காவலர்களை கவனி… காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம் 3.5/5

காவலர்களை கவனி… காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம் 3.5/5

நடிகர்கள்: சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, ஆர்ஜே முன்னா, சூப்பர்குட் சுப்ரமணி,
இயக்குனர்: ஆர்டிஎம்

கதைக்களம்..

நாயகன் சுரேஷ் ரவி.. நாயகி ரவீனா.. உணவை டோர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் சுரேஷ் ரவி.

இவர் காதலிக்கும் பெண் ரவீனாவை பெற்றோர் எதிர்ப்பு மீறி திருமணம் செய்கிறார். ரவீனாவும் வேலைக்கு செல்கிறார்.

ஒரு நாள் ரவீனா பணிமுடிந்து வரும்போது, வழிப்பறி கொள்ளையர்கள் அவரின் நகைகளை பறித்து விடுகின்றனர்.

இதனையடுத்து கணவரும் சம்பவ இடத்திற்கு வர. அங்கிருந்து கிளம்பும் போது வாகன சோதனையில் போலீசிடம் சிக்குகின்றனர்.

ஏற்கெனவே மன உளைச்சலில் இருக்கும் நாயகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைம் கோபியிடம் தவறாக பேசுகிறார்.

இதனால் கோபம் அடைந்த போலீஸ் அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர்.

அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூசிக்க முடியும். ஆனால் அவற்றை காட்சிகளாக பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த படத்த நிச்சயம் பார்க்க வேண்டும்.

கேரக்டர்கள்…

நாயகன் சுரேஷ் ரவிக்கு இப்படம் தான் முதல்படம். டிவி நிகழ்ச்சிகளில் விஜே’வாக இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? என்று அப்பாவியாகக் கேட்கிறார். அப்போதே நம் அனுதாபம் அவருடன் ஒட்டிக் கொள்கிறது.

அவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு வலிக்கிறது. சில காட்சிகளை முக பாவனைகளை போதவில்லை என்றே தோன்றுகிறது.
இவர் அடிக்கடி போலீஸ் ஸ்டேசன் போகும்போதேல்லாம் நம் மனம் பதைக்கும்.

நடுத்தர குடும்பத்து பெண்ணாக பின்னி எடுத்துள்ளார் பிரவீணா. இவர் தான் பல நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

தன்னால் கணவனுக்குப் பிரச்னை என நினைப்பதும் ‘பாப்பா போயிடுச்சு’ என அழும்போது நம்மையும் அழ வைக்கிறார்.

எல்லாம் போலீஸ் ஸ்டேசனிலும் நிச்சயம் ஒரு நேர்மையான நல்ல போலீஸ் இருப்பார். அப்படியொரு போலீஸ் சூப்பட் குட் சுப்ரமணி. தனக்கும் அதிகாரம் இருந்தாலும் தன் இயலாமையை அப்பட்டமாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் ஹீரோ வில்லன் எல்லாம்’மைம் கோபி’தான். தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு தன் உயிரை கொடுத்து நடித்துள்ளார்.

சே… இப்படியொரு போலீசா? இல்ல இல்ல பொறுக்கி என நீங்களை ‘மைம் கோபி’யை பார்த்து திட்டூவீர்கள். அப்படியொரு மிரட்டலான நடிப்பு.

kavalthurai ungal nanban

காவல்துறையினரை பகைத்தால் நாம் உயிரோடு வாழவே முடியாது என்பதாக இயக்குனர் காட்டியிருக்கிறார். விசாரணை படத்தின் 2ஆம் பாகம் என்று கூட இந்த படத்தைச் சொல்லலாம்.

படம் எடுக்கப்பட்ட விதத்திற்காகவே இயக்குனர் ‘ஆர் டி எம்’க்கு வாழ்த்துகள்.

கே எஸ் விஷ்ணுஸ்ரீ’யின் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் கண்களுக்கு இனிப்பு.. காவல்துறை காட்சிகள் கண்களுக்கு காரம்.

ஆதித்யா மற்றும் சூர்யாவின் இசையில் பாடலும் பின்னனி இசையும் ரசிக்கலாம்.

நல்ல படத்தை எவர் எடுத்தாலும் ஒரு சில பிரபலங்களே அவர்களுக்கு ஆதரவு கரம் கொடுத்து அந்த படைப்பை பிரபலமாக்குகிறார்கள்.

இந்த படைப்புக்கு இயக்குனர் வெற்றிமாறன் & BOFTA தனஞ்செயன் தோள் கொடுத்து வெளியீட்டுக்கு உதவியுள்ளனர். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்…

ஆக.. அப்பாவி மனிதனை அதிகார வர்க்கம் மிரட்டும்.. ஆகவே காவலர்களை கவனிக்கவும்..

Kavalthurai Ungal Nanban review rating

Related Articles