பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, ஹரி ஜானி, லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேஷ் மற்றும் பலர்.
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்
எடிட்டர் –
தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ் டைரக்டர் ரஞ்சித்
மக்கள் தொடர்பாளர் – குமரேசன்

கதைக்களம்…

கருப்பி என்ற நாயை வளர்த்துக் கொண்டு புளியங்குளம் கிராமத்தில் ஜாலியாக நண்பர்களுடன் வேட்டைகளுக்கு சென்று திரிகிறார் பரியேறும் பெருமாள் கதிர்.

இவர்கள் சாதியின் மேல் உள்ள வெறியில் கருப்பி என்ற நாயை உயர் சாதியினர் கொன்றுவிடுகின்றனர்.

ஒருமுறை வேட்டைக்காக சென்ற போது போலீஸில் மாட்டிக் கொள்கின்றனர் கதிர் மற்றும் அவரது நண்பர்கள்.

அப்போது இவர்களுக்கு உதவ சூப்பர் குட் சுப்ரமணி ஒரு வருகிறார். நீ என்னடா வக்கீலா.? என்னை கேள்வி கேட்கிறாய்? என அவரை அடித்து விடுகிறார் போலீஸ்.

அப்படி என்றால் போலீசை தட்டிக் கேட்க நீ வக்கீலாக வேண்டும் என கதிருக்கு அறிவுரை கூறுகிறார் சூப்பர் குட் சுப்ரமணி. அதன்படி தன் கிராமத்து அருகில் இருக்கும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சேர்கிறார் கதிர்.

அங்கு சக மாணவன் யோகிபாபு மற்றும் ஆனந்தி பழக்கமாகின்றனர். கதிரின் அப்பாவித்தனத்தால் ஆனந்திக்கு அவர் மேல் காதல் வருகிறது.

இதை தெரிந்துக் கொள்ளும் ஆனந்தியின் அப்பா கதிரை ஆள் வைத்து அடிக்கிறார்.

மேலும் கீழ் சாதியின் காரணமாக கதிருக்கு அடிக்கடி எல்லா வகையிலும் தொந்தரவு கொடுக்கிறார் ஆனந்தியின் அண்ணன் லிஜீஸ்.

கதிரை தீர்த்துக் கட்ட கராத்தே வெங்கடேஷ் என்பவரிடம் பணம் கொடுக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? கதிர் எப்படி தப்பித்தார்? ஆனந்தியை கரம் பிடித்தாரா? வக்கீல் ஆனாரா? தன் சாதியினைரை காப்பாற்றினாரா? என்பதே பரியேறும் பெருமாள்.

கேரக்டர்கள்…

கதிர் ஆனந்தி இருவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும்.

ஒரு கிராமத்து இளைஞராக வாழ்ந்திருக்கிறார் கதிர். ஆங்கிலம் தெரியாத காரணத்தால் மாணவர்களிடம் அவமானப்படும் போதும், அம்மா மேல சத்தியம் என கூறும்போது, சாதியால் துவண்டு பின்னர் வெகுண்டு எழும்போது கதிர் கைத்தட்டல்களை அதிகம் வாங்குகிறார்.

காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பெயரெடுப்பார் யோகிபாபு. தன் பங்களிப்பை சரியாக செய்துள்ளார்.

ஆங்கில C லெட்டரில் சில வார்த்தைகள் சொல்லு என ஆசிரியர் இவரை கேட்கும்போது சின்ன C பெரிய C என இவர் கேட்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. எங்க அப்பா கவுன்சிலர் நான் க்ளாஸ் விட்டு போகனுமா? என நக்கல் பேசி நம்மை அதிகம் கவர்கிறார்.

இப்படி ஒரு தோழி நாம் படிக்கும்போது (சிலருக்கு) கிடைக்கவில்லையே என ஏங்க வைப்பார் ஆனந்தி. பரியனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என அப்பாவிடம் கூறும்போதும், தன் அப்பா முன்னிலையில் காதலனிடம் பேசும்போது ஒரு யதார்த்த நடிப்பை அள்ளி கொடுத்திருக்கிறார்.

மிரட்டலான அப்பாவாக மாரிமுத்து. தன் மகளுக்கு தெரியாமல் மகளிடம் நல்லவனாக நடித்து இவர் காட்டும் மிரட்டல் தனம் அருமை.

கராத்தே வெங்கடேஷ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மற்றொரு வில்லன். வயதானவராக இருக்கிறாரே என்று பார்த்தால் மிரட்டியிருக்கிறார். நிச்சயம் இவரை பார்ப்பவர்கள் திட்டாமல் இருக்க மாட்டார்கள்.

ஆனந்தியின் அண்ணனாக லிஜீஸ். யார்ரா இவர் என்று? நிச்சயம் ரசிகர்களை கேட்க வைப்பார். கதிரின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சியில் ஜாதி வெறிக் கொண்டவராகவும் சீனியர் மாணவராகவும் கெத்து காட்டியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ரசிக்கும் ரகம். கிராமத்து ராகத்தை கலந்து கொடுத்திருக்கிறார். எங்கும் புகழ் பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலாக இருக்கும்.

