கடாவர் விமர்சனம் 3.5/5.; கவனிக்கவும்

கடாவர் விமர்சனம் 3.5/5.; கவனிக்கவும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘கடாவர்’. இதன் மூலம் முதன்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை அமலாபால்.

அறிமுக இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமலா பால், ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஒன்லைன்…

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ‘கடாவர்’. அதன் பொருள், மருத்துவர்கள் செயல்முறை படிப்பிற்காக பயன்படுத்தும் உயிரற்ற மனித உடல்.

கதைக்களம்…

ஒரு நாள் காருக்குள் எரிந்த நிலையில் உள்ள ஒரு சடலத்தை கண்டுபிடிக்கின்றனர் போலீசார்.

அந்த கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் ஹரீஷ் உத்தமன் விசாரிக்கிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா (அமலா) இணைகிறார். எப்படி கண்டுபிடித்தனர் என்பதே கதை.

அமலாபால் (Forensic pathology) தடயவியல் நோயியலில் சிறந்த மருத்துவராகவும், கிரிமினாலஜி படித்த போலீஸாகவும் காட்டப்படுகிறார்.

கேரக்டர்கள்…

வித்தியாசமான தோற்றம் வித்தியாசமான நடிப்பு என அசத்தியுள்ளார் அமலாபால்.. வழக்கமான நாயகி டூயட் என்று இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ஒரு தயாரிப்பாளராகவும் எடுக்க முன் வந்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.

இதுவரை இல்லாத.. இதுவரை கொடுக்காத நடிப்பை கொடுத்துள்ளார் அதுல்யா ரவி. சின்ன வேடம் என்றாலும் அதற்காக மெனக்கெட்டுள்ளார்.

அதுபோலவே ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ரித்விகா, என எல்லோருமே தங்கள் நடிப்பில் கச்சிதம். அதுவும் ரித்விகாவுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொண்ட வினோத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

டெக்னீஷியன்கள்…

அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தம்.

மருத்தவ கல்லூரியில் மனித உடல்களை வைத்து நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தது போல உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது.

ஆனால் மார்ச்சுவரியிலேயே நீண்ட நேரம் அமலா இருப்பதால் அவர் அங்கேயே சாப்பிடுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆரம்பம் முதல் இறுதிவரை பல ட்விஸ்ட்டுகளுடன் இந்த சஸ்பென்ஸ் கதை தொடர்கிறது. எனவே சஸ்பென்ஸ், த்ரில்லர் வகை பட விரும்பிகளை இந்த படம் கவரும்.

Cadaver movie review and rating in tamil

எமோஜி EMOJI விமர்சனம் 3.75/5.; Darling Devika.; Lovable Lust.!

எமோஜி EMOJI விமர்சனம் 3.75/5.; Darling Devika.; Lovable Lust.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி மற்றும் பலர் நடிக்க ஷென் எஸ்.ரெங்கசாமி இயக்கியுள்ளார் . ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரித்துள்ளார். ஆஹா ஒரிஜினல் ஓடிடி வெளியிடுகிறது.

ஒன்லைன்…

காதல் இல்லையேல் சாதல்… அது ஒரு காலம்.. இப்போ 2K KIDS காலம்.. ஒரு காதல் இல்லையேல் அடுத்த காதல். இதுபோன்ற காதல்களை கூறும் காம உணர்ச்சிகரமான படைப்பே இந்த எமோஜி. படம் 18+

கதைக்களம்…

மானசா & மகத் இருவரும் காதலர்கள். லவ்வோ லவ்… அப்படியொரு லவ்.. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக மகத்தை பிரிகிறார். இதற்கு நாமே ஒத்துக் கொள்ளும் வகையில் ஒரு காரணத்தை சொல்கிறார்.

இவர்களின் எதிர் ப்ளாட்டில் தேவிகா & காதலன். அவர்களை போல லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர். இதற்கும் நியாயமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

பின்னர் அடுத்த காதல்.. அதாவது.. இரண்டு ஜோடிகளில் பிரிந்த ஒரு காதலனும் பிரிந்த ஒரு காதலியும் ஒன்று சேர்கிறார்கள். மகத் & தேவிகா காதலிக்க தொடங்குகின்றனர். இந்த காதல் என்ன ஆனது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் மகத். யதார்த்த நாயகனாக வலம் வருகிறார். நிறைய காட்சிகளில் சிம்புவை நினைவுப் படுத்துகிறார். அவரின் குரலும் உடல் மொழியும் சிம்பு போலவே பல காட்சிகளில் உள்ளது.

