நதி விமர்சனம்.; ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

நதி விமர்சனம்.; ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இரு வேறு சாதி பிரிவைச் சேர்ந்த பையனும் பொண்ணும் காதலிக்கிறார்கள். இதனால் இரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளே படத்தின் கதை. ஆனால் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.

கதைக்களம்…

மதுரை கதைக்களமாக இருப்பதால் மதுரையின் நாயகன் சசிகுமார் கொடுக்கும் வாய்ஸ் ஓவரில் படம் தொடங்குகிறது.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸ் ஏழை மாணவன். ஒரு கல்லூரியில் படிக்கிறார். இவரின் தந்தை ஆட்டோ டிரைவர் முனீஸ் காந்த்.

அதே கல்லூரியில் படிக்கும் வசதியான பெண் ஆனந்தி. இவரின் அப்பா வெங்கடேஷ். பெரியப்பா வேலராமமூர்த்தி. இவர்கள் ஜாதி கட்சியை சேர்ந்த பிரபலங்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர ஒரு கட்டத்தில் சாதியால் பிரச்சனை உருவாகிறது.

அதன் பிறகு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? காதல் வென்றதா? சாதி வென்றதா? கௌரவம் வென்றதா? என்பதே படத்தில் கதை.

கேரக்டர்கள்…

சாந்தமான முகத்துடன் சாம் ஜோன்ஸ். அதுதான் இவருக்கு பலமும் பலவீனமும்.. இவருக்கு ரொமான்ஸ் பெரிதாக வரவில்லை. அதே சமயம் கோபமும் பெரிதாக வரவில்லை.. வில்லனை எதிர்த்துப் பேசும் காட்சிகளில் மெச்சூரிட்டியே இல்லை.

ஆனந்தி ஒரு திறமையான அழகான நடிகை. சின்ன சின்ன முக பாவனைகளால் கவருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஆனந்தி எடுக்கும் முடிவு சாதியை எதிர்க்கும் கட்சிகளுக்கும் குடும்பத்திற்கும் மரண அடி.

அவனை வெட்டுடா.. அதாண்டா கௌரவம்.. என்ற அதே பழைய வசனங்களோடு வேலராமமூர்த்தி வெங்கடேஷ் நடித்துள்ளனர். வேலராம மூர்த்தியின் ஆக்டிங் பல காட்சிகள் ஓவராக உள்ளது.

ரஜினி பக்தராக, ஆட்டோ ஓட்டுநராக முனீஸ்காந்த். நதி படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார்.

ஆனந்தியின் மாமாவாக கரு பழனியப்பன். தன் வழக்கமான நக்கல் நையாண்டியுடன் சிறிது வில்லத்தனம் செய்திருக்கிறார். ஆனால் இவர் தலையில் விக் இவருக்கு சரியாக செட் ஆகவில்லை. இவரின் அல்லக்கையாக கோடங்கி வடிவேலு நடித்துள்ளார்.

டெக்னீசியன்கள்…

திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் ஓகே தான். பெரிதாக கவரவில்லை பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.. ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். ஒளிப்பதிவில் தன்னுடைய அனுபவத்தை கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார் எம்எஸ் பிரபு.

தயாரிப்பு : மாஸ் சினிமாஸ்
இயக்கம் – தாமரை செல்வன்.

படத்தில் இரண்டு மணி நேரம் வரை வழக்கமான காதல் காட்சிகளையும்.. வழக்கமான ஜாதி காட்சிகளையும்.. வழக்கமான கல்லூரி காட்சிகளையும்.. மாணவர்கள் மோதலையும் காட்டியே போர் அடிக்க வைத்து விட்டார் தாமரைச்செல்வன். இதுவே ஓடுது… ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

கிளைமாக்ஸ் காட்சி வித்தியாசமாக உள்ளது. ஒருவேளை கிளைமாக்ஸ் காட்சியை முதலில் சொல்லித்தான் நடிகை ஆனந்தி இந்த படத்திற்காக ஒப்பந்த செய்திருப்பார் என்னவோ.?