கருப்பி நாய் படத்தின் முதல் காட்சியிலே இறந்துவிடுகிறது. அதன்பின்னர் ஒரு பாடல் வருகிறது. சாரி. அது பாடல் இல்லை. கத்தி கத்தி படித்திருக்கிறார்.

உன் மூக்கில் உரசனும். உன் நாக்கால் நக்கி என் அழுக்கை போக்கனும் என்றெல்லாம் பாடல் வரிகள் வருகிறது. ஒரு வேளை நாயை பிடித்தவர்களுக்கு அந்த பாடல் பிடித்திருக்கலாம்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அனைத்தும் அருமை. முக்கியமாக க்ளைமாக்ஸில் டீ க்ளாஸை வைத்து சாதி பிரிவினையை சொல்லியிருக்கிறார்.

ஆனால் சில கல்லூரி காட்சிகளில் (யோகிபாபு பல் குத்தும் காட்சி க்ளோஸ்அப் சார்ட்) தேவையில்லாமல் கேமராவை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். (ஒருவேளை கேமரா மேனுக்கு கை வலித்திருக்குமோ.?)

ஒரு காட்சியில் காலா ஸ்டைலில் கலர் பூசியிருக்கிறார் டைரக்டர். நாயின் மீதும் கதிரின் மீது நீல பவுடர்களை பூசி புது வண்ணம் கொடுத்திருக்கிறார். இது ரஞ்சித் பார்முலாவாக இருக்கும்.

கல்லூரியில் பல நிகழ்வுகள் இருக்கும். முக்கியமாக கலை நிகழ்ச்சிகள். ஆனால் அதுபோன்ற காட்சிகளே இல்லை. சாதியினை காட்டியே காட்சிகளை நகர்த்துகிறார் மாரி செல்வராஜ்.

நாயகன் கதிர் டீமுக்கு கானா எல்லாம் அருமையாக வருகிறது. அதில் ஒன்றை கொடுத்து அவரை உயர்த்துவதாக கொடுத்திருக்கலாம். ஆனால் கடைசிவரை சாதியை காட்டியுள்ளனர். முக்கியமாக நட்பாக பழகும் மாணவர்கள் சாதியை பார்ப்பதில்லை. நல்ல நண்பர்களுக்கு இன்று வரை சாதியே தெரியாது என்பதுதான் உண்மை. அதுபோல நட்பை உயர்த்தியிருக்கலாம்.

கதிரை ஒருவர் கொல்ல முயன்று ரயில் ட்ராக்கில் கிடத்தி இருப்பார். டிரெயின் வந்துக் கொண்டிருக்கும். அப்போது இறந்துபோன கருப்பி நாய் வந்து நக்குவதாகவும் கதிர் விழித்துக் கொள்வதாகவும் காட்சிகள் இருக்கும். அட்லீஸ்ட் அப்போது மழை வந்திருக்கலாம். அல்லது வேறு ஒரு நாயை வைத்து நக்க விட்டு இருக்கலாம். ஆனால்…?????

சாதி கொடுமை இன்னும் பல கிராமங்களில் இருக்கிறது உண்மைதான். சாதி இல்லாத உலகம் வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசையும்.

ஆனால் அதையே தொடர்ந்து ரஞ்சித் (இதில் தயாரிப்பாளர்) படமாக்கி கொண்டிருப்பது ஏனோ? கொஞ்சம் கேப் விடுங்க சார்? ஒரே மாதிரியாக இருந்தால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும்.

சாதி பிரிவினையை எடுத்து அதை கல்லூரி பருவத்துடன் கலந்து கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். கதைக்கு ஏற்ற நட்சத்திரங்களை கொண்டு அதை திறம்படவும் செய்திருக்கிறார். அதற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.

பரியேறும் பெருமாள்… சாதியை வெறுப்பவர்களுக்கு சமர்ப்பணம்

First on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

First on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, அதிதிராவ், டயானா எரப்பா மற்றும் பலர்.
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – சந்தோஷ்சிவன்
எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பாளர் – நிகில் முருகன்
தயாரிப்பு – மெட்ராஜ் டாக்கீஸ் மணிரத்னம், லைகா சுபாஸ்கரன்
வெளியீடு – லைகா

கதைக்களம்…

சேனாபதி என்றழைக்கப்படும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள்.

முதல் மகன் அரவிந்த்சாமி, 2வது மகன் அருண்விஜய், 3வது மகன் சிம்பு.

அரவிந்த்சாமி மனைவி ஜோதிகா. அவரது கள்ளக்காதலி அதிதிராவ்.

அரவிந்த்சாமியின் பள்ளி தோழர் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரி.

