ஜெ. பேபி பட விமர்சனம்

ஜெ. பேபி பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ. பேபி பட விமர்சனம்

தொலைந்து போன தன் அம்மாவை தேடிச்செல்லும் இரு மகன்களின் கதை தான் இந்த ஜெ. பேபி.

ஸ்டோரி…

ஊர்வசி (ஜெ. பேபி) இவருக்கு 5 பிள்ளைகள்.. 3 ஆண் மகன்கள்.. இரண்டு 2 பிள்ளைகள். இதில் மூத்தவர் மாறன்.. இளையவன் தினேஷ்.. இவர்கள் முகம் தெரிந்தவர்கள்.. மற்றவர்கள் புதுமுகங்கள்.. இவர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் தம்பி பிரச்சனையால் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் ஊர்வசி.

இதனால் பித்து பிடித்தது போல ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் செய்து கொண்டிருக்கிறார். திடீரென மற்ற வீடுகளை பூட்டி வருவது.. போலீசை மிரட்டுவது.. மற்றவர்களுக்கு வீட்டுக்கு வந்த தபால்களை எடுத்து வருவது என பிரச்சனைகளை செய்து கொண்டிருப்பதால் எங்கேயாவது தொலைந்துவிடு என பிள்ளைகள் திட்டுகின்றனர்.

இதனால் ஒரு கட்டத்தில் விரக்தியாகும் ஊர்வசி யாருக்கும் தெரியாமல் திடீரென கொல்கத்தா சென்று விடுகிறார். இதனையடுத்துக் கொல்கத்தாவில் உள்ள காவல்துறை மூலம் தமிழக காவல்துறைக்கு தகவல் வருகிறது.

இதனை எடுத்து மூர்த்தி என்பவர் மூலம் தங்கள் அம்மாவை தேடி கொல்கத்தா செல்கின்றனர் மாறன் & தினேஷ்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஊர்வசி – J. Baby
தினேஷ் – Sankar
மாறன் – Senthil
சேகர் நாராயணன் – Sakthi
மெலடி டார்கஸ் – Selvi.
தாட்சாயிணி – Ramani,
இஸ்மத் பானு – Sankar Wife,
சபீதா ராய் – Senthil Wife
மாயா ஸ்ரீ – Sakthi Wife

பேபி கேரக்டரை இதைவிட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என சவால் விட்டு நடிப்பில் நம்மை மிரள வைத்திருக்கிறார் ஊர்வசி.. அவருக்கே உரித்தான கலகலப்பான பேச்சு எடக்கு முடக்கான செய்கைகள் என நம்மை கவருகிறார்..

ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆகவும் நம்மை அழ வைத்து விடுகிறார்.. குழந்தைகளிடம் ஏதோ ஒன்றை வாங்கி கேட்கும் போது அதற்கு அவரின் பிள்ளைகள் ‘இல்லை..’ என்று சொல்லும்போது நீ குழந்தையா இருக்கும்போது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தேனே என்று சொல்லும் போது ஒரு தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.

மாறன் & தினேஷ் சண்டையிட்டு பேசிக் கொள்ளாமல் இருக்கும்போது ஒரு தாய் படும் வேதனைகளை கண் முன் நிறுத்துகிறார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு வேன் ஓட்டும் டிரைவராக தினேஷ். ஒரு யதார்த்தமான நடுத்தர குடும்ப மனிதனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். ஊர்வசி செய்த பிரச்சினைகளுக்காக ஒவ்வொருவரிடம் சண்டை போடும்போது மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..

பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் காமெடி செய்து வந்த மாறனை இதில் படம் முழுக்க அலையவிட்டு காமெடியும் செய்ய வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

இரவில் குடித்துவிட்டு உளறுவது பின்னர் காலையில் வேறு மாதிரி பேசுவது என மாறன் தன் பங்கு சிறப்பாக செய்திருக்கிறார்..

