செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எழில்துரை, மதுமிலா, அபிநயா, கயல் வின்சென்ட், ராகவ் உமா சீனிவாசன், வனிதா, மெட்ராஸ் ரமா, திவ்யா, அஜய்ரத்னம், மைம் கோபி, அர்ஜீனன், மகாநதி சங்கர் மற்றும் பலர்.
இயக்கம் : எழில்துரை
இசை : ராஜ்பரத்
ஒளிப்பதிவு : மணீஷ்
எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர்
பி.ஆர்.ஓ.: யுவராஜ்
தயாரிப்பு : எஸ்பி எண்டர்டெயின்மெண்ட் பாலசுப்ரமணியம்

கதைக்களம்…

படத்தின் தலைப்பை கதையை உங்கள் சொல்லியிருக்கும். காதலித்த பெண் காதலனை ஏமாற்றி எஸ்கேப் ஆவதையே நவீன காலத்தில் செஞ்சிட்டாளே என்கிறார்கள்.

படத்தின் முதல்காட்சியிலேயே வீராவை (எழில்துரை) வீட்டில் காணாமல் தேடுகிறார்கள். வீட்டில் வேறு துக்கு மாட்ட கயிறு ஒன்றை கட்டிச் செல்கிறார்.

எனவே வீராவின் அம்மா தங்கையும் தேடுகிறார்கள். இவர்களுடன் வீராவின் நண்பர்களும் தேடி அலைகிறார்கள்.

அவன் தொலைந்து போக அவனின் காதலிதான் காரணம் என்பதால் அவரை தேடி அலைய, அதன் பின் தொடரும் காட்சிகளும், அவர் ஏன் காணாமல் போனார்? என்ற ப்ளாஷ்பேக் காட்சிகளும்தான் படத்தின் கதை.

senju 1

கேரக்டர்கள்…

நிறைய குறும்படங்களை இயக்கிய எழில்துரையே இப்படத்தின் நாயகனும் இயக்குனரும் ஆவார்.

எனவே தனக்கு ஏற்ற போல நாயகிகளையும் கதையையும் அமைத்துக் கொண்டுள்ளார்.

இவரும் நாயகி மதுமிலாவும் வாக்குவாதம் செய்யும் அந்த ஷட்டில்கார்க் க்ரவுண்ட் சீன் ரொம்பவே ஓவர்.

பாய்பிரண்ட்டுடன் தன் காதலியை போக வேண்டாம் சொல்வது எல்லாம் ஓகேதான். அதற்காக செயற்கைத்தனமாக பேசி ரசிகர்களை சோதிக்கிறார்.

அடிக்கடி காதலனை மாற்றும் நாயகியாக மதுமிலா. அழகான நடிப்பில் அசத்துகிறார்.

ஒருவனை விட மற்றொருவன் சிறந்தவன் என்ற நினைப்பு வந்துவிட்டால் ஆண்களை மாற்றும் பெண் கேரக்டரை நன்றாகவே பிரதிபலிக்கிறார்.

அதுவும் இவருடன் உள்ள சகுனி தோழிகளின் பேச்சை கேட்டு ஆடுவது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

மற்றொரு நாயகியாக அபிநயா. சில ஆண்கள் உண்மையான காதலை புரிந்து கொள்வதில்லை என்பதை தன் நடிப்பில் உணர வைக்கிறார்.

இவர்களுடன் மகாநதி சங்கர், மைம்கோபி, அர்ஜுனன், அஜய்ரத்னம், மெட்ராஸ் ரமா ஆகியோரும் உண்டு.

ஒரு ஜிம் மாஸ்டர் இப்படி குண்டாக இருப்பது அர்ஜீனனதாக இருக்கும். காமெடிக்காக உடம்பை இப்படி வைத்திருந்தாலும் கொஞ்சம் காமெடியும் வைத்திருக்கலாம்.

madhumila

தொழில்நுட்ப கலைஞர்கள்..

மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவும், ராஜ்பரத் இசையும் ஜஸ்ட் ஓகே என சொல்லலாம்.

