லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபச்சார தொழில் செய்து வருகிறார் சாயாசிங் (ராணி). எதிர்பாராத விதமாக இவருக்கு பெண் குழந்தை பிறந்து விடுகிறது. குழந்தை பெயர் லில்லி.

எனவே அந்த தொழிலை விட்டு வேறு ஒரு வேறு ஒரு வேலைக்கு சென்று வருகிறார் சாயாசிங்.

இந்த நிலையில் அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் வந்துவிடுகிறது. சிகிச்சைக்கு தந்தையின் எலும்பு மஜ்ஜை இருந்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்கிறார் டாக்டர்.

லில்லி ராணி

அந்தக் குழந்தையின் தந்தை யார்? என் தேடுகிறார் ராணி. கண்டுபிடித்தாரா.? குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள் பணி…

சாயா சிங்குக்கு வித்தியாசமான வேடம். இது போன்ற கதைளை மற்ற நாயகிகள் எடுப்பது கடினம். நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் சாயாசிங்.

ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆமை வேகத்தில் இருக்கிறது.

போலீசாக தம்பி ராமையா. இவரின் காட்சிகள் படத்தின் கலகலப்புக்கு உதவி உள்ளன. சிரிக்கவும் வைத்திருக்கிறார். ஆனால் அறிமுக காட்சியில் தம்பி பேசுவதை விட பின்னணி இசை அதிக அளவில் ஒலிக்கிறது.. இதை கூடவா யாருமே கவனிக்கவில்லை.??

அமைச்சர் மகன் என்ற முக்கிய வேடத்தில் துஷ்யந்த். தம்பிராமையாவைக் கன்னத்தில் அறைகிற காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ஜெயப்பிரகாஷ் செம. க்ளை மாக்ஸ் ட்விஸ்ட் சூப்பர்.

சிவதர்ஷனின் ஒளிப்பதிவு நிறைவு. ஜெர்விஜோஷ்வா இசை ஓகே.சேரனின் பின்னணி இசை இரைச்சல்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கதைக்களம் என நம்மை சீட்டுகளில் அமர வைத்து விட்டார்.

ஆனால் திரைக்கதையில் இன்னும் நிறைய கலகலப்பு ஊட்டி காட்சிகளை நகர்த்தி இருந்தால் இந்த லில்லி ராணி கில்லி ராணியாக வந்திருப்பார்.

லில்லி ராணி

Lilly Rani review and rating

NOT REACHABLE திரைப்பட விமர்சனம்

NOT REACHABLE திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமர்சனம் இதோ…

போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. போலீஸ் அலர்ட் ஆகிறது.

காவல் ஆய்வாளர் கயல் (சுபா) சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்கிறார்.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லாவண்யா என தெரிகிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த போன் எண் வர்ஷா என்ற பெண் பெயரில் உள்ளது.

எனவே வர்ஷா என்பவரும் ஆபத்தில் இருப்பது போலீசுக்கு தெரிய வருகிறது.

இந்த வழக்கை, தடவியல் அதிகாரி விஷ்வா மற்றும் கயல் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கிறார் உயரதிகாரி (கயலின் அப்பா).

இந்த நிலையில், ஹேமா என்ற இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறாள். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். இந்த வழக்கும் இந்த கதையில் தொடர்புடையதாக இருக்கிறது.

பெண்களை படத்தி கொலை செய்தவர் யார்.? விசாரணையில் போலீஸ் என்ன கண்டுபிடித்தார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

கலைஞர்கள் பணி…

போலீஸ் வேடத்துக்கு கொஞ்சம் பொருத்தமாக இருக்கிறார் ஹீரோ விஷ்வா. அவர் விசாரணை நடத்தும் விதம் விவேகம்.

சாய் தன்யா, சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ் ஆகியோரின் பங்களிப்பு ஓகே..

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சரண் குமார் இசை அமைத்துள்ளார். இவர்கள் தங்கள் பணிகளில் ஓரளவு தேர்ச்சி பெறுகிறார்கள்.

சந்துரு முருகானந்தம் என்பவர் இயக்கியிருக்கிறார். வழக்கமான பெண் கடத்தல் சம்பவத்தை வைத்து இந்த படத்தை படமாக்கி இருக்கிறார்.

