RIVET விமர்சனம்..; எம்எல்ஏவுக்கு சாமானியன் அடிக்கும் ரிவெட்

RIVET விமர்சனம்..; எம்எல்ஏவுக்கு சாமானியன் அடிக்கும் ரிவெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எம்எல்ஏவால் பாதிக்கப்படும் சிலர் அவரை பழி வாங்க ரிவிட் அடிக்கும் கதைதான் இந்த படம்.

கதைக்களம்..

எம் எல் ஏ என்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரை எதிரியாக வைத்திருக்கிறார் சந்தானபாரதி.

தன் பரம்பரை சொத்தை மிரட்டி வாங்கிய சந்தானபாரதியிடம் இருந்து நிலத்தை மீட்க மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார் நாயகன் சாம்ஸ்.

ஒரு கட்டத்தில் எம்எல்ஏவின் மகனை சந்திக்கிறார். அப்போது தன் தந்தையால் பாதிக்கப்பட்ட அவரும் சாம்சுடன் இணைகிறார்.

எம்எல்ஏ வை எதிர்த்து அவரிடம் உள்ள பணத்தை ஆட்டைய போட ஒரு கும்பல் அலைகிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் இணைந்து எம்எல்ஏ வை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

படத்தின் நாயகன் சாம்ஸ். அலட்டிக் கொள்ளாத நடிப்பு.்பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறார். ஆனால் திடீரென மாயமாகி விடுகிறார். கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை?

சந்தான பாரதி சைலன்ட் பாரதியாக வருகிறார். எம் எல் ஏவுக்கே உரித்தான கம்பீரம் இல்லை.

இவர்களுடன் மற்ற அரசியல்வாதிகள் நண்பர்கள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனால் இன்னும் காட்சிகளையும் அழுத்தமான உணர்வுகளையும் கொடுத்திருக்கலாம்.

முக்கியமாக 50 கோடி பணத்தை அபேஸ் செய்யும் காட்சிகள் காமெடியாக உள்ளது.

ரீவெட் படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார் சவுண்ட் என்ஜினியர் அருண்காந்த்.

ஒரு பக்காவான திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கலாம்.

முக்கியமாக ஒரே மாதிரியான பின்னணி இசை படம் முழுவதும் ஒலிக்கிறது. பட்டாசு வெடிக்கும் காட்சிகள் கூட பட்டாசு சத்தத்தை விட மற்ற இசையே ஒலிக்கிறது.

திரில்லர் காட்சிகளுக்கு இன்னும் மெருகேற்றி இசையை மிரட்டி இருக்கலாம்.

ஆனால் சின்ன பட்ஜெட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார் அருண் காந்த்.

முக்கியமாக அரசியல்வாதிகள் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் தன் குடும்பத்தாரிடமும் உண்மையாக நடக்க வேண்டும் எனவும் கருத்தை முன் வைக்கிறார்.

இல்லை என்றால் தன்னுடன் இருப்பவர்களே தனக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதை எச்சரிக்கை பதிவாகவும் கொடுத்து ரிவிட் அடித்து இருக்கிறார் அருண் காந்த்.

டிஎஸ்பி DSP விமர்சனம் 1/5.; DSP – Don’t Spend Paisa

டிஎஸ்பி DSP விமர்சனம் 1/5.; DSP – Don’t Spend Paisa

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டிஎஸ்பி.

இதில் நாயகன் விஜய்சேதுபதி போலீசாகவும் வில்லன் ரவுடியாகவும் மோதுகின்றனர்.

கதைக்களம்…

முதல் பாதி ஒரு கதை.. இரண்டாம் பாதி ஒரு கதை என கூறலாம்.

முதல் பாதியில் ஊர் சுற்றி திரிகிறார் ஜாலியாக நாயகன் விஜய் சேதுபதி. இவரது அப்பா இளவரசு.

அது போல ரவுடியான வில்லன் முட்டை ரவியுடன் ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதிக்கு மோதல் வருகிறது.

