மணல் கயிறு 2 விமர்சனம்

மணல் கயிறு 2 விமர்சனம்

நடிகர்கள் : எஸ்வி சேகர், விசு, ஜெயஸ்ரீ, அஸ்வின் சேகர், பூர்ணா, ஜெகன், சாம்ஸ், சோனியா, டெல்லி கணேஷ், சுவாமிநாதன் மற்றும் பலர்.
இயக்கம் : மதன்குமார்
இசை : தரன் குமார்
ஒளிப்பதிவாளர் : கோபி
எடிட்டிங்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: விஜயமுரளி
தயாரிப்பாளர் : முரளி ராமசாமி (ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்)

கதைக்களம்…

எஸ்வி சேகர், விசு, ஜெயஸ்ரீ (இவர்கள் மூவரும் 35 வருடங்களுக்கு முன்பே முதல் பாகத்தில் நடித்தவர்கள். இவர்களே இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் நடித்திருப்பது ஆச்சரியமே)

நாரதர் நாயுடு விசு ஒரு கல்யாண புரோக்கர். இவரிடம் பெண் பார்க்க சொல்லும் எஸ்.வி. சேகர் எட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்.

எட்டு கன்டிசன்களுக்கு ஏற்ற ஒரு பெண் கிடைத்துவிட்டாள் என்று பொய்யை கூறி ஜெய்ஸ்ரீ கட்டி வைத்து விடுகிறார் விசு.

இதனால் விசுவை வெறுக்கும் எஸ்வி. சேகர் என்ன செய்தார்? என்ற தொடக்கத்துடன் இரண்டாம் பாகம் தொடர்கிறது.

தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால், அதுபோன்ற வேற எட்டு கன்டிசன்களை போடுகிறார் எஸ்வி. சேகரின் மகள் பூர்ணா.

இதிலும் நாரதர் நாயுடு தன் வேலையை காட்டி அஸ்வினை பூர்ணாவுக்கு கட்டி வைக்கிறார்.

இதுவும் பொய் என்று தெரிந்த பூர்ணா, எஸ்வி சேகர் குழு என்ன செய்கிறார்கள் என்பதை இந்த இரண்டாம் பாக மணல் கயிறு.

manal kayiru stills

கதாபாத்திரங்கள்…

முதல் பாகம் பார்க்காதவர்கள் அப்படத்தை நினைவூட்ட முக்கிய காட்சிகளை முதல் 10 நிமிடத்தில் காட்டி ரசிக்க வைக்கிறார்கள்.

விசு சிறிது நேரமே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். திருமண உறவை பற்றி இவர் சொல்லும் காட்சிகள் தாய்மார்களின் அப்ளாஸை கூட அள்ளும்.

இவரும் எஸ்.வி. சேகரும் இணையும் காட்சிகள் இதில் இல்லை. இருந்தால் படம் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

எஸ்.வி. சேகர் தன் நையாண்டி மூலம் இன்னும் சிறப்பு சேர்க்கிறார்.

அவரின் டபுள் மீனிங் டயலாக் இக்கால இளசுகளுக்கு செம விருந்து.

ஜெய்ஸ்ரீ குண்டாக இருந்தாலும் அதே முக சாயலுடன் வளம் வருகிறார். இதில் எஸ்வி சேகருடன் இணைந்து கலாய்க்கவும் செய்கிறார்.

விளம்பரங்களில் அஸ்வின் சேகரின் கிண்டல் ரசிக்க வைக்கிறது. உடம்மை குறைத்தால் இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ரொமான்ஸ் எப்படி என்பதுதான் தெரியவில்லை.

பூர்ணாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அவரும் அதில் நிறைவை தருகிறார்.

இவர்களுடன் ஜெகன், சாம்ஸ், எம்எஸ் பாஸ்கர் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கூடுதல் பலம் சேர்கின்றனர்.

சாம்ஸின் அந்த இண்டர்வியூ காட்சி ரசிக்க வைக்கிறது.

sv sekar manal

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோபியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. தரண்குமார் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே.

அனிருத் பாடிய பாட்டு வரவேற்பை பெரும்.

வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு…

  • கடவுளின் கருவறைக்கு சென்றால்… தண்ணீர் தீர்த்தம், சாதம் பிரசாதம், சாம்பல் வீபூதி ஆகிறது.
  • கணவன் மனைவி இருவரும் எதிரெதிர் திசைகளில் குடும்ப உறவை இழுத்தால், அது அறுந்து போகும். மாறாக ஒருவர் இழுக்க மற்றொருவர் அவருடன் செல்ல வேண்டும் என்று விளக்கும் காட்சி அருமை.

poorna

இயக்குநர் பற்றிய அலசல்…

குடும்பத்தோடு பார்க்கும் வகையில் மதன்குமார் படத்தை இயக்கி இருக்கிறார்.

ஆனால் முதல்பாதியில் இருந்த அந்த நகைக்சுவை இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதை சரி கட்டியிருக்கலாமே.

படத்தில் நாடகத்தன்மை இருப்பதை தவிர்க்க முடியாமல் செய்திருக்கலாம்.

மணல் கயிறு…. மணக்கும் உறவு

Comments are closed.