ஒருவேளை இந்த படத்தை சிம்பு நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு 100 சதவீதம் பொருத்தமாக இருந்திருப்பார். இந்த படம் வேற லெவலில் பேசப்பட்டு இருக்கும்.

தேவிகா & மானசா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ரொமான்ஸிலும் சரி கிளாமரிலும் சரி அடடடா என்ன ஒரு அழகான நடிப்பை கொடுத்துள்ளனர் என்று கூறலாம்.

தேவிகா ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார். அழகான இதழ்கள்.. கண்கள்… க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ்… என வெளுத்து கட்டிவிட்டார். நிற்கும்போது காதலன் தோளின் மேல் தன் காலை தூக்கி வைப்பது.. திடீரென ஓடி வந்து இடுப்பில் ஏறி கொள்வது.. என ரொமான்டிக் வெரைட்டி காட்டி நம்மை மிரட்டி இருக்கிறார் தேவிகா..

இவர்களுடன் சின்ன சின்ன கேரக்டர்களில் வரும் பெற்றோர்கள் & நண்பர்கள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்களின் நடிப்பும் பேசப்படும் வகையில் சிறப்பாக உள்ளது.

டெக்னிஷியன்கள்…

இந்தக் காதல்.. அந்தக் காதல்.. இவர்களின் காமம்.. அவர்கள் காமம் என கலந்து காட்டப்பட்டிருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் உள்ள காதலர்களின் முடிவையே காட்சிகளில் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

படிப்பு முடித்தவுடன் கை நிறைய வருமானம் வருவதால் இன்றைய இளைஞர்கள் எடுக்கும் திடீர் திடீர் முடிவுகளே இதற்கான காரணம். ஒரு வேலையை உதறிவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது போல ஒரு காதலை உதறிவிட்டு அடுத்த காதலை தேட ஆரம்பிக்கின்றனர்.

இது ஓ டி டிக்கு தயாரான படம் என்றாலும் ஒரு சினிமாவுக்கு நிகராக காட்சி அமைப்புகளும் பாடல் காட்சிகளும் படத்தின் ஒளிப்பதிவும் ஈர்க்கின்றன.

சென் ரங்கசாமி் இயக்கியுள்ளார்.

DIRECTOR
SEN.S. Rangasamy சசன் .S.ரங்கசாமி
PRODUCER
A.M Sampath Kumar A.M. சம்பத்குமார்
DOP
Jalandhar Vasan ஜலந்தர் வாசன்
MUSIC DIRECTOR
Sanath Bharadwaj

7வது எபிசோடில் காதலர்கள் எடுக்கும் முடிவு விபரீதம் என்றாலும் அதற்கான காரணம் தெளிவாக காட்டப்படவில்லை. பொருத்தமான காரணமாகவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏழு எபிசோடுகள் இருக்கின்றன. ஆனால் இரண்டு எபிசோடுகள் படத்தின் நீளத்தை அதிகரித்துள்ளன. எடிட்டர் கொஞ்சம் வெட்டி இருக்கலாம்.

ஆக இந்த எமோஜி… Darling Devika.; Lovable Lust.!

Emoji web series review and rating in Tamil

லால் சிங் சத்தா விமர்சனம்..3.75/5.; புயல் தேசத்தில் வெண் சிறகு

லால் சிங் சத்தா விமர்சனம்..3.75/5.; புயல் தேசத்தில் வெண் சிறகு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஹாலிவுட்டில் க்ளாசிக் திரைப்படம் என புகழப்படும் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரபூர்வ தழுவல். ஆனாலும் சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றப்பட்டுள்ளது.

கதைக்களம்..

ஒரு நீண்ட தாடியுடன் முதிர்ச்சியான ஒருவரைப் போல ஒரு ரயிலில் பயணிக்கிறார் அமீர்கான்.. அங்குள்ள சகப் பயணிகளிடம் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் பகிர்ந்து கொள்கிறார்.

தன் குழந்தை பருவம் முதல் தான் தொழிலதிபரான காலம் வரை அவர் சொல்லும் ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு நினைவுகளும் நம்மை முகம் மலரச் செய்கின்றன.

கேரக்டர்கள்…

அமீர்கான்.. அவரின் பள்ளி வாழ்க்கை.. ராணுவ வாழ்க்கை.. சந்தித்த நண்பர்கள்.. உயிருக்கு உயிரான காதலி.. தன் பாசமான அம்மா.. தன் நண்பர்கள்… என தன் கதைக்கேற்ப அவரையும் நம்முடன் அழைத்துச் செல்கிறார்.

