தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
படத்தின் தலைப்பே சொல்கிறது.. இது ஒரு அரசர் காலத்து பின்னணியில் உருவான கதையாக இருக்கும் என்பது.. உங்கள் கணிப்பு சரிதான்.!
ஸ்டோரி…
900+ வருடங்களுக்கு முன்பு நடந்த கதை…
செஞ்சி பகுதியில் நந்திவர்மன் கட்டிய சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்து விட்டது.
அந்தக் கோயிலில் புதையல் இருப்பதாக தகவல் தொல்லியல் துறைக்கு தெரிகிறது தெரிகிறது. எனவே தொல்லியல் துறை சார்பாக ஆராய்ச்சி செய்ய முடிவெடுக்கின்றனர்.
அதன்படி தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, அதிகாரி போஸ் வெங்கட் ஆகியோர் தலைமையில் சில மாணவ மாணவிகள் ஆராய்ச்சிக்கு அந்த பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது சில மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதனை எடுத்து ஆராய்ச்சியை நிறுத்த சொல்லி அந்த ஊர் பகுதி மக்கள் போராட்டம் செய்கின்றனர்.
தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு ஆதரவாகவும் அதே சமயம் விசாரணைக்காகவும் மீசை ராஜேந்திரன் & சுரேஷ் ரவி ஆகியோர் தலைமையிலான போலீஸ் விசாரணையில் இறங்குகிறது.
மர்மமான முறையில் கொல்லப்பட்டது நோக்கம் என்ன? கொன்றவர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
நாயகனாக சுரேஷ் ரவி போலீஸ் கேரக்டருக்கு ஃபிட்டாக இருக்கிறார். ஆனால் எப்போதுமே போலீஸ் யூனிபார்ம் போல விரைப்பாக இருப்பதால் ரொமான்ஸ் பெரிதாக ஒட்டவில்லை.
நாயகியாக ஆஷா வெங்கடேஷ்.. பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்து வேளையில் சிறப்பு. இவரது காஸ்டியூம் இவருக்கு கூடுதல் கவனத்தை கொடுக்கிறது.
பெரும்பாலும் காட்சிகள் அனைத்தும் போஸ் வெங்கட் சுற்றிய நகர்கிறது.
நிழல்கள் ரவி & கஜராஜ் ஆகியோரின் கதாபாத்திரம் எதிர்பாராத ட்விஸ்ட்.. முதலில் சாதுவாக தோன்றும் இவர்களின் நடிப்பு வேறு பரிமாணத்தை காட்டுகிறது.
மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் ஆகியோரும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
குடிகாரனாக வரும் கோதண்டம் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். போலீசாக வரும் ஜே எஸ் கே கோபி கம்பீரமான தோற்றத்தில் ஈர்க்கிறார்.
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து.. தொல்லியல் துறை ஆராய்ச்சி அதிலிருந்து கண்டெடுக்கப்படும் புதையல்.. நடராஜர் சிலை.. உள்ளிட்ட காட்சிகள் தத்துரூபமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.
ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பின்னணி இசை கூடுதல் கவனத்தை பெறுகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பலம். யார் என்று தெரியாமல் இருட்டுக்குள் சுரேஷ் ரவி மோதும் சண்டை காட்சிகள் ரியல் ஃபைட் போல உள்ளது.
நந்திவர்மனின் மாய வாள், கிராபிக்ஸ் காட்சி காட்சிகள் கலை இயக்குனரின் கைவண்ணத்தை காட்டுகிறது. இதற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை பல காட்சிகளில் நம்மால் உணர முடிகிறது.
திரைக்கதை அமைத்த விதத்தைப் போலவே நடிகர்கள் தேர்விலும் இயக்குனர் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன்… நம் முன்னோர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட நிறைய புதையல் மர்மங்கள் நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. அதனை பலருக்கும் அறியப்படுத்தும் நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் பெருமாள் வரதன்.
தமிழக கோயில் வரலாற்றை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் படம் தான் நந்திவர்மன்.
Nandhivarman movie review and rating in tamil