First on Net மண்ணாங்கட்டி கூஜா… மார்கெட் ராஜா MBBS விமர்சனம் 1.75/5

First on Net மண்ணாங்கட்டி கூஜா… மார்கெட் ராஜா MBBS விமர்சனம் 1.75/5

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வின்னர் ஆரவ் ஹீரோ நடித்துள்ள படம் இது. கமல், அஜித், விக்ரம் உள்ளிட்டோருக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சரண் இயக்கியிருக்கிறார். படம் எப்படி என்பதை பார்ப்போமா..?

வசூல் ராஜா MBBS கதை சாயலில் கொஞ்சம் பேய் கதையை சேர்த்து மார்கெட் ராஜா கதையை கொடுத்துள்ளனர்.

இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் வெறுமனே குறை சொல்வது ஈசி. ஆனால் என்ன குறை என்பதை சொல்லாமல் இருப்பது சரியல்லவே. எனவே இந்த விமர்சனத்தை தொடர்கிறோம்.

கதைக்களம்…

ஆரவ் பெரம்பூர் பகுதியின் தாதா. அதாவது அவர் தான் மார்கெட் ராஜா. இவரது அம்மா ராதிகா. இவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவர்.

காவ்யா தப்பார் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். காவ்யாவை செகன்ட் ஹீரோ லவ் செய்கிறார். ஆனால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்பதால் அவரை லவ் செய்ய மறுக்கிறார்.

ஆனால் அந்த காலேஜ்க்கு ஒரு முறை அதிரடியாக வரும் ஆரவ்வை காதலிக்கிறார் காவ்யா.

ஒரு கட்டத்தில் செகன்ட் ஹீரோ தன் காதலியை கவர்ந்திழுக்க தனியாக சுடுகாட்டுக்கு செல்கிறார். அப்போது ஆரவ்வும் அங்கு செல்கிறார்.

அங்கு ஆரவ்வுக்கு வைக்கப்படும் துப்பாக்கி குறி தவறி செகன்ட் ஹீரோ மீது பாய்கிறது. அவர் இறந்த அடுத்த நிமிடமே அந்த ஆன்மா ஆரவ்வுக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் ஒரு தாதா கோழையாக மாறிவிடுகிறார். கோழையாக மாறிய பின்னர் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆரவ் ராதிகா நிகிஷா

கேரக்டரகள்…

முதல் படமே ஆரவ்வுக்கு இப்படியொரு ஆரம்பமா? என்பதே நம் வருத்தம். நல்ல உயரம், நல்ல உடல்வாகு, ஸ்மார்ட் ஹீரோ என பல அம்சங்கள் இருந்தும் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டார்.

ராதிகா எவ்வளவு திறமையான நடிகை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மகனிடம் அடி வாங்குவது முதல் சுருட்டு பிடிப்பது வரை ராதிகாவை ரசிக்க முடியவில்லை.

சமீபத்தில் ராதிகாவுக்கு நடிகவேள் செல்வி என்ற பட்டத்தை கொடுத்தார்கள். இந்த படத்தை பார்த்தால் அதை திருப்பி வாங்கிடுவார்கள் போல.

படத்தில் நிகிஷா பட்டேல் மற்றும் காவ்யா தப்பார் என 2 ஹீரோயின்கள் உள்ளனர். கவர்ச்சியிலும் அழகிலும் ஓகே. ஆனால் நடிக்க ஸ்கோப் இல்லை.

இவர்களுடன் நாசர், மதன்பாபு உள்ளிட்டோரும் உண்டு. இதில் நாசர் கேரக்டர் பெயர் சிவாஜி. மதன்பாபு பெயர் நாகேஷ். இரண்டு சிறந்த நடிகர்களின் பெயர்களையும் சிதைத்துவிட்டனர்.

சாயாஜி சிண்டே GOD FATHER என்பதால் அவரை கடவுள் அப்பா என்று வேறு அழைத்து நம்மை கடுப்பேத்திவிட்டனர்.

சாம்ஸ் உடன் இணைந்துள்ள ஆதித்யா வில்லன் ரோலுக்கு செட்டாவார். ஆனால் அவரை காமெடியாக்கி விட்டனர். சாம்ஸ் சில இடங்களில் ஓகே.

டெரர் வில்லன் பிரதீப் ராவத். அவரின் கேரக்டரையும் வீணடித்துவிட்டனர். மற்றொரு அம்மா கேரக்டரில் வரும் ரோகிணி கேரக்டரிலும் வலுவில்லை.

மார்கெட் ராஜா

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்திற்கு இசையமைத்திருப்பவர் சைமன் கே. கிங். இசையும் பின்னணி இசையும் நம்மை கவரவில்லை. தாதா அண்ணா என்ற பாடல் பாதி பேச்சிலும் பாதி ஏனோ தானோ என செல்கிறது.

ஆரவ் திடீரென மாஸ் காட்டும்போது இரைச்சலை கொடுத்துள்ளார். ஒரு டான் படத்திற்கு இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

ஒளிப்பதிவை கேவி. குகன் செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தால் படத்தை பார்க்க முடிகிறது.

கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். சாரி செய்திருக்கிறாரா? என்பது தான் தெரியவில்லை.

தேவதர்ஷினி முனீஷ்காந்த் காட்சிகள் செம போர். பேய் இருக்குதா? என்பதை தெரிந்துக் கொள்ள நீச்சல் அடிக்கும்போது ஒரு கண்ணாடி அணிந்திருப்போம் இல்லையா? அதுபோல் மேஜிக் லென்ஸ் போட்டுக் கொள்கிறார்கள். அது போட்டால் பேய் தெரியுமா? தாங்கலடா சாமி. இதில் பேய் ஓட்ட சாமியார்கள் கூட்டம் வேற வருகிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

சரண் சார் என்னாச்சு? ஆள்மாறாட்டம் செய்வது எல்லாம் ஓகே தான். ஒரே போல உருவம் இருப்பவர்களை ஆள் மாறாட்டம் செய்யலாம்.

ஆனால் ஆரவ் அந்த மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்க்கும் கொஞ்சம் கூட ஒற்றுமை இல்லை. ஆனால் அவர் இடத்தில் ஆரவ் தேர்வு எழுதுவது பின்னர் படிப்பு சான்றிதழ் வாங்குவது எல்லாம் நம் காதில் வாழைப்பூவை வைப்பதற்கு சமம்.

ஆசை நிறைவேறாமல் அலையும் ஒரு ஆன்மா லிப் கிஸ் அடித்தவுடன் அந்த ஆவி சென்று ஒரிஜினல் ஆரவ் வரும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

ஆரவ் ஒரு டான்? டாக்டரா? பேய்? என டைரக்டரே கன்ப்யூஸ் ஆகி ஏதோ சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

ஆக இந்த மார்கெட் ராஜா MBBS.. மண்ணாங்கட்டி கூஜா

Market Raja MBBS review rating

Comments are closed.