ஊர்வசியின் மற்ற பிள்ளைகள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

இப்படம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அவரின் பெரியம்மா பெயர் தான் பேபி. நிஜ வாழ்க்கையில் தொலைந்து போன பேபியை தேட ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.. அவர்தான் மூர்த்தி அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து அருமையான ஒரு நல்ல மனிதரை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஊர்வசியின் பேத்தியாக அபி நட்சத்திரா ஒரே காட்சியில் வந்து செல்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Producers : Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari.

Neelam Productions, Neelam Studios, Vistas Media.

இயக்கம் – சுரேஷ் மாரி
இசை – டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்,
எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி,
கலை – ராமு தங்கராஜ்,
பாடல்கள் – கபிலன் உமாதேவி , விவேக்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.. டோனி பிரிட்டோ இசையில் பாடல் வரிகளும் நம் கவனம் பெறுகின்றன..

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் சென்னை அழகும் கொல்கத்தா அழகு ரசிக்க வைக்கிறது.. எடிட்டர் கொஞ்சம் நீளத்தை வெட்டி இருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

பொதுவாக ரஞ்சித் படங்கள் என்றாலே சாதி விஷயம் மேலோங்கி நிற்கும்.. ஆனால் இதில் எதுவும் கலக்காமல் இருப்பது இந்த பேபிக்கு சிறப்பு.

நிஜ வாழ்க்கையை படமாக்கி இருப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் திரைக்கதை அமைத்து எடுத்த இயக்குனர் சுரேஷ் மாரியை பாராட்டலாம்.

நிச்சயம் இந்த படம் மகளிர் தினத்தில் அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

J Baby movie review

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பின்னணிப் பாடகர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட பிரதீப்குமார் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார்.

சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படம் மூலம் புகழ்பெற்ற பிரசாத் ராமர் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற இந்த படம் நாளை மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் வெளியாகிறது.

ஸ்டோரி…

மதுரையில் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவர் நாயகன். சோசியல் மீடியாவில் எந்தப் பெண் கிடைத்தாலும் அவளிடம் பேசி நெருக்கமாக பழகி பின்னர் அவளை கழட்டி விடுவது நாயகனின் வழக்கமான வேலை.

ஒரு கட்டத்தில் பேஸ்புக் மூலம் இவருக்கு அறிமுகம் ஆகிறார் மயிலாடுதுறை சேர்ந்த நாயகி. அவளுக்கு பர்த்டே வரவே அவளைக் காண பைக்கில் தன் நண்பனுடன் செல்கிறார் நாயகன்.

உனக்கு பிறந்தநாள் பரிசு தர நேரில் வந்திருக்கிறேன் என அவளை அழைத்துக் கொண்டு மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார்-க்கு பைக்கில் செல்கின்றனர்.

இருவரும் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கும்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தென்படுகின்றன. இதனிடையில் பைக் பிரச்சனை டிராபிக் போலீஸ் லைசன்ஸ் பிரச்சினை என உள்ளிட்டவைகளை சந்திக்கின்றனர்.

பிறந்தநாள் பரிசு நாயகி கேட்க திடீரென எதிர்பாராமல் முத்தமிட்டு விடுகிறார் நாயகன். இதனையடுத்து அவனை அடித்து விடுகிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் காதலிக்க தொடங்கினார்களா? அல்லது வழக்கம்போல கழட்டி விட்டாரா? நாயகனின் மனநிலையை புரிந்து கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

செந்தூர் பாண்டியன் நாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பிள்ளைகளை போலவே வருகின்றனர்.

எந்த பெண்ணையும் காம கண்ணோட்டத்துடன் பார்க்கும் நாயகன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார் செந்தூரப் பாண்டியன்.

அப்பா இல்லாத பெண் பிள்ளை.. வீட்டில் கண்டிப்பான போலீஸ் அம்மா ஆனாலும் ஊர் சுற்ற ஆசைப்படும் இளவயது பெண்ணின் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் நாயகி ப்ரீத்தி.

இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் காந்தி கலகலப்புக்கு உதவி இருக்கிறார்.. இளைஞர்கள் பேசிக் கொள்ளும் டபுள் மீனிங் காமநெடிகளை ஆங்காங்கே கேட்க முடிகிறது.. ஆனால் ஒரு சில எல்லை மீறிய வார்த்தைகளாக இருக்கிறது..

