இல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்

இல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்

நடிகர்கள்: ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, குமரவேல், யோகிபாபு, சிம்பு, மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ராதாமோகன்

இசை – காசிப்
ஒளிப்பதிவு – முத்துசாமி
தயாரிப்பு – தனஞ்செயன்

பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்

கணவன் மற்றும் ஒரு பையன் என்ற சின்ன வளையத்திற்குள் குடும்பத்தலைவியாக விஜயலட்சுமி (ஜோதிகா).

இவருக்கும் நவீன பெண்களை போல் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் +2 பெயில் என்பதால் தயக்கத்துடன் வாழ்கிறார்.

அப்பாவின் மட்டந்தட்டம், இரட்டை சகோதரிகளின் கிண்டலுக்கு பயந்து அந்த ஆசையை மனதிற்குள் அடக்கி வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு ரேடியோ பரிசுப் போட்டியில் வென்று ஹலோ எப்.எம் வானொலியில் ஆர்ஜே வேலை கிடைக்கிறது.

மனதுக்கு பிடித்த வேலையை சந்தோஷமாக செய்கிறார். ஆனால் அது இரவு வேலை என்பதால் குடும்பத்தில் பல சிக்கல்களை சந்திக்க, வேலையை விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அதை எப்படி சமாளித்தார்? இந்த விஜயலட்சுமி என்பதுதான் மீதிக்கதை

கேரக்டர்கள்

இல்லத்து அரசி அப்பாவி விஜயலட்சுமி, ரேடியோ ஜாக்கி அசத்தல் மது என இரண்டிலும் கலக்கியிருக்கிறார் ஜோதிகா.

தனக்கே உரித்தான துறுதுறுப்பு, காமெடி, செண்டிமெண்ட் கலந்து விஜயலட்சுமி கேரக்டரை அருமையாக செய்துள்ளார்.

உங்கள மாதிரி பெண்கள்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேசன் என லட்சுமி மஞ்சுவிடம் ஜோதிகா சொல்லும் ஒரு வார்த்தையிலேயே மாடர்ன் கேர்ள்ஸ் மீது இல்லத்தரசிகளுக்கு உள்ள கிரேஸ் தெரிகிறது.

ஜோதிகாவின் பாஸ் ஆக நடித்துள்ள லட்சுமி மஞ்சு பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

ஆபிஸ் டென்சன் கணவராக விதார்த். ஒரு கட்டத்தில் நிம்மதியை இழந்து நிற்கும் காட்சியில் கணவன்மார்களையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

என்னதான் ஒரு கணவர் சமையலறைக்கே செல்லாமல் இருந்தாலும், கடுகு மற்றும் டீத்துள்க்கு கூடவா வித்தியாசமல் தெரியாமல் இருப்பார்.?? இது எல்லாம் ரொம்ப ஓவரூ…

ராதாமோகன் படங்களில் மட்டும் குமரவேலுக்கு எப்படி தான் இந்த நடிப்பு வருகிறதோ? எந்த கேரக்டர் என்றாலும் கைத்தட்டல்களை வாங்கிவிடுகிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி. சூப்பர் சிரிப்பு சாமி.

இவர்களுடன் சிறப்பான நடிப்பில் எம்எஸ். பாஸ்கர் மற்றும் மனோபாலா.

கெஸ்ட் ரோலில் யோகிபாபு. அவர் காட்சிகளில் தியேட்டர்களில் சிரிப்பலை தான். படம் முழுவதும் வரும் அப்பார்ட்மெண்ட் வாசி கேரக்டக்ராக அவருக்கு கொடுத்திருக்கலாம்.

சிம்பு ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பு. ‘லேட்டா வந்ததுக்காக எங்கிட்ட ஸாரி கேட்ட ஒரே ஆள் நீங்கதான்’ என்று ஜோதிகாவிடம் சிம்பு கேட்பது செம. புரிந்தவர்கள் நிச்சயம் கை தட்டி ரசிப்பார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் காசிப் இசையில்… கிளம்பிட்டாளே விஜயலட்சுமி, போ உறவே, டரட்டி பொண்டாட்டி பாடல்கள் மன நிறைவைத் தருக்கின்றன. ஜிமிக்கி கம்மல் பாடல் ஏற்கெனவே ஹிட்டான பாடல். அதை சரியான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

முத்துசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தை ரசிக்க அவை கை கொடுக்கிறது.

முதல் பாதியில் கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம்.

என்ஜின் டிரைவருக்கு ஜோதிகா சொல்லும் ஆலோசனை… அட அட சூப்பர்யா… என்ற அசை போட வைக்கிறது. வசனங்கள் நச். ரகம்.

நதியெங்கே போகிறது… கடலைத் தேடி… என்ற பாடல் சேர்க்கப்பட்ட இடம் அருமை. ஆர்.ஜே. கேரக்டருக்கு மது ஒரு கிக் ஏற்றியுள்ளார்.

ராதாமோகன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் ரசிக்கலாம். அதை மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.

வேலைக்கு போகும் பெண்கள் எல்லாருக்கும் பல பிரச்சினைகள் இருக்கும். அதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பதை விட தன் கணவன் மற்றும் வீட்டார்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொன்ன ராதாமோகனுக்கு ராஜமரியாதை கொடுக்கலாம்.

ஒரு தாய் எந்த சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். அதை புருசன் புரிந்துக் கொண்டு க்ளைமாக்ஸில் கொடுக்கும் வேலைக்கான அனுமதி ரசிக்க வைக்கிறது.

காற்றின் மொழி… இல்லத்தரசிகளின் இனிய மொழி

Comments are closed.

Related News

தனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் திரைக்கு…
...Read More