ஹரஹர மகாதேவகி விமர்சனம்

ஹரஹர மகாதேவகி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், ரவிமரியா, ஆர்கே.சுரேஷ், பாலசரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், நமோ நாராயணன் மற்றும் பலர்.
இயக்கம் : சந்தோஷ் பி. ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்கே.
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : எஸ். தங்கராஜ்

Hara-Hara-Mahadevaki-Movie-Stills

கதைக்களம்…

ஆங்ங்… அம்பி.. என் முனகல் சத்தத்தில் பேசும் சாமியாரின் பஜனை பேச்சுக்களுடன் படம் ஆரம்பிக்கிறது. அவரே எல்லா கேரக்டர்களுக்கும் அவரது ஸ்டைலில் இன்ட்ரோ கொடுக்கிறார்.

குடியரசு மக்கள் கட்சி பெயரில் ஒரு பேக் கிட்டதட்ட படத்தில் உள்ள 4 குழுவிடம் இருக்கிறது.

அதில் ஒவ்வொரு குழுவும் சில பொருட்களை கொண்டு செல்ல, அந்த பேக் கைமாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அரசியல்வாதியின் சதிவேலை திட்டம் அம்பலமாகிறது.

இதில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ் ஆகியோர் ஒரு பக்கம். இதில் காதலர்களின் பொருள் மற்றும் ஜட்டிகள் இருக்கிறது.

ரவிமரியா, நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் அடுத்த குழு. இவர்களிடம் உள்ள பையில் பாம் இருக்கிறது.

பாலசரவணனிடம் உள்ள பையில் முழுக்க கள்ளநோட்டுக்கள் இருக்கிறது.

ஒரு குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறது ஒரு கும்பல். அவர்களிடம் கொடுக்க ஒரு தம்பதி பையில் நல்ல ரூபாய் நோட்டுக்களை வைக்கின்றனர். இதை தேடி போலீஸ் ஆர்.கே.சுரேஷ் வருகிறார்.

இந்த நாலு குழுவும் ஒரு இடத்தில் கூடி அடிக்கும் கும்மாளமே இந்த படம்.

?????????????????????????????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

இதுபோன்ற படங்களில் யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். இதில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார். ஜாலியாக வந்து செல்கிறார்.

நிக்கி கல்ராணி கவர்ச்சியாக வராவிட்டாலும் அவரது கடவுளே கடவுளே ரியாக்சன் படத்திற்கு ஈடு கொடுக்கிறது.

இவரிடம் காதலை ப்ரோபோஸ் செய்ய, சாவு வண்டியில் ஹீரோ வருவது செம.

பாலசரவணன் கள்ள நோட்டை மாற்றும் விதம் பல பேருக்கு ரூட்டாக அமைந்துவிடும்.

மொட்டை ராஜேந்திரன் காமெடியிலும் டபுள் மீனிங்கிலும் அனைவரையும் கவர்கிறார். அதுவும் இவரை கதவு லென்ஸ் வழியாக பார்க்கும் போது அசல் வேற்றுகிரக ஜந்து போல வருகிறார்.

இவரும் கருணாகரனும் விபச்சாரியிடம் சென்று மாட்டிக்கொள்ளும் சீனில் வரும் சிரிப்பு சத்தம் அடங்க வெகு நேரமாகும்.

இவர்கள் இல்லாமல் சதீஷ் அடிக்கும் காம நெடி ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை.

மனோபாலா எதற்காக வருகிறார்? ஒரு பாடலுக்கு வர அவர் என்ன ஐட்டம் டான்சரா?

Hara-Hara-Mahadevaki-poster

ரவிமரியா மற்றும் நமோ நாராயணன் ஆகியோரின் இலக்கிய ஜோக்குகள் ரசிக்க வைக்கிறது.

அதுபோல் ரவிமரியா காலுக்கு இடையில் பாம்பு, நமோ நாராயணன் காலுக்கு அடியில் பீர்பாட்டில் என செக்ஸ் காமெடியில் உச்சம் தொட்டுவிட்டார்கள்.

இந்த சிரிப்பு படத்தில் சீரியஸ் ரோல் செய்ய முயற்சித்துள்ளார் போலீஸ் ஆர்.கே.சுரேஷ்.