தொலைந்துவிட்ட பெண்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதே நாட் ரீச்சபிள் என்பதை தலைப்பாக வைத்து பரபரப்பை ஏற்றி இருக்கிறார்.

த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக கதை சொல்ல டைரக்டர் முயற்சித்து இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் அடுத்தடுத்து சுவாரஸ்யம் குறைவு என்பதால் நம்மாளும் கதையுடன் ரீச் ஆக முடியவில்லை.

தடயவியல் அதிகாரியை ஒரு கொலை வழக்கில் முதன்மை அதிகாரியாக நியமிப்பார்களா?

ஆனால் ‘காவலன்’ மொபைல் செயலி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகளை அமைத்துள்ளார் டைரக்டர்.

NOT REACHABLE

Not Reachable movie review rating

கணம் விமர்சனம் 4/5.; லைப்ஃல செகன்ட் சான்ஸ்

கணம் விமர்சனம் 4/5.; லைப்ஃல செகன்ட் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

வாழ்க்கையில் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒரு முறை தான் வரும். அது மறுபடியும் ஒரு சிலருக்கு மட்டும் தான் மீண்டும் வரும். அப்படி ஒரு வேலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ??

கதைக்களம்…

சர்வானந்த் ரமேஷ் திலக் சதீஷ் மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். இவர்களது நட்பு பயணம் 20 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது.

தன் சிறு வயதிலேயே அம்மா அமலாவை இழந்தவர் சர்வானந்த். தன் பள்ளி நாட்களில் தன் தோழி காதலை புரிந்து கொள்ளாதவர் சதீஷ். சிறு வயதில் படிப்பு மீது நாட்டம் இல்லாதவர் ரமேஷ் திலக்

இந்த நிலையில் இவர்களுக்கு விஞ்ஞானி நாசர் மூலம் வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைக்கிறது.

எனவே டைம் ட்ராவல் செய்து 20 வருடங்களுக்கு 1998க்கு செல்கின்றனர்.

அம்மாவை சந்திக்கிறார் சர்வா. தன் பழைய காதலியை சந்திக்கிறார் சதீஷ். நன்றாக படித்து முன்னேற நினைக்கிறார் திலக்

இவர்களின் லட்சிய கனவு நிறைவேறியதா? என்பதை படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

1980களில் கலக்கிய அமலா நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து உருகி நம்மையும் அழ வைத்து விட்டார்.

எங்கும் யதார்த்தம் குறையாக நடிப்பில் சர்வா ரமேஷ் திலக் சதீஷ் என மூவரும் கலக்கியுள்ளனர். அதுவும் ரமேஷ் மற்றும் சதீஷ் காட்சிகள் படத்தின் கலகலப்புக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

அம்மா சென்டிமென்ட் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார் சர்வானந்த்.

மற்றபடி நாசர் ரித்து வர்மா ஆகியோருக்கு கேரக்டர்கள் கச்சிதம். இந்த மூவரின் சிறு வயது கேரக்டரில் வரும் அந்த சிறுவர்கள் படத்தின் ஒட்டு மொத்த பாராட்டை அள்ளி செல்கின்றனர். மாஸ்டர் ஜெய் ஹிதேஷ், நித்யா ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

டெக்னீஷியன்கள்…

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது. சுஜித் சாரங் ஒளிப்பதிவு & ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு இயக்குனருக்கு பக்கபலம்.

கடந்த காலத்திற்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் ரசிக்கும் வகையில் சொல்லியுள்ளார் இயக்குனர்.

அதேபோல் 1990களில் இருந்த சிறுவர்கள் திடீரென 2018க்கு வந்தால் எப்படி இருக்கும்? என்பதை வித்தியாசமாக கையாண்டுள்ளார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக்.

முக்கியமாக அந்த சிறுவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பார்க்கும் போது ஐயோ இது லாட்டரி சீட்டு போல.. என்ற சொல்லும் காட்சிகள் காமெடி ஹைலைட்ஸ்.