மதுமிலாவின் பழைய காதலர்கள் ஒன்று சேர்ந்து புதுக்காதலரை மிரட்டும்போது பல காதல் தோல்வி ரசிகர்களின் கைத்தட்டல்களை தியேட்டரில் கேட்க முடிகிறது.

காதல் என்ற பெயரில் பல காட்சிகளில் ரசிகர்களையும் வச்சி செஞ்சிருக்காங்க…

செஞ்சிட்டாளே என் காதல… காதலர்கள் ஜாக்கிரதை

காற்று வெளியிடை விமர்சனம்

காற்று வெளியிடை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, அதிதி ராவ், ஆர் ஜே பாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி மற்றும் பலர்.
இயக்கம் : மணிரத்னம்
இசை : ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : ரவிவர்மன்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம்

கதைக்களம்…

ஒரு சில படங்களை மட்டுமே நாம் இயக்குனருக்காக பார்ப்போம். அதில் முக்கியமான நபர் மணிரத்னம். அவரை மட்டும் நம்பி இப்படத்திற்கு செல்லலாம்.

ஏர் போர்ஸ் போர் பிரிவில் ஹீரோ கார்த்தி (வருண்)க்கு வேலை. 1999ஆம் ஆண்டில் கார்கில் போரில் சண்டையிடும் போது பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்கி கொள்கிறார்.

அதன்பின், தன் காதலி லீலா (ஆர்மி டாக்டர்) நினைத்து நினைத்து அவளை காண தப்பித்து செல்கிறார்.

அதன்பின் என்ன ஆனது.? காதலியை எப்படி கண்டுபிடித்தார்? பாகிஸ்தான் ராணுவம் அவரை என்ன செய்தது? மீண்டும் இந்தியா வந்தாரா? என்பதே கதை.

karthi aditi kaatru veliyidai

கேரக்டர்கள்…

பைலட் வருணாக படம் முழுவதும் பளிச்சென்று வருகிறார் கார்த்தி. படத்தின் ஒரு காட்சி மட்டுமே அந்த போர் காட்சிகள்.

படத்தின் முக்கால்வாசி மணிரத்னம் ஹீரோவாக வருகிறார். சில காட்சிகளில் கவுதம் மேனன் பட ஹீரோ போல மைண்ட் வாய்ஸில் (வாய்ஸ் ஓவர்) பேசிக் கொண்டே இருக்கிறார்.

மற்றபடி படம் முழுவதும் தென்றல் போல வரும் ரொமான்ஸ் காட்சிகள்தான்.

ஹீரோயின் அதிதி ராவ்.. காஷ்மீர் பனியை விட பளீரென்று வருகிறார். பெண்களுக்கே உரித்தான அதே சமயத்தில் தன் சுயகௌவரத்தை விட்டுக் கொடுக்காத கேரக்டரில் ஜொலிக்கிறார்.

வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாலும், காதலனை நம்பாமல் தன்னை நம்பி வாழும் கேரக்டரில் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.

ஆனால் ஏதோ ஹாலிவுட் பட ஹீரோயினை பார்ப்பது போன்ற உணர்வு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

அட படத்துல ஆர்.ஜே. பாலாஜி இருக்காருல்ல.. என்று வார்த்தையில் மட்டுமே சொல்லலாம். மணிரத்னம் படத்தில் நடித்தேன் என்று அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

இவர்களை தவிர மற்ற கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும், காதலர்களுக்கு மட்டுமே முழுப்படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

karthi aditi

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என்னடா இது படம் மெதுவாக செல்கிறதே என்ற எந்தவிதமாக சலிப்பை கொடுக்காமல் காஷ்மீரின் இயற்கை அழகை போதும் போதும் என்கிற அளவுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

ஓவியர் ரவிவர்மனை போல கேமரா ஓவியராக தெரிகிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

ஒரு காட்சியில் அதிதியை கார்த்தி பிரியும்போது, காரின் லைட் வெளிச்சத்தில் அந்த காட்சியை கவிதையாக்கி இருக்கிறார்.