ஆக.. இந்த ‘நதி’… ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

NADHI movie review and rating in Tamil

மஹா விமர்சனம்.; சிம்பு – ஹன்சிகா கெமிஸ்ட்ரியா.?

மஹா விமர்சனம்.; சிம்பு – ஹன்சிகா கெமிஸ்ட்ரியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான படம் ‘மஹா’.

ஹன்சிகாவின் 50 வது படமான மஹாவை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.

ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் யு.ஆர்.ஜமீல்.

கதைக்களம்…

ஹன்சிகா.. கிறிஸ்தவர். சிம்பு – இஸ்லாமியர்.

விமான பணிப்பெண்ணாக வரும் ஹன்சிகா மோத்வானி பைலட் சிம்புவை காதலிக்கிறார்.

இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை மானஸ்வி.

ஒரு கட்டத்தில் மானஸ்வி ஒரு சைக்கோ நபரால் கடத்தப்படுகிறார். ரூ. 25 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டுகிறார். இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என்கிறார்.

எனவே போலீஸ் ஆபிசர் ஸ்ரீகாந்திடம் புகார் அளிக்கிறார் ஹன்சிகா. ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் ஹன்சிகாவே ஒரு திட்டம் போடுகிறார். அது என்ன? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மகா படத்தில் சிம்பு வரும் காட்சி குறைவாகவே உள்ளது. ஒரு பாட்டு ஒரு பைட் என அசத்தல்.. மேலும் தன் ஒரிஜினல் லவ் ஸ்டோரியை சேர்த்து பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறார்.

மாறுப்பட்ட நடிப்பில் ஹன்சிகா. வெறுமனே டூயட் மட்டும் பாடாமல் தன் குழந்தைக்காகவும் அடுத்தவர் குழந்தைக்காகவும் ஹன்சிகா எடுக்கும் ரிஸ்க் காட்சிகள் செம.

ஸ்ரீகாந்துக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் ஸ்மார்ட் + ஷார்ப்.

தம்பி ராமையா கருணாகரன் மானஷ்வி ஆகியோரின் கேரக்டர்கள் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவு ஓகே… ஜிப்ரான் இசை பெரிதாக கை கொடுக்கவில்லை. பாடல்கள் சுமார்.

யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். மாஸ் ஹீரோ சிம்பு இருந்தபோதும் ஹீரோயின் கேரக்டரை வலுவாக்கி உள்ளார். கதையில் கவனம் செலுத்தியவர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

விறுவிறுப்பாக அமைக்க வேண்டிய திரைக்கதையை விவேகம் இல்லாமல் செய்துவிட்டார்.

தேஜாவு விமர்சனம்.; எழுத்தாளரும் என்கவுண்டரும்

தேஜாவு விமர்சனம்.; எழுத்தாளரும் என்கவுண்டரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன்புதான் அருள்நிதி நடிப்பில் டி ப்ளாக் என்ற படம் வெளியானது. தற்போது தேஜாவு என்ற அடுத்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

நாளை ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘தேஜாவு’ படத்தை பத்திரிகையாளர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் அருள்நிதி, மதுபாலா, காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

படத்தில் டிஜிபி மதுபாலாவின் மகள் ஸ்மிருதி வெங்கட் ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார்.

ஸ்மிருதி காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கும் போது பூஜா என்ற தன் பெயருடன் நாவல் கதாசிரியர் சுப்ரமணியன் சாய்நகர் என்ற பெயரை கூறுகிறார்.

அதன் பிறகு ஸ்மிருதிக்கு என்ன நடந்தது? என்பது போலீசுக்கு தெரியவில்லை.

அவருடைய மொபைல் ஃபோனையும் அவர்களால் ட்ரேஸ் செய்ய முடியவில்லை.