1990களில் ரஜினியின் அருணாச்சலம் பட ரிலீஸ்.. 2018 ரஜினியின் பேட்ட ரிலீஸ்.. என இரண்டையும் காட்டி இன்றும் ரஜினி தான் மாஸ் என்பதையும் நாசூக்காக சொல்லியுள்ளார் டைரக்டர். இவை 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாக கனெக்ட்டாகும்.

ஆக மொத்தம்.. இந்த கணம்.. லைஃப்ல செகண்ட் சான்ஸ்

Kanam movie review and rating in tamil

கோப்ரா விமர்சனம் 3.25/5.; சீறும் சீயான்

கோப்ரா விமர்சனம் 3.25/5.; சீறும் சீயான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கணித மூளையில் சிறந்து விளங்கும் ஒருவன் தன் எதிரிகளை தான் படித்த படிப்பை வைத்து வேட்டையாடும் கதை தான் இந்த கோப்ரா.

கதைக்களம்…

ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரைக் கொல்ல பாதிரியார் வேடத்தில் அறிமுகமாகிறார் விக்ரம். அதேபோல இந்தியாவிலும் ஒரு மாநில முதல்வரை மாறு வேடத்தில் வந்து கொள்கிறார் விக்ரம்.

இந்த இரண்டு கொலைகளுக்கும் கணித முறைப்படி ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை அறிகிறார் மேக்ஸ் மாணவி மீனாட்சி.. எனவே ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதுகிறார்.

அது பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தியா வருகிறார் இன்டர்போல் போலீஸ் அதிகாரி இர்பான் பதான்.

விக்ரம் செய்யும் கொலைகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார். யார் அவரை செய்ய வைக்கிறார் என்பதை உலகிற்கு தெரியப்படுத்துகிறார் கம்ப்யூட்டர் ஹாக்கர்.

இந்த சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா.? விக்ரம் தப்பினாரா? ஹேக்கர்ஸ் யார்? என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

தனக்கு கொடுக்கப்படும் கேரக்டரில் முழு அர்ப்பணிப்பை கொடுப்பவர் விக்ரம். இதிலும் கொடுத்துள்ளார்.. வித்தியாசமான கெட் அப்… வித்தியாசமான குரல்.. வித்தியாசமான பாடி லாங்குவேஜ் என ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். நிச்சயமாக இது அவருக்கு முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். முதல் பந்தில் (படத்தில்) சிக்ஸர் அடித்திருக்கிறார்.

படத்தில் நான்கு நாயகிகள்… ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி மீனாட்சி & மியா ஜார்ஜ் ஆகியோர்.

விக்ரமை ஒருதலையாகக் காதலிப்பவராக ஸ்ரீநிதி ஷெட்டி. வழக்கமான நாயகி வேடம்தான். ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி. ஸ்ரீநிதியை விட அதிகக் காட்சிகளில் வருகிறார் அதுவும் க்யூட்டாக.

இள வயது விக்ரம் காதலியாக மிருணாளினி மின்னுகிறார். இள வயது விக்ரம் கேரக்டரில் அவரின் சொந்த மகன் துருவ் நடித்திருக்கலாம். முகச்சாயலுக்கு பொருத்தமாக இருந்திருப்பார். இவருக்கு விக்ரம் வாய்ஸ் கொடுத்துள்ளார் அதுவும் சிறப்பு சேர்த்திருக்கிறது. சர்ஜன் காலித் நடித்துள்ளார்.

வில்லன் ரோஷன் மேத்யூ. பெரிய மிரட்டல் இல்லை. இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ஆனந்த் ராஜ், மியா ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு ஓகே.

டெக்னீஷியன்கள்…

3 மணி நேரத்தை தாண்டி ஓடும் படத்தை 2 1/2 மணி நேரமாக சுருக்கியிருக்கலாம். இன்று விமர்சனங்களில் பெரும்பாலான மக்கள் சொன்ன கருத்து இதுதான்.

இரண்டு விக்ரமை மாற்றி மாற்றி காட்டுவதாலும் மாறி மாறி காட்டுவதாலும் நமக்கு குழப்பமாக தெரிகிறது. இதனால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. தெளிவாகவும் இல்லை.

அதிலும் விக்ரம் & ஆனந்தராஜ் இருவரும் கோரசாக ஒரே டயலாக்கை பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதிலிருந்து இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் ??

படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் பரபரப்பான ஹாலிவுட் த்ரில்லர் கோப்ரா கிடைத்திருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கிருஷ்ணன் தன் பணியில் சிறப்பு. முக்கியமாக வெளிநாட்டில் காட்டப்படும் காட்சிகள் சூப்பரோ சூப்பர். ஃபாரின் பறந்தது போல ஓர் உணர்வு.

சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன். ஆக்ஷன் ரசிகர்களுக்கு அல்வா தான். அத்தனையும் சிறப்பு.

மேக்கிங்கில் ஹாலிவுட் படங்களை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம்.. பின்னணி இசை ரகுமான் பாணியில் இல்லை. அவர்தான் இசையமைத்தாரோ? ஆனாலும் சில இடங்களில் மிரட்டல் ரகம் தான்.

வித்தியாசமான கணித கதை… அர்ப்பணிப்பான நடிகர்… திறமையான நடிகைகள்… மிரட்டலான முதல் பாதி.. என அசத்தியிருக்கிறார் அஜய் ஞானமுத்து

பெரிய ஹீரோ விக்ரம் கிடைத்திருப்பதால் அவரை வைத்து சில கணித விளையாட்டுகளை காட்ட நினைத்து இருக்கிறார் அஜய் ஞானமுத்து.

மேக்ஸ்… சயின்ஸ்.. பல கெட் அப்… ட்வின்ஸ்.. கார்ப்பரேட் அரசியல் என அனைத்தையும் ஓவர் டோஸாக கொடுத்து விட்டார் குழப்பத்திற்குக் காரணம்.

ஆக.. இந்த ‘கோப்ரா’.. சீறும் சீயான்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் (3.25).; ரஞ்சித்தின் காதல் (ஜா)தீ

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் (3.25).; ரஞ்சித்தின் காதல் (ஜா)தீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காதல் புனிதமானது.. எதையும் முறியடிக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… காதலில் ஜாதி புகுந்தால் என்ன பிரச்சனை வரும்.. அதிலும் அரசியல் கலந்தால் அதனால் யாருக்கு லாபம்? என்பதை அலசியுள்ளது இந்த நட்சத்திரம் நகர்கிறது.

மேலும் காதல் என்பது.. ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதும் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதும் வருவது மட்டுமல்ல. ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணின் மீதும் வரலாம்.. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் மீதும் வரலாம்.. என்பதை ரஞ்சித் தன் பாணியில் சொல்லி இருக்கிறார். திருநங்கை காதலும் உண்டு.

கதைக்களம்…

ஒரு நாடக பயிற்சி கல்லூரியில் சில நட்சத்திரங்கள் இணைகின்றனர்.. அவர்கள் காதல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற போது அவர்களுக்குள் ஏற்படும் காதலும் மோதலும் தான் கதை.

துஷாரா மற்றும் காளிதாஸ் ஆகியோரின் உடலுறவு காட்சி தான் படத்தின் ஓப்பனிங்.

அப்போது இளையராஜா பாடலை துஷாரா பாட அதை நிறுத்தச் சொல்கிறார் காளிதாஸ்.. இளையராஜாவை உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன்னை எனக்கு பிடிக்காது என்கிறார் துஷாரா..

ஒரு கட்டத்தில்..”உங்கள் ஜாதி புத்தி மாறவே இல்லை” என்கிறார் காளிதாஸ். அப்போது முதல் அவர்களின் காதல் ஜாதியால் உடைபடுகிறது.

இவர்கள் பயிற்சி பெறும் நாடக குழுவில் கலையரசன் வந்து இணைகிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

ரஞ்சித் இயக்கத்தில் இணைந்து விட்டால் கலையரசனுக்கு எங்கிருந்துதான் கலை ஆர்வம் வருமோ தெரியாது.? அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். அதுவும் அவர் திக்கி திணறி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது சூப்பர்.

இடைவெளி காட்சியின் போது கலையரசன் குடித்துவிட்டு செய்யும் கலாட்டா செம.

அடக்கமான அமைதியான சாக்லேட் பாயாக காளிதாஸ். நிதானமாக தன் கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் ஓரங்கட்டி விட்டு சிங்கிளாக துவம்சம் செய்திருக்கிறார் துஷாரா.

