7 நாட்கள் விமர்சனம்
Published by: Rajesh G on June 2, 2017

நடிகர்கள் : சக்திவாசு, கணேஷ் வெங்கட்ராம், நிகிஷா பட்டேல், பிரபு, எம்எஸ் பாஸ்கர், அங்கனா ராய், நாசர், சின்னி ஜெயந்த், தேவதர்ஷினி, ராஜுவ் கோவிந்த பிள்ளை மற்றும் பலர்.
இயக்கம் : கௌதம் விஆர்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : எம்எஸ் பிரபு
எடிட்டர்: ராஜீ
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : கார்த்திக் மற்றும் கார்த்திகேயன்
கதைக்களம்…
சக்தி, நிகிஷா படேல் இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். எதற்கெடுத்தாலும் மோதிக் கொள்ளும் கேரக்டர்கள் இவர்களுடையது.
ரேடியோவில் ஆர்.ஜே-வாக சக்தி பணிபுரிய, டிவியில் ரிப்போர்ட்டராக இருக்கிறார் நிகிஷா. இந்த டிவி நிறுவனத்தைதான் பிரபு நிர்வகிக்கிறார்.
பிரபுவுக்கு இருமகன்கள். ராஜுவ் கோவிந்த பிள்ளை சொந்த மகன். கணேஷ் வெங்கட்ராம் வளர்ப்பு மகன். இதில் கணேஷ் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்.
இவர்களை சுற்றிதான் கதை நகருகிறது.
பிரபு மகன் ராஜீவ் ஒரு ப்ளேபாய். இவரால் சில பெண்கள் கொல்லப்பட, இதனைத் தொடர்ந்து பிரபுவுக்கு ஒரு மிரட்டல் போன்கால் வருகிறது.
அதற்கு ஆதாரமான ஒரு டிவிடி நிகிஷாவிடமும் மற்றும் ஒரு கடிதம் சக்திவிடமும் அவர்களுக்கு அறியாமலே வந்து சேர்கிறது.
இதனை அறிந்துக் கொண்ட வில்லன் கும்பல் இவர்களைத் துரத்துகிறது. இது தெரியாமல் ஓடும் சக்தி மற்றும் நிகிஷா என்ன செய்தார்கள்? அந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு அவர்கள் கொலையாளியை கண்டு பிடித்தார்களா? என்பதே இதன் க்ளைமாக்ஸ்.
கேரக்டர்கள்..
சக்தி தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். எதற்காக ஓடுகிறோம், யார் அவர்கள்? என தெரியாமல் குழம்பி நிற்பது ரசிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.
கணேஷ் வெங்கட்ராம் மிடுக்கான சைபர் கிரைம் ஆபிசர். படம் முழுவதும் சால்ட் அண்ட் பெப்பர் லுக், கோட் சூட் துப்பாக்கி என வித்தியாசமான கெட்டப்பில் ரசிக்க வைக்கிறார்.
நிகிஷா பட்டேல் நடிப்பில் நல்ல தேர்ச்சி. ரொமான்ஸ் காட்சிகள் இல்லாதது பெரும் குறை. இவர் மேக்-அப்பையும் உடலையும் கொஞ்சம் குறைத்தால் ரசிகர்களை இன்னும் அதிகம் கவரலாம்.
அங்கனா ராய் மற்றும் ராஜுவ் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
பிரபு, நாசர், எம்எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்கள் இருந்தாலும் அவர்களது கேரக்டர்களின் அழுத்தமில்லை.
படத்தில் நாய் கேரக்டர் வாய்ஸ் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாகவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஒரு த்ரில்லர் கதையை தன்னால் முடிந்த வரை சிறப்பாக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் டைரக்டர் கவுதம். வி.ஆர்.
க்ளைமாக்ஸில் நிறைய ட்விஸ்ட் செய்திருப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த ட்விஸ்ட்க்கு முன்பே படத்தின் நீளத்தை குறைத்தால் இந்த 7 நாட்கள் ரசிகர்கள் கவனத்தை அதிகம் பெறும்.
`7 நாட்கள்’ ஒரு வார த்ரில்லர்
-
Movie:
7 நாட்கள்
Tags:
7 Naatkal movie rating, 7 Naatkal movie review, 7 Naatkal review rating, 7 Naatkal stills, 7 நாட்கள் ஒரு வாரம், 7 நாட்கள் கணேஷ் வெங்கட்ராம், 7 நாட்கள் சக்தி நிகிஷா பட்டேல், 7 நாட்கள் திரை விமர்சனம், 7 நாட்கள் படம் எப்படி, 7 நாட்கள் விமர்சனம், அங்கனா ராய், எம்எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், சக்திவாசு, சின்னி ஜெயந்த், தேவதர்ஷினி, நாசர், நிகிஷா பட்டேல், பிரபு, ராஜுவ் கோவிந்த பிள்ளை