இதனிடையில் இந்த நாவல் கதாசிரியர் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த கதையில் பூஜா என்பவர் கடத்தப்படுகிறார்.

அவர் எந்த வண்டியில் கடத்தப்பட்டார் அவரை மீட்க ஒரு போலீஸ் அதிகாரி வருகிறார். அதன் பிறகு என்ன என்ன நடக்கிறது என்பதை நடப்பதற்கு முன்பே தெளிவாக தன் கதையில் எழுதுகிறார்.

இவரது கதைக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒத்துப் போவதால் போலீஸ் இவரை கண்காணிக்கிறது. ஆனாலும் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

பெண்ணை மீட்பதற்காக சிறப்பு அதிகாரியாக நாயகன் அருள்நிதி வரவழைக்கப்படுகிறார்.

இவரது விசாரணையில்… எழுத்தாளருக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உணர்கிறார்.

இந்தக்கதைக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு.? பூஜாவை கடத்த என்ன காரணம்? கடத்தல் சம்பவத்திற்கு பின்னடி என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ் ஆபீஸராக அருள்நிதி ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் இரண்டு நாட்கள் விசாரணையிலும் ஒரே மாதிரியான உடையில் வருகிறார். ஆனால் மகளை தொலைத்த மதுபாலாவோ பல ஆடைகளை மாற்றி விடுகிறார். இருவரது கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

அழகான திறமையான நடிகை ஸ்ருதி வெங்கட் . அவர் ஒரு துணை நடிகை போல ஓரிரு காட்சிகளில் வருகிறார். இரண்டு மூன்று டயலாக் மட்டுமே பேசுகிறார். இயக்குனருக்கு ஸ்மிருத்தி மீது என்ன கோபம்?

காளி வெங்கட்டின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கார்கி படத்தில் வக்கீலாக நடித்தவர் இந்த படத்தில் போலீஸ் ஆகவும் சில நகைச்சுவைகளை ஆங்காங்கே அள்ளித் தெளிக்கிறார்.

எழுத்தாளராக வருகிறார் அச்யுத் குமார். கொடுத்த குடிகார கேரக்டரில் கச்சிதம். ஆனால் இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள எம் எஸ் பாஸ்கர் வாய்ஸ் இவருக்கு ஒட்டவில்லை. வேறு ஒரு ஆர்டிஸ்ட் பயன்படுத்தி இருக்கலாம்

டெக்னீஷியன்கள்

படத்திற்கு இருபெரும் தூண்களாக இசையமைப்பாளர் ஜிப்ரானும், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும் பணியாற்றி உள்ளனர். படத்தை முழுவதுமாகவும் ரசிக்க வைக்க இவர்களின் பங்கு முக்கியமானது.

முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அரவிந்த் படத்தை இயக்கியுள்ளார். இடைவேளை வரை படம் செல்வதே தெரியவில்லை. விறுவிறுப்பாக கதை களத்தை அமைத்து அடுத்தது என்ன அடுத்தது என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு பார்க்க வைத்து விட்டார்.

ஆனால் கிளைமாக்ஸ் இல் நிறைய ட்விஸ்ட்களை கொடுத்து நிறைய லாஜிக் மீறல்கள் படத்தில் உள்ளன. அதை சொன்னால் படத்தின் கதை புரிந்து விடும் என்பதால் நாம் சொல்லவில்லை.

ஒரு குற்றவாளிக்கு அவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் காவல்துறை காவல்துறையில் இருக்கும் ஒருவரின் விவரங்களை அறிய நினைக்க மாட்டார்களா.?

ஆக.. இந்த தேஜாவு.. தேர்ச்சி..

Dejavu movie review and rating.

சிவி 2 விமர்சனம்.; இப்படியொரு பேய் படமா.?

சிவி 2 விமர்சனம்.; இப்படியொரு பேய் படமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

செந்தில்நாதன் இயக்கத்தில் யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ் மற்றும் தாடி பாலாஜி, கோதண்டம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘சிவி 2’.

இப்படத்தை துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் நாளை (ஜூலை 22) வெளியாக இருக்கிறது.

கதைக்களம்..

விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்கள் ஒரு சிலர் திடீரென காணாமல் போகிறார்கள்.

இதனையடுத்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கின்றனர்.

காவல்துறை விசாரணையில் சில வீடியோ கேமராக்கள் படக்காட்சிகள் சிக்குகிறது.

எனவே அண்டர் கவர் ஆப்ரேஷன் செய்து வரும் சாம்ஸிடம் கொடுத்து எல்லா வீடியோக்களையும் பார்க்க சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.

அதில் பல அதிர்ச்சியான.. மர்மமான கொலைகள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன.

அதாவது இந்த மாணவர்கள் youtube இல் பிரபலமாக ஏதாவது ஒரு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களை அறிந்த ஒரு நபர் ஒரு திட்டமிடுகிறார்.

சில நண்பர்களை (4 பெண்கள் உட்பட மொத்தம் 9) தேர்ந்தெடுத்து ஒரு பாழடைந்த (பேய்) ஆஸ்பத்திரிக்குள் நுழைய செல்கிறார்.

அதனை படம் பிடித்து youtube லைவ் செய்கிறார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை காண வைத்து அதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.

அந்த பாழடைந்த மருத்துவமனைக்குள் என்ன இருந்தது.? உள்ளே சென்ற மாணவர்களுக்கு என்ன நடந்தது? அமானுஷ்ய சக்தி யார்? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

கிருஷ்ணா கேரக்டரில் யோகி, க்ரிஷ் கேரக்டரில் தேஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பல படங்களில் காமெடி செய்திருந்த சாம்ஸ் இதில் சரக்கு சிகரெட்டு என்பதோடு பல வீடியோக்களை பார்க்கும் சீரியசான ஒரு நபராக வருகிறார்.

தாடி பாலாஜி & கோதண்டம் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். மற்றபடி காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. சிறந்த காமெடி நடிகர்களான இவர்களிடம் இருந்து நல்ல நடிப்பை வாங்கி இருக்கலாம்.

சில மொபைல்கள்.. சில கோப்ரா வீடியோக்கள் ஆகியவை இருந்தால் படம் எடுத்து விடலாம் என்று நினைப்பில் சில திரை உலகில் வந்துள்ளனர் என்பதை இந்த படம் பார்த்தபோது கண்டிப்பாக உறுதி செய்யலாம்.

ஒரு படம் எடுக்கும்போது அதற்கான திட்டமிடல் முக்கியமான ஒன்று. ஆனால் எதை வேண்டுமானாலும் பணம் எடுத்துவிடலாம் என்று நினைப்பில் சிலர் வந்து மக்களின் நேரத்தை வீணடித்துள்ளனர்.

ஒரு காட்சியில் என்னப்பா ரொம்ப TERRIFIC இருக்கு என்கிறார் ஒருவர்.. என்னது TRAFFIC அப்படி ஒன்றும் இல்லையே என்கிறது மற்ற கேரக்டர். இப்படி பல நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

டெக்னீஷியன்கள்..

முழுக்க முழுக்க பாழடைந்த பங்களாக்குள் லைட் இல்லாமல் மொபைல் வெளிச்சம் டார்ச் லைட் வெளிச்சம் ஆகியவற்றிலே படம் பிடித்துள்ளனர். அது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும் படம் முழுவதும் இதையே காண்பித்துக் கொண்டிருப்பது போர் அடிக்கிறது. அதை கவனித்திருக்கலாம் இயக்குனர் செந்தில்நாதன்.

சஞ்சய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபைசல் இசை அமைத்துள்ளார்.

