சென்னை 28 II விமர்சனம்

சென்னை 28 II விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ், நிதின் சத்யா, இளவரசு, விஜய் வசந்த், விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி மற்றும் மனீஷா யாதவ்.
இயக்கம் : வெங்கட்பிரபு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ் யாதவ்
எடிட்டிங்: பிரவீன் கேஎல்.
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் & ப்ளாக் டிக்கெட் கம்பெனி

கதைக்களம்…

சென்னை 28 முதல் பாகத்தில் கிரிக்கெட் மட்டுமே பிரதானமாக இருந்தது.

இதன் இரண்டாம் பாகம் 10 வருடங்கள் கழித்து வந்துள்ளதால், அதில் நடித்தவர்கள் இதில் மெர்ச்சூட்டியாகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் பிரேம்ஜி மட்டும் இதிலும் பேச்சுலாராக இருக்கிறார்.

ஜெய் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் வரை செல்கிறார்.

அப்போது இவர்கள் வாழ்க்கையில் அரவிந்த் ஆகாஷ் மற்றும் வைபவ் மூலம் கிரிக்கெட் குறுக்கீடுகிறது.

அந்த கிரிக்கெட் விளையாட்டே ஜெய்யின் காதல் வாழ்க்கையில் வினையாக மாறுகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது? கிரிக்கெட்டுக்காக நண்பர்களை விட்டார்களா? நட்புக்காக காதலை விட்டாரா? என்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த 2வது பாகம்.

chn team photos

கதாபாத்திரங்கள்…

ஒரு கிரிக்கெட் டீமை விட இதில் அதிக கூட்டம் உள்ளது. அனைவரும் அவர்களது பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

வைபவ் தேனி மாவட்ட தாதா மருதுவாக வந்து கலக்குகிறார். நிதின் சத்யா நண்பர்களுக்காக பேசும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

பெற்றோருக்காக கிரிகெட்டை இழந்தோம். மனைவிக்காக நண்பர்களை இழக்கிறோம். இப்படி எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம். என்று கூறும்போது கண் கலங்க வைக்கிறார்.

மிர்ச்சி சிவா தன்னுடையை வழக்கமான காமெடியால் ரசிக்க வைக்கிறார். இதில் கூடுதலாக யூடியுப்பில் (பணத்திற்காக) விமர்சனம் செய்பவர்களை சாடியிருக்கிறார்.

chennai 28 ii latest stills (3)

இவர்களுடன் ஜெய், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், விஜய் வசந்த், சுபு பஞ்சு, இளவரசு, தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோரும் ரசிக்கம் படியாக செய்துள்ளனர்.

முதல்பாகத்தில் நாயகியாக விஜயலட்சுமி இருந்தார். அவர் இதில் சிவாவை மணக்கிறார்.

இவர்களுடன் சனா, கிருத்திகா. அஞ்சனா கீர்த்தி மற்றும் மகேஸ்வரி உள்ளிட்ட நாயகிகள் உள்ளனர்.

ஜெய்யின் காதலியாக வரும் சனா கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

மனீஷா யாதவ், சொப்பன சுந்தரி பாடலுக்கு மட்டுமே வந்து படத்தின் திருப்புமுனையாகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமே யுவன் சங்கர் ராஜாதான். பாடல்களில் நான்கு ரன் அடித்தால் பின்னணி இசையில் சிக்ஸர் அடிக்கிறார்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் கிரிக்கெட் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

இயக்குனர் பற்றிய அலசல்…

வெங்கட் பிரபு தன்னுடைய பழைய பார்முலாவில் செஞ்சுரி அடித்திருக்கிறார்.

இரண்டாம் பகுதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு 3வது பாகம் வேண்டும் என்பதற்காகவே இதன் க்ளைமாக்ஸில் சுவையை குறைத்திருக்கிறார்.

இந்த சென்னை 28 ii… வெங்கட்பிரபு டீம் டபுள் செஞ்சுரி

மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், பார்த்திபன், ஹரீஷ் உத்தமன், ஸ்ரீதிவ்யா, சூரி, காசி விஸ்வநாதன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சூர்யா ஏ.ஆர்
எடிட்டிங்: காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : நல்லுசாமி பிக்சர்ஸ் – தாய் சரவணன், ராஜீவன்

maaveeran kittu meet

கதைக்களம்…

1980களில் நடக்கும் ஜாதி, தீண்டாமை பிரச்சினையே இந்த கதைக்களம்.

கீழ் ஜாதியை சார்ந்த கிட்டு (விஷ்ணு) +2 தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருகிறார்.