ஜட்டி இல்லாமல் பார்ப்பது, அதை பாம்பு என்பது, பின்னர் பாம்பு எப்படி? என்பதை எல்லாம் வசனங்களாக பேசி கைத்தட்டலகளை அள்ளுகின்றனர்.

Hara-Hara-Mahadevaki-Working-Stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசை – பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு – செல்வகுமார் ஆகியோர் படத்திற்கு எது தேவையோ? அதை சரியாக செய்துள்ளனர்.

வயசுக்கு வந்தவங்க மட்டும் என் படத்துக்கு வாங்க என சொல்லிவிட்டார். எனவே அவர்களுக்காக காமம் கலந்து காமெடி கலந்து புல் மீல்ஸ் கொடுத்துள்ளார்.

கை குலுக்கி போங்க, அதானே பார்த்தேன் உங்களுக்கு இவ்வளவு பெருசா இருக்காதே?, உள்ள போடலாம் வந்தா? வெளியே போக சொல்லிறியே என நிமிடங்களுக்கு நிமிடம் டபுள் மீனிங் வந்து போகிறது.

hhmd advt

நாம லஞ்சம் கொடுத்தா அது நல்ல பணமா? கள்ள பணமா? என பார்க்காம வாங்குறவங்க ஒரே ஆளு போலீஸ்தான் என்பது போன்ற சமூக கருத்துக்களும் இப்படத்தில் உள்ளது.

பாம்பு, பாம், பை இதுபோன்ற விஷயங்களை எத்தனையோ படங்களில் பார்த்துவிட்டோம். அதையாவது மாற்றியிருக்கலாம் டைரக்டர் சார்.

இந்த மாதிரியான படம்ன்னா நான் ஜாலியா பார்ப்பேன் என்பவரா நீங்களா? அப்படின்னா இந்த பஜனைக்கு டிக்கெட்ட போடுங்க.

ஹரஹர மகாதேவகி… பஜனை பரவசம்

ஸ்பைடர் விமர்சனம்

ஸ்பைடர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மகேஷ்பாபு, எஸ்ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி, ரகுல் பிரித்தி சிங், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : ஏஆர். முருகதாஸ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
எடிட்டர்: ஸ்ரீகர்பிரசாத்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா ரியாஸ்
தயாரிப்பு : என்விஆர் சினிமாஸ்

கதைக்களம்…

ஹீரோ மகேஷ்பாபு ஒரு இன்டெலிஜென்ட் ஆபிசர். பொதுமக்கள் பேசுற போனை ஒட்டுக் கேட்பதுதான் இவரோட வேலை.

அதில் யாராவது சதி வேலைகள் பத்தி பேசுறாங்களான்னு ஒட்டுக் கேட்டுகிட்டு அதை அரசுக்கு தகவல் கொடுத்து முறியடிப்பதுதான் இவரோட வேலை.

இது இல்லாமல் சில அப்பாவி மக்கள் ஏதாவது பிரச்சனையில மாட்டியிருந்தா அவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

முகம் தெரியாத மனிதர்களுக்கு தாமாகவே சென்று உதவி செய்வதுதான் உண்மையான மனிதாபிமானம் என்று நினைக்கிறார் இவர்.

இந்நிலையில் இரண்டு கொலைகள் நடப்பது இவருக்கு தெரிய வருகிறது.

தன்னை மீறியும் அந்த கொலை நடந்துவிட்டதால் அதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்ற தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.

அதன்பின்னர் நடப்பது என்ன? என்பதுன் ‘ஸ்பைடர்’ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கும் மகேஷ்பாபுவிற்கு இது முதல் நேரடி தமிழ்ப்படம். எனவே அவரே வாய்ஸ் கொடுத்துள்ளார். சில இடங்களில் தெலுங்கு மணம் வீசினாலும் அவருடைய முயற்சியை பாராட்டலாம்.

வழக்கமான தெலுங்கு படம் என்றில்லாமல் இதில் ஹீரோயிசத்தை அடக்கி வாசித்திருக்கிறார்.