நான் என்றால்.. நான் மட்டுமல்ல என் சமூகமும் தான். என் அடையாளத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளை நானே இப்போது இணைத்து உருவெடுத்திருக்கிறேன் என்று துஷாரா சொல்லும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கும்.

யதார்த்த பெண்ணாக பெண்ணியவாதியாக வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்கிறார் இந்த நட்சத்திரம் துஷாரா.

இவர்களுடன்…

ஹரிகிருஷ்ணன் – யஸ்வந்திர
வினோத் – சேகர்
ஞானபிரசாத் – அய்யாதுரை
சுபத்ரா ராபர்ட் – கற்பகம்
சபீர் கல்லாரக்கல் – சகஸ் ரட்சகன்
ரெஜின் ரோஸ் – சுபீர்
தாமு – ஜோயல்
ஷெரின் செலின் மேத்யூ – சில்வியா
வின்சு ரேச்சல் சாம் – ரோஷினி ஆகிய நட்சத்திரங்களும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு கிஷோர் குமார்.. பாண்டிச்சேரியின் கடல் அழகை இன்னும் சிறப்பாக காட்டியிருக்கிறார். ஆரோவ்வில் கலாச்சாரத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

தென்மாவின் இசையில் பாடல்கள் ஓகே. இசையும் கதையுடன் பயணிப்பதால் நம்மால் அந்த கதைக்குள் பயணிக்க முடிகிறது. பாடல்களை உமாதேவி மற்றும் அறிவு எழுதி உள்ளனர்.

படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். படத்தொகுப்பு : செல்வா R.K.

தயாரிப்பு – யாழி பிலிம்ஸ் –
விக்னேஷ் சுந்தரேசன்.
மனோஜ் லியோனல் ஜேசன்.

தமிழகத்தில் நாம் நிஜத்தில் கண்ட ஆணவக் கொலைகளையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் சமூகத்தையும் நேரடியாக காட்டி இருக்கிறார்.

காதலின் பெயரால் இங்கு சிலர் விளையாடும் அரசியலையும் தைரியமாக சொல்லி இருக்கிறார் ரஞ்சித். தாழ்த்தப்பட்ட சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று மறைமுகமாக சொல்லாமல் எஸ்சி SC சமூகத்தைச் சார்ந்த பெண் என்பதையெல்லாம் ஓபனாகவே பேசி இருக்கிறார் டைரக்டர்.

இது தியேட்டர் டிராமா கதை என்பதால் அது அப்படியே ஓடவிட்டு படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். சில நேரம் அது நமக்கு சோர்வை தருகிறது. ஒரு சினிமாவை பார்ப்பது போல் அல்லாமல் ஒரு டாகுமெண்டரி படத்தை பார்ப்பதாக தோன்றுகிறது.

மேலும் படத்தின் வசனங்கள் நமக்கான அரசியலை புரிய வைத்தாலும் அது ஒரு பாடம் எடுப்பது போன்ற உணர்வை தருகிறது அதை தவிர்த்து இருக்கலாம். ரஞ்சித்தின் வழக்கமான சாதிய படம் இது.

ஆக… நட்சத்திரம் நகர்கிறது… ஜாதீயில் ரஞ்சித் வைத்த காதல் தீ..

natchathiram nagargirathu stills

natchathiram nagargirathu stills

natchathiram nagargirathu stills

Natchathiram Nagargiradhu Movie review and rating

‘ஜான் ஆகிய நான்’ திரை விமர்சனம்

‘ஜான் ஆகிய நான்’ திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

311 OTT மற்றும் 311channel.com என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் படம் ‘ஜான் ஆகிய நான்’.

டார்க் லைட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன் தயாரிப்பில், அப்பு கே.சாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

‘ஜான் ஆகிய நான்’ என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்..

கதைக்களம்…

ஒரு கொலை என்றாலே ஊரே நடுநடுங்கும்.. ஆனால் இந்தப் படத்தில் 44 கொலைகள் ஒரே ஊரில் நடக்கின்றன. அப்படி என்றால் இந்த படத்தின் கதையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..