அவரை மேலும் படிக்க வைத்து, மாவட்ட கலெக்டராக்கி ஊரில் இருக்கும் ஜாதி பிரச்சினையை ஒழிக்க நினைக்கிறார் ஊர் பெரியவர் சின்ராசு (பார்த்திபன்).

ஆனால் இதனை முறிடியக்க மேல் சாதி வகுப்பினர், போலீஸ் ஹரீஷ் உத்தமனின் உதவியுடன் பல திட்டங்களை போடுகின்றனர்.

அதன்படி, விசாரணை பெயரில் விஷ்ணுவை கைது செய்ய, பின்னர் ஜாமீன், பின்னர் விசாரணை என நடக்கிறது.

ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வராமல் மாயமாகிறார் விஷ்ணு.

இதனால் பார்த்திபனுடன் இணைந்து ஊர் போராட்டம் நடத்த மாநில அளவில் பெரும் பிரச்சினையாக என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

Maaveeran-Kittu-Movie-Stills-4

கதாபாத்திரங்கள்…

கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கேரக்டரில் நன்றாகவே பொருந்தியுள்ளார் விஷ்ணு.

தன் சகமாணவி உயிரை காப்பாற்ற மாணவர்கள் செய்யும் அந்த கட்டில் சேஸிங் காட்சி ரசிக்க வைக்கிறது.

தன் இனத்துக்காக இவர் கடைசி வரை போராடினாலும் கோபம், கொந்தளிப்பு என இல்லாமல் வெறுமனே இருப்பது உறுத்தல்.

பார்த்திபன் அப்படியிருந்தால், அது அவரின் வயதுக்றேக்க பக்குவம் என்று கூறலாம். கிட்டு கொஞ்சம் கில்லியாகி இருக்கலாமே.

ரெகுலர் பார்முலாவை விட்டு, வேறு ரூட்டிலும் அசத்துகிறார் பார்த்திபன்.

பொருத்தமான கிராமத்து முகம் ஸ்ரீதிவ்யா. துளி கூட கவர்ச்சியில்லாமல் முழுக்க மறைத்து முக அழகில் கவருகிறார்.

கம்பீர போலீசாக ஹரீஷ் ரசிக்க வைக்கிறார். எல்லாரும் அந்த காலக்கட்டத்தில் இருக்க இவர் மட்டும் தனியாக தெரிகிறார்.

இவர்களுடன் சூரி இருந்தும் அவர் பெயரை தவிர சொல்ல ஒன்றுமில்லை.

கௌரவக்கொலை செய்யும் சூப்பர்குட் சுப்ரமணி அந்த ஒரு காட்சியிலே அசல்ட்டாக அசத்துகிறார்.

Maaveeran-Kittu-Movie-Stills-5

படத்தின் ப்ளஸ்…

  • சாதிப் பிரச்சினையும் அது படமாக்கப்பட்ட விதமும்
  • நக்கல் நையாண்டி இல்லாத மெச்சூர் பார்த்திபன்
  • ஸ்ரீதிவ்யாவும் அழகான கிராமத்து பெண்களும்

படத்தின் மைனஸ்….

  • ஆமை வேக திரைக்கதை. கிட்டு காணாமல் போன பிறகு ரொம்பவே இழுத்தடித்து விட்டார்கள்.
  • பல படங்கள் ஓட காரணமாக இருக்கும் சூரியின் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் வேஸ்ட் செய்திருக்கிறார் சுசீந்திரன்.

sri divya with rajapalayam peoples

பாடலாசிரியர் யுகபாரதியின் வசனங்கள் நச்…

  • சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க” “ஓட்டுப்போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு.
  • விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை”
  • அடிச்சிட்டே இருப்பான், திருப்பி அடிச்சா திமிருனு சொல்லுறான்”

உள்ளிட்ட பல வசனங்கள் அப்ளாஸை அள்ளும்.

maaveeran-kittu-movie-stills-sri-divya

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பலம். இளந்தாரி பொண்ணு பாடல் இதமாக இதயத்தை வருடும்.

அதற்காக தேவையில்லாமல் க்ளைமாக்ஸ் சமயத்தில் இரண்டு டூயட் பாடல்கள் தேவையா?

ஊர் பிரச்சினை ஹைவேயில் செல்ல, விஷ்ணு ஸ்ரீதிவ்யாவுடன் இரண்டு டூயட் பாடுவது ரொம்பவே ஓவர்.