முட்டை ரவி பெரிய அரசியல்வாதி ஆகிறார். அவரை பழிவாங்க திடீரென டிஎஸ்பி ஆகிறார் விஜய் சேதுபதி.

அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே கதை

கேரக்டர்கள்…

விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர் என்பதை சில படங்களில் நிரூபித்து இருக்கிறார். கமல், ரஜினி ஆகியோரது பாராட்டுகளை பெற்று இருக்கிறார். இதனால் பெரிய நடிகர் என்று மிதப்பில் இருக்கிறாரா என்னவோ?

ஜூங்கா சீதக்காதி அனபெல் சேதுபதி உள்ளிட்ட மிக்க வரிசையில் இந்த டிஎஸ்பியும் இணைவார்.

நாயகி அணுவுடன் அவருக்கு கெமிஸ்ட்ரியும் இல்லை.. அவரும் ஏதோ பாடி லாங்குவேஜ் என வித்தியாசமாக செய்து மொக்கை போடுகிறார்..

“நல்லா இரும்மா… என்ற பாடல் கூட நல்லா இல்லை..

டெக்னீஷியன்கள்…

படத்தின் ஒளிப்பதிவாளர் தன் கடமையை நிறைவாக செய்து இருக்கிறார்.

பொன்ராம் இமான் கூட்டணி என்றாலே எப்போதும் சிறப்பு தான்… ஆனால் இதில் வெறுப்பு தான்.. பின்னணி இசை கூட சில இடங்களில் மட்டுமே ஓகே ரகம்.

படத்தில் கெஸ்ட் ரோலில் விமல் மற்றும் ஷிவானி வருகின்றனர். அவர்கள் பெயரையும் கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்.

காமெடி என்ற பெயரில் நடிகர் புகழ் இருக்கிறார். ஆனால் காமெடியின் புகழுக்கு கலங்க வந்திடுமோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஹீரோ – வில்லன் மோதல் என்ற வழக்கமான கதையாக இருந்தாலுமே அதை சுவாரசியமாக கொடுக்க வேண்டும். அதுதான் ஒரு இயக்குனரின் படைப்புத்திறன்.

பொன்முட்டையிடும் வாத்தாக இருந்தார் பொன்ராம். இப்போது முட்டைக்காக வாத்தை அறுத்த கதையாக மாறி வருகிறாரோ.??

இந்தப் படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் அவர்கள் நழுவி விட கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்தார். இப்போது தான் தெரிகிறது சன் பிக்சர்ஸ் கிரேட் எஸ்கேப்.?!!!!!

ஆக DSP – Don’t Spend Paisa

DSP movie review and rating in tamil

கட்டா குஸ்தி விமர்சனம்.. 4.25/5.; காமெடி ஜாஸ்தி

கட்டா குஸ்தி விமர்சனம்.. 4.25/5.; காமெடி ஜாஸ்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கபடி வீரன் கணவன்… குஸ்தி வீராங்கனை மனைவி.. இவர்களுக்குள் நடக்கும் மோதலே ஒன்லைன்..

கதைக்களம்…

நாயகன் விஷ்ணு விஷால். இவருக்கு தாய் தந்தை இல்லை.. மாமா கருணாஸ் வளர்ப்பில் வளர்கிறார்.

ஜாலியாக ஊர் சுற்றித் திரியும் விஷ்ணுவுக்கு பெண் தேடுகிறார் கருணாஸ்.

ஆனால் தன்னைவிட குறைந்த படிப்பு (7ம் வகுப்பு) உள்ள பெண் வேண்டும் என்கிறார்.. மேலும் பெண்ணுக்கு கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என டிமாண்ட் செய்கிறார்.

மற்றொரு புறம் குஸ்தி வீராங்கனை ஐஸ்வர்ய லட்சுமி.. பட்டதாரி பெண்.. இவர் சித்தப்பா முனீஸ் காந்தியின் செல்லம்.

இவர் குஸ்தி கற்றுக் கொண்டதால் எவரும் மருமகளாக ஏற்க மறுக்கின்றனர். மேலும் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் ஐஸ்வர்யா.

ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆன கருணாஸ் முனீஸ்காந்தும் சந்திக்கின்றனர்.