அருண்விஜய் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ். (இலங்கை பெண்)

சிம்பு திருமணமாகதவர். அவரது காதலி டயானா எரப்பா.

செக்கச் சிவந்த வானம் ஹீரோயின் டயானா எரப்பா பயோ டேட்டா

அரசாங்கத்தையும் மெட்ராஸ் சிட்டியையே தன் கைக்குள் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ்.

ஒரு முறை இவர் கோயிலுக்கு சென்றுவரும்போது இவரை கொல்ல ஒரு கும்பல் வருகிறது. அதிலிருந்து தப்பி விடுகிறார்.

எனவே 3 மகன்களும் அந்த கும்பலை தேடி அலைக்கின்றனர். ஆனால் பிரகாஷ்ராஜீக்கோ சந்தேகம் தன் மகன்கள் மீது விழுகிறது. இதை தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மரணமடைகிறார்.

அதன்பின்னர் தந்தையின் டான் இடத்தை அடைய 3 மகன்கள் இடையே போட்டி எழுகிறது. அப்படியென்றால் தந்தையை கொல்ல முயற்சித்தவர் யார்? யார் அந்த இடத்தை அடைந்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் மிக மிக அரிது. அப்படியே இருந்தாலும் 2 ஹீரோக்கள் சப்ஜெக்ட் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால் நான்கு ஹீரோக்களை வைத்து நாலு திசையும் பேச வைத்துவிட்டார் மணிரத்னம்.

அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி இவர்களில் எவரையும் குறை சொல்ல முடியாத படி வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர்.

ஹீரோயின் டயானா எரப்பா கவர்ச்சி படங்கள்

தந்தை இடத்தை அடைய 3 மகன்கள் அடிக்கும் ஒவ்வொரு ஸ்டண்ட்டும் ரசிக்க வைக்கிறது. யார்? அந்த இடத்திற்கு வருவார்கள்? என்ற பரபரப்பு நம்மை படம் முடியும் வரை தொற்றிக் கொள்கிறது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் சென்டின்மெண்டையும் கொடுத்து கவர்கிறார்.

அப்பாவுக்கு பிடிக்காத பையனாக சிம்பு வந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்துவிடுவார். காதலைப் பற்றி சிம்பு பேசினாலே தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. அது எல்லாருக்கும் கிடைக்காத ஒன்று. அதிதிராவை மிரட்டும் காட்சியில் அவர் பேசும் வசனம் சிம்பு ஸ்டைல்.

ஸ்டைலிஷ் லுக்கில் அருண்விஜய் அசத்தல். அப்பா இடத்தில் உட்கார ஆசைப்பட்டு அவர் அமரும் ஸ்டைலே அழகுதான்.

விஜய்சேதுபதி வரும் காட்சிகள் எல்லாம் காமெடி கலாட்டாதான். நக்கலாக பேசி பேசி நம்மை கவர்ந்துவிடுகிறார். க்ளைமாக்ஸில் ரசூல் இப்ராஹீமாக ஜொலிக்கிறார் விஜய்சேதுபதி.

ஒரு டான், ஒரு தந்தை என இரண்டிலும் தன் பக்குவப்பட்ட நடிப்பில் கவர்கிறார் பிரகாஷ்ராஜ். இவரைப் போலவே ஜெயசுதாவும் அமைதியான அம்மா வேடத்தில் ஈர்க்கிறார்.

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

இதுவரை இல்லாத வில்லன் வேடத்தில் தியாகராஜன். வித்தியாசமான கெட்அப். இவர்தான் எல்லாத்துக்கும் காரணமோ? என்ற சந்தேகத்திலேயே கதையை நகர வைத்துள்ளார்.

மன்சூர் அலிகான் பெரிதாக வேடம் இல்லை என்றாலும் மனதில் நிற்கிறார்.

நாயகிகள் நால்வர் என்றாலும் அதிக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா. தந்தை, மாமனார், மாமியார், கணவர் என அனைவரிடத்திலும் இவர் நடந்து கொள்ளும் விதங்கள் அருமை.

இலங்கை பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். இனிக்க இனிக்க தமிழ் பேசி செல்கிறார். இவரது முடிவு அனுதாபம்.

அரை குறை ஆடையில் வந்து அடேங்கப்பா என ஏங்க வைக்கிறார் அதிதி ராவ். டயானா எரப்பா சில காட்சிகளே என்றாலும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மணிரத்னம் படங்கள் என்றாலே மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும்தான். இரண்டிலும் குறையே காண முடியாத அளவுக்கு செம.

பின்னணி இசையில் நம்மை அதிகம் ஈர்க்கிறார். தனிதனி பாடலாக இல்லாமல் படத்துடன் பாடலை ஒன்ற வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. கீச் சீச் பாடல் ரசிகர்களின் நெஞ்சை கீறிக் கொண்டே இருக்கும். வைரமுத்து வரிகள் பாடலுக்கு அதிகம் மதிப்பூட்டுகிறது.

