First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

நடிகர்கள்: அக்சய் கிருஷ்ணன், ராதிகா, சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், அஞ்சலி உபசனா மற்றும் பலர்.
ஒளிப்பதிவு & இயக்கம் – தினேஷ் பாபு
எடிட்டர் – அபிலாஷ் பாலசந்திரன்
இசை – ஹரி பிரசாத்
சொந்த உண்மை கதை மற்றும் தயாரிப்பு – பி.என். பலராம்
பிஆர்ஓ – விஜய்முரளி மற்றும் சக்தி சரவணன்
வெளியீடு – ஜெனிஷ்

கதைக்களம்..

நாயகன் அக்சய் மற்றும் நாயகி ராதிகா இருவரும் ஒரே காலேஜில் படிக்கின்றனர். இருவருக்கும் காதலும் மலர்கிறது.

நாயகன் வீட்டில் இந்த காதலுக்கு ஆதரவு இருந்தாலும், நாயகி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

ஒரு நாள் காலேஜ் கல்சுரல் புரோம்கிராம்கள் நடக்கும் போது நாயகன் மயங்கி விழுகிறான்.

பின்னர் தான் அவனுக்கு இதயத்தை சுற்றி ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது. கட்டியை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் கடவுள் குருவாயூரப்பனையே நம்பி உள்ளனர் பெற்றோர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது.

அது என்ன? ஹீரோ உயிர் பிழைத்தானா? அது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்..

இதுவொரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கமர்சியல் எதையும் கலக்காமல் அப்படியே சொல்ல முயற்சித்துள்ளனர்.

நாயகன் தான் அந்த நோயில் இருந்து குணமானவர். எனவே அவரையே நாயகனாக்கி அவரது அப்பா இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கில் வெளியிடுகிறார்.

தன் மகன் பிழைக்க காரணமான குருவாயூரப்பன் மகிமை இந்த நாட்டுக்கு தெரிய வேண்டும் என்பதால் இதை தயாரித்துள்ளார். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.

நாயகன் நாயகி இருவரும் அழகான தேர்வு. காதல் மற்றும் நடனத்தில் அசத்துகின்றனர். நாயகியின் கண்களும் கூந்தலும் நம்மை ஈர்க்கின்றன. இவர்களின் நண்பர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

சாய்குமார் மற்றும் சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் பெற்றோர்களாக நடித்துள்ளனர். ஒரு பிள்ளைக்கு தீராத நோய் இருந்தால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை தங்கள் உணர்வுகளில் கொடுத்துள்ளனர்.

ஓரிரு பாடல்கள் ரசிகர்களை கவரும். பின்னணி இசை ஒரு சில இடங்களில் பேசப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதி முழுவதும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சென்றதால் அதில் நாடகத்தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே கமர்சியல் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுக்கும்.

தன் மகனின் உயிரை காப்பாற்றிய கடவுள் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இந்த படத்தை எடுத்துள்ளார் பலராம். இன்னும் சிறப்பாக திரைக்கதை அமைத்து எடுத்திருந்தால் எல்லாரையும் இந்த கிருஷ்ணன் கவர்ந்திருப்பார்.

குருவாயூரப்பன் மகிமையை உணர இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஆக மொத்தம்.. கிருஷ்ணம்.. குருவாயூரப்பன் மகிமை

Krishnam review rating

Comments are closed.