First on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

First on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

நடிகர்கள்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, அதிதிராவ், டயானா எரப்பா மற்றும் பலர்.
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – சந்தோஷ்சிவன்
எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பாளர் – நிகில் முருகன்
தயாரிப்பு – மெட்ராஜ் டாக்கீஸ் மணிரத்னம், லைகா சுபாஸ்கரன்
வெளியீடு – லைகா

கதைக்களம்…

சேனாபதி என்றழைக்கப்படும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள்.

முதல் மகன் அரவிந்த்சாமி, 2வது மகன் அருண்விஜய், 3வது மகன் சிம்பு.

அரவிந்த்சாமி மனைவி ஜோதிகா. அவரது கள்ளக்காதலி அதிதிராவ்.

அரவிந்த்சாமியின் பள்ளி தோழர் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரி.

அருண்விஜய் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ். (இலங்கை பெண்)

சிம்பு திருமணமாகதவர். அவரது காதலி டயானா எரப்பா.

செக்கச் சிவந்த வானம் ஹீரோயின் டயானா எரப்பா பயோ டேட்டா

அரசாங்கத்தையும் மெட்ராஸ் சிட்டியையே தன் கைக்குள் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ்.

ஒரு முறை இவர் கோயிலுக்கு சென்றுவரும்போது இவரை கொல்ல ஒரு கும்பல் வருகிறது. அதிலிருந்து தப்பி விடுகிறார்.

எனவே 3 மகன்களும் அந்த கும்பலை தேடி அலைக்கின்றனர். ஆனால் பிரகாஷ்ராஜீக்கோ சந்தேகம் தன் மகன்கள் மீது விழுகிறது. இதை தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மரணமடைகிறார்.

அதன்பின்னர் தந்தையின் டான் இடத்தை அடைய 3 மகன்கள் இடையே போட்டி எழுகிறது. அப்படியென்றால் தந்தையை கொல்ல முயற்சித்தவர் யார்? யார் அந்த இடத்தை அடைந்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் மிக மிக அரிது. அப்படியே இருந்தாலும் 2 ஹீரோக்கள் சப்ஜெக்ட் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால் நான்கு ஹீரோக்களை வைத்து நாலு திசையும் பேச வைத்துவிட்டார் மணிரத்னம்.

அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி இவர்களில் எவரையும் குறை சொல்ல முடியாத படி வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர்.

ஹீரோயின் டயானா எரப்பா கவர்ச்சி படங்கள்

தந்தை இடத்தை அடைய 3 மகன்கள் அடிக்கும் ஒவ்வொரு ஸ்டண்ட்டும் ரசிக்க வைக்கிறது. யார்? அந்த இடத்திற்கு வருவார்கள்? என்ற பரபரப்பு நம்மை படம் முடியும் வரை தொற்றிக் கொள்கிறது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் சென்டின்மெண்டையும் கொடுத்து கவர்கிறார்.

அப்பாவுக்கு பிடிக்காத பையனாக சிம்பு வந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்துவிடுவார். காதலைப் பற்றி சிம்பு பேசினாலே தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. அது எல்லாருக்கும் கிடைக்காத ஒன்று. அதிதிராவை மிரட்டும் காட்சியில் அவர் பேசும் வசனம் சிம்பு ஸ்டைல்.

ஸ்டைலிஷ் லுக்கில் அருண்விஜய் அசத்தல். அப்பா இடத்தில் உட்கார ஆசைப்பட்டு அவர் அமரும் ஸ்டைலே அழகுதான்.

விஜய்சேதுபதி வரும் காட்சிகள் எல்லாம் காமெடி கலாட்டாதான். நக்கலாக பேசி பேசி நம்மை கவர்ந்துவிடுகிறார். க்ளைமாக்ஸில் ரசூல் இப்ராஹீமாக ஜொலிக்கிறார் விஜய்சேதுபதி.