பிரகாஷ்ராஜின் வீடு, குடோன், துபாய் நாடு அழகு, விஜய்சேதுபதி வீடு என அனைத்தையும் முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியிலும் சந்தோஷ்சிவனின் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

சிம்பு விஜய்சேதுபதி பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக சிறப்பு. இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தால் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கும்.

பொதுவாக கேங்ஸ்டர் படம் என்றால் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். அண்ணனுக்காக தம்பி செய்வது, குடும்பத்திற்காக செய்வது என பல கதைகளை நாம் பார்த்துருப்போம்.

ஆனால் ஒரே குடும்பத்தில் 3 மகன்களின் கேங்ஸ்டர் கதை. அப்பாவின் இடத்துக்கு ஆசைப்பட்டு மகன்கள் செய்யும் ஒவ்வொன்றையும் ஃப்ரேம் பை ஃப்ரேம் ரசிக்க வைத்துவிட்டார் மணி சார்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2 பாதியில் குறைந்துவிடுகிறது. இதனால் கொஞ்சம் சோர்வு ஏற்படுகிறது.

கேங்ஸ்டர் கதை என்றாலும் அருவா இல்லாமல் துப்பாக்கியுடன் விளையாடியிருக்கிறார்.

அரவிந்த்சாமி மனைவி ஜோதிகா மற்றும் கள்ளக்காதலி அதிதிராவ் சந்திக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் மணிரத்னம் டச்.

க்ளைமாக்ஸை நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதில் ஹீரோயிசத்தை உடைத்து டைரக்டர் ஜெயிக்கிறார்.

செக்கச் சிவந்த வானம்… மணி மகுடத்தில் நாலு நட்சத்திரங்கள்

Chekka Chivantha Vaanam Review (VIDEO)

First on Net ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

First on Net ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெயக்குமார், சத்யா
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – யுவா
எடிட்டிங் – ஷபீக் முகம்மது
மக்கள் தொடர்பாளர் – சுரேஷ் சந்திரா
எழுத்து இயக்கம் – தரணிதரன்
தயாரிப்பு – வாசன் சக்திவாசன்
இணை தயாரிப்பு – தரணிதரன்

கதைக்களம்…

முதலில் ராஜா ரங்குஸ்கி என்றால் என்ன? என்று சொல்லிவிடுகிறோம்.

படத்தின் நாயகன் பெயர் ராஜா. நாயகியின் பெயர் ரங்குஸ்கி. (எந்திரன் படத்தில் ஒரு கொசு வருமே. அதே பெயர் தான்)

நாயகன் ராஜா போலீஸ் கான்ஸ்டபிள். இவர் எழுத்தாளர் ரங்குஸ்கியை காதலிக்கிறார். முதலில் அவரை கவர வேறு ஒரு போனில் ராஜாவுடன் பழகாதே என்ற வேறு ஒருவர் பேசுவது போல் பேசுகிறார்.

இதனையடுத்து நான் அப்படிதான் பழகுவேன் என ராஜாவுடன் நெருக்கம் காட்டுகிறார் ரங்குஸ்கி.

ஒரு சூழ்நிலையில் ரங்குஸ்கியும் காதலிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்னரும் அந்த போன் குரல் தொடர்கிறது ரங்குஸ்கியை மிரட்டுகிறது.

தான் விளையாட்டாக செய்ய போய், வினையாகிவிட்டதே. அப்படி என்றால் அவரை யார்? மிரட்டுகிறார் என குழம்பி போகிறார் ராஜா.

எனவே ரங்குஸ்கியை சந்திக்க செல்கிறார் ராஜா. அப்போது அந்த வில்லாவில் ஒரு கொலை நடக்கிறது. அந்த பழி ராஜா மீது விழுகிறது.

இவை எல்லாம்? அந்த மர்ம குரல் நபர்தான் செய்கிறார் என நினைக்கிறார் ராஜா. அதன்படி தன் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறார்.

யார் அந்த மர்ம குரல் நபர்? அவரின் நோக்கம் என்ன? சிரிஷை மிரட்டுவது ஏன்? என பல திருப்பங்களுக்கு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கேரக்டர்கள்…

மெட்ரோ பட நாயகன் சிரிஷின் 2வது படம் இது. இதிலும் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பெண்களை நிச்சயம் கவருவார்.

ஆனால் முகபாவனைகள் சுத்தமாக இல்லை. எல்லா காட்சியிலும் ஒரே போலவே பதட்டமாக இருக்கிறார். கொலை காட்சிக்கு முன்பு கூட முகத்தில் சிரிப்பே இல்லை.

சாந்தினி முதலில் சாந்தமாக வந்து பின்னர் க்ளைமாக்ஸில் சரவெடி கேரக்டர். வர வர அழகிலும் நடிப்பிலும் மெச்சுரிட்டி வருகிறது.