முக்கியமாக புகை காட்சிகளில் கீழே புகை பிடிப்பது குற்றம் என்ற வாசகங்கள் இடம்பெறவில்லை என்பது ஏன் தெரியவில்லை??

பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய அதே நேரத்தில் பிரதீப் குமார் இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்ற படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கும் இளசுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எனக் கூறப்பட்டாலும் ஒரு 20 நிமிட குறும்படத்தை இரண்டு மணி நேர திரைப்படம் ஆக ஏன் கொடுத்தார் என்பது தான் தெரியவில்லை.

ஒரு மெக்கானிக்கிடம் பைக்கை கொடுக்கும்போது அவர் அந்த வாகனத்தை சரி செய்யும் வரை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதுபோல ஹோட்டலில் சாப்பிடும் போது ஹோட்டலில் உணவு வைப்பது முதல் சாப்பிடுவது முதல் அவர்கள் செல்பி எடுப்பது முதல்ல என ஒவ்வொரு காட்சிகளையும் வைத்து நம்மை நோகடித்து விட்டார்கள்.

இப்படியாக ஒவ்வொரு காட்சிகளுக்கும் 10 15 நிமிடங்கள் எடுத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.

நம் வீட்டுப் பெண்களைப் போல மற்ற பெண்களையும் பார்க்க வேண்டும் என தத்துவத்தை சொன்னாலும் இறுதியாக நாயகனின் தங்கையும் தடம் மாறி செல்லும் காட்சிகளும் இடம் பெறுகிறது..

அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற தத்துவத்தை பேசினாலும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’ என்று ஏன் இந்த படத்திற்கு தலைப்பு வைத்தார் இயக்குனர் என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது.?

சரி இயக்குனர் தான் இப்படி என்றால் ஒளிப்பதிவாளரும் நம்மை நோகடித்து விட்டார்.. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒரே ஆங்கில் மட்டுமே படம் பிடித்திருக்கிறார்.

ஒரு வண்டி ஒரு இடத்திற்கு சென்று சேர ஐந்து நிமிடங்கள் ஆனால் அதை அப்படியே காட்டிக் கொண்டே இருக்கிறார்..

நல்லவேளை மதுரையில் இருந்து மயிலாடுதுறை செல்ல 8 மணி நேரம் ஆகும் காட்சியை 8 எபிசோடு எடுக்காமல் விட்டுவிட்டார் அதுவே பெரிய நன்றி..

சோசியல் மீடியா என்பது ஆபத்தானது அதில் மூழ்கிக் கிடக்கும் ஆண்கள் எந்த கண்ணோட்டத்துடன் நம்மை அணுகுகிறார்கள் என்பதை பெண்கள் கவனித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் தடுமாறி நம்மை தள்ளாட வைத்து விட்டார் இயக்குனர்.

Nalla Perai Vaanga Vendum Pillaigalae movie review

போர் பட விமர்சனம்.. காலேஜ் கலாட்டா

போர் பட விமர்சனம்.. காலேஜ் கலாட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போர் பட விமர்சனம்.. காலேஜ் கலாட்டா

ஸ்டோரி …

பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்).
யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்).

கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் அர்ஜுன் தாஸ் சீனியர்.. காளிதாஸ் ஜெயராம் அவரின் ஜூனியர்..

கல்லூரியில் சேர்வதற்கு முன்னேரே சிறுவயது தொடங்கி இவர்களின் பகை தொடர்ந்து வருகிறது.. அது கல்லூரியில் விஸ்வரூபம் எடுக்கிறது..

இவர்களின் தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு)..

