தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

கதைக்களம்…

இப்படத்தின் கதை… ஏம்ப்பா.. இதுக்கு எல்லாம் கதை இருக்கா? என்ன? அது டைரக்டருக்கே தெரியாது.

தமிழ் சினிமாவின் நாம் ரசித்த காட்சிகளையும் வெறுத்த காட்சிகளையும் இதில் தொகுத்து உள்ளனர்.

பல லொள்ளு சபாக்களின் கிண்டலே இதன் பாணி.

முதல் பாகத்தில் டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார்.

அந்த பி யை சிவா பிடித்தாரா? என்பதை எப்படி எல்லாம் கலாய்க்கும் படி செய்ய முடியுமோ அப்படி செய்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

Dhv8PEdUYAINkGu

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களையும் சேர்த்து அகில உலக சூப்பர் ஸ்டார் என பட்டப் பெயருடன் வந்துள்ளார் சிவா.

டைட்டில் கார்ட்டிலேயே ரஜினி லோகோவுடன் சிவா பெயர் வருகிறது.

படம் முழுவதுமே இவர் ஒருத்தர் தான் எனலாம்.

ஓபிஎஸ், சின்னம்மா சசிகலா முதல் தமிழிசை, எச் ராஜா வரை அரசியல்வாதிகளையும் கலாய்த்துள்ளார்.

சிவா பேசினால் ஏன் பார்த்தால் கூட ஆடியன்ஸ் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கலாய்ப்பது தான் கான்செப் என்பதால் நோ லாஜிக்.

மற்றபடி சிவா முகத்தில் எந்தவித ரியாக்சனும் வேறு மாதிரியாக இல்லை. ஒரே மாதிரிதான். ஓவர் ரியாக்சன் என்றால் முகத்தை மூடிக்கொள்கிறார்.

சதீஷ் கேரக்டர் செம. 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் போட்டு கலாய்த்து விட்டார். நல்ல வேளை அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. இல்லேன்னா இன்னும் நிறைய காட்சிகள் இருக்கும் போல.

போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா…ஆனா இன் ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் என்ற வசனத்திற்கு பயங்கர கைத்தட்டல். நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போல.

சிவா அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதால் ஹாலிவுட் படங்களையும் கலாய்த்துள்ளனர்.

DhY7F9ZWsAA5tj1

ஸ்பீட், கேம் ஆப் தோரன்ஸ் போன்ற படங்களையும் விட்டு வைக்கவில்லை.

பாகுபலி, கபாலியின் உல்டா காட்சிகளை ரசிக்கலாம். வேதாளம், விவேகம் காட்சிளுக்கும் பஞ்சமில்லை.

ஆனால் ஓவர் டோஸ் ஒடம்புக்கு ஆகாது என்பது போல் சில நேரங்களில் சலிப்பு தட்டுகிறது.

கலாய்ச்ச்சிட்டே இருந்தா? எப்படியா? என எண்ணத் தோன்றுகிறது.

தேவை இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் மைனஸ். சில பாடலை கட் பண்ணிவிட்டு படத்தை ஓட்டியிருக்கலாம். பின்னணி இசை ஓகே.

ஒளிப்பதிவாளர் மற்றும் ஆர்ட் டைரடக்ரை பாராட்டலாம்.

சிஎஸ். அமுதன் கலாய்ப்பதில் சின்சியர் என பட்டம் வாங்கிவிட்டார். ஆனால் சீரியஸ் ஆக ஒரு படம் எடுப்பாரா? என்பதை பார்ப்போம்.

பெரும்பாலும் ஹிட் அடித்த படங்களையே கலாய்த்துள்ளனர். எனவே அந்த படங்களை நீங்கள் பார்த்து இருந்தால் எல்லா காட்சிகளும் புரியும்.

தமிழ்ப்படம் 2.. கலாய்ச்சிட்டாரம்மா (நம்ம ஹீரோஸ் மைண்ட் வாய்ஸ்)

Comments are closed.