சிரிஷ் உடன் வரும் கல்லூரி வினோத் நடிப்பில் கெட்டி. மாரி படத்திலேயே இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதில் களைகட்டியிருக்கிறார்.

சிபிஐ. ஆபிசராக ஜெயகுமார். மிரட்டலாக வருவார் என்று பார்த்தால் அவரையும் டம்மியாக்கி விடுகிறார்கள்.
இவருடன் சத்யா தன் கேரக்டரில் கச்சிதம். மிகையில்லாத நடிப்பில் சபாஷ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்….

யுவன் இசையில் பட்டு குட்டி பாடல் மட்டும் மனதோடு பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது. ஷேடோ தீம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் யுவன் ராஜ்யம்தான்.

யுவாவின் ஒளிப்பதிவில் அந்த வில்லா காட்சிகள் அனைத்தும் அருமை. லாங் ஆங்கிளில் நம்மை அதிகம் கவர்கிறார். இப்படி ஒரு வில்லா இருந்தா நல்லா இருக்குமே என ஏங்க வைக்கிறார்.

பர்மா மற்றும் ஜாக்சன் துரை படங்களை இயக்கி தரணிதரன் தான் இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.

ஒரு கொலை அதை யார் செய்தார்? என்ற ட்விஸ்ட் உடன் நகரும் கதையை கடைசியாக ரங்குஸ்கி பக்கம் திருப்பி அதில் பைபிள் சர்ச் என கொடுத்திருப்பது நச் ரகம்.

கொலையாளி இவரா? இவரா? என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி ட்விஸ்ட் வைத்திருப்பது சிறப்பு.

I can Feel the Killer என்று கூறி விட்டு சிபிஐ ஆபிசர் ஓடி சிசிடிவி கேமராவை கண்டுபிடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

ஒரு வீட்டிற்குள் சிரிஷ் சென்று கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து சிசிடிவி காட்சிகளை டெலிட் செய்வது எப்படி? கம்யூட்டர் பாஸ்வேர்ட் இல்லையா..?

சிரிஷ் சாந்தினி ஒன்றாக இருக்கும்போது சாந்தினி யார் போன் செய்கிறார்? எப்படி இவரது குரல் ஒலிக்கிறது என்பதற்கு எல்லாம் பதில் இல்லை.

இதில் நாயகன் போலீஸ். ஆனால் அவருக்கான மிடுக்கு இல்லை. கொலையாளியை தேடுவதில் கூட விவேகம் இல்லை. சிபிஐ ஆபிசரும் சரியாக செயல்படவில்லை என்பதால் விறுவிறுப்பு குறைந்து விடுகிறது.

பர்மா படத்தில் நாம் பார்த்த தரணிதரனை இதில் பார்க்க முடியவில்லை.

ராஜா ரங்குஸ்கி.. கொசு தொல்லை தாங்கல…

Raja Ranguski review rating

First on Net சாமி ஸ்கொயர் விமர்சனம்

First on Net சாமி ஸ்கொயர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் மற்றும் பலர்
இசை – தேவி ஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ்,
எடிட்டிங் – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்
பாடலாசிரியர் – விவேகா,
கலை – பி.சண்முகம், பி.வி.பாலாஜி,
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா,
ஆடை வடிவமைப்பு – நீராஜா கோனா,
தயாரிப்பு – சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி,
எழுத்து, இயக்கம் – ஹரி.
பி.ஆர்.ஓ. – யுவராஜ்

கதைக்களம்…

முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்றுவிட்டு காணாமல் போனதாக காட்டிருப்பார். அதன் தொடர்ச்சியா இப்படம் தொடர்கிறது.

காணாமல் போன அண்ணாச்சி என்ன ஆனார்? என்பதை தெரியாமல் அவரின் அடியாட்கள் தவிக்கிறார்கள். தகவல் இலங்கையில் உள்ள அண்ணாச்சி குடும்பத்திற்கு பறக்கிறது. உடனே பெருமாள் பிச்சையின் 3 மகன்களும் திருநெல்வேலிக்கு வருகிறார்கள்.

தன் தந்தை என்ன ஆனார் என இறங்குகிறார் 3வது மகன் பாபி சிம்ஹா. அப்போதுதான் ஆறுச்சாமி தான் தன் தந்தையை கொன்றார் என்பது தெரிய வருகிறது.

அதன்பின்னர் அவரின் குடும்பத்தையே காலி செய்கிறார் பாபி சிம்ஹா.

ஆறுச்சாமிக்கு பிறக்கும் மகன் பின்னர் விஸ்வரூபம் எடுத்து சில வருடங்களுக்கு பிறகு வருகிறார். அவர் எப்படி வில்லனை பழி வாங்கினார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சாமி ஸ்கொயர் என்ற பெயரிலேயே தெரிகிறது. 2 சாமிகளின் பவர். ஆறுச்சாமியாக கலக்கியவர் இதில் ராமசாமியாக களம் இறங்கியுள்ளார்.