ஸ்டைலிஷ் லுக், ஆக்சன் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். காதலியை அலட்சியப்படுத்தி நடிப்பதிலும் ரசிக்க வைக்கிறார்.

படத்திற்கு ரகுல்பீரித்தி சிங் தேவையா? என்றே தோன்றுகிறது. அவர் இல்லாமல் காட்சிகள் இருந்தாலும் ஓகேதான். இரண்டு பாடல்கள் மிஸ் ஆகியிருக்கும் அவ்வளவுதான். ஆனால் பாடல்காட்சியில் மனதை கவர்கிறார்.

படத்தில் அதிரடி சரவெடி என பின்னியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா. சுடலை கேரக்டரை ஜஸ்ட் லைக்தட் என சுட்டுத் தள்ளியிருக்கிறார் வில்லன் எஸ்ஜே. சூர்யா.

இடைவேளைக்கு முன்னர்தான் திரையில் வருகிறார். வரும்போதே தியேட்டரை அதிர வைக்கிறார். தமிழ் சினிமாவுக்கு புதுவில்லன் கிடைச்சாச்சு.

இரண்டு சீன்களில் வந்தாலும் பரத் தன் கேரக்டர் ரோலில் முக்கியத்துவம் பெறுகிறார்.

காமெடி செய்துக்கொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு இதில் சீரியஸ் ரோல்.

இவர்களுடன் முக்கியமான ரோலில் நடித்த அந்த சின்ன பையன் (இளவயது வில்லன்) அதிகம் கவனிக்க வைக்கிறார். அவருக்கு இனி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், மகேஷ்பாபு அம்மா, சிபிஐ ஆபிசர்கள் ஆகியோரும் ரசிகர்களின் கவனம் பெறுகின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன.

படத்தின் நாயகன் மற்றும் அவரது ஒர்க் இதுதான் என ஒரு பாட்டில் சொல்லியிருக்கும் விதம் அந்த எடிட்டிங் அருமை.

ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் மிரட்டியிருந்தாலும் பாடல்கள் தமிழ் ரசிகர்கள் வசீகரிக்காது என்றே தோன்றுகிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

ஹீரோவுக்கு இணையாக வில்லன் கேரக்டரை வடிவமைத்து அதில் எஸ்ஜே. சூர்யாவை நடிக்க செய்துள்ளார் முருகதாஸ். அவருடைய சாய்ஸ் பெஸ்ட்.

பொதுவாக தன் கமர்சியல் படங்களில் கூட ஒரு நல்ல மெசேஜ் கொடுப்பவர் இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இதிலும் சொல்லியிருக்கிறார்.

தனக்கு தெரிந்தவர்களுக்கு செய்யும் உதவியானது ஒரு பிரதிபலனை எதிர்பார்க்கும். ஆனால் முகம் தெரியாதவர்களுக்கு செய்யும் உதவியே மனிதாபிமானம் என சொல்லியிருக்கிறார்.

அதுபோல் நம்மில் எல்லாரிடத்தும் ஒரு குரூரம் ஒளிந்திருக்கும். அதை வெளியில் விட்டால் நமக்கும சமூகத்துக்கும் ஆபத்து என்பதையும் வலியிறுத்திருக்கிறார்.

முதல்பாதியில் இருக்கும் அந்த த்ரில்லை இரண்டாம் பாதியில் தொடர்ந்திருக்கலாம்.

ஒரு காட்சியில் வில்லனை பெண்கள் சுற்றி வளைப்பது கொஞ்சம் சீரியல் ட்டைப் போல் உள்ளது. ஆனால் அதற்கான காரணம் ரசிக்க வைக்கிறது.

க்ளைமாக்ஸ் பாறை காட்சி, ஆஸ்பிட்டல் இடியும் காட்சி அனைத்தையும் தியேட்டரே அதிரும படி செய்திருக்கிறார். கிராபிக்ஸ் என தெரிந்தாலும் ஒரு வேளை பூகம்பம் வந்தால் இப்படித்தான் இருக்குமோ? என நம் மனதை கலங்கடிக்கிறார் முருகதாஸ்.