ஒளிப்பதிவாளரும் கலை இயக்குனரும் 30 வருடங்களுக்கு முந்தைய அனைத்தையும் கண் முன்னே கொண்டு வந்திருப்பது சிறப்பு.

இயக்குனர் சுசீந்திரன், ஜாதி பிரச்சினையை கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

படிப்பறிவு, கௌரவக்கொலை, ஆதிக்க சாதி சூழ்ச்சி என அனைத்தையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

ஆனால் அண்மைகாலமாக இதுபோன்ற படங்கள் அதிகம் வருவது எதனால்? என்பதுதான் புரியவில்லை.

மொத்தத்தில் மாவீரன் கிட்டு… ரசிகர்களுக்கு கிப்ட்டு

பழைய வண்ணாரப்பேட்டை விமர்சனம்

பழைய வண்ணாரப்பேட்டை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரஜின், அஷ்மிதா, ரிச்சர்ட், கானா பாலா, நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : மோகன்.ஜி
இசை : ஜூபின்
ஒளிப்பதிவாளர் : பாருக்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : கிருஷ்ணா டாக்கீஸ்

palaiya vanarapettai reviews

கதைக்களம்…

பிரஜின் இன்ஜினியரிங் காலேஜ் மாணவன். இவருடைய காதலி அஷ்மிதா.

பிரஜின் ஜாலியாக தன் ஐந்து நண்பர்களுடன் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர்.

இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், இவர்கள் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது.

சந்தேகத்தின் பேரில் பிரஜின் நண்பர்களில் ஒருவரை குற்றவாளியாக சிறையில் வைக்கிறது போலீஸ்.

இதனால் பிரஜீன், ஒரிஜினல் குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

இதே சமயத்தில் நேர்மையான கமிஷ்னர் ரிச்சர்ட்டும் நிஜமான குற்றவாளியை தேடுகிறார்.

குற்றவாளியை முதலில் நெருங்கியது யார்? சிறையில் உள்ள நண்பர் என்ன ஆனார்? இடைத்தேர்தல் அமைதியாக நடந்ததா? என்பதே மீதிக் கதை.

Pirajan - Asmitha (1)

கதாபாத்திரங்கள்…

மிகவும் யதார்த்த வண்ணாரப்பேட்டை பையனாக வருகிறார் பிரஜின். இவர்களுடன் இருக்கும் நண்பர்களும் கச்சிதம்.

ரிச்சர்ட் கம்பீரமாகவும் நேர்மையாகவும் நடித்திருக்கிறார்.

நிஷாந்த் இதில் நிறையவே ஸ்கோர் செய்கிறார்.

ஆனால் அஷ்மிதா இப்படத்தில் தேவைதானா? எனத் தெரியவில்லை. நாயகியே இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கலாம்.

பாடகர் வேல்முருகன், காஜல், கூல் சுரேஷ், கருணாஸ், கானாபாலா, ரோபோ சங்கர் ஏதோ வந்து போகிறார்கள். இவர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

richard

படத்தின் ப்ளஸ்…

  • பட்டறை குமார் கேரக்டரை கடைசி வரை தெரியாமல் ஆடியன்சுக்கு தெரியாமல் கொண்டு சென்றது ரசிக்க வைக்கிறது
  • திரைக்கதை மற்றும் படமாக்கப்பட்டவிதம்
  • பாடல்கள் மற்றும் பின்னணி இசை

படத்தின் மைனஸ்

  • பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பதற்காக நிறைய கேரக்டர்களில் முடிவே இல்லை.
  • ஹீரோ படிக்கும் மாணவன். அப்பா அம்மா இல்லை. அவர் நண்பர்களுக்கு செலவு செய்வது எப்படி?

palaiya vanarapettai movie review rating

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜூபின் அவர்களின் பின்னணி இசை பாராட்டும்படி இருந்தாலும் சில இடங்களில் இரைச்சல் அள்ளுகிறது.

எல்லாம் பாட்டும் குத்து பாடலாய் இருப்பதால் காதல் பாடலை மெலோடியாக கொடுத்திருக்கலாம்.

ஃபாருக்கின் ஒளிப்பதிவை கொஞ்சம் ப்ரைட்டாக தந்திருக்கலாம்.

கொலைக் காரணத்தை தேடி, இருவர் பயணிப்பது பழகிய கதை என்றாலும் படமாக்கப்பட்ட விதத்தில் ரசிக்க வைக்கிறார் மோகன். வாழ்த்துக்கள்.