தாய் வயித்துல பொறக்கல பேய் வயித்துல பொறந்தேன்..… சாமி இல்ல பூதம் என (நல்ல வேளை படத்தில் பேய் டயலாக் இல்லை) பேசி வசனத்திற்கு ஏற்ப பிரித்து மேய்ந்திருக்கிறார்.

முதல் பாதியில் மினிஸ்டர் பிரபுக்கு பாதுகாப்பு ஆபிசராக அமைதியாக வந்து அசத்துகிறார். ஆறுச்சாமியின் வரலாறு தெரிந்த பின் அவதாரம் எடுக்கும் காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு அல்வா. பைட் சீன்களில் அனல் தெறிக்கிறது.

10 வருடங்களுக்கு பிறகும் அதே உடல்வாகுடன் விக்ரம் வருவது உண்மையிலேயே அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

கீர்த்தி சுரேஷ் முதலில் திமிராக வந்து பின்னர் விக்ரமையே சுற்றி சுற்றி திரிகிறார். மினிஸ்டர் மகள் என்றாலும் நார்மல் சுடிதார் என ஹோம்லியாகவே வருகிறார். மாடர்னாக வந்திருக்கலாமே அம்மணி…

மினிஸ்டர் மகள் கீர்த்தியின் கிழிந்த சுடிதாரை ஐஏஎஸ் மாணவர் தைத்து கொடுப்பது எல்லாம் ஓவர். கீர்த்தியுடன் கெமிஸ்ட்ரி இல்லையே விக்ரம் சார்.? என்னாச்சு

புது மெட்ரோ ரயில் பாடல் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் விக்ரம் மற்றும் கீர்த்தியின் குரல்கள் பழைய கரி ரயிலை போல கரகர இருக்கிறது. தயவுசெய்து பாடல்களை படிக்க வேண்டாமே கீர்த்தி.

காக்கா முட்டை, தர்மதுரை படங்களில் நம்மை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நம்மை ஏமாற்றிவிட்டார். அவர் பாஷையில் சொன்னால் நம் கண்களில் மிளகாய் பொடியை போட்டு எரிச்சலை ஏற்படுத்திவிட்டார்.

மீண்டும் ஜிகர்தண்டா வில்லன் பக்கா மாஸ். பாபி சிம்ஹா வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவரின் கண்கள் முதல் உடம்பு வரை பவர் ஏற்றி ராவணன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பிரபு அவரின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கச்சிதம். அதுபோல் சுதா சந்திரன் கேரக்டர் சிறப்பு.

பாபியின் அண்ணன்களாக வரும் ஜான்விஜய், சுந்தர் கேரக்டர்களில் வலுவில்லை. இதே கதைதான் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ், சுமித்ரா, டெல்லி கணேஷ் கேரக்டரிகளிலும் தொடர்கிறது.

முதல் பார்ட்டில் விவேக் காமெடி நன்றாக இருந்தது. ஆனால் இதில் சூரி… முடியலடா சாமி.. சூரி சார். வீ ஆர் வெரி சாரி சார். சூரியின் மொத்த காட்சிகளை எடுத்துவிட்டால் படம் நிச்சயம் காப்பாற்றப்படும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தேவி ஸ்ரீபிரசாத் பின்னணி இசையில் மட்டுமே கவர்கிறார். மிளகாய் பொடி, டர்னக்கா பாடல்கள் தேவையே இல்லாத உணர்வை ஏற்படுத்துகிறது.

ஹரி படம் என்றாலே டாட்டா சுமோ இல்லாமல் இருக்குமா? இதிலும் அதே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இதில் இன்னும் வித்தியாசமாக ஒட்டக சேஷிங் வேற வைத்துவிட்டார்.

பிரியன் ஒளிப்பதிவில் காட்சிகளை பிரியத்துடன் ரசிக்க முடிகிறது.

காஞ்சனா படம் போல் தனி தனியாக படம் எடுத்துவிட்டு காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று சொல்லாமல் சாமி படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை எடுத்துள்ள ஹரிக்கு முதலில் ஹாட்ஸ் ஆஃப் சொல்லிவிடுவோம்.

முதல் பாகத்தில் வந்த மாமி த்ரிஷா இல்லேன்னா என்ன? ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்துவிட்டார். ஆனால் மாமி வேடத்திற்கு சற்றும் பொருத்தமில்லாதவர். ரசிகர்கள் பாவம். மிஸ் யூ த்ரிஷா மாமி.

பிராமின் பாஷை சுட்டுப் போட்டாலும் கீர்த்திக்கும் சரி (ஒரு காட்சியில் பேசுவார்), ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் வரவில்லை.

ஹரி படம் என்றால் டாடா சுமோ சேஷிங், அதிரடி சண்டை, குடும்ப சென்டிமெண்ட், ஓவர் ஸ்பீடு காட்சிகள் இருக்கும். ஆக ஆறுசாமி அளவுக்கு ராமசாமி இல்லை என்பது வருத்தம்தான்.