அப்போது விஷ்ணுக்கு பெண் தேடும் படலம் பற்றி சொல்கிறார் கருணாஸ்.. எனவே இரண்டு பொய் சொல்ல திட்டம் போடுகிறார் முனீஸ்.

தன் அண்ணன் மகள் 7வது வரை மட்டுமே படித்திருக்கிறார். அவளுக்கு நீண்ட கூந்தல் உள்ளது என பொய் சொல்லி மணம் முடிக்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? விஷ்ணுவுக்கு உண்மை தெரிந்ததா? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார் செல்லா அய்யாவு.

கேரக்டர்கள்….

ஒரு தயாரிப்பாளராக நடிகராகவும் விஷ்ணுவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

பொதுவாக இன்டர்வெல் காட்சியில் நாயகனுக்கு மாஸ் காட்சி இருக்கும். ஆனால் இதில் நாயகிக்கு மாஸ் கொடுத்து தன்னை டம்மி ஆக்கி நம்மை சிரிப்பலையில் குலுங்க செய்துள்ளார் விஷ்ணு விஷால்.

கணவன்களை மனைவியர் மட்டம் தட்டி பேசுவதும்.. மனைவிகளை கணவன்கள் மட்டம் தட்டி பேசும் அந்த காட்சிகள் கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

நான்கு திசைகள் போல நான்கு காமெடியன்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டனர்… கருணாஸ்.. முனீஸ்காந்த்.. காளி வெங்கட்.. ரெடின் கிங்ஸ்லி.. ஆளுக்கு ஒரு பக்கம் போட்டி போட்டுக் கொண்டு நம்மை சிரிக்க வைத்துள்ளனர்.

ஆக்ஷன் ஒரு பக்கம்.. காமெடி ஒரு பக்கம் என இரட்டைக் குதிரையில் விஷ்ணுவும் ஐஸ்வர்யாவும் வேற லெவலில் பெர்பாமென்ஸ் காட்டியுள்ளனர்.

கருணாஸ் மனைவியாக வருபவர் பேசும் வசனங்கள் “பெண்களை அதிகாரத்தால் மிரட்டும் ஆண்களுக்கு நெத்தியடி”.

டெக்னீஷியன்கள்….

படத்தின் பாடல்கள் பெரிதாக நம்மை கவரவில்லை என்றாலும் கேட்கும்படி உள்ளது. பிண்ணனி இசையும் சிறப்பு.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது… கேரளா வீடுகளை அழகாக காட்டி உள்ளனர்.

முக்கியமாக படத்தின் இயக்குனரை பாராட்டிக் கொண்டே இருக்கலாம். அப்படியான ஒரு காமெடி விருந்தை கொடுத்துள்ளார்.

அதேசமயம் படத்தில் குடும்பத்தினருக்கும் கணவன்களுக்கும் மனைவிகளுக்கும் நிறைய மெசேஜ் சொல்லி இருக்கிறார்.

கட்டாகுஸ்தி மாஸ்டராக வரும் ஹரிஸ் பெராடீ இந்த முறை காமெடியில் அதகளம் செய்துள்ளார். தன் மனைவி பற்றி அவர் பேசும் வசனங்கள் செண்டிமெண்ட் சூப்பர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் சென்று படத்தை ரசிக்கும் படியான விருந்து படைத்துள்ளார் செல்லா அய்யா.

என்னதான் வில்லன் பெரிய வீரனாக இருந்தாலும் ஹீரோவிடம் தோற்று தானே ஆக வேண்டும்.. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

ஆக இந்த கட்டா குஸ்தி… காமெடி ஜாஸ்தி

 

கெத்துல விமர்சனம்.; திருநங்கையும் திருப்பங்களும்.!

கெத்துல விமர்சனம்.; திருநங்கையும் திருப்பங்களும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சினிமாவில் அதிகம் காட்டப்படாத திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை இது.

அத்தோடு கமர்ஷியல் அம்சங்களோடு உருவானது ‘கெத்துல.’

