பல்லு படாம பாத்துக்க விமர்சனம் 1/5..; இந்த படம் உங்க கண்ணுல படாம பாத்துக்க

பல்லு படாம பாத்துக்க விமர்சனம் 1/5..; இந்த படம் உங்க கண்ணுல படாம பாத்துக்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, சாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘பல்லு படாம பாத்துக்க’.

பலான மேட்டர்களையே குறிவைத்து இந்த படத்தை உருவாக்கி இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன்…

மனிதர்களை கடித்து கொன்று குவிக்கும் Zombie ஷாம்பிகளிடமிருந்து தப்பிக்கும் நண்பர்கள் பற்றிய கதை.. அந்த சோம்பிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ‘பல்லு படாம பாத்துக்க’ என்பது தான் ஒன்லைன்.

கதைக்களம்…

குஞ்சுதண்ணிகாடு என்ற மலையில் சிலர் தற்கொலை செய்ய முயல்கின்றனர்.. ஒவ்வொருவருக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக்.

திடீரென தற்கொலை செய்வதை தவிர்த்து நண்பர்கள் ஆகிறார்கள்.. அப்போது சரக்கு அடிப்பதற்காக அட்டகத்தி தினேஷ் தலைமையில் ஒன்று கூடுகிறார்கள்..

அந்த காட்டுப்பகுதியில் உள்ள ஜாம்பிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற சஞ்சிதா செட்டி வருகிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது.? ஜாம்பிகள் அங்கு உருவாக என்ன காரணம்.? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

முழுக்க முழுக்க ஆபாச வார்த்தைகளை வைத்து படத்தை ஓட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் வரதராஜன்.

அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, சாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி ஆகிய பிரபல திறமையான நட்சத்திரங்கள் இருந்தும் ஒருவரிடம் கூட ஒழுங்காக வேலை வாங்கவில்லை.

சஞ்சிதாவின் அப்பாவாக பழைய டான்சர் நடிகர் ஆனந்த் பாபு வருகிறார்.. நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கும் நடிகர்கள் ஏன் இது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை..

படத்தில் எதையாவது ஒன்றை பாராட்டலாம் என நினைத்தால் எதுவுமே தோன்றவில்லை.. கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முன்பு இந்த படம் எடுக்கப்பட்டது..

தயாரிப்பாளரின் பணத்தை வீணடித்து ரசிகர்களின் நேரத்தை வீணடித்திருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜ். இந்தப் படத்தில் அவரும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெகனுடன் ஹோமோ செக்ஸ் செய்யும் நபராக வருகிறார்..

ஆக பல்லு படாம பாத்துக்க.. இந்த படத்தின் போஸ்டர் கூட உங்க கண்ணுல படாம பாத்துக்க.

Pallu Padama Paathuka movie review and rating in tamil

FIRST ON NET இன் கார் விமர்சனம்.. 1/5.; கார்ல பொண்ணு.. தியேட்டர்ல நாம.. வச்சி செஞ்சுட்டாங்க…

FIRST ON NET இன் கார் விமர்சனம்.. 1/5.; கார்ல பொண்ணு.. தியேட்டர்ல நாம.. வச்சி செஞ்சுட்டாங்க…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மூன்று பேர் கொண்ட கும்பல் ஒரு வாடகைக்கு ஒரு காரை எடுத்துக்கொண்டு சில கிலோமீட்டர் பயணிக்கின்றனர்.. அப்போது அதில் ஒருவன் இப்போது நம்முடன் ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்..

எனவே போகிற வழியில் ரோட்டில் நிற்கும் ரித்திகா சிங்கை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றுகின்றனர்.. சில கிலோமீட்டர் பயணித்து ஒரு ரகசிய இடத்தில் அவளை கற்பழிக்க அந்த மூவரும் திட்டமிடுகின்றனர்..

