தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தினேஷ் கலைச்செல்வன் இயக்கிய ‘இராக்கதன்’. சென்னை, திருச்சி, காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
‘இராக்கதன் என்றால் அரக்கன் என்று பொருள். இரா என்பது இரவையும், கதன் என்பது ஒரு ஆணையும் குறிக்கிறது. இது இரவு நேர ஆண் என்ற மற்றொரு பொருளையும் உள்ளடக்கியது.
கதைக்களம்…
படத்தின் நாயகன் விக்னேஷ் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் மாடலிங் துறையில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மாடலிங் மட்டுமே தனது லட்சியம் என அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மாடலிங் மாட்டவே இல்லை.
ஒரு கட்டத்தில் ரியாஸ்கானின் பார்வை விக்னேஷ் மீது படவே மாடலிங் துறைக்கு அழைத்து பணக்கார பெண்களுக்கு ஆண் விபச்சாரனாக செயல்பட வைக்கிறார்.
ஒரு பக்கம் பணம் கொட்ட கொட்ட பெண்களின் பழக்கமும் அதிகரிக்கிறது. அதன் பிறகு விக்னேஷ் வாழ்க்கையில் என்ன நடந்தது.? விக்னேஷ் ஏங்கிய மாடல் இதுதானா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நடிகர்கள் : வம்சி கிருஷ்ணா, ரியாஸ்கான், தினேஷ் கலைச்செல்வன், விக்னேஷ் பாஸ்கர், காயத்ரி ரெமா, சாம்ஸ், நிழல்கள் ரவி, சஞ்சனா சிங், ஆல்பிரெட் நடித்துள்ளனர்.
விசாரணை அதிகாரியாக வம்சி கிருஷ்ணா. ஆனால் இவர் போலீஸ் போலவே இல்லை. நீண்ட தாடி தலைமுடி வைத்து மாடலிங் மேனாகவே காட்சியளிக்கிறார்.
ரியாஸ்கானுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கான கேரக்டரில் ரியாஸ்கான் ரிச் கான்.
சிக்ஸ் பேக் உடன் வருகிறார் விக்னேஷ். ஆனால் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம். எப்போதும் ஏதோ சிந்தனையில் இருப்பதாகவே அவரது முகம் இருக்கிறது.
ஆண்களுக்கு அலையும் பணக்கார சபல பெண்ணாக சஞ்சனா சிங். காயத்ரி ரெமா ஓரிரு காட்சிகளில் நாயகி என்ற பெயரில் வருகிறார்.
டெக்னீஷியன்கள்…
இப்பட பாடல்களை சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளனர். பாபு கிறிஸ்டியன், தினேஷ் கலைச்செல்வன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
மானஸ் பாபு ஒளிப்பதிவு செய்ய, ஏ.பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார்.
மருதம் புரொடக்ஷனுக்காக ராணி ஹென்றி சாமுவேலுடன் இணைந்து காரைக்கால் எம்.ஏ.ஜி.பாஸ்கர் தயாரித்துள்ளார்.
இந்த சமூகத்தில் கலாச்சார சீரழிவு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். இவரும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
பொதுவாகவே பெண்கள் விபச்சாரத்தை பற்றி பேசும் லட்சக்கணக்கான படங்களில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கும் ஆண்களுக்கு விரிக்கப்படும் பணக்கார பெண்களின் காம வலை தான் இந்த இராக்கதன்.
ராக்கத்தன் என்ற வார்த்தை ஒலித்து கொஞ்சம் இரைச்சலையும் கொடுத்துள்ளது. இன்னும் கூடுதலாக மெனக்கெட்டு திரைக்கதையை அமைத்து இருந்தால் இந்த ராக்கதன் ராட்சசன் ஆக வளர்ந்து நின்று இருப்பான்.
ஆக.. பெண்களின் காம வலையில் மாடலிங் மச்சான்.
Raakadhan movie review and rating in tamil