தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி…
இந்திய சுதந்திரப் போராட்ட கால கதைக்களத்துடன் அரசி அரசர் இளவரசி இவர்களுடன் நாக தோஷத்தை இணைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்.
ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர் அரசி மல்லிகா ஷெராவத். ஆனால் அரண்மனை ஜோசியரோ.. நாகத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்கிறார்.. பாம்பு இருந்தால்தானே பிரச்சனை பாம்புகள் அனைத்தையும் அழித்துவிட கட்டளையிடுகிறார் அரசி.. ஆனாலும் அசுர பாம்பு சீண்டியதால் அரசி மரணடைகிறார்.
இதன் பின்னர் இளவரசி உயிருக்கும் ஆபத்து என்கின்றனர் ஜோசியர்கள்.. இதனையடுத்து தன் மகளை அழைத்துக் கொண்டு பாம்பு தென்படாத தேசமான நியூசிலாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார் அரசர். அங்கு தன் மகளுக்காக அரண்மனை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார். இவரது நண்பர் சுமன்.. இவர்கள் சில வழக்குகளை விசாரிக்கும் போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன… அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
ஜீவன் (மாணிக்க வேல் )- அப்பா ) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் (ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இந்த படத்திற்கு ஆணிவேர் என நினைத்து போனால் படம் தொடங்கி 10 நிமிடங்களில் அவரின் கதை முடிவது பெரும் சோகம்.
அப்பா மகன் இரு வேடங்களில் ஜீவன் நடித்திருக்கிறார்.. ஒரு பக்கம் கைதியாகவும் மறுபக்கம் போலீஸ் ஆகவும் கம்பீரம் காட்டி இருக்கிறார்.. ஜெயிலில் இருந்து வந்த பிறகு அவர் போடும் சதித்திட்டங்கள் படத்திற்கு பக்க பலம்.
இளவரசியாக ரித்திகா சென்.. அரசர் குடும்பதிற்க்கு ஏற்ற முகத்தோற்றமும் இருப்பதால் ரசிக்க முடிகிறது.. இவரைப் பெண் கேட்க வரும் அந்த நியூஸ்லாந்து டாக்டரும் அவரது கேரக்டரும் எதிர்பாராத ட்விஸ்ட்..
இவர்களுடன் சாய்பிரியா, யாஷிகா ஆனந்த், பருத்திவீரன் சரவணன், சுமன், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
டெக்னீசியன்ஸ்…
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான்
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன்,
இணை தயாரிப்பு – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு – V.பழனிவேல்.
பெரும்பாலும் பேயை வைத்து ரசிகர்களை இதுவரை பயமுறுத்திய வடிவுடையான் இந்த படத்தில் பாம்பை வைத்து நம்மை பயப்பட வைத்திருக்கிறார்.. ஆனால் அதற்கு கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..
முக்கியமாக ஒரு காட்சியில் பாம்புகளை அழிக்க திட்டமிடுகின்றனர்.. அந்தக் காட்சிகளில் பாம்புகளை அடிப்பது போல காட்டி இருக்கலாம்.. ஆனால் வெறும் வார்த்தையாகவே பாம்புகளை ஒழித்து விட்டோம் என படைவீரர்கள் சொல்வதாக காட்சிகள் உள்ளன.
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்..
பின்னணி இசை பல இடங்களில் காது கிழிக்கும் வகையில் இரைச்சலை கொடுத்திருப்பததை தவிர்த்து இருக்கலாம். ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது..
ஜீவன், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், லிவ்விங்டண்ட், சரவணசக்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து வடிவுடையான் இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. இடைவேளைக்கு முன்பு வரை பாம்பை போல கதை அங்கும் இங்குமே செல்கிறது.. இடைவேளைக்குப் பிறகுதான் கொஞ்சம் கதை புரியும் படியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.
Pambattam movie review and rating in tamil