உச்சத்துல சிவா விமர்சனம்

உச்சத்துல சிவா விமர்சனம்

நடிகர்கள் : கரண், நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, ரமேஷ் கண்ணா, பேராசிரியர் ஞானசம்பந்தம், கும்கி அஸ்வின், சங்கிலி முருகன், கோவை சரளா (குரல் மட்டும்) மற்றும் பலர்.
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு : ஹார்முக்
இயக்கம் : ஜேப்பி
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : கே என்டர்டெயின்மென்ட் – தேவி கரண்

karan uchathula siva 3

கதைக்களம்…

கால் டாக்சி டிரைவர் கரண் ஒரு பகவத் கீதை கிருஷ்ண பக்தர். அம்மா சொல் கேட்டும் பிள்ளை.

நாளை காலை பெண் பார்க்க செல்லவிருக்கும் போது, முதல் நாள் இரவு சவாரிக்கு செல்கிறார்.

அப்போது எதிர்பாரா விதமாக மணப்பெண் (நேகா) ஒருவர் இவர் காரில், தன்னை காப்பாற்ற லிப்ட் கேட்கிறார்.

அவர் மீது கரனுக்கு காதலும் வருகிறது. ஆனால் அப்போதுதான் ஹீரோயின் அவர் போதை கும்பலில் சிக்கியது தெரிய வருகிறது.

அந்த பெண்ணை காப்பாற்ற போய், இவர் போலீசில் மாட்டிக் கொள்கிறார்.

அதன் பின்னர் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? பெண் பார்க்க போனாரா? அல்லது காதலியை கரம்பிடித்தாரா? என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் இந்த சிவா.

karan uchathula shiva

கதாபாத்திரங்கள்…

நீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும், அதே இளமை. ரெப்ரிஜிரேட்டில் இருந்து வந்தவர் போல படு ப்ரெஷ்ஷாக இருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்திருக்கிறார். இதில் கொஞ்சம் காமெடிக்கு டிரை செய்து பாஸ் மார்க் பெறுகிறார்.

காதலுக்கும் காதலிக்கும் பெரிதாக வேலையில்லை. நேகா அழகாக வருகிறார்.

இளவரசு, ரமேஷ் கண்ணா காமெடி போலீசாக வந்தாலும், காமெடிக்கு பஞ்சமே.

கும்கி அஸ்வின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் சிரிக்க வைத்திருக்கலாம்.

வெறும் குரலாக மட்டும் வரும் கோவை சரளாவுக்கு காட்சிகள் கொடுத்திருந்தால், அவர் இன்னும் படத்தை கலகலப்பாக்கி இருப்பார்.

ஆடுகளம் நரேன், டானாக வந்து செல்கிறார். சங்கிலி முருகனும் இருக்கிறார்.

uchathula siva stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைட்டில் கார்டு பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் வித்யாசாகர். அப்போது வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

பேசு பேசு இசை மொழி … உச்சத்துல சிவன் தான் பாடல்கள் கொஞ்சம் ஓகே. வித்யாசாகரின் வழக்கமான மெலோடி இதில் மிஸ்ஸிங்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் காட்சிகளில் ஒரே அட்வைஸ் மழையாக இருக்கிறது.

ஜேப்பி இயக்கத்தில் சண்டை காட்சிகள் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்துதான். ஒரே இரவில் நடக்கும் கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இடைவேளை ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

உச்சத்துல சிவா… ஆக்ஷன் மேஜிக்

Comments are closed.