இறுதியில் மகேஷ்பாபு பேசும் பன்ச் ரசிக்க வைக்கிறது. ஆனால் ரொமான்ஸ் ஆக்சன் பாசம் என அனைத்திலும் மகேஷ்பாபுவின் வாய் மட்டுமே அசைகிறது. முகபாவனைகளையும் சேர்த்து கொடுத்திருந்தால் ஸ்பைடர் சூப்பராக வந்திருப்பான்.

ஸ்பைடர்… ரசிக்க தகுந்தவன்

பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : இனிகோ பிரபாகர், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகிபாபு, ரமேஷ்திலக், பாலசரவணன், காளிவெங்கட், மொட்டை ராஜேந்திரன், ஆர்என்ஆர் மனோகர், சேரன்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஐயப்பன்
இசை : என்ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு: K.G.வெங்கடேஷ்
எடிட்டர்: ராஜாசேதுபதி
பி.ஆர்.ஓ. : வின்சன்
தயாரிப்பு : மாதையன் ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ்

???????????????????????????????????????

கதைக்களம்…

தஞ்சாவூரில் ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோ பிரபாகர், யோகிபாவு, ரமேஷ்திலக். இதில் இனிகோவின் காதலி ஸ்ரீபிரியங்கா. இவர்களின் கதை ஒருபக்கம்.

அடுத்த ஹீரோ செங்குட்டுவன், காதலி அனிஷா மற்றும் நண்பன் பாலசரவணன் மற்றொரு பக்கம்.

இனிகோ, யோகி, ரமேஷ்திலக் மூவரும் ஊர் ஆட்டை திருடிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகின்றனர். மேலும் அருகிலுள்ள கும்பகோணம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு மாதம் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கிறது கோர்ட்.

அவர்கள் ஸ்டேஷனுக்கு செல்ல, அங்குள்ள இன்ஸ்பெக்டர் இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். இல்லையென்றால் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

பணத்திற்காக அனிஷாவின் செயினை பறிக்க மேலும் ஒரு குற்றம் இவர்கள் மீது விழுகிறது.

இந்த குற்றத்தை பதிவு செய்யாமல் இருக்கவேண்டுமென்றால் வைரம் கடத்த பணிக்கப்படுகிறார்.

இதனால் குற்றம் மேல் குற்றம் செய்யும் இவர்கள், மிகப்பெயரி ஆளாகுகின்றனர்.

இதற்கு எல்லாம் காரணமான அனிஷாவை கொல்ல திட்டமிடுகின்றனர்.

இதனிடையில் ஸ்ரீபிரியங்காவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.

எனவே, இவர்கள் என்ன செய்தார்கள்? ஊர் திரும்பினார்களா? குற்றமே இவர்களுக்கு வாழ்க்கையானதா? அனிஷா கொன்றார்களா? என இரண்டு கதைகளை இணைத்து பிச்சுவாகத்திக்கு பட்டை தீட்டியிருக்கிறார் ஐயப்பன்.

Pichuva Kathi yogibabu

கேரக்டர்கள்…

இதுநாள் வரை ஹீரோக்களின் நண்பராக வந்த இனிகோ பிரபாகர் இதில் தன் ஹீரோ கேரக்டரில் முத்திரை பதிக்கிறார்.

ஸ்ரீபிரியங்காவிடம் காதலை சொல்லுவதில் தொடங்கி, நண்பர்களிடம் ஜாலியாக திரிவதும், போலீசிடம் மாட்டி அவஸ்தைப்படுவதும் என அனைத்திலும் இனிமை சேர்கிறார் இனிகோ.

மற்றொரு நாயகன் செங்குட்டுவன் யதார்த்த நாயகனாக வருகிறார். க்ளைமாக்ஸில் இவரின் முடிவு எதிர்பாராத திருப்பம்.

ஸ்ரீபிரியங்கா துறுதுறுப்பு என்றால் அனிஷா அமைதி. இரு நாயகிகளும் தங்கள் கேரக்டர்களுக்கு அழுத்தம் கொண்டு நடிப்பில் தேர்ச்சில் பெறுகிறார்கள்.

சீரியஸ் படத்தில் யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பலம். அவர் கொடுக்கும் கவுண்டர் காமெடிகள் கச்சிதம்.