கையில் கத்தி & துப்பாக்கி வைத்திருப்பதால் அந்த டிரைவரும் ரித்திகாவும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.?!

கேரக்டர்கள்…

ரித்திகாவின் நடிப்பு சில இடங்களில் பாராட்டப்படும் வகையில் இருந்தாலும் இந்த கதையில் ஏன் நடித்தார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.. படத்தில் மற்ற கேரக்டர்கள் எவரையுமே பார்க்கவே முடியவில்லை..

படத்திற்கு 10% ஆறுதல் படத்தின் ஒளிப்பதிவு மட்டும் தான்.. அதுவும் காரில் பயணித்த பின்னர் காட்டுக்குள் துரத்துவதும்.. இறுதியாக கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் ஒரு இடம் மட்டும் தான் ஆறுதல்..

படம் முழுவதுமே காருக்குள் பயணிக்கிறது எல்லோர் முகத்தையும் க்ளோப்பில் காட்டுவதால் நம்மால் ரசிக்கவே முடியவில்லை.. படத்தை போட்டு இவர்கள் பார்த்தார்களா என்று தெரியவில்லை?

மற்றபடி படத்தின் இயக்குனர் நம்மை வச்சி செஞ்சுட்டார்.. ஏன் இப்படி ஒரு திரை கதையை எடுத்தார்? என்பது எல்லாம் அவருக்கு மட்டும் தான் வெளிச்சம்..

*IN CAR*

Cast and Crew Details :

Ritika Singh
Sandeep Goyat
Manish Jhanjholia
Gyan Prakash

Production House : Inbox pictures

Produced By : Anjum Qureshi, Sajid Qureshi

Presented by : Studio Green K. E. Gnanavelraja

Written and Directed By : Harsh Warrdhan
Dop : Mithun Gangopadhyay
Music : Mathias Duplessy
Art : Chetan Sagar
Editor : Manik Diwar
Action : Sunil Rodrigues
PRO : Sathish Kumar

In Car movie review and rating in Tamil

FIRST ON NET அயோத்தி விமர்சனம்.. 4.25/5.; அழ வைத்த அழகோவியம்

FIRST ON NET அயோத்தி விமர்சனம்.. 4.25/5.; அழ வைத்த அழகோவியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தீபாவளி அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகிறது ஒரு குடும்பம். அப்போது அந்த குடும்பத்திற்கே விபத்து ஏற்பட குடும்பத்தலைவி மட்டும் மரணிக்கிறார்.. இதனால் உடலை விமானத்தில் கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது.. இந்த பிரச்சனைக்கு தமிழன் உதவும் கதையே அயோத்தி.

கதைக்களம்…

தீபாவளி அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகிறது ஒரு குடும்பம். மிகவும் கண்டிப்பாக குடும்பத் தலைவர் அவர்.. மனைவி மற்றும் பிள்ளைகளை கடும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்..

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் காரில் பயணிக்கும் போது ஒரு விபத்து ஏற்பட அந்த குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.

இந்த விபத்திற்கு சசிக்குமாரின் நண்பரும் ஒரு காரணமாக அமைகிறார்.. எனவே நண்பனுக்கு உதவ செல்கிறார் சசிகுமார்.

விபத்தில் இறந்ததால் உடலை போஸ்ட்மாடம் செய்ய சொல்கின்றனர் மருத்துவர்கள்.. ஆனால் தங்கள் குடும்ப முறைப்படி போஸ்ட்மாடம் செய்யக்கூடாது என்கிறார் குடும்பத் தலைவன் யஷ்பால் ஷர்மா.

ஆனால் அவரது மகளோ என் அம்மாவின் உடலை அயோத்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்..இது ஒரு பக்கம் இருக்க ஹிந்தி தெரியாமல் உதவ முடியாமல் தவிக்கிறார் சசிகுமார்..

அந்த குடும்பத்திற்கு எப்படி உதவினார்? விடுமுறை நாளான தீபாவளி நாளில் இது எல்லாம் எப்படி சாத்தியம்.?

