தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
தெலுங்கில் ‘ஏஜன்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற ஒரு ஹிட் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.
காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களை கண்டுபிடிக்கிறார் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம். இவர் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் ஆவார். என்ன கண்டுபிடித்தார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே கதைக்கரு.
கதைக்களம்…
குரு சோமசுந்தரத்தின் 2வது (ரகசிய) துணைவியின் மகன் சந்தானம். சிறு வயது முதலே தனது நுண்ணறிவால் எந்தவொரு விஷயத்தையும் துப்பு துலக்கி விடுவார் சந்தானம்.
ஒரு கட்டத்தில் தன் தாயை இழக்கிறார். அப்போது சொத்து பிரச்சனைக்காக தனது பூர்விக கிராமத்திற்கு வருகிறார் சந்தானம். அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
அந்த சமயத்தில் ஊரில் நிறைய மரணங்கள் நிகழ்கிறது. இவை எல்லாமே ரயில் தண்டவாளத்தின் அருகில் நடக்கிறது. ஆனால் பிரேத பரிசோதனையில் இவை இயற்கை மரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இயற்கை மரணம் என்றால் தண்டவாளத்தின் அருகே இந்த சடலங்கள் கிடப்பதன் மர்மம் என்ன? என விசாரணையில் இறங்குகிறார் தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் சந்தானம்.
காவல்துறையை விட இவர் அதிவேகமாக இருப்பதால் காவல்துறைக்கும் இவருக்கு மோதல் முற்றுகிறது.
இறுதியில் என்ன ஆனது? சந்தானம் விசாரணையுல் என்ன கண்டுபிடித்தார்? சடலங்கள் அங்கே கிடப்பதன் மர்மம் என்ன? அதன் நோக்கம் என்ன? அதுவே இந்த படத்தின் புலன்விசாரணை.
கேரக்டர்கள்…
சந்தானம் என்றாலே காமெடி மணக்கும். ஆனால் குளு குளு படத்தை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திலும் சீரியஸாகவே காணப்படுகிறார்.
மொத்த படத்தையும் சந்தானம் ஒருவரே தாங்கி நிற்கிறார். சில இடங்களில் கவுண்டர் காமெடியில் சிரிக்க வைக்கிறார். தன் தாயை இழந்த பின் காரில் பயணிக்கும் போது கண்கலங்க வைக்கிறார்.
நாயகி ரியா சுமன்.. சும்மாவே இருந்திருக்கலாம். சந்தானத்துடனும் ஒட்டவில்லை.. அவரது பேச்சும் இந்த படத்திற்கு ஒட்டவில்லை.
சரி சந்தானம் காமெடி செய்யவில்லை. படத்தில் புகழ் & ரெடின் கிங்ஸ்லி உள்ளனர். இவர்களாவது காமெடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தால்.. ‘சந்தானமே செய்யவில்லை நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? என நினைத்து விட்டார்களோ.?
முனீஸ்காந்த், ராமதாஸ், ஆதிரா, குரு சோமசுந்தரம், இந்துமதி அகியோரும் உண்டு.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் மெனக்கெட்டு உள்ளனர்.
பெரும்பாலான காட்சிகளை இரவிலேயே அதுவும் குறைந்த லைட்டிங்கில் (வெளிச்சத்தில்) ஒளிப்பதிவு செய்துள்ளனர். துப்பறியும் படம் என்பதால் அப்படி வைத்திருக்கிறார்களா?
தயாரிப்பு – லபிரின்ந்த் பிலிம்ஸ்
இயக்கம் – மனோஜ் பீதா.
வழக்கமான சந்தானத்தை காட்டக்கூடாது ரசிகர்களுக்கு மாறுபட்ட சந்தானத்தின் நடிப்பை காட்ட இயக்குனர் மனோஜ் முயற்சித்துள்ளார். அதில் பாஸ் மார்க் பெறுகிறார்.
இடைவேளை வரை படத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. மெகா சீரியல் போல உள்ளது. இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுத்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தம் இல்லை. பிணங்களைக் கடத்திச் செல்வதன் நோக்கம் என்ன என்பதை சரியாக விளக்கவில்லை.. ஆக.. ஏஜென்ட் கண்ணாயிரம்.. ஏமாற்றம் ஆயிரம்..
Agent kannayiram movie review and rating in tamil