கதைக்களம்…

அமைச்சரின் தம்பி சலீம் பாண்டா. அந்த அதிகார கெத்தோடு பெண்களை அடைய , அலைகிறார். அழகான பெண்களை குறிவைத்து தன் ஆசைக்கு இணங்க அழைக்கிறார்.

ஒருநாள் பார் டான்சர் நாயகி ரீரினுவை அடைய ஆசைப்பட்டு அணுகுகிறார்.

அப்போது நாயகன் ஸ்ரீஜித் நாயகியை காப்பாற்றுகிறார்.

இதனால் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல் முற்றுகிறது.. ஹீரோ மீது ஹீரோயினுக்கு காதல் முற்றுகிறது..

ஆனால் ரிரீனு காதலை ஏற்க முடியாது என்கிறார்.

ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்.? ஸ்ரீஜித்தை பழிவாங்க சலீம் பாண்டா என்ன செய்தார்.? இறுதியில் என்னாச்சு என்பதே கதை.

கேரக்டர்கள்…

இரு தோற்றங்களில் வருகிறார் ஸ்ரீஜித். அதற்கேற்ப நடித்தாலும் உடல் மொழியில் கூடுதல் கவனம் தேவை. ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பார் டான்சராக பளிச்சென்று வருகிறார் ரீனு.. இளைஞர்களை சூடேற்றுவார்.
காதலனுக்காக ஏங்குவதில் தன பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.

அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே அகியோர் கச்சிதம்.

வில்லனாக சலீம் பாண்டா. மிரட்டலான நடிப்பில் சபாஷ்.

முக்கியமாக திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் நடிப்பும் அவர்களது கேரக்டர்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

டெக்னீஷியன்கள்…

கே.ஷஷிதர் ஒளிப்பதிவு நேர்த்தி.. ஃபைட் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. முக்கியமாக திருநங்கை போடும் சண்டைகள் அனல் தெரிகிறது. அதை படமக்கிய விதமும் பாராட்டக்குரியது.

பாடல்களில் கூடுதல் கவனம் வேண்டும். ஆனால் பின்னணி இசையிலும் நிறைவாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷீவா வர்ஷினி. ஆக்சன் மியூசிக் சூப்பர்ல…

நல்ல பரபரப்பான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வி.ஆர்.ஆர். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம் திரைக்கதை அமைப்பில் தடுமாற்றம் தெரிகிறது.

அரசியல்வாதியும் போலீஸ் அதிகாரியும் மோதும் காட்சிகள் சிறப்பு.. திருநங்கைக்கு ஆக்சன் காட்சிகளை கொடுத்து கெத்து காட்டி இருக்கிறார் இயக்குனர்.

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்.; மாறுப்பட்ட நடிப்பில் சந்தானம்

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்.; மாறுப்பட்ட நடிப்பில் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தெலுங்கில் ‘ஏஜன்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற ஒரு ஹிட் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களை கண்டுபிடிக்கிறார் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம். இவர் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் ஆவார். என்ன கண்டுபிடித்தார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே கதைக்கரு.

கதைக்களம்…

குரு சோமசுந்தரத்தின் 2வது (ரகசிய) துணைவியின் மகன் சந்தானம். சிறு வயது முதலே தனது நுண்ணறிவால் எந்தவொரு விஷயத்தையும் துப்பு துலக்கி விடுவார் சந்தானம்.

ஒரு கட்டத்தில் தன் தாயை இழக்கிறார். அப்போது சொத்து பிரச்சனைக்காக தனது பூர்விக கிராமத்திற்கு வருகிறார் சந்தானம். அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

அந்த சமயத்தில் ஊரில் நிறைய மரணங்கள் நிகழ்கிறது. இவை எல்லாமே ரயில் தண்டவாளத்தின் அருகில் நடக்கிறது. ஆனால் பிரேத பரிசோதனையில் இவை இயற்கை மரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை மரணம் என்றால் தண்டவாளத்தின் அருகே இந்த சடலங்கள் கிடப்பதன் மர்மம் என்ன? என விசாரணையில் இறங்குகிறார் தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் சந்தானம்.