இறுதியில் என்ன ஆனது.? என்ன என்ன சட்ட சிக்கல்கள்.? நடைமுறை பிரச்சனைகள் என்ன.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்….

சசிகுமார் சினிமா கேரியரில் இது முக்கியமான படம்.. ஒருவருக்கு உதவ வேண்டும் என நினைத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்பதை தன் கேரக்டர் மூலம் நிரூபித்திருக்கிறார்.

இவரின் நண்பராக வரும் புகழும் இந்த படத்தில் எங்கும் காமெடி செய்து விடாமல் கதையுடன் பயணிக்கிறார்.. விமான நிலை அதிகாரிகள்.. விமான பயணிகள்.. கல்லூரி வினோத்.. போஸ் வெங்கட் என அனைவரும் கச்சிதம்..

நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி.. சிறப்பு.. இவரது தம்பி கேரக்டர்.. அம்மா கேரக்டர் என் அனைவருமே நிச்சயமாக நம்மை ஒரு காட்சியிலாவது அழ வைத்து விடுவார்கள்..

பாலிவுட் நடிகர் யஷ்பால் ஷர்மா தான் இந்த படத்தின் கிட்டத்தட்ட வில்லன் கேரக்டர்.. முதன்முறையாக ஒரு வில்லன் கேரக்டரே நம்மை அழ வைத்து விட்டது.. அப்படி ஒரு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். மனைவி இறந்தும் அழாமல் இருப்பதும்.. இறுதியாக உடைந்து போவதும் என தன் நடிப்பில் பல பரிணாமங்களை காட்டி இருக்கிறார் யஷ்பால் சர்மா..

டெக்னீஷியன்கள்….

மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்.. அயோத்தி காட்சிகளும் ராமேஸ்வரம் காட்சிகளும் அருமை..

படத்தொகுப்பில் குறை உள்ளது.. சசிகுமாருக்கு வைக்கப்பட்ட படத்தின் ஆரம்ப சண்டை காட்சி தேவை இல்லை.. அதுபோல போலீஸ் ஸ்டேஷனில் வரும் பாடல் காட்சியும் ஏதோ திணிக்கப்பட்டதாக தெரிகிறது..

ரகுநந்தன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை கலங்க வைக்கும்.. ஒரு ஹிந்தி நடிகருக்கு தமிழில் பாடல் வரிகளை கொடுத்து அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும் விதம் அருமை..

இயக்குனர் மந்திரமூர்த்திக்கு இதுதான் முதல் படம் என்று அவரே சொன்னாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. அப்படி ஒரு நேர்த்தியான படத்தை கொடுத்திருக்கிறார். பல காட்சிகளில் நீங்கள் கண்ணீர் விட்டு அழுவது நிச்சயம்..

படத்தின் வசனங்களும் கைதட்டல்களை பெறுகின்றன.. ரேஷன் கார்டில் இன்ஷியல் மாற்றுவதற்கே ஒரு மாதம் ஆகும்.. 10 ஆதாரங்களை ஒரே நாளில் எப்படி கொடுக்க முடியும் என சசிகுமார் பேசும் வசனங்கள் சூப்பர்..

இறுதியாக சசிகுமாரின் பெயரை கேட்கும் போது அவர் சொல்லும் அந்த காட்சி அருமை.. அதுபோல மற்ற விமானி பயணிகளிடம் சசிகுமார் கெஞ்சும் காட்சிகளும்.. அந்த முதியவர்களும் மனிதநேயத்தை காட்டுகின்றனர்..

அழ வைத்த அழகோவியம்.. அயோத்தி

Ayoththi movie review and rating in tamil

ஓம் வெள்ளிமலை விமர்சனம் 2.75/5.; சித்த மருத்துவ சிறப்பு

ஓம் வெள்ளிமலை விமர்சனம் 2.75/5.; சித்த மருத்துவ சிறப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஆங்கில மருத்துவ மோகத்தில் இருக்கும் மக்களுக்கு சித்த மருத்துவத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய்.