கிட்டத்தட்ட 15 வயது முதல் ஒரு 45 வயது வரை தன் நடிப்பையும் தன் உடலையும் அதற்கு ஏற்ப வடிவமைத்து ஒரு மிகச்சிறந்த நடிகராக தன்னை உருவகப்படுத்தி உள்ளார் அமீர்கான். ஆனால், ‘பிகே’ படத்தின் உடல்மொழி அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. அதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு நடிகனுக்கு உடல் மொழி எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்ந்து நடித்துக் காட்டி இருக்கிறார்.

நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று. ஆனால் இவரின் கிராமத்து வாழ்க்கை.. அதற்கான வீர மரண மரியாதை ஆகிய காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

லெஃப்டினென்ட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அசத்தல். அதுபோல நடிகர் ஷாருக்கானின் கெஸ்ட் ரோல் அப்ளாஸ்.

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் போற்றத்தக்கது. முக்கியமாக அமீர்கான் கரீனா இருவரின் குழந்தை பருவ நட்பு முதல் அவர்களின் முதிர்ச்சியான காலம் வரை காட்டப்படும் அவர்களின் அழகான அன்பும் காதலும் பயணிப்பது அழகு.

ஓடு லால் ஓடு… என்ற காட்சிகளும் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ள சின்ன சின்ன நகைச்சுவைகளும் நம்மை ரசிக்க வைக்கின்றன.

டெக்னீசியன்கள்…

அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கியுள்ளார்.

நாம் குழந்தையாக இருக்கும் போது சில வன்முறைகளை நமக்கு பெற்றோர்கள் சொல்லும் போது அது வைரஸ் என்று சொல்லுவர். அது ஒரு குழந்தையின் மனதில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்சிகளில் அழகாக சொல்லி உள்ளனர்.

மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டுள்ளனர்.

பிரித்தமின் பின்னனி இசையும் பாடல்களும் சிறப்பு. எமோஷனல் காட்சிகளில் மனதை வருடும் இசையை கொடுத்துள்ளார்.

ஒரு ஹீரோவை படம் முழுக்க லூசு பைத்தியம் என்கின்றனர்.. ஆனால் அதை சிரித்தவாறு அவர் கடந்து செல்வதை.. இங்கு உள்ள தமிழ் ஹீரோக்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

படத்தில் இறுதியாக காட்டப்படும் வெண் சிறகு போல நம்மை அழகாக வருடி செல்கிறது இந்த லால் சிங் சத்தா.

Laal Singh Chaddha Stills

Laal Singh Chaddha movie review and rating in tamil

ரஞ்சித் வெங்கட்பிரபு சிம்புதேவன் ராஜேஷ் இயக்கத்தில் VICTIM விக்டிம் விமர்சனம்

ரஞ்சித் வெங்கட்பிரபு சிம்புதேவன் ராஜேஷ் இயக்கத்தில் VICTIM விக்டிம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

நான்கு கதைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘விக்டிம்’ என்ற ஆந்தாலஜி படம்.

இது ஆகஸ்ட் 5-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த 4 கதைகளை ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் உருவாகியுள்ளனர்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளனர்.

இதில், அமலாபால், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பிரசன்னா, தம்பி ராமையா, கலையரசன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ், ‘மிரேஜ்’ என்ற கதையை இயக்கியுள்ளார்.

‘தம்மம்’ என்ற கதையை ரஞ்சித் இயக்கியுள்ளார். ‘கன்ஃபெஷன்’ என்ற கதையை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு.

இயக்குனர் சிம்பு தேவன் ‘கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்’ என்ற கதையை இயக்கியுள்ளார்.

ரஞ்சித்தின் ‘தம்மம்’

குருசோம சுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி, அர்ஜீன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

அவரது திரைப்படங்களைப் போல இதிலும் தனது வழக்கமான சாதி பிரிவினை & நுணுக்கமான அரசியல் காட்சிகளை உணர்வுப்பூர்வமான வசனங்களால் இயக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில்… புத்தர் சிலையில் ஏறி நிற்கும் தன் மகள் பேபி தாரணியிடம் ‘சாமி சிலையில ஏறி நிக்காத’ என கூறுவார் குரு.

அதற்கு, ‘சாமியே இல்லன்னு புத்தர் சொல்லிருக்காரு. அவர போய் சாமின்னு சொல்ற’ என்பார் மகள்.. இப்படியாக காட்சி நகர்கிறது.