இரு மாணவர்களின் மோதல் அவர்களின் நண்பர்களின் மோதல் என படம் முழுவதும் மோதல் மோதல்.. ஒரு கட்டத்தில் இவர்களின் இந்த கல்லூரியை எப்படி ஒரு ‘போர்’க்களமாக்குகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பல படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் சமீபத்தில் வெளியான ‘அநீதி’ படத்தில் நாயகனாக அவதாரம் எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் ‘போர்’ படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார்.. மிரட்டான பாத்திரம் தான்.. கதைக்கு ஏற்ப அவரது கேரக்டர் பில்டப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது குரல் சில இடங்களில் பலமாகவும் பலவீனமாகவும் தெரிகிறது..

கல்லூரி மாணவியரின் காதல் மன்னனாக காளிதாஸ்.. இவரது கேரக்டர் மீது எந்த பெண்ணும் காதலால் விழுந்து விடுவாள் என பில்டப் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவரும் ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.

சஞ்சனா நடராஜன், டி.ஜெ. பானு, நித்யஸ்ரீ ஆகியோரின் உண்டு.. இவர்கள் கதையின் நாயகிகளாக கல்லூரி மாணவியராக நடித்திருக்கின்றனர்..

அம்ருதா சீனிவாசன் கேரக்டரின் சிறப்பாக அமைந்திருக்கிறது ஆனால் அவருக்கான ஸ்பேஸ் அதிகப்படுத்தி இருக்கலாம்..

டெக்னீசியன்ஸ் …

ஆறு ஏழு எபிசோடுகளாக ஒரு வெப் தொடருக்கான கதையை ஒரு திரைப்படமாக கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்..

கல்லூரி படங்கள் எத்தனையோ பார்த்து இருப்போம் அதில் காதல் கலாட்டா முதல் என அனைத்தையும் இருக்கும் ஆனால் இதில் எந்த சுவாரசியம் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இசை ஒளிப்பதிவு கலை என ஒவ்வொரு துறைக்கும் 2-3 நபர்களை அமைத்து விட்டார். எனவே தான் இந்த குளறுபடிகள் காரணமோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர்கள்.. ஜிம்ஷி காலிட், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசாவை.

பின்னணி இசை -ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்,

கலை இயக்குநர்கள் : லால்குடி இளையராஜா, மானசி சாவரே.

எடிட்டர் – பிரியங்க் பிரேம்குமார்..

இயக்குனர் பிஜோய் நம்பியார்..

இன்று பள்ளிகளிலேயே போதை மருந்து கலாச்சாரம் வந்துவிட்டது.. எனவே கல்லூரியில் வைத்தாலும் தப்பில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு மருத்துவக் கல்லூரியில் மக்களின் ஆரோக்கியத்திற்காக படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு போதை மருந்து கலாச்சாரத்தை உருவாக்கி வைத்திருப்பது நோக்கம் என்ன.?

அர்ஜுன் தாசுக்கு மன பிரச்சனை.. காளிதாசுக்கு பாலியல் தொல்லை.. ஒரே ஹாஸ்டலில் பாய்ஸ் & கேர்ள்ஸ், தோழியின் தன் பாலின ஈர்ப்பு என என அநாகரிகமான காட்சிகளை வைத்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து விட்டார் இயக்குனர்..

இதனால் இந்த போர் படத்துடன் நம்மால் ஒன்றும் முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.!

Arjundas and Kalidas starrer Por Review

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ பட விமர்சனம்..

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ பட விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ பட விமர்சனம்..

கிளாசிக்கான காதல் படங்களை இயக்கி ரசிகர்களின் கைதட்டை பெற்றவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ். ஆனால் முதல்முறையாக முழுக்க முழுக்க ஆக்ஷனில் இறங்கி இந்த ஜோஷ்வா இமைப்போல் காக்க என்ற படத்தை இயக்கியிருக்கிறார்..

ஸ்டோரி…

நாயகன் வருண்.. இன்டர்நேஷனல் லெவலில் கூலிப்படையில் வேலை செய்கிறார்.. கொலை செய்வதே வேலை.

படத்தில் வக்கீல் வேடம் ஏற்று இருக்கும் நாயகி ராஹேவை ஒரு கட்டத்தில் சந்திக்கும் போது காதல் கொள்கிறார். இதனையடுத்து காதலை சொல்லி தன் வேலை பற்றியும் சொல்கிறார். இதனால் இருவரும் பிரச்சனை சந்தித்து பிரிகின்றனர்.