கதைக்களம்…

வெள்ளிமலை அருகே ஒரு மலை கிராமத்தில் ஒரு சித்த மருத்துவர் சுப்ரமணி இருக்கிறார்.. ஆனால் அவரிடம் மருத்துவம் பார்க்க யாரும் தயாரில்லை. (சிறுவயதில் அவர் செய்த மருத்துவ பிழையால் ஒருவர் மரணம் அடைய மக்கள் அவரை நம்ப தயார் இல்லை.)

இந்த நிலையில் அந்த ஊருக்குள் ஒரு புதுவிதமான அரிப்பு நோய் ஏற்படுகிறது. மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் சுப்ரமணிக்கும் அவர் மகளுக்கு மட்டும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

அதன் பின்னர் என்ன ஆனது? மருத்துவரை மக்கள் நம்பினார்களா? என்பதே கதை.

கேரக்டர்கள்…

சுப்ரமணி கதையின் நாயகனாக வருகிறார். வைத்தியர் வேடத்தில் கொஞ்சம் கலகலப்பு ஊட்டி படத்தை ரசிக்க வைத்துள்ளார்.

குண்டான உடம்பை வைத்துக் கொண்டு அவர் மலையேறுவது சிரமம் தான்.. ஆனாலும் நடித்துக் கொடுத்திருக்கிறார்

முக்கிய வேடத்தில் வீரசுபாஷ், நாயகி அஞ்சு கிருஷ்ணா இருவருமே படத்துக்குத் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

நாயகன் நாயகி காதலுக்கு இன்னும் கூடுதல் காட்சிகளை கொடுத்து கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதில் பெரிதாக ஈர்ப்பு இல்லை.

கிரிஜா, விஜயகுமார், சார்லஸ், பாண்டியன், கவிராஜ் உள்ளிட்டோர் நிறைவு.

டெக்னீஷியன்கள்…

ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஓகே.. ஒளிப்பதிவாளர் மணிபெருமாள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.. மலையேறும் காட்சிகள்.. வெள்ளி மலை அழகு.. மலை மீது படர்ந்த வெண் மேகங்கள் என அனைத்தையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்..

நகைச்சுவைக்கும் இன்னும் கூடுதலாக காட்சிகளை வைத்து இருக்கலாம் இயக்குனர் ஓம் விஜய்.

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்தாலும் ஆயிரகணக்கான உயிர்களை காப்பாற்றியது (ஆங்கில மருத்துவமல்ல) சித்த மருத்துவம் தான்.. இந்த நடப்பு உதாரணத்திற்கு பிறகும் மக்கள் சித்த மருத்துவத்தை நம்பாமல் இருக்கும் போது இப்படி ஒரு படத்தை கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் விஜய்.. எனவே அவரை நிச்சயம் பாராட்டலாம்..

ஆக… ஆங்கில மருத்துவ மோகத்தில் இருக்கும் மக்களுக்கு சித்த மருத்துவத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய்.

ஆக வெள்ளிமலை… சித்த மருத்துவ சிறப்பு

Om Vellimalai movie review and rating in tamil

THUGS விமர்சனம் 3.5/5..; பராசக்தி பருத்திவீரன் வரிசையில் தக்ஸ்

THUGS விமர்சனம் 3.5/5..; பராசக்தி பருத்திவீரன் வரிசையில் தக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சிறை கைதிகள் பாதாள குகை அமைத்து தப்பிக்கும் கதை தான் இதன் ஒன்லைன்

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2வது திரைப்படம் ‘தக்ஸ்’.

இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இதில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

ஒரு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கதை தான் இந்த தக்ஸ்.