அதுபோல் பனிச்சரிவில் காதலர்கள் சண்டைபோடும்போது, அட நாமளும் இங்கே நிச்சயம் போகனும் என மனசு துடிக்கிறது.

போர் விமானம் பறக்கும் காட்சியில் காற்றை கிழித்துக் கொண்டு போவது என ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் அழகே மேரி மீ மேரீ மீ மற்றும் வான் வருவாய் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

போர் காட்சியில் தொடங்கி, கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் என பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.

mani ratnam

இயக்கம் பற்றிய அலசல்…

எப்போதும் மணிரத்னம் படத்தில் இருட்டாகவே இருக்கும். ஆனால் இதில் முதன்முறையாக படம் முழுவதும் ப்ரைட் மணிரத்னத்தை பார்க்கலாம்.

உயிரைக்கொல்லும் போர் வீரன். உயிரை காக்கும் டாக்டர். இருவருக்கும் ஒரு காதல். அதில் சில மோதல் என ஒன்லைன் வைத்து படம் முழுவதும் ஆட்சி செய்கிறார் மணிரத்னம்.

கார்த்தியின் அண்ணன் காதலியை கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்வதும், அதில் வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக கொண்டாடுவதும் எல்லாம் இந்தியாவில் நடக்கிறதா?

சரி அவருடைய காதல்தான் அப்படியென்றால் கார்த்தியின் காதலையும் க்ளைமாக்ஸில் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது? எல்லாம் ரசிகர்களுக்கும் பிடிக்குமா? என்று தெரியவில்லை.

காற்று வெளியிடை.. காதல் ஓவியம்

8 தோட்டாக்கள் விமர்சனம்

8 தோட்டாக்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வெற்றி, எம்எஸ் பாஸ்கர், நாசர் மற்றும் பலர்.
இயக்கம் : ஸ்ரீகணேஷ்
இசை : சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு : தினேஷ் கே பாபு
எடிட்டர்: நாகூரான்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : வெள்ள பாண்டியன்

கதைக்களம்…

நாயகன் சத்யா (வெற்றி) சிறுவயதிலேயே அப்பாவால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்.

அதன்பின்னர் ஒரு காவலர் உதவியோடு படித்து இன்ஸ்பெக்டராகிறார்.

எப்போதும் சீரியசாக இருக்கும், இவர் ஒரு லோக்கல் ரவுடியை உளவு பார்க்க செல்கிறார்.

அப்போது, தான் வைத்திருக்கும் துப்பாக்கியை பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவனிடம் பறிகொடுக்கிறார்.

அது கைமாறி கைமாறி ஒருவனிடம் செல்கிறது.

அவன் அதில் உள்ள எட்டு தோட்டாக்களை வைத்து, ஒவ்வொருவரையும் மிரட்டி கொள்ளையடித்து கொலை செய்கிறான்.

சத்யாவின் துப்பாக்கி என்பதால், எல்லாம் பழியும் இவர் மீது விழுகிறது.

அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார். அந்த கொலையாளி யார்? எதற்காக இப்படி செய்கிறார்? என் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இப்பட க்ளைமாக்ஸ்

C8k5J9IXoAAdcYw

கேரக்டர்கள்…

புதுமுகம் வெற்றி நாயகனாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே போலீஸ் கேரக்டருக்கு இவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான்.

ஆனால் அதை இன்னும் பெட்டராக செய்திருக்கலாம். படம் முழுவதும் சீரியசாக இருப்பதால் முகபாவனைகள் ஒரே போல உள்ளன.

காதலியிடமும் பாடலிலும் இதே முகபாவனைதான். (என்ன பாஸ் இப்படி?)

படத்தின் நாயகியும் இவரைப் போன்ற படு சீரியஸ்.

படத்தின் முழு கதையையும் தனக்கே எடுத்துவிட்டார் எம்.எஸ்.பாஸ்கர். இனி இவரது சினிமா பயணத்தில் இப்படி ஒரு படம் கிடைக்குமா? என தெரியாது.