காவல்துறையை விட இவர் அதிவேகமாக இருப்பதால் காவல்துறைக்கும் இவருக்கு மோதல் முற்றுகிறது.

இறுதியில் என்ன ஆனது? சந்தானம் விசாரணையுல் என்ன கண்டுபிடித்தார்? சடலங்கள் அங்கே கிடப்பதன் மர்மம் என்ன? அதன் நோக்கம் என்ன? அதுவே இந்த படத்தின் புலன்விசாரணை.

கேரக்டர்கள்…

சந்தானம் என்றாலே காமெடி மணக்கும். ஆனால் குளு குளு படத்தை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திலும் சீரியஸாகவே காணப்படுகிறார்.

மொத்த படத்தையும் சந்தானம் ஒருவரே தாங்கி நிற்கிறார். சில இடங்களில் கவுண்டர் காமெடியில் சிரிக்க வைக்கிறார். தன் தாயை இழந்த பின் காரில் பயணிக்கும் போது கண்கலங்க வைக்கிறார்.

நாயகி ரியா சுமன்.. சும்மாவே இருந்திருக்கலாம். சந்தானத்துடனும் ஒட்டவில்லை.. அவரது பேச்சும் இந்த படத்திற்கு ஒட்டவில்லை.

சரி சந்தானம் காமெடி செய்யவில்லை. படத்தில் புகழ் & ரெடின் கிங்ஸ்லி உள்ளனர். இவர்களாவது காமெடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தால்.. ‘சந்தானமே செய்யவில்லை நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? என நினைத்து விட்டார்களோ.?

முனீஸ்காந்த், ராமதாஸ், ஆதிரா, குரு சோமசுந்தரம், இந்துமதி அகியோரும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் மெனக்கெட்டு உள்ளனர்.

பெரும்பாலான காட்சிகளை இரவிலேயே அதுவும் குறைந்த லைட்டிங்கில் (வெளிச்சத்தில்) ஒளிப்பதிவு செய்துள்ளனர். துப்பறியும் படம் என்பதால் அப்படி வைத்திருக்கிறார்களா?

தயாரிப்பு – லபிரின்ந்த் பிலிம்ஸ்
இயக்கம் – மனோஜ் பீதா.

வழக்கமான சந்தானத்தை காட்டக்கூடாது ரசிகர்களுக்கு மாறுபட்ட சந்தானத்தின் நடிப்பை காட்ட இயக்குனர் மனோஜ் முயற்சித்துள்ளார். அதில் பாஸ் மார்க் பெறுகிறார்.

இடைவேளை வரை படத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. மெகா சீரியல் போல உள்ளது. இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுத்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தம் இல்லை. பிணங்களைக் கடத்திச் செல்வதன் நோக்கம் என்ன என்பதை சரியாக விளக்கவில்லை.. ஆக.. ஏஜென்ட் கண்ணாயிரம்.. ஏமாற்றம் ஆயிரம்..

Agent kannayiram movie review and rating in tamil

காரி விமர்சனம் 3.5/5.; கட்டுக்கடங்காத காளை

காரி விமர்சனம் 3.5/5.; கட்டுக்கடங்காத காளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் ‘காரி’.

சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேமன்த் இயக்கியுள்ளார்.

ஒன்லைன்…

ஒரு விலங்கு என்றாலும் அதுவும் ஒரு உயிரினம் தான் என நினைக்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு உடன் கலந்து விருந்து படைத்துள்ளார் இயக்குனர் ஹேமந்த்.

இவரது இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படமே ‘காரி’.

கதைக்களம்….

வறட்சி பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

2 கிராமங்களுக்கிடையே ஒரு பொது பிரச்சினை. அங்குள்ள கோயிலை யார் நிர்வகிப்பது? என்ற கருத்து வேறுபாடு.

எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறும் அணிக்கே கோயில் நிர்வாகம் என முடிவெடுக்கின்றனர்.

அதில் 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளில் 10 மாடுகளை பிடித்தாலே போதுமானது.