ஒரு டான், ஒரு தந்தை என இரண்டிலும் தன் பக்குவப்பட்ட நடிப்பில் கவர்கிறார் பிரகாஷ்ராஜ். இவரைப் போலவே ஜெயசுதாவும் அமைதியான அம்மா வேடத்தில் ஈர்க்கிறார்.

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

இதுவரை இல்லாத வில்லன் வேடத்தில் தியாகராஜன். வித்தியாசமான கெட்அப். இவர்தான் எல்லாத்துக்கும் காரணமோ? என்ற சந்தேகத்திலேயே கதையை நகர வைத்துள்ளார்.

மன்சூர் அலிகான் பெரிதாக வேடம் இல்லை என்றாலும் மனதில் நிற்கிறார்.

நாயகிகள் நால்வர் என்றாலும் அதிக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா. தந்தை, மாமனார், மாமியார், கணவர் என அனைவரிடத்திலும் இவர் நடந்து கொள்ளும் விதங்கள் அருமை.

இலங்கை பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். இனிக்க இனிக்க தமிழ் பேசி செல்கிறார். இவரது முடிவு அனுதாபம்.

அரை குறை ஆடையில் வந்து அடேங்கப்பா என ஏங்க வைக்கிறார் அதிதி ராவ். டயானா எரப்பா சில காட்சிகளே என்றாலும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மணிரத்னம் படங்கள் என்றாலே மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும்தான். இரண்டிலும் குறையே காண முடியாத அளவுக்கு செம.

பின்னணி இசையில் நம்மை அதிகம் ஈர்க்கிறார். தனிதனி பாடலாக இல்லாமல் படத்துடன் பாடலை ஒன்ற வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. கீச் சீச் பாடல் ரசிகர்களின் நெஞ்சை கீறிக் கொண்டே இருக்கும். வைரமுத்து வரிகள் பாடலுக்கு அதிகம் மதிப்பூட்டுகிறது.

பிரகாஷ்ராஜின் வீடு, குடோன், துபாய் நாடு அழகு, விஜய்சேதுபதி வீடு என அனைத்தையும் முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியிலும் சந்தோஷ்சிவனின் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

சிம்பு விஜய்சேதுபதி பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக சிறப்பு. இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தால் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கும்.

பொதுவாக கேங்ஸ்டர் படம் என்றால் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். அண்ணனுக்காக தம்பி செய்வது, குடும்பத்திற்காக செய்வது என பல கதைகளை நாம் பார்த்துருப்போம்.

ஆனால் ஒரே குடும்பத்தில் 3 மகன்களின் கேங்ஸ்டர் கதை. அப்பாவின் இடத்துக்கு ஆசைப்பட்டு மகன்கள் செய்யும் ஒவ்வொன்றையும் ஃப்ரேம் பை ஃப்ரேம் ரசிக்க வைத்துவிட்டார் மணி சார்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2 பாதியில் குறைந்துவிடுகிறது. இதனால் கொஞ்சம் சோர்வு ஏற்படுகிறது.

கேங்ஸ்டர் கதை என்றாலும் அருவா இல்லாமல் துப்பாக்கியுடன் விளையாடியிருக்கிறார்.

அரவிந்த்சாமி மனைவி ஜோதிகா மற்றும் கள்ளக்காதலி அதிதிராவ் சந்திக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் மணிரத்னம் டச்.

க்ளைமாக்ஸை நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதில் ஹீரோயிசத்தை உடைத்து டைரக்டர் ஜெயிக்கிறார்.

செக்கச் சிவந்த வானம்… மணி மகுடத்தில் நாலு நட்சத்திரங்கள்

Chekka Chivantha Vaanam Review (VIDEO)

Comments are closed.

Related News

மணிரத்னத்தின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு…
...Read More
மலையாளம், ஹிந்தி படங்களில் டாப் ஹீரோக்கள்…
...Read More
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில்…
...Read More