கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

நடிகர்கள்: ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சம்பத், நீலிமா ராணி மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் பி ஜெயக்குமார்
ஒளிப்பதிவு – பல்லு
இசை – பாலமுரளி பாலு
தயாரிப்பு : ஞானவேல்ராஜா

கதைக்களம்…

ஆர்யாவின் அப்பா ஆடுகளம் நரேன். அவர் ஒரு ரஜினி வெறியர். தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் மனைவிக்கு பிரசவம் ஆகிறது.

ஆர்யா பிறக்கிறார். எனவே அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைக்கிறார்.

ஆர்யா வளர வளர, அவருடன் தர்மத்தின் தலைவன் ரஜினியை போல் மறதி நோயும் அவருடனே வளர்கிறது.

ஒரு வேலையில் ஆர்யா இருக்கும்போது மற்றொருவர் பேசினாலோ அல்லது மற்ற வேலையில் அவர் ஈடுப்பட்டாலோ முதலில் செய்த வேலையை மறந்துவிடுவார்.

அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். பெண் பார்க்கும் வரும் நேரத்தில் ஏதாவது வேலை வந்தால் அந்த விசேஷத்தை மறந்துவிடுகிறார்.
இதனால் அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.

இதனால் அவரை எல்லாரும் சார்ட் டேர்ம் மெமரி லாஸ் கஜினியை சேர்த்து கஜினிகாந்த் என அழைக்கின்றனர்.
ஒரு முறை சாயிஷாவின் அப்பா சம்பத்தை சந்திக்கிறார். இவரின் ஞாபக மறதியால் ஆர்யாவை வெறுக்க ஆரம்பிக்கிறார் சம்பத்.

இதனிடையில் சாயிஷாவை சந்திக்கிறார் ஆர்யா. இருவரும் காதல் கொள்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? காதல் கை கூடியதா? சம்பத் என்ன செய்தார்? ஆர்யாவின் மறதிக்கு விடை கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஆர்யா ஸ்கோர் செய்கிறார். மறந்துவிடுவதும் அதனால் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து அழுவதும் என ரசிக்க வைக்கிறார்.

சாயிஷாவுடன் காதல் கொண்டாலும் பாடல் காட்சிகளில் மட்டுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லேட்டஸ்ட் லூசுப்பெண் சாயிஷா. எதை சொன்னாலும் நம்பி விடுகிறார். கொஞ்சி பேசும் போது கொள்ளை அழகு.

வில்லனாக மிரட்டிய ஆடுகளம் நரேன் இதில் காமெடி அதகளம் செய்திருக்கிறார். இனி இவரும் மன்சூர் அலிகான் ஆனந்த்ராஜ் போல் வந்துடுவார்.

சதீஷ் மற்றும் கருணாகரன் காமெடி சில இடங்களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகிறது.

உமா பத்மநாபன், சம்பத் காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. ரசிக்க வைக்கிறது.

தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த முறை குடும்பங்களை கவர முயற்சித்துள்ளார். இது எப்படியிருந்தாலும் இந்த படம் ஓடலேன்னா மறுபடியும் அடல்ட் பக்கம் சென்றுவிடுவார். எனவே ரசிகர்கள் கையில்தான் இப்படம் உள்ளது.

நீலிமாவுக்கு பிரசவம் வேகத்தடை காட்சிகள் எல்லாம் ரொம்ப பழசு. சம்பத்திடம் வேலை தேடி செல்லும் காட்சிகள் எல்லாம் போரடிக்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஆள் மாறாட்டம் காட்சியில் கார்த்திக் கவுண்டமணி கலக்கியிருப்பார்கள்.

இதில் ஆர்யா சதீஷ்க்கு அனுபவம் போதவில்லை. ஏதோ முயற்சி செய்துள்ளனர்.

சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஞாபக மறதியை வைத்து இந்த படத்தை இன்னும் நகைக்சுவையாக கொடுத்திருக்கலாம். ஒருவேளை இரட்டை அர்த்த காமெடியில்தான் டைரக்டர் கலக்குவாரோ? எனத் தெரியவில்லை.

கஜினிகாந்த்… ரஜினி-கஜினி பெயரை கெடுக்க ஒரு முயற்சி

Comments are closed.

Related News

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி…
...Read More
நடிகர் ஆர்யாவுக்கு பெண் தோழிகள் அதிகம்.…
...Read More