வீரசிவாஜி விமர்சனம்

வீரசிவாஜி விமர்சனம்

நடிகர்கள் : விக்ரம் பிரபு, ஷாம்லி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ், ஜான்விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : கணேஷ் விநாயக்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சுகுமார்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்

கதைக்களம்…

கால் டாக்ஸி ட்ரைவர் விக்ரம் பிரபு. அனாதையான இவருக்கு மெஸ் நடத்தும் வினோதி அக்காவாக இருந்து பாத்துக்கொள்கிறார்.

எனவே இவரும் அவரின் மகள் மீது பாசத்துடன் இருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பது இவருக்கு தெரிய வர, ஆப்ரேஷன் செய்ய ரூ 25 லட்சம் தேவைப்படுகிறது.

டாக்ஸிஸை விற்று கொஞ்சம் பணமும், இவரின் நண்பர்கள் யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் பாதி பணம் பெறுகிறார்.

மீதி பணத்துக்காக வில்லன் ஜான்விஜய்யை நாடுகிறார்.

ஆனால் அந்த மோசடி கும்பல் இவர்களின் பணத்தை பற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறது.

அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக குழப்பி கதை சொல்கிறார் இயக்குநர்.

veera sivaji shamlee

கதாபாத்திரங்கள்..

சிவாஜி கணேசன், பிரபு இவர்களின் வழியில் வந்தவர் விக்ரம் பிரபு.

ஆனால் இவர் எதற்காக இந்த கதையை தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை.

டான்ஸ் ஓகே. சண்டை காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டுகிறார்.

அஞ்சலி பாப்பாவாக வந்த ஷாம்லியை இதில் ரசிக்க காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். வருகிறார். டூயட் பாடுகிறார். செல்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் மட்டுமே ஆறுதல் தருபவர்கள் ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபு இருவர் மட்டுமே.

பைவ் ஸ்டார் விளம்பரத்தில் வரும் ரமேஷ், சுரேஷ் என்ற இரண்டு கேரக்டர்களாக வந்து பேசி பேசியே செல்கின்றனர்.

இவர்களுடன் ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, மாரிமுத்து, மன்சூர் அலிகான், விடிவி கணேஷ் என பலர் இருந்தும், பெரிதாக சொல்லும்படி இல்லை.

திறமையான கலைஞர்களை இயக்குனர் கவனிக்கவில்லை என்பது வருத்தமே.

veera sivaji stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில், தாறு மாறு தக்காளி சோறு மற்றும் சொப்பன சுந்தரி பாடல்களை தாளம் போட்டு ரசிக்கலாம்.

மற்றபடி மெலோடி கிங் இமான், இப்படத்தில் நம்மை ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

காரைக்காலில் படம் ஆரம்பிப்பது போல் காட்டி இருக்கிறார்கள். அதன்பின்னர் க்ளைமாக்ஸில் காட்டப்படுகிறது.

மற்றபடி காட்சிகளை பாண்டிசேரியில் முழுவதும் எடுத்துள்ளனர்.

மூளை குழம்பி, நினைவு திரும்பி ஹீரோ வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

பைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாற வேண்டாம் க்ளைமாக்ஸில் அட்வைஸ் செய்து படத்தை முடிக்கிறார்கள்.

மொத்தத்தில் வீரசிவாஜி… பலசாலி இல்லை

 

Comments are closed.

Related News

பேபி படத்தில் நடித்து முத்திரை பதித்தவர்…
...Read More
விக்ரம்பிரபு நடிப்பில் 'வாகா' மற்றும் 'வீரசிவாஜி'…
...Read More