மன்னர் வகையறா விமர்சனம்

மன்னர் வகையறா விமர்சனம்

நடிகர்கள் : விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி மற்றும் பலர்
இயக்கம் : பூபதிபாண்டியன்
இசை : ஜாக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ. : KSK செல்வா
தயாரிப்பு: A3V சினிமாஸ் (விமல்)

Mannar Vagaiyara Movie Stills 042

கதைக்களம்…

ஊரில் முக்கியமான தலைவர் பிரபு. இவரின் மனைவி மீரா கிருஷ்ணன். கார்த்திக்குமார், விமல் என இரு ஆண் பிள்ளைகள்.

சட்டம் படிப்பு படித்து வருகிறார் ஹீரோ விமல்.

விமல் நிச்சயம் வக்கீலாகிவிடுவார் என்ற தைரியத்தில் ஊருக்குக்குள் சேட்டை செய்து வருகிறார் அவரது மாமன் ரோபோ சங்கர்.

அதே ஊரில் மற்றொரு பெரிய குடும்பம் வம்சி கிருஷ்ணா உடையது. இவருக்கு சாந்தினி, கயல் ஆனந்தி என இரு தங்கைகள். இவர்களின் அம்மா, அப்பாவாக சரண்யா மற்றும் ஜெயபிரகாஷ்.

தன் மகள் சாந்தினியை தன் அண்ணன் பையனுக்கு திருமணம் செய்து வைத்து குடும்ப பகையை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார் சரண்யா.

இதனிடையில் விமலுக்கும் ஆனந்திக்கும் காதல் வருகிறது.

ஒரு சூழ்நிலையில் கார்த்திக் காதலித்த சாந்தினியை மணமேடையில் இருந்து தூக்கி வந்து கல்யாணம் செய்து வைக்கிறார் விமல்.

சாந்தினி இப்படி ஓடி போய் கல்யாணம் செய்துக் கொண்டதால், தான் நிச்சயம் செய்த மாப்பிள்ளையை ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துகிறார் வம்சிகிருஷ்ணா (சரண்யாவின் பையன்).

இதன்பின்னர் என்ன ஆனது? காதலியை கரம்பிடித்தாரா விமல்? குடும்பம் ஒன்று சேர்ந்தா? என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லும்.

Mannar Vagaiyara Movie Stills 020

கேரக்டர்கள்..

படத்தின் முதல் காட்சியிலேயே அதிரடி ஆக்சனில் இறங்கியுள்ளார் விமல். அந்த விவேகத்தை படத்தின் க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருக்கிறார்.

இதில் கிராமத்து அருவா முறுக்கு மீசை வெள்ளை வேஷ்டி என வெளுத்து கட்டியிருக்கிறார்.

இதுவரை பார்க்காத கலர்புல் ஆன்ந்தியை மன்னர் வகையறாவில் பார்க்கலாம். துறுதுறு பெண்ணாக ஜொலிக்கிறார். சில நேரம் ஓவர் பேச்சாக தெரிகிறது.

ஒரு காட்சியில் கல்யாணம் நின்னுட்டு என்று ஆனந்தியிடம் சொன்னதும் போனில் அழுது கொண்டே நேரில் ஆட்டம்போடுவது என அமர்க்களம் படுத்தியிருக்கிறார்.

சாந்தினி சாந்தமாக வந்து போகிறார். வடிவேலு பாணியில் ரோபோ சங்கர் ஒரு காட்சியில் தனியாக முயற்சித்திருப்பது ரசிக்க வைக்கிறது. ஜாதி பெயர் கொண்ட நடிகைகள் கலாய்த்திருப்பது அருமை.

ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி இருந்தும் காமெடிக்கு கொஞ்சம் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்.

யோகிபாபு நிஜமாலுமே ஒரு யோகக்காரன்.. அவர் திரையில் தோன்றினாலே பேசினால எல்லாம் சிரித்துவிடுகிறார்கள். ஒரு காட்சியில் மட்டுமே வருகிறார்.

இவர்களுடன் குடும்ப வகையறாக்கள் நிறைய பேர் உள்ளனர். பிரபு, சரண்யா, வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், மீராகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு.

IMG_1355

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் லாங் ஷாட் மற்றும் பைட் காட்சிகள் அனல் பறக்கிறது.

ஜாக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால் சில பாடல்களை தவிர்த்து இருக்கலாம்.

கட்டாய கவிஞர் பூபதி பாண்டியன் எழுதிய அண்ணன பத்தி கவலையில்லை பாடல் ரசிக்கலாம்.

எந்த வகையான படம் என்றாலும் நண்பர்களுடன் பார்த்து விடலாம். ஆனால் ஒரு சில படங்களை மட்டுமே குடும்பத்துடன் பார்க்க முடியும். அதை அழகாக பூபதி பாண்டியன் கொடுத்திருக்கிறார்.

ஒரு காட்சியில் மாட்டுக்கு வச்ச தண்ணிய நீ குடிச்சிட்டியா? உன்கிட்ட கரக்குறேன் பார் என சிங்கம்புலியிடம் ஒருவர் சொல்ல, எடுக்கிறது குடும்ப படம்? இதுல டபுள் மீனிங்கா? என்று அவரே கேட்கும் வகையில் ஒரு காட்சியை மட்டுமே வைத்துள்ளார்.

முதல்பாதியில் நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம் எடிட்டர். இரண்டாம் பாதியில் படம் ரசிக்கும்படி கொடுத்திருப்பது ரசிக்கலாம்.

அடிக்கடி அண்ணன் அண்ணன் என சரண்யா சொல்கிறார். அவர் யார்? என்றே காட்டவில்லையே சார்?

மன்னர் வகையறா.. ரசிகர் வகையறா

Comments are closed.

Related News

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சி என…
...Read More
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி…
...Read More