எனவே கிடைத்த சான்ஸில் சிக்ஸர் அடித்துள்ளார். பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்ய முடியாமல் தவிக்கும் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகிறார்.

பென்சனுக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் அலையும் அந்த கேரக்டரில் ஒரு நடுத்தர அப்பாவின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உயர் அதிகாரி நாசரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

C75shUGVQAYg2Y4

படத்தின் கதை வேறு தளத்தில் சென்று கொண்டிருக்கும்போது, வசன காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

எம்எஸ் பாஸ்கர் பேசும் ஒரு வசன காட்சி… படத்தின் பலமே அந்த காட்சிதான் என்றாலும் கொஞ்சம் நீளமாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

படத்திற்கு பாடல் தேவையில்லை. பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி.

தினேஷ்பாபுவின் ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது.

மிஷ்கினின் உதவியாளர் இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்பதால் அவரின் டச் படம் முழுக்க தெரிகிறது. படத்தின் திரைக்கதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

8 தோட்டாக்கள்… வச்ச குறி தப்பாது

டோரா விமர்சனம்

டோரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நயன்தாரா, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், சுலிகுமார் மற்றும் பலர்.
இயக்கம் : தாஸ் ராமசாமி
இசை : விவேக் சிவா மெர்வின்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டர்: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : சற்குணம்

Dora movie working stills

கதைக்களம்…

நயன்தாராவின் அப்பா தம்பி ராமையா.

இவர்கள் இருவரும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பிக்க செகண்ட் ஹேண்டில் ஒரு பழைய காரை வாங்குகின்றனர்.

ஆனால் அந்த கார், ஒருமுறை தானே இயங்கி ஒருவனை கொல்கிறது.

இதற்கான விசாரணையில் இறங்குகிறார் ஹரிஷ் உத்தமன்.

ஆனால் சரியான ஆதாரம் இல்லாமல் இவர் குழம்பி நிற்கிறார்.

அந்த கார் இன்னும் சிலரை கொல்ல நினைக்கிறது. அதற்கு என்ன காரணம்? அப்படியென்றால் அந்த காருக்குள் இருக்கும் ஆன்மா யார்?

அது நயன்தாராவின் காரில் வரக் என்ன காரணம்? என்ன தொடர்பு? என்ற பல திருப்பங்களுக்கு பதில் சொல்கிறாள் டோரா.
dora stills

கதாபாத்திரங்கள்…

கதை தான் ஹீரோ. நான்தான் ஹீரோயின் என அபார நம்பிக்கையில் இறங்கி அடிக்கிறார் நயன்தாரா.

அப்பா தம்பி ராமையாவிடம் கொஞ்சுவதும், பேய் காரைப் பார்த்து பயப்படுவதும், பின்னர் வில்லனைக் கொல்வதும் என பல கோணங்களில் அசத்துகிறார் நயன்தாரா.

தம்பி ராமையாவும் தன் பங்கில் குறைவைக்கவில்லை. ஹரிஷ் உத்தமன் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தென்னிந்தியாவில் வடநாட்டு பையன்கள் வந்து, காட்டும் கைவரிசைகளை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

dora nayan thambi ramaiaya

படம் பற்றிய அலசல்…

கதை ஹீரோ என்பதால், நாய், பேய், கார் என அனைத்தையும் நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறக்கிவிட்டுள்ளார் டைரக்டர்.

காரிடம் நயன்தாரா பேசும் காட்சிகள், போலீஸிடம் இருந்து கார் தப்பிக்கும் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.

காரின் நிழலாக வரும் நாய் மற்றும் அந்த கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பு சேர்க்கிறது.

ப்ளாஷ்பேக் காட்சியில் காருக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்? என்ற காட்சிகளும், பாலியல் கொடுமை காட்சிகளும் படத்திற்கு அழுத்தம் சேர்க்கின்றன.