உயர்அதிகாரிகளின் கெடுபிடிகளால் அப்பாவிகள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதை அசலாக காட்டியிருப்பது டைரக்டர் டச்.

பழைய வண்ணாரப்பேட்டையில் இன்னும் வண்ணம் சேர்த்திருக்கலாம்.

சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி,அருந்ததி நாயர்,ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன், ஆடுகளம் முருகதாஸ், மீரா கிருஷ்ணன், கிட்டி மற்றும் பலர்.
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவாளர் : பிரதீப் கலிபுரயத்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : பாத்திமா விஜய் ஆண்டனி

saithan heroine

கதைக்களம்…

ஜெயலட்சுமி என்ற பெயர் அடிக்கடி ஒரு குரலாக விஜய் ஆண்டனிக்கு கேட்கிறது.

அதனை தேடி அதன்படி அவர் செல்கிறார்.

யார் அந்த ஜெயலட்சுமி? இவருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? தேடி சென்றதால் விஜய் ஆண்டனியின் மனைவி, குடும்பம் என்ன ஆனது? என்பதே இந்த சைத்தான் கதை.

arunthathi nair

கதாபாத்திரங்கள்…

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்.

அதிலும் இதில் ஒரு குரலை தேடி அலையும் போது நம்மையும் தேட வைக்கிறார்.

ஆனால் இன்னும் ஸ்கோர் செய்ய வாய்ப்பிருந்தும் முக பாவனைகளை மாற்ற மறுக்கிறார். கொஞ்சம் சிரித்து ரசிக்க வைக்கலாமே.

அழகான கண்களை உருட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் அருந்ததி நாயர்.

விஜய் ஆண்டனியின் ஐடி நண்பனாக முருகதாஸ். இங்கிலீஷ் பேசி சிரிக்க வைக்கிறார்.

சாருஹாசன், கிட்டி, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

saithan movie stills

படத்தின் ப்ளஸ்…

  • அதிரடியான இன்டர்வெல் ப்ளாக்
  • கதைக்களம் மற்றும் பின்னணி இசை
  • இரண்டாம் பாதி கமர்ஷியல் ஐட்டம்

படத்தின் மைனஸ்…

  • ப்ளாஷ்பேக் காட்சி ஓகே என்றாலும் வலுவில்லை.
  • டெரர் வில்லனை கொஞ்சர் டர்ர்ர்ர் ஆக்கியது ஏனோ?

saithan arun

தொழில்நுட்ப கலைஞர்கள்

அந்த குரல் கேட்கும் காட்சிகளில் கேமராவை சுழல விட்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத்.

அதேபோல் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் சபாஷ் போடலாம்.

சுஜாதாவின் நாவலை எடுத்து கொஞ்சம் தடுமாறினாலும், படமாக்கிய விதத்தில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அதிக கவனத்தை ஈர்ப்பார்.

சைத்தான்.. சகலமும் ஜெயலட்சுமி

இளமி விமர்சனம்

இளமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : யுவன் (கருப்பு), அணு கிருஷ்ணா (இளமி), அகில் (சடை புலி) கிஷோர் (படை தளபதி) ரவி மரியா (வீரைய்யன்), விக்கிரமாதித்தன், தவசி, வெள்ளையாண்டி ஐயா மற்றும் பலர்.
இயக்கம் : ஜே. ஜூலியன் பிரகாஷ்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவாளர் : யுகா
கலை : ஜான்பிரிட்டோ
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : ஜோ புரொடக்ஷன்ஸ்

கதைக்களம்…

1715 ஆம் ஆண்டில் இக்கதை நடக்கிறது. அதாவது 300 வருடங்களுக்கு முன்பு உள்ள கதை.
இரு ஊர்களுக்கு உள்ள இடையே கோயில் பிரச்சினை இருந்து வருகிறது.

ஒரு சூழ்நிலையில் தன்னுடைய காளையை அடக்குபவருக்கு தன் மகள் இளமியை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார் ரவிமரியா.

ஆனால் இவரது மகளோ அடுத்த ஊர் கருப்பு யுவனை காதலிக்கிறார்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை யாருமே கற்பனை செய்யாத படி தந்திருக்கிறார் இயக்குனர்.

Ilami stills 1

கதாபாத்திரங்கள்…

யுவன் (கருப்பு), அணு கிருஷ்ணா (இளமி), அகில் (சடை புலி) கிஷோர் (படை தளபதி) ரவி மரியா (வீரைய்யன்), கருப்பு நண்பர் ஆனந்த் சுந்தர்ராஜன் என ஒருவரையும் விட முடியாது.