காதலுக்காக கேங்ஸ்டர் வேலையை விட்டுவிட்டு விஐபிகளுக்கு பாடிகாடாக மாறுகிறார் வருண்.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய ஒரு வழக்கில் வாதாட செல்கிறார் நாயகி ராஹே. இதனால் இவருக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது.

எனவே நாயகனின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் ராஹே. அதன் பிறகு என்ன நடந்தது.? வழக்கில் நாயகன் எப்படி உதவினார்.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

படம் தொடங்கிய 10 – 15 நிமிடங்களில் நாயகன் நாயகியின் காதல் அவர்களுக்கு எழும் பிரச்சனைகள் என அனைத்தையும் முடித்து கதை ஓட்டத்திற்கு கிளம்பிவிட்டார் இயக்குனர் கௌதம்.

காதல் ரூட்டில் இருந்து மாறி ஆக்க்ஷனுக்கு நாயகனையும் அழைத்துச் சென்று இருக்கிறார் இயக்குனர் கௌதம்.. இயக்குனரின் முயற்சிக்கு கொஞ்சமும் சலிக்காமல் அதிகபட்ச உழைப்பை கொடுத்திருக்கிறார் ஹீரோ வருண்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷனில் அதிரடி காட்டி இருக்கிறார்.

நாயகி ராஹே.. நடிப்பிலும் அழகிலும் நம்மை கவர்ந்து விடுகிறார்.. இவருக்கும் அப்பாவுக்கும் உள்ள எமோஷன் காட்சி நிச்சயம் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும்.

ஹீரோவுக்கு ப்ராஜெக்ட் கொடுக்கும் கேரக்டரில் டிவி நடிகை டிடி திவ்யதர்ஷினி நடித்து கைதட்டல் பெறுகிறார்.

பல படங்களில் ஹீரோவாக பார்த்து கிருஷ்ணாவை இதில் வித்தியாசம் காட்டி வில்லத்தனம் செய்ய வைத்துள்ளார். நெகட்டிவ் கேரக்டரில் கூட ட்விஸ்ட் வைத்திருப்பது சூப்பர்..

இவர்களுடன் மன்சூர் அலிகான் மற்றும் விசித்திரா ஆகியோரும் உண்டு.

டெக்னீசியன்ஸ்…

கௌதம் படம் என்றாலே ரகுமான் & ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் இசையை கேட்டு ரசித்து நாம் இதில் ஆக்சன்காகவே இசை அமைப்பாளர் கார்த்திக்கை உள்ளே நுழைத்திருக்கிறார். அவரும் பின்னணி இசையில் தன் பங்களிப்பை 100% கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் பாராட்டுக்குரியவர்கள்..

ரொமான்டிக் ரூட்டில் இருந்து ஆக்ஷன் ரூட்டிற்கு மாறி இருக்கும் கௌதம் மேனன் நம்மை கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை முக்கியமாக பத்துக்கும் மேற்பட்ட ஆக்ஷன் காட்சிகளை வைத்து அசைத்து விட்டார்.

முக்கியமாக கடற்கரை வீடு ஃபைட் மற்றும் 12 பேருடன் மோதும் ஃபைட் இரண்டும் வேற லெவல்..

ஆக.. ஜோஷ்வா.. கண்களை இமைக்க விடாமல் ரசிக்க வைக்கும்.

அதோ முகம் விமர்சனம்

அதோ முகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதர்கள் தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் கோர முகத்தை சில நேரம் வெளிப்படுத்துவார்கள்.. இந்த கோர முகத்தை காட்டும் முகம் தான் ‘அதோ முகம்’.

ஸ்டோரி

ஊட்டியில் ஒரு தனி பங்களாவில் தன் மனைவி சைதன்யாவுடன் வசிக்கிறார் சித்தார்த்.