கலையரசன் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். சாதி என்று வந்துவிட்டால் மக்களிடம் பழிவாங்கும் எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

ஒருவனின் உயிரை விட சாதியை பெரிதாக நினைக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக எடுத்துரைத்திருக்கிறார் ரஞ்சித்.

முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவை பாராட்ட வேண்டும்.. அந்த சிறுமி மீன்பிடிக்கும் காட்சிகளும்… கலையரசன் கொல்லப்படும் காட்சிகளும்… தண்ணீரில் கலக்கும் ரத்தமும் என காட்சிகளை சிறப்பாக காட்டியிருக்கின்றனர். தென்மாவின் இசையும் சிறப்பு.

————

எம்.ராஜேஷ் இயக்கிய ‘மிரேஜ்’ (Mirrage):

நட்டி & பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.

ஒரு ரிசார்ட்டுக்கு வரும் பிரியா அங்கு வேலைக்காரன் நட்டியை சந்திக்கிறார்.

அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகளால் பிரியா பாதிக்கப்படுகிறார். அது தான் படத்தின் கதை.

பிரியா பவானி சங்கரை விட நட்டி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். லோக்கல் பாஷையிலும் உடல் மொழியிலும் சூப்பர்.

——–

சிம்பு தேவனின் ‘கொட்டை பாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்’

கரோனா லாக்டவுன் காலத்தில் தனது வேலையை தக்க வைக்க நினைக்கிறார் பத்திரிகையாளர்.

எனவே ஒரு தவம் செய்து ஒரு சித்தரை வரவழைக்கிறார். அவர்தான் நாசர்.

நாசர், தம்பி ராமையா, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட மூவர் மட்டுமே முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

தம்பி ராமையா சிறந்த நடிகர் என்றாலும் சில நேரங்களில் ஓவர் ஆக்டிங். நாசர் கச்சிதம். 3 – 4 என நிறைய க்ளைமாக்ஸ் ஆப்சன் கொடுத்துள்ளனர்.

வெங்கட் பிரபுவின் கன்ஃபெஷன் (Confession):

வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில் அமலாபால், பிரசன்னா இருவரும் நடித்துள்ளனர்.

பெரிய அபார்ட்மென்டில் தனியா வசிக்கிறார் அமலாபால். இவரை கொல்ல திட்டமிடுகிறார் பிரசன்னா.

அதிலிருந்து அமலா எப்படி மீண்டார்? பிரசன்னா அவரை கொன்றாரா.? என்பது தான் கதை.

இருவரும் நடிப்பில் கச்சிதம். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

ஆக… இதில் ரஞ்சித் இயக்கிய தம்மம் படம் முதன்மை பெறுகிறது.

VICTIM movie review and rating in Tamil

லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் விமர்சனம் 3/5.; அந்த ஆறு மணி நேர இரவில்…

லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் விமர்சனம் 3/5.; அந்த ஆறு மணி நேர இரவில்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

2016-ல் வந்த ‘டோன்ட் ப்ரீத்’ பட சாயலுடன் வெளிவந்திருக்கும் படம் இது.

பார்வையற்ற ஒருவரின் வீட்டில் நுழையும் கொள்ளையர்கள் ஆறு மணி நேரத்திற்குள் கொள்ளையடித்து சென்றார்களா? என்பது தான் கதை.

கதைக்களம்…

கடற்படையில் பணியாற்றிய ஷான் (பரத்) பார்வையிழந்தவர். ஒரு தனிமையான சூழலில் பங்களா வீட்டில் தனியாக வசிக்கிறார்.

ஒரு நாள் இரவு பரத் வீட்டில் கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் நுழைகிறது. பரத் பார்வையற்றவர் என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

எனவே திருடர்கள் கொள்ளை அடித்தார்களா? பரத்திடம் சிக்கிக் கொண்டார்களா? அந்த ஆறு மணி நேரத்திற்குள் அந்த வீட்டில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நல்ல உடல் கட்டுடன் கம்பீரமாக இருக்கிறார் பரத். சிக்ஸ் பேக் உடலை காட்டி ரசிகர்களையும் திருடர்களையும் மிரள வைக்கிறார்.

தன் வீட்டில் திருடர்கள் இருப்பதை உணர்ந்த பரத் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு விருந்து.

முதல் பாதியில் திருடர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது கதை.

எலிசபெத் , ரேச்சல் என 2 பெயர்களுடன் விவியாவின் நடிப்பு சிறப்பு. இவருடன் அனூப் காலித், அடில் இப்ராஹிம், அனு மோகன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

ஒரே வீட்டில் ஒரே இரவில் அதுவும் ஆறு மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் சவுண்ட் காட்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது.. அருண் ராமவர்மாவின் சவுண்ட் மிக்சிங்கும் கவனம் பெறுகிறது.