டோராவை மையப்படுத்தி ஒரு பாடல். நான் ஈ படத்தில் உள்ள பாடலை நினைவுப்படுத்துகிறது.

பின்னணி இசை த்ரில் சீன்களில் திகைக்க வைக்கிறது.

தாஸ் ராமசாமி படத்தை கையாண்ட விதம் அருமை என்றாலும் பழிவாங்கும் கதையில் இன்னும் ட்விஸ்ட் சேர்த்திருந்தால், டாப் கியரில் படம் எகிறியிருக்கும்.

(குழந்தைகள் பார்க்கும் வகையிலேயே படம் உள்ளது. ஆனால் என்ன காரணத்தினாலோ படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது)

டோரா… குழந்தைகளுடன் ரசிக்கலாம்

கவண் விமர்சனம்

கவண் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : டி ராஜேந்தர், விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், பாண்டியராஜன், விக்ராந்த், சாந்தினி, ஜெகன், ஆகாஷ்தீப் சாய்கல், போஸ் வெங்கட், ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.
இயக்கம் : கே வி ஆனந்த்
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவாளர் : அபிநந்தன்
எடிட்டர்: ஆண்டனி
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட்

kavan-poster-5

கதைக்களம்…

சென்1 என்ற டிவி நிறுவனர் ஆகாஷ்தீப் சாய்கல். இந்த சேனலில் விஜய்சேதுபதி, மடோனா, ஜெகன் உள்ளிட்டோர் வேலை செய்கின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்குக்காக இவர்களின் ஓனர் பல தில்லுமுல்லுகளை செய்கிறார். இவராகவே சில விஷயங்களை செய்து ப்ரேக்கிங் நியூஸ் ஆக்கி பரபரப்பு உண்டாக்குறிர்.

மேலும் போஸ் வெங்கட் போன்ற தீயவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு உண்மையை சொல்லவிடாமல் மறைக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரின் செயல்களை பிடிக்காத விஜய்சேதுபதி குழுவினர் பிரச்சினை செய்துவிட்டு, டி ராஜேந்தர் முத்தமிழ் டிவி சேனலில் சேர்கின்றனர்.

அதன்பின்னர் ஒரு இந்த இரு சேனல்களுக்கும் நடக்கும் வாய்மை யுத்தமே இந்த கவண்.

kavan tr

கதாபாத்திரங்கள்….

விஜய்சேதுபதிக்கு இந்த கேரக்டர் புதியது. ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார்.

டிவி பேட்டியின் போது அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக பேசி கவர்கிறார்.

ஆனால் விஜய்சேதுபதி ஆங்கிலம் பேசும் காட்சிகளில் உச்சரிப்பை இன்னும் பெட்டராக கொடுத்திருக்கலாம். (பாண்டியராஜின் உச்சரிப்பும் அப்படிதான்)

மடோனா மாடர்னாக வந்து மனதில் நிற்கிறார். ஆனால் சாந்தினி கேரக்டர் சப்பென்று முடிகிறது.

இதுவரை இப்படியான கேரக்டர்களில் நாம் டி ராஜேந்தரை பார்த்திருக்க முடியாது. அமைதியாக காணப்பட்டாலும் அடுக்கு மொழி வசனத்தில் அதிர வைக்கிறார்.

அயன் படத்தில் ஸ்லிம்மாக பார்த்த வில்லன், இதில் படா வெயிட்டாக வருகிறார். ஆனால் கேரக்டரில் வெயிட் இல்லை.

விக்ராந்த், போஸ் வெங்கட், விக்ராந்த் ஜோடி ஆகியோர் தங்கள் பணியை நிறைவாக செய்துள்ளனர்.

நாசர் கேரக்டரை வீணடித்துவிட்டார்கள்.

பவர் ஸ்டார் ஒரு சீன் வந்தாலும் அவர் சொல்லும் பன்ச் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

‘என்னை ஜீனியஸ்னு சொல்லிடாதீங்க.  நீங்க என்னைய காமெடி பீஸா நினைக்கிற வரைக்கும் தான் எனக்கு மார்க்கெட்டு.

