தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி…
பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார் வைபவ்.. படத்தில் பணி புரியும் மற்றொரு உதவி இயக்குனரான சரஸ்மேனனை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் விபத்து ஒன்று ஏற்பட அம்நிஷா நோயால் பாதிக்கப்படுகிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு உதவியாக க்ரைம் ரிப்போர்ட்டர் எழுதும் பணி வைபவ்வுக்கு கிடைக்கிறது.
காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை இவரின் ஓவியத்தாலும் நுண்ணறிவாலும் கண்டுபிடிக்கின்றனர்.
இவர்களது பகுதியில் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பல மர்ம கொலைகள் நடக்கின்றன.. ஒரு கட்டத்தில் கொலை செய்தவன் மூன்று அட்டைப்பெட்டிகளை ஒவ்வொரு இடத்தில் வைக்கின்றான்..
ஒரு பெட்டியில் கைகள் மட்டும் மற்றொரு பெட்டியில் கால்கள் மட்டும் மற்றொரு பெட்டியில் உடல் மட்டும் வைத்து வீசி செல்கின்றான்.
இந்த கொலை காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைகிறது. இதனை கண்டுபிடிக்க நாயகி தன்யா ஹோப். அவருக்கு உதவியாக வைபவ் வருகிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது? கொலை செய்தவன் யார்? அவனின் நோக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
Vaibhav
Nandita Swetha
Tanya Hope
Saras Menon
Suresh Chakravarthi
Praniti
Darling Madhan
Jeeva Subramaniam
Padman
Vilangu Kicha Ravi
Dasarathi
Dhayalan
Produced by Madhu Nagarajan,
ரணம் படம் நடிகர் வைபவ்வின் 25 வது படம். அவருக்கு வெற்றி கொடுக்கும் வகையில் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. பெரும்பாலும் பல படங்களில் ஜாலியாக சுற்றி திரிந்த வைபவ் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து சீரியஸான ரோலில் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகி தன்யா ஹோப்.. சீரியஸான ரோல் தான்.. ஆனால் நாயகனே எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுகிறார். அதனால் இவரது கேரக்டர் ஒன்றும் இல்லாமல் போகிறது.
முக்கியமான கேரக்டரில் நந்திதா ஸ்வேதா.. 12 வயது பெண்ணுக்கு தாயாக நடித்து சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நந்திதாவின் நர்ஸ் கேரக்டரை வைத்து தான் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
மற்றொரு நாயகியாக சரஸ்மேனன். அழகாக திரையில் தோன்றும் இவருக்கு அதிகப்படியான காட்சிகள் இல்லை.
எவரும் எதிர்பாராத சீரியஸ் போலீஸ் கேரக்டரில் சுரேஷ் சக்கரவர்த்தி. இவரது கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை கதையில் ஏற்படுத்தும்..
நந்திதா ஸ்வேதாவின் மகளாக பிரனிதி, வைபவின் நண்பராக டார்லிங் மதன், விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உண்டு. ‘விலங்கு’ படத்தை போல கிச்சா ரவி கேரக்டர் இதிலும் பெரிய எதிர்பார்ப்பு உண்டாக்கி இருக்கிறது
டெக்னீசியன்ஸ்…
Written & Direction by: Sherief
Music: Arrol Corelli
Dop: Balaji K Raja
Executive Producer: Udhayakumar Balaji
Editor: Muniez
Art Director: ManiMozhiyan Ramadurai
Singers: GV Prakash Kumar, Shreya Goshal, Mathichiyam Bala, Pranithi, Raghotham, Sherief
Lyrics: Vivek – Shereif – Arrol Corelli
Choreography: Amir Ads
Stunt: Billa Jagan & Om Prakash
PRO: Sathish Kumar
Production house : Mithun Mithra Productions
Producer: Madhu Nagarajan
மரணமடைந்த மகளிருடன் உடலுறவு கொள்ளும் மனித மிருகங்கள்.. சடலங்கல்களுடன் உடலுறவு கொள்ளும் முறையை நெக்ரோபீலியா (Necrophilia) என்று மருத்துவத்துறை துறையில் அழைக்கின்றனர்..
இதனை மையப்படுத்தி பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்… உயிருள்ளவர்களை கற்பழித்தால் அதற்கு தண்டனை நம் இந்திய சட்டத்தில் உள்ளது.. ஆனால் உயிரற்ற சடலங்களுடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனை இல்லை.. எனவே இந்திய சட்டத்தில் திருத்தம் வேண்டும்.. அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ரணம் அறம் தவறேல் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுகம் இயக்குனர் ஷெரிஃப்.
இந்தத் திரைக்கதைக்கு ஒளிப்பதிவாளரும் இசை அமைப்பாளரும் உறுதுணையாக இருந்து இந்த ரணத்தை மேலும் சிறப்பாக இருக்கின்றனர்.
அரோல் கரோலி திரில்லர் காட்சிகளுக்கு பின்னணி இசையை மிரட்டலாகவும் எமோஷன் காட்சிகளுக்கு ஏற்றது போல இதமாகவும் கொடுத்திருக்கிறார்.. சில சில இடங்களில் தியேட்டரை அதிரவைக்கும் இரைச்சலையும் கொடுத்திருக்கிறார்..
ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே ராஜா செய்திருக்கிறார்.. கண்களுக்கு விருந்தளிக்கிறது..
ஆக ரணம் அறம் தவறேல்.. ரசிக்கும் ரகம்..
Ranam Aram Thavarel movie review and rating in tamil