டிக் டிக் டிக் விமர்சனம்

டிக் டிக் டிக் விமர்சனம்

நடிகர்கள்: ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ் திலக், ஜெயம் ரவி மகன் ஆரவ் மற்றும் பலர்.
இயக்கம் – சக்தி சௌந்தர் ராஜன்,
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை – இமான்
கலை – எஸ் எஸ் மூர்த்தி
தயாரிப்பு – நேமிசந்த்
பிஆர்ஓ. : யுவராஜ்

கதைக்களம்…

படத்தின் தொடக்கமே வின்வெளியில் இருந்து ஆரம்பமாகிறது.

அப்போது வானத்திலிருந்து 8 டன் எரிகல் ஒன்று சென்னையில் விழுகின்றது. இதனால் பூமியில் பெரிய பள்ளமும், பல உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

இதனையடுத்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் அடுத்து 60 கிலோ டன் எரிகல் ஒன்று தமிழகத்தில் விழ போகிறது என்பதை கண்டு பிடிக்கின்றனர். அதுவும் 6 நாடகளில் வரப்போகிறது.

600 கிலோ டன் என்பது கிலோவை குறிப்பிடுவது அல்ல. அது வெடிக்கும் திறனை பற்றியது.

அது விழுந்துவிட்டால் 4 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்பதால் அதை தடுக்க முயல்கின்றனர்.

நிச்சயமாக 4 கோடி மக்களை மாநிலத்திலிருந்து வெளியேற்ற முடியாது என்பதால் ஒரு மிஷைல் (ஏவுகணை) வைத்து அதை உடைக்க முயல்கின்றனர்.

ஆனால், அதை உடைக்க எந்த நாட்டிலும் அப்படியொரு ஏவுகனை இல்லை என்பது தெரிய வருகிறது.

இதனால் வெளியுலகுக்கு தெரியாமல் ஒரு நாடு மட்டும் அதை வைத்திருக்க, அதை திருட ஒரு மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி மற்றும் அவரது டீமை நாடுகின்றனர்.

அவர்களுக்கு நாளே நாட்களில் பயிற்சியளித்து விண்வெளிக்கு அனுப்புகின்றனர்.
அங்கே, அந்த ஏவுகனை திருடினார்களா.? அந்த எரிகல்லை உடைத்தார்களா? மக்கள் என்ன ஆனார்கள்? மாநிலம் காப்பாற்றப்பட்டதா? என்பதே இந்த டிக். டிக் டிக்.

கேரக்டர்கள்…

வித்தியாசமான கேரக்டர்களை தொடர்ந்து செல்க்ட் செய்வதற்காக ஜெயம் ரவியை பாராட்டலாம். கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் படத்தை போல முதல் பாதியில் கூட சீரியசாகவே வருகிறார். சிரிப்பதை கூட அளந்தே சிரிக்கிறார்.

கொஞ்சம் கூட சிரிக்காமல் படம் முழுவரும் வருகிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு காட்சியில் மட்டும் நீச்சல் உடையில் வந்து கிளுகிளுப்பூட்டுகிறார்.

வில்லன் வேடத்திற்கு ஜெயப்பிரகாஷ் பொருந்தவே இல்லை. அட்லீஸ்ட் வின்செட் அசோகனை வில்லனாக சித்தரித்து இருக்கலாம்.

ஜெயம்ரவி மகன் ஆரவ் க்யூட்டாக வருகிறார். அவ்வளவுதான்.

மற்றபடி மற்ற கேரக்டர்களில் சுவராஸ்யம் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். தீம் மியூசிக்கிலும் கலக்கியிருக்கிறார். இமானின் 100வது படத்தில் சென்சுரி அடித்திருக்கிறார்.

ஆனால் பாடல்கள் கவரவில்லை. குறும்பா குறும்பா பாடல் ஜெயம் ரவி மகனுக்காகவே எழுதப்பட்டதாக தெரிகிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே வின்வெளிக்கு சென்றது போன்ற அனுபவம் வரும்.

இவர்களை விட முக்கியமானவர் ஆர்ட் டைரக்டரும் கிராப்பிக்ஸ் டீமும்தான். வின்வெளி ஆராய்ச்சி நிலையம் முதல் ஏவுகனை வரை அனைத்தையும் அசலாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தமைக்காக சக்தி சௌர்தரர்ராஜனை பாராட்டலாம்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த டைரக்டர் கேரக்டர் செல்க்சனிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற சாகச படங்களை எடுக்கும்போது தனி ஒருவன் படத்தில் அந்த ஐவர் அணி போல உள்ள நடிகர்களை பயன்படுத்தியிருக்கலாம்.

ஜெயம் ரவி உடன் வரும் அர்ஜீனன் மற்றும் ரமேஷ் திலக் இதற்கு பொருந்தவில்லை. ஒருவேளை அவர்களை இந்த சீரியஸ் படத்திற்கு காமெடிக்காக பயன்படுத்தியிருந்தால் காமெடியாவது கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லை என்பதால் ஏமாற்றம்தான்.

ஒரு மாநிலத்திற்கே பேராபத்து வரும்போது அதை மக்களுக்கு தெரிவிக்காமல் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படியொரு காட்சியே படத்தில் இல்லை. அவர்களே எல்லாம் முடிவையும் எடுக்க முடியுமா?

பெரிய விஞ்ஞானிகள் இருக்கும் போது, ஒரு திருடனையா ஏவுகனையை திருட அனுப்புவார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம்.

விண்வெளி வீரர்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் மேஜிக் மேன் ஜெயம் ரவிக்கு தெரிந்திருக்கிறது என்பது கொடுமை.

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்பதால் லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் ரசிக்கலாம்.

கம்மி பட்ஜெட்டில் காஸ்ட்லியான வின்வெளியை கொடுத்த இந்த டீமை பாராட்டலாம்.

டிக் டிக் டிக்…. வின்வெளியில் விறுவிறுப்பு – 50%

Comments are closed.

Related News

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின்…
...Read More
அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம், தயாரிப்பாளர்…
...Read More