தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன் லைன்…
காதல் நட்பு அண்ணன் தங்கை பாசம் என அனைத்தையும் கலந்து ஒரு முக்கோண கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். கும்பாரி என்றால் நண்பனை குறிக்கும் சொல்லாகும்.
ஸ்டோரி…
விஜய் விஷ்வா (அருண்) இவரின் நண்பன் நலீப் ஜியா – (ஜோசப்). சிறு வயது முதலே யாரும் இல்லாத இவர்கள் உற்ற நண்பர்களாக வளர்ந்து வருகின்றனர்.
நாயகன் விஜய் விஸ்வா ஒரு கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒருநாள் இவர் தெருவில் கேபிள் கனெக்சன் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக நாயகி மஹானா ஓடி வருகிறார்.
என்னைஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. என்னை காப்பாற்றுங்கள் என கதறி அழுகிறார். எவருமே உதவி செய்ய முன் வராத நிலையில் நாயகன் உதவி செய்கிறார். அந்த ரவுடிகளை அடித்து துவைத்து ஓட விடுகிறார் விஜய்.
நிறுத்துங்க… நிறுத்துங்க.. நாங்க youtube சேனலுக்காக பிராங்க் ஷோ செய்கிறோம் என நாயகி மகானா சொல்லவே கடுப்பான விஜய் அவரை அடித்து விடுகிறார்.
பிராங்க் ஷோ என்ற பெயரில் நீங்கள் செய்யும் இது போன்ற செயல்களால் தான் உதவி செய்யக்கூட யார் முன்வர மாட்டார்கள் என அட்வைஸ் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.
இதனால் மஹானாவின் யூடியூப் சேனலுக்கும் பெயர் வரவே எனவே நாயகனை காதலிக்க தொடங்கினார் மகானா.
ஒரு கட்டத்தில் விஜய் விஸ்வாகவும் காதலிக்க தன் அண்ணன் ஜான் விஜய்யின் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்ய நினைக்கிறார் மகானா.
ஆனால் பதிவு திருமணம் செய்வதற்கு 21 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் என சொல்கிறார் அதிகாரி. அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் காதலுடன் தலைமறைவாகி விடுகிறாள் மகானா.
இதனிடையில் விஜய் விஷ்வாவின் நண்பர் காணாமல் போகிறார்.. அவர் என்ன ஆனார்
அதன் பிறகு என்ன நடந்தது? காதலர்கள் கைகூடினார்கள்.? தங்கையை தேடி வந்த அண்ணன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை
கேரக்டர்ஸ்..
விஜய் விஷ்வா – அருண் (நாயகன்)
நலீப் ஜியா – ஜோசப் (நண்பன் )
மஹானா சஞ்சீவி – தர்ஷினி (நாயகி)
ஜான்விஜய் – துரை (நாயகி அண்ணன்)
மதுமிதா – ஆர்த்தி (நாயகி தோழி)
பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்திகுமாரி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காதல்.. நட்பு என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார் விஜய் விஷ்வா. மஹானா உடன் ரொமான்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை.
திறமையும் அழகும் கொண்ட நாயகியாக மஹானா.. அண்ணனிடம் இவர் பேசும் காட்சியில் மைண்ட் வாய்ஸ் ரசிக்க வைக்கிறது அது போல் காதலுக்காக ஏங்குவதும் கெஞ்சுவதும் என ரசிக்க வைக்கிறார்.
காமெடி கலந்த வில்லத்தனத்தை செய்து இருக்கிறார் ஜான் விஜய். இவருடன் உதவிக்கு வரும் அடியாட்கள் ஒருவர் தண்ணீர் போட்டு விட்டு செய்யும் ரகளை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
வில்லத்தனத்தில் மிரட்டிய ‘பருத்தி வீரன்’ சரவணன் இதில் கொஞ்சம் காமெடி செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கும் நிறைய வாய்ப்பு கொடுத்து இருந்தால் ரசிக்க வைத்திருப்பார்.
மஹானாவை காதலிக்கும் நண்பர்களில் ஒருவராக காதல் சுகுமார் நடித்திருக்கிறார்.
சீரியசான படத்திற்கு கொஞ்சம் கலகலப்பு ஊட்டி இருக்கிறார் நடிகர் சாம்ஸ்.. இவர் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.
நலீப் ஜியா.. காதலுக்கு உதவும் நண்பனாக நடித்திருக்கிறார். விரைவில் இவருக்கும் புதிய படத்தில் நாயகனாக வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
ஜாங்கிரி மதுமிதா தோழியாக நடித்திருக்கிறார். இதில் காமெடி செய்திருந்தால் கூடுதல் கவனம் பெற்று இருப்பார்.
காமெடி என்ற பெயரில் அம்மன் வேடமிட்டு கொஞ்சம் சோதிக்கிறார் நடிகை மீனாள்.
டெக்னீசியன்ஸ்…
இயக்கம் – கெவின் ஜோசப்
ஒளிப்பதிவு – பிரசாத் ஆறுமுகம்
கன்னியாகுமரி காட்சிகள் கொள்ளை அழகு. அதுபோல பாடல் காட்சிகளில். அழகான லொகேஷனை தேர்ந்தெடுத்து படமாக்கி உள்ளனர்
எடிட்டிங் – T.S.ஜெய்
சண்டைப்பயிற்சி – மிராக்கிள் மைக்கேல்
இசை- ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி
பாடல் ஆசிரியர்கள் – வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி
நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே.. நாளை வரும் சோகம் கடந்திடுமே என்ற பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன..
பாடியவர்கள்
அந்தோணிதாசன், ஐஸ்வ சாய்சரண்.
மீனவர்கள் மொழியில் கன்னியாகுமரி பாஷையில் ஒரு அழகான குத்துப்பாட்டையும் போட்டு இருக்கிறார் இசையமைப்பாளர்.
இப்படத்தை ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார். படத்தை 9Vஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
என்னதான் வாழ்க்கையில் காதல் கிடைத்தாலும் தனது நண்பனை கைவிடாத ஒரு நட்பையும் இயக்குனர் காட்சிப்படுத்திருப்பது நட்புக்கு பெருமை.
அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்னும் கூடுதல் உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்திருக்கலாம். பழைய பாடல்களை போட்டு கொஞ்சம் கடுப்பேற்றி இருக்கிறார். அதற்கு பதிலாக அண்ணன் தங்கைக்கு என ஒரு அழகான பாச பாடலை கொடுத்திருக்கலாம்.
ஓடிப்போன காதலர்கள் தேடிப் பிடிக்கும் அண்ணன்.. தொலைந்து போன நண்பன் என பரபரப்பாக இருக்க வேண்டிய கதையை விறுவிறுப்பு இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஆக இந்த கும்பாரி.. காதலில் சிக்கிய நண்பன்
Kumbari movie review and rating in tamil