தமிழ்நாட்டுக்கே தலதான். திலோத்தமா எனத் தொடங்கி, அர்னால்ட் பைட் என பன்ச் பேசுவது,கிரிக்கெட் மேட்ச் சீன், சரக்கு சீன் என அப்ளாஸ்களை அள்ளுகிறார் யோகிபாபு.

இதில் சீரியஸ் ரோலில் ரமேஷ் திலக். கேரக்டரை உணர்ந்த நடிப்பு பளிச்சிடுகிறார்.

பாலசரவணன் மற்றும் கோலி சோடா சீதா ரொமான்ஸ் ரசிக்கும் ரகம்.

மன்னார் அண்ட் கம்பெனி காளிவெங்கட் கேரக்டர் எம்எல்எம் பெயரில் போலித்தனம் செய்பவர்களை போட்டுத் தாக்குகிறது.

மொட்டை ராஜேந்திரன், ஆர்என்ஆர் மனோகர், சேரன் ராஜ், கூல் சுரேஷ் ஆகியோர் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

????????????????????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என் ஆர் ரகுநந்தன் இசையில் யுக பாரதி வரிகளில் பாடல்கள் அனைத்தும் அருமை.

யே சிறுக்கி, என்ன சொல்ல, மிருகம் மிருகம், அடியே அடியே என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரகுநந்தன் இசையில் இனிமை சேர்கிறது.

பாடலும் பாடலை படமாக்கிய விதங்களும் அருமை.

க்ளைமாக்சில் அனிஷாவை பழிவாங்கும் வரும்போது எழும் பாடல் அருமை. ஆனால் அதை திடீரென கட்டாக்கி வேறு திசையில் மாற்றியது ஏனோ?

ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் பகல், இரவு காட்சிகளும் கிராமத்து அழகும் கூடுதல் பலம்.

இனிகோவின் காட்சிகள் விறுவிறுப்பாக செல்லும்போது, செங்குட்டுவின் காதல் காட்சிகளில் கத்திரி போட்டு இருக்கலாம் எடிட்டர் ராஜாசேதுபதி. படத்தின் விறுவிறுப்பதை அதை குறைக்கிறது.

??????????????????????????????????????????????????

இயக்கம் பற்றிய அலசல்…

தனிதனியாக இரண்டு ட்ராக்கை கொண்டு சென்று அதில் சின்ன டச் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

எம்எல்எம் மார்கெட்டிங்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளை சொன்ன விசயத்தில் ஐயப்பன் அப்ளாஸ் வாங்குகிறார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் ரொமான்ஸை  குறைத்திருந்தால் கூடுதல் கவனம் பெறும் இந்த கத்தி.

பிச்சுவாகத்தி… வீச்சு கத்தி

பயமா இருக்கு விமர்சனம்

பயமா இருக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்தோஷ், ஜீவா, பரணி, ஜெகன், மொட்டை ராஜேந்திரன், ரேஷ்மிமேனன், கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : ஜவஹர்
இசை : சத்யா
ஒளிப்பதிவு: மகேந்திரன்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : வசந்தம் பிலிம்ஸ்

??????????????????????????????????????????????????????????

கதைக்களம்…

சந்தோஷ், தன் மனைவி ரேஷ்மி மேனனின் அம்மாவை தேடி இலங்கை செல்கிறார்.

அங்கு அவரை தேடி கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இலங்கை ரானுவத்திடம் மாட்டிக் கொண்ட மொட்டை ராஜேந்திரன், ஜெகன், பரணி, ஜீவா ஆகியோரை காப்பாற்றுகிறார்.

பின்னர் தமிழகம் திரும்பும் இவர்கள் 4 பேரும் சந்தோஷ் வீட்டில் பக்கத்தில் தங்குகின்றனர்.

ஆனால் அங்கு பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்க, பேய் ஓட்டும் கோவை சரளாவை சந்திக்கின்றனர்.

உங்களுடன் ஒரு பேய் தங்கியிருக்கிறது என்று அவர் சொல்ல, யார் அந்த பேய்? என்பது புரியாமல் குழம்புதுவம் அதன் பின்னர் அங்கு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

Bayama-Irukku poster

கேரக்டர்கள்….