ஆனால் ஒரு விஷயம் எல்லாரையும் முட்டாள நினைக்காதீங்க. எல்லாருக்கிட்டேயும் ஒரு திறமை இருக்கு…’ என சொல்லும்போது கைதட்ட வைக்கிறார். அதுபோல் இண்டர்வெல் சீனும் க்ளாப்ஸை அள்ளும்.

kavan madonna

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் இசை பெரிதாக கைகொடுக்காது. ஹிப் ஹாப் ஆதியின் குரல் நடிகர்களுக்கு பொருந்தவில்லை.

அபிநந்தனனில் ஒளிப்பதிவில் இரண்டு சேனல் நிறுவனங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு.

ஆர்ட் டைரக்டர் DRK கிரணை பாராட்டியே ஆக வேண்டும். டி. ஆர் ஆபிஸை மாற்றும் காட்சிகளில் டாய்லெட் முதல் சூ வரை பயன்படுத்தியிருப்பது  கலை இயக்குனரின் கைவண்ணம்.

kavan tr and vijay sethupathi

ஒரு சேனலில் நடக்கும் விஷயங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளார்.

டிஆர் ரேட்டிங்குக்காக சர்ச்சைகளை உருவாக்குவதும், ரியாலிட்டி ஷோக்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும், அழகு சாதனங்களை விற்பதற்காக நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளையும் தோலுருத்திக் காட்டியிருக்கிறார்.

படத்தின் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. சில அறுவறுக்கதக்க வார்த்தைகளை எடிட் செய்திருக்கலாம்.

க்ளைமாக்ஸில் நிறைய லாஜிக் மீறல்கள். ஏதோ அவசர அவசரமாக காட்சிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பது போன்ற உணர்வு.

போஸ் வெங்கட் பேட்டி காட்சிகள் ஏதோ சுவாரஸ்யம் இல்லை. முதல்வன் படத்தின் ரகுவரனின் காட்சியை எவரும் மிஞ்ச முடியாது போல.

டிவிஸ்ட் என்ற பெயரில் க்ளைமாக்ஸில் நீளத்தை நீட்டி போராட்டிக்க வைக்கிறார் டைரக்டர்.

கவண் கவனிக்கப்பட வேண்டியவன்

பாம்பு சட்டை விமர்சனம்

பாம்பு சட்டை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, கே. ராஜன், குருசோமசுந்தரம், ஆர்வி உதயகுமார், மொட்டை ராஜேந்திரன், சார்லி மற்றும் பலர்.
இயக்கம் : ஆடம்தாசன்
இசை : அஜேஸ் அசோக்
ஒளிப்பதிவாளர் : கேஜி வெங்கடேஷ்
எடிட்டர்: ராஜா சேதுபதி
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : மனோபாலாவின் பிக்சர் அவுஸ்

 

கதைக்களம்…

ஒன்லைன்… நேர்மையாக நடந்து கொள்வதால் வரும் பிரச்சினைகளும் அதனை சுற்றியுள்ள நடக்கும் சுவாரஸ்யங்களும்தான் கதை.

தன் அண்ணி பானுவுடன் வசிக்கிறார் பாபி சிம்ஹா. வீடு மற்றும் ஆபிஸ்களுக்கு வாட்டர் கேன் போடுவதே இவரது வேலை.

வாட்டர் கேன் போடும்போது எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் கீர்த்தியை சந்திக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனிடையில் அண்ணிக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால் அவருக்கு பெரும் கடன் இருக்க, அதனை அடைக்க முயற்சிக்கிறார்.

அந்த பெரும் தொகையை ஒரு குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து, பின்னர் அதிலிருந்து மீளமுடியாமல் பாபி சிம்ஹா தவிக்கும் சம்பவங்கள் இந்த பாம்பு சட்டை.

bobby simha keerthy suresh

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான யதார்த்தமான கேரக்டரில் பாபி சிம்ஹா.

அழுக்கு பையனாக வந்தாலும் அசத்தியிருக்கிறார் பாபி.

