பக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம்

பக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம்

New Projectவிக்ராந்த நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார்.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முடக்கி இருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் முருகராஜ் கூறும்போது, ‘ஸ்டார் மியூசிக் நிறுவனத்திடம் பக்ரீத் படத்தின் டீசர், பாடல்களை வெளியிடும் உரிமையை கொடுத்திருக்கிறேன். படம் வெளியாகும் நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் இதன் டீசர் மற்றும் பாடல்கள் ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) முடக்கியது. என்ன காரணம் என்று அவர்களிடம் தொடர்பு கொண்டால், தவறுதலாக அப்படி ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டார்கள்.

ஏறக்குறைய 20 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி இருக்கிறார்கள். இதனால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஸும் அனுப்பி இருக்கிறேன். பக்ரீத் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்றார்.

உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்

உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்

New Project (2)ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநரான சாமி பேசும்போது, ஒத்தை செருப்பு படம் நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும், நம் முழு கவனத்தையும் ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்கிறது இப் படம். பார்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றியது குறித்து முன்பு சந்தோஷப் படுவேன். இப்போது சந்தோஷப்படுவது மட்டுமின்றி பெருமைப்படுகிறேன். வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். ஆண்டவன் பார்த்திபனுக்கு இன்னும் நிறைய சக்தியைத் தர வேண்டும். அதன் மூலம் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அவர் வெற்றி பெற வேண்டும் என்றார்

பார்த்திபனை வாழ்த்திப் பேசிய பாக்கியராஜ், எனது உதவியாளர்கள் பார்திபனும் பாண்டியராஜனும் வெளிநாடுகளுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை வாங்கி விட்டார்கள். ஆனால் நான்தான் இன்னும் ஒரு விருதும் வாங்கவில்லை.இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவதா அல்லது துணிச்சலை நினைத்து பயப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவிதமான உணர்ச்சிகளையும் காட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார் பார்த்திபன். தமிழ்ப் படவுலகுக்கு மட்டுமின்றி இந்தியத் திரையுலகுக்கே பெருமை சேர்க்கும் படம் இது என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப்பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் என்றேன். காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ திரையில் தோன்றி நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன். யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். ஒற்றை செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன் என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசும்போது, புதிய பாதை படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள் வர்த்தக ரீதியில் படம் வெற்றி பெறாது என்று சொன்னார்கள். நல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான். படம் பாரத்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். ஒத்தை செருப்பு படத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஐசிஏ ஃபோரம் நிர்வாகியும் சென்னை சர்வதேச திரைப்பட விழாத் தலைவருமான ஈ.தங்கராஜ் ஆகியோரும் பார்த்திபனை வாழ்த்திப் பேசினார்கள்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, பார்த்திபனுடன் நான் நிறை பேசிக்கொண்டிருப்பேன். போனிலும் நேரிலும் பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிப்பார் பார்த்திபன். தரமான படங்களைத் தயாரித்து இயக்குவதன் மூலம், மக்களிடம் பெற்ற பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பார். நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். அவரது ஒத்தை செருப்பு பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

ஒத்தை செருப்பு படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இதர தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சாதனைப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அசுரன் – விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !

அசுரன் – விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !

New Project (1)V creations சார்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அசுரன் ‘ .

இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் தனுஷுடன் இணைத்து கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் .

இப்படத்தில் பசுபதி , பாலாஜிசக்திவேல் , சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் , பவன் ,அம்மு அபிராமி , கென் கருணாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் G V பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது !

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

New Project (5)சாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா,ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

இது குறித்து இயக்குனர் கூறுகையில், “எனக்கு பிஆர்ஓ நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார்.

சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு,நடனம்,சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுதேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அர்ஜூமன்,ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.

படத்தை GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பு வேலைகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

பாசமான விவசாயி… பக்ரீத் விமர்சனம் (3.5/5)

பாசமான விவசாயி… பக்ரீத் விமர்சனம் (3.5/5)

கதைக்களம்…?

விக்ராந்த் அவரது அண்ணன் ஜெயச்சந்திரன்.

அண்ணன் தம்பி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

விக்ராந்த அவரது மனைவி வசுந்த்ரா. அவர்களுக்கு ஒரு 5 வயது மகள்.

விவசாயம் செய்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்கிறார். ஒருமுறை கடன் வாங்க வேண்டி ஒரு முஸ்லீம் பெரியவரிடம் செல்கிறார்.

அங்கு எதிர்பாரா விதமாக அவரிடம் உள்ள குட்டி ஒட்டகத்தை தன் மகளுக்காக வாங்கி வருகிறார். மகளும் அதை அன்பாக வளர்த்து வருகிறார்.

ஆனால் சென்னையில் உள்ள தட்ப வெப்ப காரணமாக ஒட்டகத்தால் இங்கு வாழ முடியவில்லை. அதன்பின்னர் விக்ராந்த் என்ன செய்தார்? ஒட்டகம் என்ன ஆனது? மகள் ஆசை என்னானது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்.?

இதுவரை ரொமான்ஸ், ஆக்சன் என வலம் வந்த விக்ராந்த் இதில் வித்தியாசமாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரு யதார்த்த விவசாயியாகவும், அப்பாகவும், நல்ல கணவனாகவும், பாசமுள்ள மனிதராகவும் என பன்முக நடிப்பை காட்டியுள்ளார் விக்ராந்த். சூப்பர் ப்ரோ.

விவசாயியின் மனைவியாக வசுந்த்ரா. கிராமத்து இல்லத்தரசியாக சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

இவர்களது குழந்தையாக வரும் ஷ்ருத்திகா அழகு தேவதை. அவரின் கண்களும் அவர் பேசும் மழலை பேச்சும் கொள்ளை அழகு.

விக்ராந்தின் அண்ணன் ஜெயச்சந்திரன். பாசத்திலும் கோவத்திலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

லாரி டிரைவர், லாரி கிளீனர், போலீஸ்காரர்கள், முஸ்லீம்பாய், பாரீன்காரன் என அனைவரும் கச்சிதம்.

மோக்லி, ரோகித் பதக் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையில் பாடல்கள் ப்ளஸ். ’ஆலங்குருவிகளா …’ பாடலை கெட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது.

விக்ராந்த் ஒட்டகத்தோடு சேர்ந்து செல்லும் ராஜஸ்தான் பயணம் நம்மையும் அழைத்து செல்கிறது. ஒளிப்பதிவும் சூப்பர்.

ரூபனின் எடிட்டிங்கில் தான் ஒரு குறை. 2ஆம் பாதியை சற்று குறைத்திருக்லாம்.

இயக்கம், ஒளிப்பதிவு என இரண்டையும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு.

ஆடு, மாடு, நாய்களை வீட்டில் ஒரு உயிராகவே சிலர் வளர்க்கின்றனர். அவர்களின் உணர்வுகளை திரையில் கொண்டு வந்துள்ளார்.

சில நேரம் அவை மனிதன் உயிரையும் காக்கும் என்பதையும் அழகாக காட்டியுள்ளார்.

பக்ரீத்.. பாசமான விவசாயி..

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

New Project (1)சூர்யாவுடன் மாற்றான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால்.

தற்போது மீண்டும் சூர்யாவின் 39 படத்தில் அவருடன் இணையவுள்ளார்.

சிவா இயக்கவுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கெனவே சிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் காஜல் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

More Articles
Follows