இதில் மாடு பிடிக்க வேண்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடுகளம் நரேன் & அவர் மகன் சசிகுமார் சென்னையில் இருக்கின்றனர். அவர்களை அழைத்து வர நாகிநீடு சென்னைக்கு செல்கிறார்.

ஆனால் சசிகுமார் வர மறுக்கிறார். தன் தந்தையை கிராமத்தினர் சந்திப்பதை கூட தடுக்கிறார்.

இதுவரை புறமிருக்க.. மற்றொரு புறம்..

ஜல்லிக்கட்டு காளைகளை விலைக்கு வாங்கி அவற்றின் விந்தணுக்களை சேகரித்து அயல்நாடுகளுக்கு விற்கிறார் BEEF பிரியர் ஜே.டி.சக்கரவர்த்தி.

நாயகி பார்வதி அருண் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை வில்லன் ஜே.டி.சக்ரவர்த்தியிடம் வந்து சேர்கிறது.

இந்த இரு கதைகளும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைகின்றன? சசிகுமார் என்ன செய்தார்? பார்வதி என்ன செய்தார்? வில்லன் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

கிராமத்திற்கென்றே கிலோ கணக்கில் தன்னை வலுப்படுத்தி வைத்திருப்பவர் சசிகுமார். இந்த கேரக்டரிலும் தன்னை சபாஷ் போட வைத்துள்ளார்.

சசிக்கு டான்ஸ் கொஞ்சம் கூட வரவில்லை. ஒரு பாடல் காட்சியில் மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஸ்டெப்பை காட்டுவது போர் அடிக்கிறது.

ஒரு கட்டத்தில் சசி கிராமத்திற்கு வர முடிவு எடுக்கிறார். ஆனால் அந்த முடிவு திணிக்கப்பட்ட காட்சியாக தெரிகிறது.

நாயகி பார்வதி அருணை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். காளை ஒரு உசுருய்யா.. அந்த உசுரு என்னை தேடிகிட்டு இருக்கும் என கதறி அழும்போது நீங்கள் பீஃப் சாப்பிடுபவராக இருந்தாலுமே கலங்கி விடுவீர்கள். (இனிமே நிறுத்தவும் வாய்ப்புண்டு).

எல்லாம் ஜீவராசிகளை நேசிக்கும் ஒரு உயர்ந்த மனிதராக ஆடுகளம் நரேன் வாழ்ந்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் கேரக்டர் கச்சிதம்.

நாகிநீடு கிராமத்து பெரிய மனிதராக நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார். ஒருவேளை ராதாவின் நடித்திருந்தால் இன்னும் சிறப்பான நடிப்பை கூட கொடுத்து இருப்பார். அவரது குரல் இவருக்கு செட்டாகவில்லை.

வில்லன் ஜடி சக்கரவர்த்தி.. ராம்குமார்.. அம்மு அபிராமி இவர்களது கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

டெக்னீஷியன்கள்…

சென்னை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் படத்தை படமாக்கியுள்ளனர்.

‘சாஞ்சிக்கவா.. சாஞ்சிக்கவா’ பாடல் காதலர்களுக்கு பிடித்த பாடலாக அமையும். கொப்பன் மவனே.. கொப்பன் மவனே.. என்ற பாடல் இனி தந்தையர் தினத்தில் whatsapp ஸ்டேட்டஸ்களில் பார்க்க கூடும்.

ஜல்லிக்கட்டு தீம் மியூசிக் ஆர்ப்பரிக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.

படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் குதிரை ரேஸ்.. சிறுமி பாலியல் தொல்லை போன்ற காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம்.. அதனால் எந்த பாதிப்பும் இல்லை..

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு நேர்த்தி. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் மிரள வைக்கிறது. அதை படமாக்கிய விதமும் நம்மை வாடி வாசலுக்கே கொண்டு செல்கிறது.

புது இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல 18 ஜல்லிக்கட்டு காளைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். காரசாரமாக ஒரு கிராமத்து மசாலாவை படைத்துள்ளார்.

ஆக இந்த காரி… கட்டுங்கடங்காத காளை

Kaari movie review and rating in tamil

More Articles
Follows