுத்த படத்துக்கு என்ன யுத்தி உபயோகிப்பார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பர்.

இவருடைய அடுத்த பிரமாண்டமான தயாரிப்பு “சீமராஜா”. சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், லால், சிம்ரன், மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க , டி இமான் இசை அமைப்பில், பொன் ராம் இயக்கத்தில், உருவாகும் இந்த ஜனரஞ்சகமான படைப்பு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளி வர உள்ளது.

இந்த படத்தின் விளம்பர பணிகளும் மிக பிரமாண்டமாக துவங்கி உள்ளது. அந்த வகையில் “கரோக்கி பூத்” என்ற விளம்பர யுத்தியை கையாள உள்ளனர் படக் குழுவினர். திரை அரங்குகளில் அமைக்க பட்டு இருக்கும் பிரத்தியேக பூத்துகளில் “சீம ராஜா” படத்தின் பாடல்கள், lyric video எனப்படும் பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு dubsmash செய்யலாம். இது யூ tube இல் பதிவு செய்து வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் வாய்ப்பு கிட்டும்.

” இதற்கு “Sing along with சீமராஜா” என பெயரிட்டு இருக்கிறோம். விளம்பரங்கள் பொதுப்படையாக இருந்து விடக் கூடாது. தனி ஒரு ரசிகனை சென்று சேரும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்தில் ஒரு ரசிகனின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.அதை நோக்கி எங்கள் முதல் படிதான் இந்த “கரோக்கி பூத்”. நான் அறிந்த வரை இதுதான் தென்னிந்தியாவில் முதல் முறையாகும்.பெரியவர்கள், குழந்தைகள் என்று இருவருக்கும் தனித்தனியே பூத்துகள் அமைத்து இருக்கிறோம்.குழந்தைகள் பூத்துக்கு “சீமராஜா மினி கரோக்கி பூத்” என பெயரிட்டு இருக்கிறோம். மியூசிக் ட்ராக், lyric video, தவிர படத்தின் டீஸர் கூட இங்கு இருக்கும்.

பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் பாட்டு பாடலாம், அல்லது டீசருக்கு ஏற்றவாறு dubsmash செய்யலாம். இந்த வீடியோ யூ tube இல் பதிவு செய்யப்படும்.இதில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து ,இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். ஆரம்ப முயற்சியாக இன்று 25 ஆம் தேதி , மாலை 5 மணிக்கு, இசை அமைப்பாளர் டி இமான், இயக்குனர் பொன்ராம், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் சென்னை வடபழனி forum hall இல் உள்ள, palazzo திரை அரங்கு வளாகத்தில் எங்கள் முதல் கரோக்கி பூத்தை அமைக்க உள்ளோம். பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்று சிவகார்திகேயனின் ரசிகர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு “கரோக்கி ஸ்டார்” ஆகலாம்.உங்கள் எதிகாலம் உங்கள் குரலில் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆர் டி ராஜா.

கேரளாவுக்கு 1கோடி நிவாரணம் கொடுக்க இவர்களே காரணம்… : லாரன்ஸ்

கேரளாவுக்கு 1கோடி நிவாரணம் கொடுக்க இவர்களே காரணம்… : லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Raghava Lawrence to donate Rs 1 crore for Kerala flood reliefகடந்த ஒரு வார காலமாக கடும் மழை வெள்ளதால் கேரளா மாநிலமே ஸ்தம்பித்து போனது.

இதில் 400க்கு அதிகமான பேர் உயிரிழந்தனர். தற்போது மழை நின்றதால் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

இருந்தபோதிலும் இன்னும் நிவாரணப் பொருட்கள் அங்கே வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசு முதல் பல்வேறு மாநிலங்கள், பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.

நடிகர்களிலேயே அதிகபட்ச தொகையாக ரூ. 1 கோடியை கொடுத்தார் ராகவா லாரன்ஸ்.

இவரின் தொண்டு உள்ளத்திற்கு அனைவரும் தங்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கைக்கும் தன் வெற்றிக்கும் காரணமான ராகவேந்திரா ஸ்வாமி, அம்மா, சுப்பராயன் மாஸ்டர், ரஜினி, சிரஞ்சீவி, விஜய், அஜித், ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தன் ஆரம்ப காலத்தில் இவர்கள் உதவியால் இன்று நல்ல நிலையில் உள்ளேன். எனவே தன்னால் உதவி செய்ய முடிகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

Actor Raghava Lawrence to donate Rs 1 crore for Kerala flood relief

Exclusive லாரியில் கோடிக்கணக்கில் பணம்; சர்காரில் உண்மையை உடைக்கும் விஜய்

Exclusive லாரியில் கோடிக்கணக்கில் பணம்; சர்காரில் உண்மையை உடைக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie will reveal real Political stunts of Tamilnaduகடந்த 2016 சட்டன்றத் தேர்தல் சமயத்தின் போது, ரூ. 570 கோடிக்கும் அதிகமான தொகை 3 கண்டென்யர்கள் லாரியில் சிக்கியது.

ஒரு பக்கம் இது வங்கிக்கு சொந்தமான பணம் என கூறப்பட்டது.

அவை யாருக்கு சொந்தமான பணம்? என்பது மர்மமாகவே உள்ளது. ஆனால் பணம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன.

ஆக இது ஒரு அரசியல் விளையாட்டு என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இது போன்ற ஒரு காட்சி தற்போது விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

அந்த கோடிக்கணக்கான பணம் உள்ள லாரியை மடக்குவாராம் விஜய்.

இதனால் அரசியல்வாதிக்கும் அவருக்கும் பெரிய பிரச்சினை உருவாகும் எனவும் தெரிகிறது.

அதன்பின்னர் மக்கள் மத்தியில் அந்த உண்மையை விஜய் உடைப்பார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆக சர்கார் படம் அரசியல் சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sarkar movie will reveal real Political stunts of Tamilnadu

TN Election 2016 Rs 570 crores in lorry

More Articles
Follows