நான்கு நண்பர்கள் அவர்களின் தோழிகள்.. என்று வழக்கமான பாதையை சிந்திக்காமல் சற்று மாறுபட்ட கதை களத்தில் இயக்குனர் சிந்தித்து இருப்பது நல்லது தான்.

ஆனால் அதை படமாக்கிய விதத்தில் நம் பொறுமை சோதித்து விட்டார் இயக்குனர் செந்தில்நாதன்.

ஆக இந்த சிவி 2.. சிறப்பு இல்லை

‘Sivi 2’ movie review and rating.

நிலை மறந்தவன் விமர்சனம் 4/5.; மதம் பிடிக்காத மனிதம்

நிலை மறந்தவன் விமர்சனம் 4/5.; மதம் பிடிக்காத மனிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன்
இயக்கம் – அன்வர் ரஷீத்
இசை – ஜேக்சன் விஜயன், வினாயகன், சுஷின் ஷியாம்

தயாரிப்பு – தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

முதலில் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். இந்த படம் ஒரு நேரடி தமிழ் படமாக உருவாகி இருந்தால் இங்கு பல பிரச்சினைகள் எழுந்திருக்கும். மலையாள சினிமாவில் இந்த படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.

ஒன்லைன்…

இந்திய திருநாட்டில் வேற்று மதத்தைச் சார்ந்தவர்களை தங்கள் மதத்திற்கு இழுக்கும் முயற்சியாக சில கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் அல்லேலூயா கூட்டத்தை தோலுரித்துக் காட்டும் படம் தான் இந்த நிலை மறந்தவன்.

மலையாளத்தில் பகத்பாசில் நடிப்பில் ‘டிரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் டப்பிங் படம் தான் இந்த நிலை மறந்தவன்.

சுதந்திர காலத்திலும் சுதந்திர அடைந்த பின்னும் ஒரு சில பிரிவினருக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வழங்கினர் அந்த பிரிவினர். அதனால் அந்த மதத்தின்பால் பற்றுக் கொண்டு ஏராளமானோர் அந்த மதத்துக்கு மாறிச் சென்றனர்.

ஆனால் அவை எல்லாம் ஒரு மாய பிம்பம் அல்லேலூயா என்ற பெயரில் சிலர் செய்யும் உலகளாவிய வியாபாரம் தான் இந்த படத்தின் கதைகளம். அந்த தில்லுமுல்லுகளை தோலுறுத்தி காட்டி இருக்கிறார் பாஸ்டர் JC என்ற பெயரில் நடித்திருக்கும் பகத் பாஸில்.

கதைக்களம்..

போலி பாதிரியார்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல் கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ்.

தன் குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்களிடம் சிக்கிக் கொள்கிறார் இந்து மதத்தைச் சேர்ந்தவரான பகத்.

ஒரு கட்டத்தில் கிறிஸ்துவ பாதிரியாராக போலியாக மாறி மதப் பிரசங்கம் செய்கிறார்.

பகத் செய்யும் பிரசங்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் உலகப் புகழ் பெறுகிறார் பகத்.

ஒரு கட்டத்தில் இவர் போலி என மக்களுக்குத் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

கிறித்துவ மதத்தில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த நிஜ வாழ்க்கையில் இஸ்லாமியரான ஃபகத்பாசிலைப் பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அன்வர் ரஷீத். மேலும் அவரை ஓர் இந்துவாக காட்டியிருக்கிறார்.

பகத் பாசிலும் தன் நடிப்பில் மிச்சம் எங்கும் வைக்கவில்லை. ஒரு அசல் பாஸ்டராகவே மாறி இருக்கிறார். அவர் சொல்லும் போதனைகள் கிறிஸ்துவ மத போதகர்களை தங்களுக்கு நினைவு படுத்தலாம். அதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறோம்.

நாயகியாக பகத் மனைவி நஸ்ரியாவே நடித்திருக்கிறார். இதுவரை பார்க்காத நஸ்ரியாவை இதில் காணலாம்.. சிகரெட் சரக்கு பாப் கட்டிங் என மாடராக் மங்கையாக வருகிறார் நஸ்ரியா.

