சிரிப்பு… சிறப்பு… சிக்சர் விமர்சனம்

சிரிப்பு… சிறப்பு… சிக்சர் விமர்சனம்

சின்னத்தம்பி படத்தில் மாலை கண் நோய் உள்ளவராக நடித்திருப்பார் கவுண்டமணி.

அந்த நோய் உள்ளவராக படம் முழுவதும் நடித்திருக்கிறார் வைபவ்.

ஒரு நாள் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியை விமலா ராணியை கைது செய்யக்கூறி போராட்டம் நடைபெறுகிறது.

அப்போது எதிர்பாரா விதமாக பைவர் இருக்கும் இடத்தில் போராட்டம் தொடரவே, இவருதான் அதன் காரணமானவர் என மீடியா செய்திகளை வெளியிடுகிறது.

இதனால் இவருக்கும் அரசியல்வாதி என்.ஆர்.மனோகருக்கும் பகை முட்டுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்..

ஆக்சன், காமெடி என கலந்தடிக்கிறார் வைபவ். தன் மாலை கண் பிரச்சினையை இவர் சமாளிக்கும் காட்சிகள் சிரிப்பு மழை.

இவருக்கும் பாலக் லவ்வாணிக்கும் ரொமான்ஸ் பெரிதாக இல்லை. பாலக் லவ்வாணி ஓரளவுக்கு நடிப்பிலும் அழகிலும் பாஸ் மார் பெறுகிறார்

படத்தில் முக்கியமாக சதீஷ், ராதாவி, ஸ்ரீரஞ்சனி, இளவரசு நல்ல தேர்வு. இவர்களின் காமெடியும் நன்றாக ஒர்க் அவுக் ஆகியுள்ளது.

ராதாரவியின் குடிகார காமெடி சூப்பர். படத்தின் ஹைலைட்டே அதுதான்.

என்.ஆர்.மனோகர் தேவையான அளவுக்கு வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஏ.ஜே. நடிப்பு கச்சிதம்.

டிவி புகழ் ராமரின் காமெடியும் படத்தின் ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.

பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

சாக்சி என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். லாஜிக் இல்லாமல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ட்விஸ்ட் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும். பார்த்த கதை மற்றும் கேட்ட ஜோக்குகள் படத்தின் பலவீனம்

ஆக சிக்சர்… சிரிப்பு.. சிறப்பு

Comments are closed.

Related News

சிக்ஸர் என்பது கிரிக்கெட் போட்டியில் ஒரு…
...Read More