தாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)

தாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)

நடிகர்கள்: உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு, வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் மற்றும் பலர்.
இயக்கம் – சீனு ராமசாமி
ஒளிப்பதிவு – ஜலந்தர் வாசன்
எடிட்டிங் – மு. காசி விஸ்வநாதன்
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

விவசாயம் படித்த பட்டதாரி உதயநிதி. தன் தந்தை சொன்னால் மறுவார்த்தையே கிடையாது என வாழ்பவர்.

மேலும் தாய் இல்லாத தனக்கு அப்பத்தா (வடிவுக்கரசி) தான் என எல்லாம் என்பதால் இவர்களின் கட்டுப்பாட்டில் வளர்கிறார்.

தனது சொந்த நிலத்திலேயே இயற்கை உரங்களை தயாரித்து அதை இலவசமாகவும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

வங்கியில் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் கடன் வாங்கி கொடுப்பதும் அவர்கள் கட்டவில்லை என்றால் அவர்களுக்காக இவர் கட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

வங்கியில் நேர்மையாக பணிபுரியும் பேங்க் மேனஜர் தமன்னாவை சந்திக்கிறார். அவர் மீது காதல் கொள்ள, இரு வீட்டார் சம்மத்துடன் பல பிரச்சினைகளுக்கு பிறகு திருமணமும் நடக்கிறது.

அதன்பின்னர் ஒரு கட்டத்தில் பார்வையை இழக்கிறார் தமன்னா. அதன்பின்னர் என்ன ஆனது? அதில் இருந்து அவரை எப்படி மீட்டு எடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஊர் சுத்தும் பையன், பெற்றோர் பேச்சை கேட்காதவர் என படங்களில் நடித்து வந்து உதயநிதி இதில் தன் வழக்கத்தை மாற்றியிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெற்று விடுகிறார்.

தமன்னாவை படம் முழுவதும் தாங்கி அன்பான கணவனாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் சென்டிமெண்டிலும் தேறியிருக்கிறார் உதயநிதி.

ஆனால் ஒரு வாரம் சாப்பிடாம இருக்கும் காட்சியில் சோர்வு பத்தவில்லை. ஜீஸ் குடிப்பதற்கு முன்பே படு ப்ரெஷ்ஷாகிவிடுகிறார். அது எப்படியோ? பல இடங்களில் ஒரே முக பாவனையை மட்டுமே காட்டுகிறார்.

தர்மதுரை படத்திலேயே தமன்னாவை வேறு கோணத்தில் காட்டியிருப்பார். இதில் நேர்மை, பொறுமை, கண் மை என எக்ஸ்ட்ரா மைகளை சேர்த்துள்ளார். தமன்னாவின் கண்களுக்காகவே க்ளோஸ் அப் சாட்டுகளை அதிகம் காண முடிகிறது.

ஒரு துளி கூட கவர்ச்சியில்லாத தமன்னாவை காட்டியிருப்பது சிறப்பு.

உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராம், அப்பத்தா வடிவுக்கரசி, தோழி வசுந்தரா என அனைவரிடத்திலும் மிகையில்லாத நடிப்பை வாங்கியிருக்கிறார் சீனுராமசாமி.

நாயகன் நண்பர்களாக வரும் அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. எந்தன் கண்களை காணோம் பாடல் படத்திற்கு ஹைலைட்.

பாடல்களை விட வைரமுத்துவின் பாடல் வரிகள் நம்மை அதிகமாகவே ஈர்க்கின்றன.

ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். கிராமத்து அழகை அழகாக ரசித்துக் கொண்டே இருக்கும்படி தந்துள்ளார். இது அவரின் முதல் படமா? என்பதை நம்ப முடியவில்லை.

முதல் பாதியில் படம் சீரியல் போல உள்ளதை தவிர்த்து இருக்கலாம். கிராமத்தில் எவ்வளவோ ரசிக்கத் தகுந்த காட்சிகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் காண்பித்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

ஆனால் 2ஆம் பாதியில் படத்தை தாங்கி நிறுத்தியிருக்கிறார்.

பெண்களை உயர்வாக காண்பிப்பதில் சீனுராமசாமி செமசீனு ராமசாமி தான்.

மருமக வேலைக்கு போறதுதான் புடிக்கல. அவளை புடிக்கலைன்னு சொல்லலையே என மாமியார் சொல்லும்போது தாய்மார்களை கவர வைத்துவிடுவார்.

முதல்பாதியில் விவசாயம் கடன் முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் சொல்லியிருப்பது தமிழர்களை உற்சாகப்படுத்தும்.

கண்ணே கலைமானே… தாய்மார்களின் தாலாட்டு

Kanne Kalaimaane review rating

Comments are closed.

Related News

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு…
...Read More
'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி…
...Read More