சக்க போடு போடு ராஜா விமர்சனம்

சக்க போடு போடு ராஜா விமர்சனம்

நடிகர்கள் : சந்தானம், வைபவி, விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி, டாக்டர் சேது, விடிவி கணேஷ், பாப்ரி கோஷ், சரத்லோகித்ஸ்வா, பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர்
இயக்கம் : சேதுராமன்
இசை : சிம்பு
ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டிங்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு: விடிவி கணேஷ்

கதைக்களம்…

மிடில் கிளாஸ் பேமிலியை சார்ந்தவர் சந்தானம். இவரது அப்பா விடிவி கணேஷ். ஒரு சூழ்நிலையில் தன்னுடைய ப்ரெண்ட் சேதுவின் காதல் திருமணத்திற்கு உதவி செய்கிறார் சந்தானம்.

சேதுவின் காதலி மனைவி சஞ்சனா சிங் ஒரு பெரிய தாதாவின் மகள். அப்புறம் என்ன உங்களுக்கு புரிந்திருக்கும் தானே. அந்த தாதா கும்பல் காதல் திருமணம் செய்து வைத்த சந்தானத்தை தேடுகிறது.

இதுஒரு பக்கம் இருக்க, மற்றொரு தாதாவின் தங்கச்சி வைபவியை சந்திக்கிறார் காதலிக்கிறார் சந்தானம்.

அவரும் தாதா தங்கை என்பதால் பலரையும் வம்புக்கு இழுக்கிறார்.

இந்நிலையில் வைபவியை ஒரு கும்பல் தேட, அவரோ சேதுவின் மாமானாரிடம் தஞ்சம் அடைகிறார்.

அப்படியென்றால் இந்த இரண்டு டான்களும் யார்? அவரிடம் நாயகி செல்வது ஏன்? தன் காதலி வைபவியை கரம் பிடித்தாரா சந்தானம்? என பல கேள்விகளுக்கு விடைதான் க்ளைமாக்ஸ்.

DRFqDrrV4AIUofr

கேரக்டர்கள்…

காமெடி ரூட்டில் பயணித்து வந்தாலும், காமெடியை விட ஆக்சனில் அசத்தியிருக்கிறார் சந்தானம்.

அவரது தாடி, ஹேர்ஸ்டைல் பக்கா லுக். சந்தானம் ஹீரோவாக மணக்கிறார்.

சேது ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அவரால்தான் கதையோட்டம் நகர்கிறது.

நாயகி கேரக்டருக்கு வைபவி சரியான தேர்வு.

விடிவி கணேஷ், ரோபா சங்கர், சுவாமிநாதன் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

விவேக் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தல தளபதி டயலாக்குகளை சொல்லி கைத்தட்டல் பெறுகிறார் பவர் ஸ்டார்.

DRZpJ68VwAAyq3x

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகராக ஜெயித்த சிம்பு இதில் இசையமைப்பாளராக பின்னியெடுத்திருக்கிறார். அனிருத் பாடிய கலக்கு மச்சான் பாடல் ரசிகர்களை ஆடவைக்கும். வா முனிம்மா, உனக்காக ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம்.

காதல் தேவதை பாடல் படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். வைரமுத்து வரிகளுக்கு யுவன் குரல் இதம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

இயக்கம் பற்றிய அலசல்…

காதல் திருமணத்தில் ஆரம்பிக்கும் காட்சிகள் எங்கேயோ செல்கிறது. நல்லவேளை சஸ்பென்ஸை அதிகம் நீட்டிக்காமல் இடையில் உடைத்துவிட்டு பின்பு ட்விஸ்ட் வைத்திருப்பது ஓகே.

சந்தானம் ரியல் போலீஸ்? அல்லது போலியா என்பது தெரியவில்லை.

ஹீரோவுக்கு செம ஓப்பனிங் கொடுத்துவிட்டு பின்பு டேமேஜ் செய்வது புதுசு.

படத்தின் நீளத்தை குறைத்து சக்க போடு போட சொல்லியிருக்கலாம்.

அனைத்தையும் கலந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

சக்க போடு போடு ராஜா… டைட்டிலை காப்பாற்றிவிட்டார் சிம்பு

Comments are closed.