ஆர் கே சுரேஷ் போலீஸ் அதிகாரி.. நாயகன் ஹிருது மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் சிறை கைதிகள்..

ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து தப்பிக்க இவர்கள் போடும் திட்டம் தான் இந்தப் படத்தின் கதைக்களம்.

கேரக்டர்கள்…

பொதுவாகவே குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அவர்கள் தப்பிச் செல்லக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கும்.. ஆனால் இதில் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.. அதற்கு காரணம் அந்த படத்தின் நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் தான்.

முதல் படத்தில் இப்படி ஒரு நடிப்பா? என்றளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் நாயகன் ஹிருது. இவர் தயாரிப்பாளர் சிபு தமின்ஷின் மகன் என்பது கூடுதல்.

எதையும் அசால்டாக செய்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். சிவாஜி அறிமுகமான படம் பராசக்தி.. கார்த்தி அறிமுகமான படம் பருத்திவீரன்.. தங்கள் முதல் படத்திலேயே இருவரும் தங்கள் நடிப்பு முத்திரையை பதித்திருந்தனர்.. அது போல தான் தக்ஸ் படத்தில் தன் முத்திரையை பதித்துள்ளார் ஹிருது ஹரூன்.

இதுவரை ஏற்காத கைதி கேரக்டரில் முனீஸ் காந்த் .. அவரும் கொஞ்சம் சிரிக்க வைத்து நம்மை ரசிக்க வைத்துள்ளார்..

மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆர் கே சுரேஷ்.. சிறை கைதியாக பாபி சிம்ஹா. இருவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

படத்தின் நாயகி மற்றும் இதர கைதிகள் என அனைவரும் ஒவ்வொரு பரிமாணத்தை காட்டியுள்ளனர்.. ஜெயில் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்று நாம் எண்ணும் அளவிற்கு ஜெயிலுக்குள் நம்மை அழைத்துச் சென்றுள்ளார் இயக்குனர்..

டெக்னீஷியன்கள்…

முதல் படத்தில் நாயகன் ரொமான்ஸ் செய்து.. டூயட் பாடி.. நாலு ஆக்ஷன் செய்து இப்படி தான் காட்சிகள் அமைக்கப்படும். ஆனால் இதில் பிருந்தா நாயகனின் மேல் முழு நம்பிக்கை வைத்து தக்ஸ் படத்தை தரமாக கொடுத்துள்ளார்.

சாம்.சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார்.

படத்தின் பின்னணி இசை தெறிக்க விட்டுள்ளது எனலாம் அப்படி ஒரு மிரட்டலான இசையை கொடுத்துள்ளார் சாம் சி எஸ். படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

முக்கியமாக நாயகன் நாயகி குளிக்கும் ஒரு டூயட் காட்சி ரசிக்கப்படும் வகையில் உள்ளது. கேரளாவின் அழகையும் சிறை கைதிகளின் சிக்கல்களையும் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

ஒரு சின்ன கதைக்களம் என்றாலும் அதனை தன்னுடைய மேக்கிங் என்ற கை வண்ணத்தால் அருமையான பதிவாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிருந்தா.

ஆக இந்த தக்ஸ்.. தரம்

Thugs movie review and rating in tamil

வாத்தி விமர்சனம் 3.25/5..; பவர்ஃபுல் பாடம்.!

வாத்தி விமர்சனம் 3.25/5..; பவர்ஃபுல் பாடம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கல்வியின் அவசியத்தையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அரசியலையும் தோலுரிக்கும் ‘வாத்தி’.. 1990 களில் தனியார் பள்ளிகள் அதிகளவில் தொடங்கப்பட்டபோது நடந்த உண்மைச் சம்பவத்தை சொல்ல வந்திருக்கிறார் ‘வாத்தி’.

கதைக்களம்

மிகப்பெரிய தனியார் பள்ளிகளின் உரிமையாளர் சமுத்திரக்கனி. இவர் தன்னிடம் வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு ( அரசுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில்) அனுப்பி வைக்கிறார்.