கைலாஸ் மேனன் பின்னணி இசையும், சினு சித்தார்த் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு திகில். வெறும் இருட்டு தான் என்றாலும் அதற்கும் தனித்தனி லைட்டிங் கொடுத்து நம்மை போரடிக்காமல் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சில சில சறுக்கல்கள் இருந்தாலும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் டைரக்டர் சுனிஷ்குமார்.

Last Six hours movie review and rating

MOVIE NAME : LAST SIX HOURS

ARTISTS : Bharath | Anoop Khalid | Viviya Santh

Directed by Sunish Kumar

Produced by Anoop Khalid

Music: Kailas Menon

DOP: Sinu Sidharth

Edit: Praveen Prabhakar

Action : Dinesh Kasi

Sound Design : Arun Rama Varma

Bharath as Shaan
Anoop Khalid as Luke
Viviya Santh as Rachel
Adil Ibrahim as Rahul
Anu mohan as Shameer

வட்டகரா விமர்சனம் 3.25/5..; ரசிகர்களை வட்டமடிக்கும்

வட்டகரா விமர்சனம் 3.25/5..; ரசிகர்களை வட்டமடிக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காசு துட்டு மணி என நிறைய பெயர்கள் பணத்திற்கு உண்டு.. கிட்டத்தட்ட 1000 – 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டகரா என்ற ஒரு பெயரும் பணத்திற்கு உண்டு.

அழிந்துபோன அந்த தமிழ் சொல்லை இந்தப் படத்தின் மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாரதி கண்ணன்

கதைக்களம்…

(1) தன் பேத்தியின் சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் ஒரு நபர்.. (2) ஒரு விபத்தில் கண்களை இழந்த அங்காடித்தெரு மகேஷ்… (3) காதலியின் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு இளைஞன்.. (4) விவசாயத்திற்காக உயிரை விட்ட ஒரு தந்தையின் மகன்.. என நான்கு நபர்கள் ஒரு காரில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்திக்கின்றன.

அவர்கள் அதில் பயணிக்கும் போது எல்லாருக்கும் பணம் உடனடி தேவையாக இருப்பதை உணர்கின்றனர். எனவே அறிமுகமில்லாத இவர்கள் இதுவரை செய்யாத கொள்ளையடிக்கும் திட்டத்தை போடுகின்றனர்.

அதில் ஜெயித்தார்களா என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய், டாக்டர் சீனிவாசன், சம்பத் ராம், கஜராஜ், ஆர்எஸ். சிவாஜி, போராளி திலீபன், பெஞ்சமின் ஆகியோர் நடித்துள்ளனர்.

எவருமே மிகை இல்லாத நடிப்பை தந்துள்ளனர். பெஞ்சமின் மட்டும் ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். அதை குறைத்து இருக்கலாம்.

பிளாஷ்பேக் காட்சியில் வரும் மலர் என்ற பெண்ணும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

தாஜ்நூர் இசையில் 2 பாடல்கள் அருமை… உன்னிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன் என்ற காதல் பாடல் ரசிகர்களை கவரும்.

அம்மாவுக்கு நிறைய பாடல்கள் இருக்கிறது. அப்பாவுக்கு பாடல் இல்லையே என்ற ஏங்கியவர்களுக்கு அப்பா பாடல் ஒரு வரப்பிரசாதம். தந்தைக்கு ஒரு கோயில் இல்லை என்ற பாடல் வரிகள் சிறப்பு.

பாடல்களை சினேகன் & இளையகம்பன் நிமேஷ். எழுதியுள்ளனர்.

கே.பாரதி கண்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். பணத்தேவை என்பது எல்லாருக்கும் ஒரு அவசியமான ஒன்று. அதை சிலர் நல்ல வழியிலும் சில தீய வழியிலும் சம்பாதிக்கின்றனர்.

அதை மையமாக வைத்து கதையை பயணிக்க வைத்திருப்பது சிறப்பு. சிறிய பட்ஜெட் படம் என்பதால் படத்தின் தரம் குறைவாக உள்ளது.

ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்.

நால்வர் சந்திப்பது அவர்கள் பின்னணி என சில காட்சிகள் சற்று சோர்வை தருகின்றன. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ஒரு எதிர்பாராத ஒன்றுதான்.

ஆக இந்த ‘வட்டகரா’.. ரசிகர்களை வட்டமடிக்கும்.

வட்டகரா

Vattagara movie review and rating

More Articles
Follows