தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதேசமயம் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.்ஏ ஆர் ரகுமான் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
மொய்தீன் பாய் என்ற கேரக்டர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார்.்இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி வருகிறார் என கூறப்பட்டாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
முதலில் மும்பையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. அங்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக கலந்து கொண்டார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் ரஜினியும் கலந்து கொண்ட சூட்டிங் புகைப்படங்கள் வெளியானது.
இதன் பிறகு பாண்டிச்சேரியில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.
அங்கு கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது புதுச்சேரி அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் வெளியானது.
இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ‘லால் சலாம்’ ஷூட்டிங் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது திருவண்ணாமலையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அங்கும் கிட்டத்தட்ட ஒரு வாரம் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் தினம் தினம் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மட்டுமே வருவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 மாதத்திற்கு மேலாக இதில் பங்கேற்று நடித்து வருகிறார்.
எனவே அவரின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 45+ நிமிடங்கள் வரை நீடிக்கும் என தகவல்கள் வந்துள்ளன.
இந்த செய்தி கண்டிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.
Aishwaryas Surprise for Rajini fans in Laal Salaam movie