சந்தோஷ் தன் காதல் மனைவிக்காக உருவகுவதும் நண்பர்களுக்கு உதவுவதிலும் பளிச்சிடுகிறார்.

படம் முழுவதும் அமைதியாகவே வந்து க்ளைமாக்சிஸ் கொஞ்சம் மிரட்டுகிறார் ரேஷ்மிமேனன்.

படத்தில் ஜீவா மற்றும் பரணிக்கு டயலாக்குகள் கம்மிதான்.

ஜெகன் மற்றும் ராஜேந்திரன் படத்தில் அதிக வசனங்கள் இருப்பதால் அவர்கள் தங்கள் பங்கை அதிமாக செய்துள்ளனர்.

அதிலும் பேய் படம் என்பதால் பேய்களுடன் பழகிய மொட்டை ராஜேந்திரன் அசத்தல்.

க்ளைமாக்ஸில் பேய் கண்காட்சியில் மாட்டிக் கொண்டு அவஸ்தை படும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ரேஷ்மி மேனன் மிரட்டி இருக்கலாம். ஆனால் அவரது முகம் பேய்க்கு பொருந்தவில்லை.

10 பேய் படங்களில் பார்த்த அதே கோவைசரளாதான். ஆனால் இதில் பேய் ஓட்டுபவராக இருந்தாலும் அவரும் பயப்படுகிறார்.

????????????????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பேய் காட்சிகள் அதிகம் பயமுறுத்தவில்லை என்றாலும் ஆற்றுக்குள் இருக்கும் அந்த படகு வீடு படு அசத்தல்.

அதை பார்த்தாலே பயம் வரும் அளவுக்கு ஒளிப்பதிவாளர் ஸ்கோர் செய்கிறார் மகேந்திரன்.

பாடல்கள் அனைத்தும் பேய் பட பாணி என்பதால் அதன் போக்கிலேயே டெர்ர்ராக வைத்துள்ளார் இசையமைப்பாளர் சத்யா.

பேய் கண்காட்சியில் கலை இயக்குனரின் கைவண்ணம் நிஜமாலுமே பக்கா. பேய் போன்ற உருவங்களை அமைத்து கூடுதல் கவனம் பெறுகிறார்.

இதுபோன்ற கதைகள் பல வந்துவிட்டன. ஆனால் அதில் கொஞ்சம் புதுமை காட்டியிருந்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகி இருக்கும்.

கண்ணாடியில் பார்த்தால் பேய் தெரியும். அதுவே இதுவரை ஓகேவா எனத் தெரியாமல் இருக்கும்போது இரண்டு காலுக்கு அடியில் குனிந்து பார்த்தால் தெரியும் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

பேயாக இருந்தாலும் நான் குடும்பம் நடத்துகிறேன் என ஹீரோ சொல்வது எல்லாம் தாங்க முடியல.

பயமா இருக்கு… பயமா இருக்கு என சொல்ல வைத்திருக்கலாம்

Bayama Irukku movie review rating

கொஞ்சம் கொஞ்சம் விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கோகுல், நீனு, அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் : உதய்சங்கரன்
இசை : வல்லவன்
ஒளிப்பதிவு: பி.ஆர். நிக்கிகண்ணன்
பி.ஆர்.ஓ. : பெருதுளசிபழனிவேல் (சக்தி சரவணன்)
தயாரிப்பு : சிகே. பெட்டி, பிஆர். மோகன்

????????????????????????????????????????????????

கதைக்களம்…

கேரளாவில் அப்புக்குட்டி வைத்திருக்கும் காயிலான் இரும்புக் கடையில் வேலை பார்க்கிறார் தமிழரான கோகுல்.

அங்கே உள்ள கேரள பெண் குட்டிகளை பார்த்து காதல் வலையில் விழாமல் இருப்பாரா? அவருக்கு ஏற்ற ஜோடியை பார்த்ததும் காதல் கொள்கிறார். அவரும் காதலிக்கிறார்.

இவருக்காக வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார் நாயகி மீனு.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கு செல்கிறார்.

அப்போது செல்போன் சார்ஜ் விபத்தில் தன் பாசத்துக்குரிய அக்காவின் காது செவிடாகிறது.