அழகான கவிதை சொல்லி கீர்த்தியை அசத்தினாலும், இவர் முகத்தில் ரொமான்ஸ் மட்டும் வர மாட்டுங்குதே ஏன் பாஸ்..?

இதுவரை கலர்புல் கீர்த்தி சுரேஷை நாம் பார்த்து இருப்போம். ஆனால் இதில் நெக்ஸ்ட் டோர் கேர்ளாக நம் மனதில் நிறைகிறார்.

நீங்களே வேணாம் என மறுத்தாலும் வேணி கேரக்டராக வந்து ஒட்டிக் கொள்வார் கீர்த்தி.

இவரது ஆடைகள் கூட அடிக்கடி ரிப்பீட் ஆவதுபோல் காட்சிகளை அமைத்து, ஒரு ஏழைப் பெண்ணாக காட்டியிருக்கிறார் டைரக்டர்.

கணவன் தம்பியுடன் வசிக்கும் போது காட்டும் கண்ணியம் ஆகட்டும், பின்னர் மறுமணத்திற்காக தயார் ஆவது என அண்ணியாக அசத்தியிருக்கிறார் பானு.

மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல வந்து காமெடி செய்கிறார்.

தயாரிப்பாளர் கே.ராஜன், குருசோமசுந்தரம் மற்றும் சார்லி கேரக்டர்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

பணத்திற்காக இவர்கள் எதை செய்தாலும், அதில் எதற்காக செய்கிறோம்? என்பதை வேறுபடுத்தி காட்டியிருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்.

keerthi suresh bobby in paambu sattai

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அஜேஷ் அசோக்கின் இசையில் மெலோடி பாடல்கள் ஓகே. ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள நீ உறவாக பாடல் ரசிக்க வைக்கிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகேதான் என்றாலும் படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

இடைவேளை வரை மனது நிறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஏன்? இத்தனை நீளம் என கேட்கத் தோன்றுகிறது. எடிட்டர் எங்கப்பா..?

Paambu Sattai

இயக்கம் பற்றிய அலசல்…

அண்ணியை பாபியுடன் இணைத்து ஊர் பேசும்போது, உங்க அப்பா போய்ட்டாரன்னா? அம்மாவ தனியாக விட்டுவியா? என கேட்கும் காட்சி அருமை.

படத்தின் டைட்டில் பாம்பு சட்டை? ஏன் என்பதை வசனங்கள் மூலம் சொன்னதற்கு இயக்குனருக்கு நன்றி.

வில்லன் கே ராஜன் படத்தின் காட்சிபடி ஒரு படம் தயாரிக்கிறார். அதில் ரெமோ படத்தின் பேனர் வருவது ஓகே. ஆனால் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படம் வரலாமா? சார்..?

கமர்ஷியல் வேண்டும் என்பதற்காக வரும் அந்த பாடல் தேவையில்லை. (நாகேந்திர பிரசாத் மற்றும் சாந்தினி ஆடும் குத்துப்பாட்டு)

சில கும்பல்கள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் எப்படி விடுகிறார்கள்..? என்பதை நம்பும் படியாகவும் அதே நேரம் விழிப்புணர்வு வரும்படியாக காட்டியிருப்பதும் சிறப்பு.

படத்தின் நீளத்தை மட்டும் குறைத்தால் இந்த பாம்பு சட்டையை எல்லாம் ரசிகனும் ரசிப்பான்.

நேர்மையான வாழ்பவனுக்கு முன்னேற்றம் ஒரு நாள் வரும். ஆனால் அதற்கு காத்திருக்க வேண்டும் என காட்சியை முடித்திருப்பது டைரக்டர் டச்.

மனோபாலா இல்லாத படங்களே இல்லை என்ற நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் அவர் இதில் இல்லை என்பது மகா ஆச்சரியம்தான்.

பாம்பு சட்டை… ரசிகர்களுடன் ஒட்டிக் கொள்ளும் அட்டை

More Articles
Follows