அந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து டிவி பேட்டி ஒன்றில் ஊர்க்காரர் டொச்சு பாண்டி -அருள் அன்பழகன் என்பவர் விவரிக்கிறார்.

இதன் உண்மை தன்மையை ஆராயாமல் டிவியில் ஒளிபரப்பு ஆகிறது. இதனால் , அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கம் கேட்கிறது காவல்துறை.

அன்பழகன் சொன்னவை அனைத்தும் பொய் என்பதை அறிகிறார் அப்பு கே.சாமி.

எனவே களத்தில் இறங்குகிறார். அந்த கொலைகளின் உண்மையான பின்னணி என்ன? என்பதை தன் பாணியில் விவரிப்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ரிக்கவரி பாண்டி மற்றும் போலீஸ் ஜான் என்ற இரண்டு வேடங்களில் அப்பு கே.சாமி, நடித்திருக்கிறார். ஒரு கேரக்டர் காமெடி காதல் என்றால் அடுத்த கேரக்டர் கடமை கம்பீரம் என வேறுபடுத்தி காட்டி இருக்கிறார்.

அப்பாவியாக அறிமுகமாகும் அன்பழகன் திடீரென அதிரடி காட்டி விஸ்வரூபம் எடுப்பது எதிர்பாராத ட்விஸ்ட்.

நாயகியாக ஹேமா.. அட வாம்மா.. என நம்மை கவரும் பாத்திரத்தில் நக்‌ஷத்ரா ராவ். எளிமையும் எதார்த்தமும் நிறைந்த நடிகை.

நீண்ட நாட்களாக சினிமா ரசிகர்கள் மறந்து இருந்த பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மொக்கை ஜோக்குகள் போட்டு வெறுப்பேற்றுகிறார். ஆனால் அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்பதால் ரசிகர்கள் தப்பித்தனர்.

ராஜநாயகம் கதாப்பாத்திரத்தில் ஜாக்சன் பாபு. காமெடி வில்லன் தான் என்றாலும் சில இடங்களில் தன் வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.

டாக்டராக நிழல்கள் ரவி.. தொழிலதிபராக ஆதேஷ் பாலா.. இவர்களின் கேரக்டர் சிறியது என்றாலும் தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

கவியரசனின் ஒளிப்பதிவு மற்றும் 311 ஸ்டுடியோஸின் இசை, படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

இந்த படத்தை இயக்கி் ஹீரோவாக நடித்த அப்பு கே.சாமி வித்தியாசமான முறையில் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார்.

இது நாம் அடிக்கடி பார்த்து பழகி போன பழிவாங்கல் கதைதான் என்பதால் அதை சற்று திரில்லர் கலந்து சொல்லி இருக்கலாம்.. சில காட்சிகளில் தனக்கு மட்டுமே புரியும் படியான காட்சிகளை ரசிகர்களுக்கும் புரியும் படி வைத்திருந்தால் இந்த திரைக்கதையில் ரசிகர்களின் ரசனை கூடி இருக்கும்.

வேலையில்லாத இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி வளைக்கிறது.?

சில ஊடகங்களில் சொல்லப்படும் பொய்கள் எப்படியான தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

கூடுதல் தகவல்..

குறிப்பு : ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைலிலோ , உங்கள் வீட்டு தொலைகாட்சி பெட்டியிலோ இலவசமாக பார்க்க விருப்பமா .?!
அதற்கு Google Play Store ல் கீழ்காணும் App ஐ டவுன்லோட் செய்து, அதில் கீழ்காணும் User Details ,
user name & Password ஐ பயன்படுத்தி அதில் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் கீழ்காணும் Free purchase coupon code : 5555 ஐ பயன்படுத்தினால் நீங்களும் Free of cost-ல்: ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை கண்டு களிக்கலாம்.

App link :
https://play.google.com/store/apps/details?id=com.tamilottplatdorm.app

User Details
user name : [email protected]
password : 270820222000

311 மொபைல் ஆப் மற்றும் 311channel.com இணையத்தில், Free purchase coupon code : 5555 என்ற எண்ணை பயன்படுத்தி ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம்.

John Aagiya Naan

More Articles
Follows