அனைவரும் அந்தந்த பாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.

சாட்டையில் பார்த்த யுவனா இது? என வியக்க வைக்கிறார்.

நாயகி இதற்கு முன்பு கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுக்கும்.

வில்லனாக வரும் கல்லூரி படப்புகழ் அகில், நல்ல முறுக்குடன் கம்பீரமாக இருக்கிறார்.

யுவனின் நண்பராக வரும் ஆனந்த் சுந்தர்ராஜனுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும்.

கிஷோர் கேரக்டர் படைப்பு நன்றாக இருந்தாலும், அதில் வலுவில்லாமல் சட்டென்று முடித்துவிட்டார்.

ilami

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் என எவரையும் குறை சொல்ல முடியாதபடி வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில்… நான் என்ன செய்வேன், அடி ஆத்தாடி, தவில் எடுத்து அடிடா என பாடல்கள் ரசிகர்களுக்கு கிராமத்து வாசனையை கொடுக்கும்.

ஜான் பிரிட்டோ கலையில் ஒவ்வொன்றும் கக்சிதம். அவர்கள் தேர்ந்தெடுத்த லொக்கேஷன் முதல் ஆடைகள், வீடுகள், கட்டில், பாத்திரம் உடை என சொல்லிக் கொண்டே போகலாம்.

இயக்குனர் பற்றி…

இதுபோன்ற கதைக்களம் வந்திருந்தாலும், எந்தவிதமான பிரம்மாண்டமும் இல்லாமல், மக்களின் படு யதார்த்த வாழ்க்கையில் நம்மை இணைக்கிறார் இயக்குனர்.

காளை அடக்கும் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் தேவை.

பட க்ளைமாக்ஸில் ஹீரோ அல்லது ஹீரோயின் ஜெயிப்பார். ஆனால் இதை யூகிக்க முடியாத படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இளமி.. சுவை குறையாத இனிய விருந்து

கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே. பாலாஜி, ஸ்ருதி ராமகிருஷ்ணன், கருணாகரன், பாலசரவணன், மயில்சாமி மற்றும் பலர்.
இயக்கம் : டிகே
இசை : லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவாளர் : அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டர் : டிஎஸ் சுரேஷ்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : எல்ரெட் குமார்

கதைக்களம்…

காஜலுடன் உண்டான திருமண காதல் முறிவுக்கு பின்னர் ஜீவா நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறார்.

இதனிடையில் பாபி சிம்ஹாவை மணக்க முடிவு செய்கிறார் காஜல்,.

எனவே ஜீவாவிடம் விவாகரத்து தர வேண்டுகிறார்.

காஜலுக்கு ஜீவா டைவர்ஸ் கொடுத்தாரா? காஜல்-பாபி மேரேஜ் நடந்ததா ? என்பது மீதி கதை.

CyAjyL_WIAEnw4n

கதாபாத்திரங்கள்…

கலகலப்பாக அதே சமயம் ப்ரெஷ்ஷாக வருகிறார் ஜீவா. நண்பர்களுடன் அரட்டை என்பது எல்லாம் என்றென்றும் புன்னகை படத்தை நினைவுப்படுத்துகிறது.

டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் காஜலுக்கு பெரிய வேலையிருப்பதில்லை. ஆனால் இதில் ரசிகர்களை ஏமாற்றவில்லை காஜல்.

ஜோதிகா சாயலில் நிறையவே முகபாவனைகளை கொடுத்து, நடித்திருக்கிறார் காஜல்.

ஆர்.ஜே. பாலாஜியும் இந்த அடல்ட் ஒன்லீ ரூட்டுக்கு வந்துட்டாரே.

பாபி சிம்ஹா, சுனைனா கேரக்டர்களில் வலு சேர்த்திருக்கலாம்.

பால சரவணன் மற்றும். மயில்சாமி, மதுமிதா ஆகியோரை நிறையவே பாராட்டலாம்.

டபுள் மீனிங் வசனங்களால் பல காட்சிகளில் பீப் சவுண்ட். (ஆனாலும் நமக்கு புரிந்துவிடுமே…????)

போட் காமெடி மற்றும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி நிச்சயம் இளைஞர்களை கவரும்.

CxMDUhPXAAA36R6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

லியோன் ஜேம்ஸ் இசையும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு கலர்புல். அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்தில் நிச்சயம் பேசப்படும்.

மொத்தத்தில் படம் அடல்ட் காமெடி ரசிகர்களுக்கு கவலை வேண்டாம்.

More Articles
Follows