பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி.; நாய்சேகர் விமர்சனம் 3.5/5

பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி.; நாய்சேகர் விமர்சனம் 3.5/5

ஒன்லைன்..

நாய் கடியால் சேகருக்குள் ஏற்படும் மாற்றங்களை காமெடியாக அறிவியல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். இவரே படத்தில் ஒரு கேரக்டராகவும் நடித்துள்ளார்.

காமெடி நடிகர் சதீஷ் இதில் நாயகனாக அறிமுகம். சின்னத்திரை நடிகை பவித்ரா லட்சுமி நாயகியாக அறிமுகம்.

கதைக்களம்..

சதீஷ் மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்.

சதீஷின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஞ்ஞானி மரியம் ஜார்ஜ் பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறார். இவர் வெறித்தனமாக ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி பட பெயர்களையே தன் ஆராய்ச்சிக்கு பெயராக வைக்கிறார்.

உதாரணத்திற்கு புறா மற்றும் நாய் டிஎன்ஏக்களை எடுத்து மாற்றி செலுத்துகிறார். அதாவது நாய் பறக்கும்.. புறா கடிக்கும்… இதுபோன்ற வித்தியாசமான ஆராய்ச்சிகளை செய்து பார்க்கிறார்.

இந்த சூழ்நிலையில் இவர் வளர்க்கும் ஒரு நாய் (அதன் பெயர் படையப்பா) சதீஷை கடித்துவிடுகிறது. இதனால் நாய் சுபாவம் கொண்டவராக மாறுகிறார் சதீஷ். அந்த படையப்பாவோ சதீஷாக மாறுகிறது.

இதனால் சதீஷ் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறது.. நாய் மனிதனாக மாறி என்ன செய்தார்.? கடைசியில் என்ன ஆச்சு? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் என்பதால் ஓவர் பில்டப் இல்லாமல் கொடுத்த கேரக்டரில் பாராட்டை பெறுகிறார் சதீஷ். க்ளைமாக்ஸ் காட்சி என்றாலும் கூட அதிரடி பைஃட் கேட்காமல் செய்துள்ளது சிறப்பு. டான்ஸில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் இன்னும் ரொமான்ஸ் செய்திருக்கலாம்.

அமுல்பேபியாக வந்து செல்கிறார் பவித்ரா லட்சுமி. சில காட்சிகளில் க்யூட்.

நாய்க்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் மிர்ச்சி சிவா. படையப்பா பேசும் பன்ச் வசனங்கள் நிறைய கைத்தட்டல்களை பெறுகிறது.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வில்லனாக நடித்துள்ளார். பாட்டு பாடியே கொல்லும் காட்சிகள் செம. இது என்ன ராகம்.. இது என்ன ராகம் என இவர் கேட்பது சிறப்பு.

பவித்ராவின் அப்பா இளவரசு, சதிஷின் அப்பா ஞானசம்பந்தம், அடியாள் மாறன், சயின்ஸ்ட் மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல பேர் நம்மை நிறையே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால் சதீஷை விட இவர்களை நிறைய காமெடி செய்துள்ளனர்.

சதீஷின் நண்பராக நடித்துள்ள இயக்குனர் கிஷோர் ராஜ்குமாரும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க தவறவில்லை.

இதுபோன்ற படங்களில் லாஜிக் பார்க்க வேண்டாமென்பதால் காமெடிக்காக ரசிக்கலாம்.

மேலும், மனோபாலா, கேபிஒய் பாலா, இளவரசு, ஸ்ரீமன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டெக்னிஷியன்கள்..

அஜீஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாண்டி நடனம் அமைத்துள்ள நாய் பாணியில் ஆடும் டான்ஸ் அருமை. டூயட் பாடல் ஓகே.

பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. எடிட்டர் தன் பணியில் ஓகே.

குழந்தைகளை கவரும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் கிஷோர். எனவே பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கலாம்.

ஆக.. இந்த நாய் சேகர்.. பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி

Naai Sekar movie review and rating in Tamil

Related Articles