பட்ஜெட் மேரேஜா.? டேமேஜா.? திருமணம் விமர்சனம் 3.25/5

பட்ஜெட் மேரேஜா.? டேமேஜா.? திருமணம் விமர்சனம் 3.25/5

நடிகர்கள்: சேரன், சுகன்யா, உமாபதி, காவ்யா சுரேஷ், பால சரவணன், எம்எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் – சேரன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்
இசை – சித்தார்த் விபின்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

பட நாயகன் உமாபதி ஒரு ரேடியோ ஸ்டேசனில் ஆர்.ஜே.வாக பணி புரிகிறார். இவரது அக்கா சுகன்யா ஜவுளி (பொட்டிக்) பிசினஸ் செய்து வருகிறார். இவர்களது சித்தப்பா எஸ்எஸ் பாஸ்கர். இவர்களது குடும்பம் வசதியான ஜமீன் பரம்பரை.

வருமான வரித்துறை அதிகாரியாக சேரன். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது ஒரே தங்கை காவ்யா சுரேஷ்.. இவர்களது அக்கா ஒரு இல்லத்தரசி. இவர்களது மாமா தம்பி ராமையா.

நாயகன் மற்றும் நாயகி காதலிக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோர் சம்மதமும் கிடைக்கிறது.

அதன்பின்னர் திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. ஆனால் சுகன்யா தரப்பு ஆடம்பரமாக செலவு செய்ய நினைக்க, சேரன் மிக எளிமையாக நடத்த விரும்புகிறார்.

இதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நிற்கிறது. அதன்பின்னர் திருமணம் எப்படி நடந்தது..? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

பாசமான அண்ணன், பொறுப்பான மகன், சிக்கனமான குடும்ப பையன் என வெரைட்டி காட்டியிருக்கிறார் சேரன்.

ஒரு திருமண பத்திரிகையின் செலவு ரூ. 250 மற்றும் 3500 பத்திரிகை அடிக்கும் செலவு + பின்னர் அதை கொடுக்க செல்லும் செலவு மற்றும் இதர செலவுகளை சேர்த்தால் ரூ. 12 லட்சம் ஆகும் என்றால் அது தேவையா? என சேரன் கேட்கும்போதே அட ஆமால்ல என்று நம்மையும் கேட்க வைக்கிறது.

திருமண பத்திரிகையை வாங்குபவர்கள் அதில் தேதி மற்றும் இடத்தை பார்த்துவிட்டு துக்கி போட்டு விடுவார்கள்? அதற்கு ஏன்? இந்த ஆடம்பரம் என்று சேரன் கேட்கும்போது நம்மை அறியாமல் கை தட்டி விடுகிறோம்.

ஆனால் படம் முழுவதும் சேரன் சோகமாகவே வருகிறார். முகத்தில் புன்னகை துளி கூட இல்லையே சார்.

சுகன்யாவை சும்மா சொல்லக்கூடாது. பணத்திமிரு, ஆடம்பரம், அழகு என அனைத்திலும் அம்சம்.

நாயகன் நாயகிக்கு பெரிதாக வேலையில்லை. குடும்பத்திற்கும் கதைக்கும் ஏற்ற கேரக்டர்களாக வருகிறார்கள். நாயகனை விட நாயகிக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது.

இதில் நாயகிக்கு ஒரு பரதநாட்டியம் காட்சி வேற. அவருக்கு ஆடத் தெரியட்டும். ஆனால் அந்தக் காட்சி ஏன்..? தேவையில்லாத ஒன்றாக தெரிகிறது.

டிரைவராக வரும் பாலசரவணின் காமெடி சில நேரம் எடுபடுகிறது. தம்பி ராமையா மற்றும் எம்எஸ். பாஸ்கர் இருவரும் நடிப்பில் செம.

திருமண செலவு என்பது நாம் செய்யும் தர்மம். அதில் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய குடும்பங்கள் பிழைக்கிறது என சேரன் அம்மா சொல்லும் இடம் நச். பாராட்டுக்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் பெரிதாக எழவில்லை என்றாலும், பின்னனி இசை பாராட்டை பெறுகிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.

ஆடம்பர திருமணத்தில் ஏற்படும் அனாவசிய செலவுகளை குறைத்தால் அந்த தொகையை புதுமணத் தம்பதிகளுக்கு கொடுத்து உதவலாம் என அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் சேரன்.

திருமண சாப்பாட்டில் பலருக்கு பிடிக்காத ஐட்டங்கள் இருக்கலாம். ஒரு சிலர் சாப்பிட்டு கூட வரலாம். எதற்காக சாப்பாடு வைத்து வேஸ்ட் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக யாருக்கெல்லாம் சாப்பாடு வேனுமோ?

அவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து சாப்பிட சொல்லலாம் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாக சில மணி நேரத்திற்காக ரிசப்சன் ஜிப்பாவுக்கு ஆகும் செலவையும் குறைக்க சொல்லியிருக்கிறார். அதற்கும் ஹேட்ஸ் ஆஃப்.

முதல் பாதி செல்வதே தெரிவதில்லை. ஆனால் 2ஆம் பாதியை சீரியல் போல கொண்டு சென்றுவிட்டார் சேரன்.

ஆனால் திருமணம் செய்யப் போகும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் இந்த படம் நிச்சயம் புடிக்கும்.

பட்ஜெட் பத்மநாபன்.. திருமணம் விமர்சனம்

Comments are closed.

Related News

மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன்…
...Read More
கிட்டதட்ட 18 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில்…
...Read More