சாமி ஸ்கொயர்… சாமி வேட்டையில் சூரி சேட்டை

Saamy Square aka Saamy 2 review rating

யுடர்ன் விமர்சனம்

யுடர்ன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமந்தா, ஆதி, ஆடுகளம் நரேன், நரேன், பூமிகா மற்றும் பலர்
இயக்குனர் – பவன் குமார்
இசை – அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி
ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி
வெளியீட்டு உரிமை : தனஞ்செயன்

கதைக்களம்…

சமந்தா ஒரு பத்திரிகையாளர். அங்குள்ள ஒரு சக ஊழியரை காதலிக்கிறார். இருவரும் சென்னையில் பணி புரிகின்றனர்.

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் செல்லும் ட்வீலர்கள் நடுவில் இருக்கும் கற்களை அகற்றி வைத்து யூடர்ன் போட்டு செல்கின்றனர். இதை பார்க்கும் சமந்தா அங்கு ப்ளாட்பார்மில் வசிக்கும் ஒருவரிடம் யுடர்ன் போடும் வண்டிகளின் நம்பர்களை குறித்து வைத்து தன்னிடம் தர சொல்கிறார் சமந்தா.

இதை வைத்து ஒரு செய்தியை வெளியிட நினைக்கிறார்.

அவர் குறித்து தரும் அந்த வண்டி ஓட்டுனர்கள் எல்லாம் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்கின்றனர்.

காவல்துறையும் இதை ஒரு பொருட்டாக கருதாமல் விசாரணையை மூட நினைக்கின்றனர்.

ஆனால் நேர்மையான அதிகாரி ஆதியும் சமந்தாவும் குழப்பம் அடைகின்றனர்.

யுடர்ன் போடுபவர்கள் மட்டும் மரணமடைவது ஏன் என்பதை கண்டு பிடிக்க, தானே ஒரு நாள் யுடர்ன் போடுகிறார் சமந்தா. அதன்பின்னர் என்ன ஆனது?

அவர் மரண அடைந்தாரா? தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்….

மரத்தை சுற்றி ஆடி பாடி டூயட் இல்லாத கதை. அப்படி இருந்தும் இந்தை கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் சமந்தா. அதற்காகவே சமந்தாவுக்கு ஒரு பெரிய சபாஷ் சொல்ல வேண்டும்.

எனக்கு ஒன்னுமே தெரியாது. வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்? என அப்பாவியாக அவர் கேட்கும் கேள்வி முதல், கொலைக்கான காரணத்தை அவர் அறிய செய்யும் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

பின்னர் கொலை எப்படி நடக்கிறது? என்பதை தெரிந்துக் கொண்ட பின் ஏற்படும் பதட்டத்தையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

நேர்மையான மிடுக்கான போலீசாக ஆதி அசத்தல். தன் கீழ் வேலை செய்யும் மற்ற போலீஸ்களை அதட்டாமல் அவர் வேலை வாங்கும் முறைகளை நிறைய நிஜ போலீசார் கற்றுக் கொள்ள வேண்டும்.

உயர் அதிகாரி ஆடுகளம் நரேன் இவருக்கு நேர் எதிர். கடுப்பான போலீஸ் அவர்.

பூமிகாவும் அவரது மகளும் சிறிய வேடத்தில் வந்தாலும் நிறைவு.

மலையாள நடிகர் நரேன் தன் மகளை தானே கொன்று விட்டதை எண்ணி எடுக்கும் முடிவில் ஒரு அன்பான அப்பாவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் இல்லாமல், படத்தின் பின்னனி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர். அவருக்கும் பாராட்டுக்கள்.

கொலை மேல் கொலை, யாரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட். தவறான எண்ணை பூமிகாவுடம் கொடுத்து விட்டோம் என சமந்தா தவிக்கும் அனைத்தும் செம ட்விஸ்ட்.

யுடர்ன் இடம், அந்த சாலைகளை அனைத்தையும் லாங் ஆங்கிளில் அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

யுடர்ன் செய்ய, போக்குவரத்து விதிகளை மீறி நாம் செய்யும் அலட்சியத்தால் எத்தனை உயிர் போகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் பவன்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகிறது. அதை தவிர்த்திருந்தால் இன்னும் ஸ்பீடு கிடைத்திருக்கும்.

இந்த படத்தை பார்த்த பிறகாவது சாலை விதிகளை மதித்து யுடர்ன் அடிக்காமல் யாராவது திருந்தினால் அதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றி.

யு டர்ன் – ஆச்சர்ய யுடர்ன் அடிக்க ஒரு படம்

U turn review and rating

சீமராஜா விமர்சனம்

சீமராஜா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்
இசை – இமான்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைப் பயிற்சி – விக்கி நந்த கோபால்
இயக்கம் – பொன்ராம்
பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா & ரேகா
தயாரிப்பு – 24ஏஎம். ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா

கதைக்களம்…

சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன். அவரது தந்தை நெப்போலியன்.