மனைவிக்கு தெரியாமல் அவளை சந்தோஷப்படுத்த நினைத்து கணவன் செய்த ஒரு விஷயம் அவனுக்கும் அவள் மனைவிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது.. அது என்ன.?

தனது மனைவியின் நடவடிக்கைகளை செயல்களை கண்காணிக்க அவளுக்கே தெரியாமல் அவளது மொபைல் போனில் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்கிறார் கணவன்.. இதனால் இவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அவன் சந்திக்கும் பிரச்சனைகள் சவால்கள் சந்தேகங்கள் என்ன என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

முதலில் அப்பாவியாக காணப்படுகிறார் இந்த கணவன் நாயகன் சித்தார்த்.. முதலில் மனைவியை நேசிப்பது அவளின் செய்கைகளை ரசிப்பது என மெல்ல மெல்ல நகரும் கதை பின்னர் மனைவியை வெறுப்பது அவள் மீது எரிச்சலை காட்டுவது என வெரைட்டி காட்டியிருக்கிறார் சித்தார்த்.

நாயகி சைதன்யா இந்த கேரக்டருக்கு அச்சு அசலாக பொருந்திவிட்டார்.. ஒரு கட்டத்தில் அவரது அபாய முகம் காட்டும் போது அடடா நமக்கு ஆபத்து என்ற எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் மிரள வைத்திருக்கிறார்..

சித்தார்த்தின் நண்பனாகவும், முதலாளியாகவும் வரும் ஆனந்த் நாக் மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார் உள்ளிட்டோரும் உண்டு.. தங்கள் கேரக்டர் கதைக்கு ஏற்ப இவர்கள் பயணித்துள்ளனர்..

எவரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கேரக்டரில் அருண் பாண்டியன்.. நாயகன் சித்தார்த்துக்கு நம்பிக்கை நம்பிக்(கை) கொடுத்து கதைக்கு உதவி இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

அதோ முகத்தின் இரண்டாம் பாகத்திற்காகவே இந்த படத்தில் கொஞ்சம் பாகத்தை மிச்சம் வைத்து விட்டார் இயக்குனர் சுனில் தேவ்.. அதை இந்த பாகத்தில் முடித்திருந்தால் இன்னும் திரைக்கதைக்கு சுவாரசியம் கூடியிருக்கும்..

மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், சரண் ராகவனின் பின்னணி இசையும் உறுத்தாமல் இருக்கிறது.. இரண்டும் நேர்த்தி..

அருண் விஜயகுமாரின் ஒளிப்பதிவில் அதோ முகம் பிரகாசிக்கிறது.. படத்தொகுப்பு – விஷ்ணு விஜயன்.. கலை இயக்குனர் – சரவணா அபிராமன் இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்..

இயக்குனர் சுனில் தேவ் படத்தை இயக்கியிருக்கிறார்.. எந்த ஒரு குடும்பம் ஆனாலும், எந்த ஒரு உறவு ஆனாலும் நாம் மிக ஆழமாக சென்றால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ரீல் பெட்டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது..

அதோ முகம்

Atho mugam movie review and rating in tamil

GLASSMATES கிளாஸ்மேட்ஸ் பட விமர்சனம்..

GLASSMATES கிளாஸ்மேட்ஸ் பட விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்றாக படித்தால் கிளாஸ்மேட்ஸ்.. Class
ஒன்றாக குடித்தால் கிளாஸ்மேட்ஸ்.. Glass

ஸ்டோரி…

நாயகன் அங்கையற்கண்ணனம் அவரது மாமா சரவண சக்தியும் பெரும் குடிமகன்கள்.. இவர்கள் குடிக்காத நிமிடம் நொடி இல்லை என்னும் அளவுக்கு குடியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

ஆனால் இவரது மனைவிகளோ மாமா மாமா என்று பாசம் காட்டும் குடும்பத்து பெண்மணிகள்..

ஒரு கட்டத்தில் இவர்களது குடியினால் இந்த ஊரும் இவர்களது நண்பர்களும் எப்படி எல்லாம் சீரழிகிறார்கள்.. இதனால் இவர்களுக்கு என்ன பாதிப்பு. என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

அங்கையற்கண்ணன்… தயாரிப்பாளரே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்திருக்கிறார்.?! சாரி நடித்திருக்கிறார்..