சாதாரண ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படும் போது.. மாணவர்கள் மதிப்பெண் குறையும்.. எனவே அரசு பள்ளிகளின் தரம் குறையும்.. மாணவர்கள் சேர்க்கை குறையும்.. இதனால் தன் பள்ளிக்கு மாணவர்கள் வருவார்கள்.. பெருமை கிடைக்கும்.. அதிக கட்டணம் வசூலாகும் என பல திட்டங்களை போட்டு அரசியல் நடத்துகிறார் சமுத்திரக்கனி.

ஆனால் ஆசிரியர் பணியை மகத்தானதாக நினைக்கும் தனுஷ் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்கிறார். மேலும் அரசு பணிக்கும் தேர்வு எழுத வைக்கிறார்.

இதன் பிறகு என்ன ஆனது.? தனுஷை என்ன செய்தார் சமுத்திரக்கனி? அவரின் திட்டம் என்ன ஆச்சு? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்….

இதுவரை ஏற்காத ஆசிரியர் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார்.. ஆனால் பார்ப்பதற்கு மாணவன் போலவே உள்ளார்.

ஓர் ஆசிரியருக்கே உரித்தான நிதானம் கலந்த பேச்சில் நம்மை ரசிக்க வைக்கிறார் தனுஷ். அப்துல் கலாமை குறிப்பிட்டு கல்வி அவசியத்தை சொல்லும் காட்சி கைத்தட்டல் பெறுகிறது.

சாந்தமாக வந்து சபாஷ் பெறுகிறார் சம்யுக்தா.. அழகான ஆசிரியையாக வந்து நம்மை கவர்ந்து விடுகிறார்.

சாய்குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி, ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆனால் இவர்களுக்கான கேரக்டரில் முக்கியத்துவம் இல்லை.. அனைத்து கேரக்டர்களும் வீணடிக்கப்பட்டுள்ளது.

டெக்னீஷியன்கள்…

பணத்தைவிட படிப்புக்கு கிடைக்கும் கௌரவம் மரியாதை வேற லெவல் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

ஜிவி பிரகாஷம் இசையில் பின்னணி இசை கதையுடன் பயணிப்பது ரசிக்க வைக்கிறது.. ஆனால் பாடல்கள் பெரிதாக கவரவில்லை..

முக்கியமாக காதலிக்க கைடு தேவையில்லை சொல்லித்தர வா வாத்தி என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

கல்வியின் அவசியத்தையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மோதலையும் அப்பட்டமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

1998 இல் நடக்கும் கதை.. ஆனால் ஒரு காட்சியில் ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் தற்போதையதாக உள்ளது அதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.

அதே சமயத்தில் கமர்சியலுக்காக சேர்க்கப்பட்ட விஷயங்கள் நாடகத் தன்மை கலந்து உள்ளதால் நம்மால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.. மகாகவி பாரதியாராக தனுஷ் வரும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கவில்லை.

மேலும் இளமையான தனுஷ் ஒரு காட்சியில் நரைத்த தாடியுடன் வருவதை யாருமே கவனிக்கவில்லையா.? 1990களில் நீளமாக முடி வளர்ப்பது அப்போதைய ட்ரெண்டாக இருந்தாலும் ஒரு ஆசிரியர் இவ்வளவு முடி வளர்ப்பது சரியா.?

தனியார் பள்ளிகள் எப்படி எல்லாம் அரசியல் செய்து அரசு பள்ளிகளின் தரத்தை குறைக்கின்றன.. மேலும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் அலட்சியத்தால் மாணவர்கள் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் சொல்லி பாடம் நடத்தி இருக்கிறார் ‘வாத்தி..

ஆக வாத்தி.. பவர்ஃபுல் பாடம்..

Vaathi movie review and rating in tamil

More Articles
Follows