ஒரு சூழ்நிலையில் தங்கள் சொத்தை ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

சொத்து போனாலும் ஊர் மக்கள் மத்தியில் கெத்தாக வாழ்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு கணக்கு பிள்ளைதான் சூரி.

பக்கத்து ஊரான புளியம்பட்டி டீச்சர் சமந்தா மீது காதல் கொண்டு அவர் பின்னாலேயே சுற்றுகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிங்கப்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் பிரச்சனை தொடர்கிறது.

புளியம்பட்டியில் பெரிய வீட்டுக்காரர் லால் மற்றும் சிம்ரன். ஒரு சூழ்நிலையில் சிம்ரனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் வலுக்கிறது.

அப்போதுதான் தன் குடும்ப பின்னணியையும் சமந்தாவின் தந்தை விவரமும் சிவாவுக்கு தெரிய வருகிறது.

அப்படி என்ன பின்னணி? அதன்பின்னர் சிவகார்த்திகேயன் என்ன செய்தார்? காதல் கை கூடியதா? என்பதே இந்த சீமராஜாவின் கதை.

கேரக்டர்கள்…

வேலையில்லாத வழக்கமான வாலிபர் கேரக்டர்தான் சிவாவுக்கு. ஆனால் அதையும் ரசிக்கும்படி கெத்து காட்டியிருக்கிறார் சீமராஜா.

சமந்தாவின் காதலுக்காக பின்னால் சுற்றுவது முதல் சந்தைக்காக சவால் விடுவது முதல் சிவகார்த்திகேயன் ராஜ்யம்தான்.

அரச பரம்பரை வம்சாவழி என்பதால் அதற்குரிய கெத்துடன் ரகளை செய்துள்ளார். சிவாவும் சூரியும் செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லை. காமெடிக்கு புல் கியாரண்டி.

சத்யராஜ்-கவுண்டமணி காமெடி கூட்டணிக்கு நிகராக சிவகார்த்திகேயன்-சூரி காமெடி கால காலமாக நிற்கும்.
படம் முழுவதும் சூரியையும் இணைத்து கொண்டுள்ள சிவகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டலாம்.

இதில் சூரிக்கு சிக்ஸ் பேக். அவரும் அதற்கான உழைப்பை கொடுத்துள்ளார்.

பிடி டீச்சராக சமந்தா. பெண்கள் சிலம்பம் சுற்றினாலே அழகுதான். அதிலும் அழகு சிலை சமந்தா சிலம்பம் சுற்றினால் அது மிகச்சிறப்பு தான். ஆனால் பைட் ஆரம்பிக்கும்போது ஹீரோ வந்துவிடுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லியாக சிம்ரன். இவருடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளார் லால். இந்த ஜோடியும் கலக்கல்தான். ஆனால் அடிக்கடி சிம்ரன் கத்துவது ஏன் என்றே தெரியவில்லை.??

நெப்போலியன் கேரக்டரை நிமிர செய்திருக்கிறார்.

பீரியட் கால கதையில் அழகு ராணியாக கீர்த்தி சுரேஷ். சிறப்பு தோற்றம் என்றாலும் குறையில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் கிராமத்து மெல்லிசை. வாரேன் வாரேன் சீமராஜா பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களை கவரும். மற்ற பாடல்கள் ஓகே ரகம்.

ஒளிப்பதிவு செம கலர்புல்லாக கொடுத்திருக்கிறார் பாலசுப்ரமணியம். இவரது பணியை பாராட்டியே ஆக வேண்டும்.

அரசர் கால கதை பின்னணி இசையில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். விஜய், அஜித் ரெப்பரசன் தவிர்த்திருக்கலாம். கட்டாயமாக சேர்த்து விட்டதாக தோன்றுகிறது.

கடம்பவேல் ராஜா கேரக்டர் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் நாம் பார்த்த அந்த கெமிஸ்ட்ரியை இதில் பார்க்க முடியவில்லை.

இது இளைஞர்களுக்கான படமா? காதல் படமா? விவசாயம் படமா? அரசர் காலத்து படமா? என்பதில் நமக்கே குழப்பம் வந்துவிடுகிறது.

முதல் பாதியில் இருந்த கலகலப்பு இரண்டாம் பாதியில் செம மிஸ்ஸிங். மற்றபடி கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சீரியஸ் என கலந்துக் கொடுத்துள்ளார் பொன்ராம்.

பழைய ரஜினிகாந்தின் கமர்சியல் படங்களின் கலவையாக இப்படத்தை கொடுத்துள்ளார் பொன்ராம்.

ஒரு சில குறைகள் இருந்தாலும் சிரித்து விட்டு வரலாம்

படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா நிறையவே செலவு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

சீமராஜா.. செம ராஜா

Seemaraja review rating

More Articles
Follows