மேலும் ஒரு விபத்தில் தன் அம்மாவை இழக்கிறார்.

அக்காவுக்கு ஆபரேசன், காதலி காணவில்லை என தேடி அலையும் கோகுல் என்ன செய்தார்? என்பதே இதன் மீதிக்கதை.

????????????????????????????????????????????????

கேரக்டர்கள்…

காயிலான் கடை வேலை பார்க்கும் பையனாக தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் கோகுல்.

அக்கா மீது பாசம் காட்டுவதாகட்டும், காதலியை ரூட் விடுவதாகட்டும், வறுமையிலும் நேர்மையாக வாழ்வதாகட்டும் என அனைத்திலும் கோகுல் ஸ்கோர் செய்கிறார்.

காயிலான் கடையில் வேலை பார்த்தாலும், சின்ன சின்ன பொருட்களை கொண்டு புதிது புதிதாக அவர் கண்டு பிடிக்கும் பொருட்கள் அனைத்து இளைஞர்கள் பலருக்கும் விழிப்புணர்வை கொடுக்கும்.

உதாரணமாக எடை போடும் மெசின் எடையை பார்த்து சொல்லுதல்.

????????????????????????????????

நாயகனின் அக்கா, அம்மா, காதலி, நண்பர்கள் என அனைவரும் கச்சிதம். தங்கள் கேரக்டர்களால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

கேரள பைங்கிளியாக வரும் நீனு நினைவில் நிற்கிறார்.

சின்ன சின்ன ரோல்களில் வரும் அப்புக்குட்டி இதில் நிறைய காட்சிகளில் வந்து நிறைவான இடத்தை பெறுகிறார்.

ஜாங்கிரி மதுமிதா, சன் டிவி தாப்பா ஆகியோரும் இவருக்கு ஜோடியாக வந்து லூட்டி அடிக்கிறார்கள்.

ஓரிரு காட்சியில் வரும் மன்சூர் அலிகான், நாயகனின் திறமையறிந்து உதவி செய்வது நெஞ்சை தொடுகிறது.
?????????????????????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்….

பாதி படப்பிடிப்பை பொள்ளாச்சிலும் மற்றொரு பாதியை கேரளாவிலும் படம்பிடித்து நம்மை ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஆர். நிக்கிகண்ணன். (இவர் கேவி. ஆனந்திடம் உதவியாளர்)

வல்லவன் இசையில் பாடல்களும் பாடல் வரிகளும் படத்திற்கு அழகை சேர்க்கின்றன.
க்ளைமாக்ஸில் வரும் மழைபாடல் அருமை.

விருந்தாளி படத்தை எடுத்த உதய் சங்கரன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சென்டிமெண்ட், நண்பர்கள், நல்லவர்கள், உழைப்பு, முன்னேற்றம் என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து விருந்து படைத்திருக்கிறார்.

திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அதை உதாசீனப்படுத்துபவர்கள் நிச்சயம் ஒருநாள் உணர்ந்து திருந்துவார்கள் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சில ட்விஸ்ட்கள் வைத்து கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் அனைத்து தரப்பு மக்களை கவர்ந்திருப்பார்.

கொஞ்சம் கொஞ்சம்… அனைத்திலும் கொஞ்சம் கலந்த சுவை விருந்து

மகளிர் மட்டும் விமர்சனம்

மகளிர் மட்டும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஸ்டன், பவெல் நவகீதன், மாதவன், விதார்த், லுத்புதீன் மற்றும் பலர்.
இயக்கம் : பிரம்மா
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: மணிகண்டன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : 2டி என்டர்டெயின்மென்ட், க்ரிஸ் பிக்சர்ஸ் சூர்யா

கதைக்களம்…

இது முழுக்க முழுக்க பெண்களுக்கான எடுக்கப்பட்ட ஆண்கள் படம்.

கோமாதா- ஊர்வசி, ராணி அமிர்தகுமாரி – பானுப்ரியா, சுப்புலட்சுமி சரண்யா பொன்வண்ணன்… இவர்கள் பியூசி படிக்கும் காலத்திலேயே குறும்புக்கார தோழிகள்.

ஒரு சூழ்நிலையால் பிரியும் இவர்கள் பின்னர் திருமணத்தால் பிரிந்து எங்கெங்கோ சென்றுவிடுகின்றனர்.

