பேய்கள் மரிப்பதில்லை.. ; நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

பேய்கள் மரிப்பதில்லை.. ; நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

கதைக்களம்…

பல தடைகளை தாண்டி 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று செல்வராகவனின் பிறந்த நாளில் படம் வெளியாகியுள்ளது.

*ஒரு பணக்கார தம்பதி எஸ்ஜே சூர்யா & மனைவி நந்திதா ஸ்வேதா. இவர்களுக்கு ஒரு குட்டி மகன்.

இவர்கள் காட்டு பங்களாவில் நான்கு வேலைக்காரர்களுடன் வசிக்கின்றனர்.

இவர்களின் செல்ல மகனைப் பார்த்துக் கொள்ள பராமரிக்க வேலையில் சேருகிறார் ரெஜினா கெசன்ட்ரா.

இங்கு கிடைக்கும் சம்பளம் மூலம், தான் சிறுவயது முதல் வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவ நினைக்கிறார் ரெஜினா.

நிறைய பணம்.. கொஞ்சம் சைக்கோ… கொஞ்சம் காமம் கலந்த குணம் கொண்ட சூர்யாவிற்கு ரெஜினா மீது ஆசை.

எனவே மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ரெஜினாவை பாலியல் பலாத்காரம் செய்து , கொல்கிறார்.

(பின்னர் என்ன… வழக்கமான பேய் கதை தான். இதை விட பெரிதாக பேய் கதையில் என்ன இருந்து விடப் போகிறது..?)

ரெஜினா பேய் அவர்களை எப்படி பழி தீர்த்து கொல்கிறது என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த படத்தின் ஹீரோ & வில்லன் என இரண்டையும் கலந்தே செய்துள்ளார்.

ராமசாமி என்று சொன்னால் பிடிக்காது… அதனால் ராம்சே என்கிறார் சூர்யா. அந்த ராம்சே கேரக்டரை பலமாக உருவாக்கியுள்ளனர்.

இப்படியெல்லாம் கூட மனுசங்க இருப்பாங்களா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு வெளுத்து கட்டியிருக்கிறார் ராம்சே.

அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான அன்பிற்கினியாள் பட விமர்சனம் (3.25/5)

ரெஜினா கசன்ட்ரா & நந்திதா இருவரும் இதற்கு முன் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளனர்.
அந்த படங்களை விட அவர்களின் இந்த படத்தை நம் நெஞ்சம் மறப்பதில்லை

தொழில்நுட்ப கலைஞர்கள்…

செல்வராகவன் படம் என்றாலே யுவன் ராஜ்யம்தான். இவர்களுக்குள் உள்ள கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

யுவனின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளது.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

வழக்கமான கதை என்றாலும் அதை உருவாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் மிஸ்ஸிங்.

பேய் படம் என்றாலே வேறு கதைகளை வைக்கவே முடியாதா? இல்லை தமிழ் இயக்குனர்களுக்கு வேறு கதை தெரியலையா? என்பதே செல்வராகவனின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பேய் படங்களை கொஞ்சம் காலம் பார்க்காமல் இருந்தவர்கள் இதை பார்த்து நெஞ்சத்தை தேற்றிக் கொள்ளலாம்.

Nenjam Marappathillai movie review and rating in Tamil

Comments are closed.

Related News

'ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' தயாரிப்பில், இயக்குநர்…
...Read More
சமீபத்தில் 'மான்ஸ்டர்' மாபெரும் வெற்றிப் படத்தில்,…
...Read More