தன் வழக்கமான குறும்புத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை ஈர்க்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் கவுதம்மேனன், செம்பன் வினோத் ஆகியோர் செம கார்ப்பரேட் வில்லன்கள் .

சில காட்சிகளில் வரும் விநாயகன் சற்று வித்தியாசமானவர் தான்.

டெக்னீஷியன்கள்…

இந்து மத சாமியார்களை பல படங்களில் கிண்டலடித்துள்ளனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.

ஆனால் கிறிஸ்துவ மதத்தில் மக்களை ஏமாற்றும் போலி மத போதகர்களைப் பற்றி ஒருவர் கூட படம் எடுக்கவில்லை.

மூக்குத்தி அம்மன் படத்தில் இது போல காட்சிகளை வைத்திருந்தார் ஆர் ஜே பாலாஜி. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதிர்ப்பு உருவானதால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டார். ஆனால் படம் முழுவதும் இந்து மத போதகர்களை அவர் கிண்டல் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமல்நீரத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், நிஜமாக நடக்கும் மதக்கூட்டங்களைப் போல காட்சிகளை அமைத்துள்ளனர்.

ஜாக்சன் விஜயன், சுஷின்ஷியாம் ஆகியோரின் இசையும் படத்துக்குப் பலம்.

மலையாள படம் என்றாலும் தமிழில் டப்பிங் செய்யும்போது தமிழுக்கான வசனங்களும் பவர் புல்லாகவே உள்ளது..

கடவுள் மீதும் மதங்கள் மீதும் அளவு கடந்து நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்.

ஆக இந்த நிலை மறந்தவன்.. மதம் பிடிக்காத மனிதம்

Nilai Marandhavan Movie Review in Tamil

தி வாரியர் விமர்சனம் 3/5.; ஆந்திரா (மசாலா) மீல்ஸ்

தி வாரியர் விமர்சனம் 3/5.; ஆந்திரா (மசாலா) மீல்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் வெளியானது தி வாரியர்.

இந்த படத்தில் கீர்த்தி செட்டி, ஆதி, நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

டாக்டர் ராம் தன் அம்மா நதியாவுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

ஒரு கட்டத்தில் வில்லன் ஆதியின் அடியாள்கள் ஒரு நபரை கொல்ல அவன் உயிரை காப்பாற்றுகிறார் டாக்டர் ராம்.

இதனால் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை.

டாக்டர் ராமுவை அடித்து ஊரை விட்டு விரட்டுகிறார் ஆதி. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு போலீசாக வருகிறார் ராம்.

தான் டாக்டராக இருந்தபோது தன்னால் செய்ய முடியாததை ஒரு போலீசாக செய்து காட்டுகிறார் ஆதி.

அதன் பின்னே என்ன ஆனது என்பது மீதி கதை.

கேரக்டர்கள்…

தெலுங்கு சினிமாவில் 20 படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது முதல் படம் என்பதால் அறிமுகம் ராம் என்று டைட்டில் கார்டு.

ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார் ராம்.. ஆனால் ரொமான்ஸ் காட்சியில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.. ஹீரோயின் கீர்த்தி ரொமான்டிக்கில் தெறிக்கவிட்டு உள்ளார். தன் அழகான க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் நம்மை கட்டி போடுகிறார்.

மிரட்டல் வில்லனாக அசத்தியிருக்கிறார் ஆதி. இனி தமிழில் இவருக்கு அதிக வில்லன் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

எம் குமரன் படத்தில் வந்து சென்ற நதியாவை போல இந்த படத்தில் வந்து செல்கிறார் நதியா.

ஜெயப்பிரகாஷ், அக்ஷரா கவுடா உள்ளிட்ட சில சில கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன.

டெக்னீஷியன்கள்..