இதில் ஊர்வசியின் மகன் மாதவன் காதலிக்கும் பெண் ஜோதிகா.

ஜோதிகா பெண்களை பற்றி குறும்படம் எடுக்கும்போது, தன் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணிக்கும் பெண்கள் பற்றி தெரிந்துக் கொள்கிறார்.

எனவே, தன் வருங்கால மாமியாரின் ஆசையான பள்ளித் தோழிகளை சேர்த்து வைக்க முற்படுகிறார்.

மேலும் அவர்கள் மட்டும் தனியாக சென்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

ஊர்வசி தன் பள்ளித் தோழிகளை பார்த்தாரா? சுற்றுலா சென்றார்களா? எல்லார் வீட்டில் அனுமதி கிடைத்ததா? என்பதே இப்படக்கதை.

கேரக்டர்கள்…

ஜோதிகா தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். தன் மாமியாரை தோழியாக பாவித்து அவருக்காக எல்லாம் செய்வது ரசிக்க வைக்கிறது.

ஆனால் அந்த பழைய துறுதுறு இப்போதைக்கு ஜோதிகாவிடம் இல்லை.

மாமியாரையும் அவரின் தோழிகளையும் பேர் சொல்லி அழைப்பது ரொம்ப ஓவர். அதுவும் ராணி என்ற இரண்டு எழுத்து பெயரை கூட ரா என்று அழைப்பது டூமச்.

ஊர்வசி, சரண்யா, பானுப்ரியா மூவரும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப சூழ்நிலையறிந்து அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கிறார்கள்.

பெண்கள் படம் என்பதால் நாசர், லிவிங்ஸ்டன், மாதவன், பவல், அம்புலி கோகுல் கேரக்டர்கள் வலுவில்லை. ஆனால் தம் வீட்டுப் பெண்களையே மதிக்காத சில கேரக்டர்கள் இவர்களால் வெளிச்சத்து வருகிறது.

விதார்த் மற்றும் லுத்புதீன் ஒரு காட்சியில் வந்து செல்கிறார்கள்.

பள்ளித் தோழிகளாக நடித்த அந்த 3 பெண்களும் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது. படத்தில் ட்விஸ்ட் காட்சிகள் ஏதாவது வைத்திருந்தால் பின்னணி இசையிலும் பின்னியிருப்பார் இவர்.

மணிகண்டனின் ஒளிப்பதிவு வட இந்தியா பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறது. சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பில் இன்னும் சில காட்சிகளை கத்திரி போட்டியிருக்கலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

ப்ளாஷ்பேக் காட்சிகள் நன்றாக உள்ளது. ஆனால் அதை இடை இடையில் சொருகாமல் ஒரே நேரத்தில் சொல்லியிருக்கலாம்.

இல்லத்தரசிகளாக வாழும் பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. வெளியே செல்லும் ஆண்களை விட அதிகமான வேலைகளை ஓய்வின்றி வாழ்க்கை முழுவதும் செய்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

அதற்காக இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

குற்றம் கடிதல் என்ற யதார்த்தமான படத்தை கொடுத்த பிரம்மா இதில் சற்று சறுக்கியிருக்கிறார்.

இதில் காட்சிகள் உயிரோட்டமாக இல்லை. சொல்லிவைத்தாற் போல் காட்சிகள் நகர்கின்றன.

மேலும் 50 வயதை கடந்த பெண்கள் எல்லாம் பேஸ்புக் பக்கத்தில் இருக்கிறார்களா என்ன? அதுவும் குடும்பமே கதி என இருக்கும் பானுப்ரியா பேஸ்புக் பக்கத்தில் இருப்பாரா? என்று எண்ணவும் தோன்றுகிறது.

சொல்ல வேண்டிய விஷயத்தை இன்னும் யதார்த்தம் மற்றும் ட்விஸ்ட் வைத்து சொல்லியிருந்தால் இளைஞர்களும் ரசித்திருப்பார்கள்.

மகளிர் மட்டும்.. பெண்களை மதிக்காத ஆண்கள் பார்க்கனும்

More Articles
Follows