குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

நடிகர்கள் : பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ராமதாஸ், ஆனந்த்ராஜ், சத்யன், மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, மன்சூர் அலிகான், மதுசுதன் மற்றும் பலர்
இயக்கம் : கல்யாண்
இசை : விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த்குமார்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: கோட்டப்பாடி ராஜேஷ்

கதைக்களம்…

குலேபகாவலியூர் எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சுதந்திர இந்தியாவுக்கு முன் ஒரு பெரியவர் புதையலை மறைத்து வைக்கிறார்.

அந்த ரகசியத்தை அவரது மகன் அவரின் மகனிடம் (அதாவது பேரன்) தெரிவிக்கிறார்.

எனவே அவரது மச்சான் ஆனந்த்ராஜ் அந்த புதையலை எடுக்க, முனிஸ்காந்தை அனுப்புகிறார்.

மேலும் சிலை திருட்டில் கில்லாடியான பிரபுதேவா மற்றும் ஹன்சிகாவையும் மிரட்டி, அவருடன் செல்ல வைக்கிறார்.

இவர்கள் போகும்போது கார் பிரேக் டவுன் ஆக, ரேவதி லிப்ட் கொடுக்கிறார்.

அப்போது அவருக்கும் புதையல் ரகசியம் தெரிய நால்வரும் பங்கு போட நினைக்கின்றனர்.

இதனிடையில் ஹன்சிகாவின் தங்கை வில்லன் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்.

அதன்பின் என்ன ஆனது? தங்கையை காப்பாற்றினாரா? புதையலை அடைந்தார்களா? என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கொடுக்கிறார் டைரக்டர் கல்யாண்.

DTUjadMVoBAK4Hw

கேரக்டர்கள்…

படத்தின் ஹீரோ பிரபுதேவா என்றாலும் கதையின் ஹீரோ ரேவதிதான். படத்தின் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்யும் ரேவதி க்ளைமாக்ஸ் வரை படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறார்.

மண்வாசனை, கன்னிராசியில் அமைதியாக வந்த ரேவதி இதில் சென்ட்ச்சூரி அடித்திருக்கிறார். அவரை எப்படி இந்த கேரக்டருக்கு டைரக்டர் செல்க்ட் செய்தார் என்றே தெரியவில்லை. அதகளம் பண்ணிட்டார்.

பிரபுதேவா டான்ஸ், பைட் என கவர்கிறார். இவரின் அறிமுக காட்சி ரசிக்க வைக்கிறது.

வழக்கமான நாயகியாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட கேரக்டரில் ஹன்சிகா.

ஹன்சிகாவை நிர்வாண பூஜை செய்ய சொல்லும்போது.. அருகில் இருக்கும் ஆனந்த்ராஜ், அந்த பெண் ஆல்ரெடி அப்படிதான்ப்பா இருக்கு என சொல்லும்போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.

யோகிபாபுவின் காமெடி காட்சிகளில் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அதுவும் அந்த இடைவேளை டைட்டில் கார்ட் சூப்பர்.

இவருடன் மொட்ட ராஜேந்திரன் செய்யும் அலப்பரை தாங்க முடியாது. சித்தி என ரேவதியை கொஞ்சுவதும் அம்மா என்று எலும்புக் கூட்டை கொஞ்சுவதும் செம அப்ளாஸ்.

ரேவதி எதை சொன்னாலும் நம்பும் நபர்களாக முனிஷ்காந்த் மற்றும் சத்யன்.

என்னப்பா நீயும் ஜட்டி போட்டுட்டு வந்திருக்க என தன் மனசாட்சியிடம் சத்யன் கேட்கும் காட்சிகள், அவர் எல்லாரிடமும் ஏமாறும் காட்சிகள் படத்தின் ஹைலைட்ஸ்.

மன்சூர் அலிகான், மதுசுதன் ஆகியோரின் நடிப்பும் பேசும்படி உள்ளது.

DTTbB3QV4AA6wz4

தொழில்நுட்ப கலைஞர்கள்..

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்து. வின்டேஜ் சீன் முதல் ரோடு சேஸிங் காட்சிகள் வரை அனைத்தும் அருமை.

பிரபுதேவா மற்றும் ஹன்சிகாவின் டூயட் இரண்டு பாடல்களில் பாடலை விட அந்த பேக்ட்ராப் காட்சிகள் அருமை. கலை இயக்குனருக்கு கைகொடுத்து பாராட்டலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

கலகலப்பாக படம் கொடுக்க வேண்டும் என கலைஞர்களிடம் கன்டிஷன் போட்டு படத்தை இயக்கியுள்ளார் கல்யாண்.

நிறைய நடிகர்கள் இருக்கிறார்களே என பயந்தாலும் எல்லாரையும் பயன்படுத்தி ரசிக்கும்படி வேலை வாங்கியிருக்கிறார்.

குலேபகாவலி… குதூகலமாய் சிரிக்கலாம்.

Comments are closed.

Related News

வருடத்திற்கு எத்தனை பண்டிகை வந்தாலும் பெரும்பாலான…
...Read More