நாலு ஃபைட்.. ஹீரோயினுடன் நாலு டூயட் அம்மா சென்டிமென்ட்.. ஆக்சன்.. என கமர்சியல் சினிமாவுக்கு உள்ள அத்தனையும் இந்த படத்தில் வைத்துள்ளார் லிங்குசாமி.

ஒரு கட்டத்தில் டாக்டராக இருந்தவர் திடீரென இரண்டு வருடங்கள் கழித்து போலீஸ் ட்ரையினிங் எடுத்து ஐபிஎஸ் ஆக வருவார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்போது தியேட்டரில் சிலர் சிரிப்பதை நாம் காண முடிகிறது.

ஆனால் ஒன்றை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.. கர்நாடகவில் ஐபிஎஸ் ஆக இருந்தவர் இன்று ஒரு தேசிய கட்சியில் தலைவராக இருக்கிறார்.. பல ரவுடிகள் அரசியல்வாதிகள் ஆகி இருக்கிறார்கள்.. பல நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.. இதுபோல பல மாற்றங்கள் இருக்கும்போது நாம் இதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் உண்மையான சில வாரியர்கள் டாக்டராகவும் காவலர்களாக இருந்துள்ளனர் என்பதை என்ட் கார்டில் போடுகிறார் லிங்குசாமி குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் லிங்கு இயக்கிய ரன் சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களின் கலவை இதில் தெரிகிறது.

ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களுக்கு ஸ்வீட்.

காதலர்களை கவரும் சில வசனங்களை வைத்துள்ளார். இரண்டு பைக்ல வேற வேற காபி ஷாப்புக்கு போக போறோமா.??

நதியாவிடம் கீர்த்தி.. ஆன்ட்டி இவங்க உங்க சிஸ்டரா.? என்று கேட்கும் போது இந்த மாதிரி நிறைய பிட்டு பார்த்தாச்சு.. என்கிறார்.

இதுபோல சின்ன சின்ன விஷயங்களை சரியாக வைத்துள்ளார் டைரக்டர். ஆனால் நதியாவை தமிழில் டப்பிங் பேச வைத்திருக்கலாம். அவருக்கு நடிகை ரோகினின் வாய்ஸ் டப்பிங் கொடுத்துள்ளார். அது செட் ஆகவில்லை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம்.. “விசில் சாங் சூப்பர் என்றால் புல்லட் சாங் சூப்பரோ சூப்பர்.. அந்த பாடலுக்கு ஆடாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் சிம்பு குரலில் வேற லெவல் சாங்.

படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து அமைத்துள்ளது.. இது ஒரு நேரடி தமிழ் படமாக ரிலீஸ் செய்துள்ளனர்.. ஆனால் ஹைதராபாத்தை காட்டிவிட்டு மதுரை என்பதெல்லாம் ஓவர் டோஸ்.

என்னதான் இது தமிழ் படமாக காட்டப்பட்டு இருந்தாலும் சில காட்சிகள் ஆந்திரா வாடையே அடிக்கிறது. ஒரு காட்சியில் வில்லன் குருவுக்கு பேனர் வைத்துள்ளனர். அது தமிழில் உள்ளது. ஆனால் சென்ட்ரல் ஜெயில் என்று காட்டும் போது அது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இது போன்ற விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிட்டார் டைரக்டர். லிங்குசாமி தமிழ் இயக்குனர் என்பதால் தமிழக ரசிகர்களுக்கான காட்சிகளை வைத்திருக்கலாம்.

சமீபத்தில் வெளியான புஷ்பா ஆர் ஆர் ஆர் கே ஜி எஃப் உள்ளிட்ட படங்கள் மற்ற மொழி படங்களாக இருந்தாலும் அது ஒரு தமிழ் படத்தை பார்த்த உணர்வு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக… தி வாரியார்… ஆந்திரா மசாலா மீல்ஸ்

The Warriorr movie review in Tamil

More Articles
Follows