நாயகனின் மாமனாக இயக்குனர் சரவணசக்தி. அவரும் பல படங்களில் குடிகாரன் வேடம் ஏற்று அசத்தியிருக்கிறார். இதில் எக்ஸ்ட்ராவா குடித்திருக்கிறார்.

24 மணி நேரமும் குடியில் மூழ்கிக் கிடக்கும் ஒரு குடும்பத் தலைவனை நிச்சயமாக பெண்கள் திட்டி தீர்த்து இருப்பார்கள்.. ஆனால் இதில் பாசம் மழை பொழிவதும் அவர்களுக்கு பணம் கொடுப்பதும் சாத்தியமா?

மறைந்த நடிகர் மயில்சாமிக்கும் இதில் குடிகாரர் வேடம் தான். ஆனால் கொஞ்சம் நல்லவராக இருந்து திடீரென குடிகாரனாக மாறி விடுகிறார்..

இதில் ‘நல்லவன் குடித்தால் குழந்தை.. கெட்டவன் குடித்தால் கொலைகாரன் என்ற தத்துவமும் பேசுகிறார்..

கிளாஸ்மேட்ஸ்

குடிகாரனை திருத்தும் டாக்டராக டி எம் கார்த்திக் நடித்திருக்கிறார். இவரையும் குடிகாரனாக மாற்றி விடுகிறார்கள் கதையின் நாயகர்கள்..

சாம்ஸ்.. இவர் வெளிநாட்டில் ஒழுங்காக வேலை பார்த்து தன் தங்கைகளை திருமணம் முடித்த நல்ல மகனாக இந்தியா திரும்பி வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தையும் இவரையும் குடிமகனாக மாற்றி விடுகிறார்கள்.. இவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கிறது..

அபிநட்சத்திரா கேரக்டர்.. நார்மலாக ஆரம்பித்து பின்னர் அதிர்ச்சி அளிக்கிறது.. குடிகார தந்தையை இழந்த பின்னர் இவர் எடுக்கும் முடிவு குடிகாரர்களுக்கு செருப்படி..

நாயகனுக்கு மனைவியாக பிரணா.. அப்பாவி அன்பான மனைவி.. தன்னைக் கணவன் குடித்துவிட்டு அடித்தாலும் குடும்ப கௌரவத்திற்காக வாழும் பெண்களின் நிலையை இவரது கேரக்டர் காட்டுகிறது.

சரவணசக்திக்கு மனைவியாக நடித்த நடிகை வசீகரிக்கிறார்..கணவன் தினமும் குடித்தால் மனைவி தடம் மாறக்கூடும் என்ற மனநிலையை இவரது கேரக்டர் காட்டுகிறது.

டெக்னீசியன்ஸ் …

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சுமார் ரகமே.. இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.

வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்கள் குடிகாரன்களை ஆட்டம் போட வைக்கும்.. மது பிரியர்களை மயக்கும் மது பாடலாக அமைந்திருக்கிறது.

பொதுவாகவே தற்போது தமிழ் சினிமாவில் மது சீன்கள் TASMAC அதிகமாகவே காணப்படுகின்றன.. இந்த படத்திற்கு கிளாஸ்மேட்ஸ் என பெயர் வைத்துவிட்டார். அது இல்லாத காட்சிகளை நாம் எதிர்பார்க்க முடியுமா? படத்தில் 95% மதுவை காட்டிவிட்டு 5% அட்வைஸ் செய்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

குடிகாரர்கள் இல்லை என்றால் அரசு இல்லை.. அரசுக்கு வருமானம் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்..

ஆக தன்னையும் அழித்துவிட்டு தன் நண்பர்களையும் குடும்பத்தையும் அழிக்கும் இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் உங்க விருப்பம்..

கிளாஸ்மேட்ஸ்

GLASSMATES movie review and rating in tamil

More Articles
Follows