குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், குரு சோமசுந்தரம் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : மணிகண்டன்
படத்தொகுப்பு : அனுசரண்
இயக்கம் : மணிகண்டன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : கேஆர் பிலிம்ஸ்

கதைக்களம்…

நாயகன் விதார்த் கண் பார்வை குறைப்பாட்டினில் கஷ்டப்படுகிறார். ஆப்ரேஷன் செய்தால் சரியாகும் என்பதால் அதற்கான பணத் தேடல் முயற்சியில் இறங்குகிறார்.

இதனிடையில் அவர் வீட்டின் அருகே ஒரு கொலை நடக்கிறது. கொலைக்காரன் யார்? எதற்காக இந்த கொலை? என திரைக்கதை நீள்கிறது.

இந்த விசாரணையில் சிக்கும் விதார்த்தின் எதிர்காலம் என்ன ஆகிறது? என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

Kuttrame Thandanai stills 1

கதாபாத்திரங்கள்…

கண் பார்வை முழுவதுமாக தெரியாமல் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நம் கவனம் ஈர்க்கிறார் விதார்த்.

மைனாவுக்கு பிறகு ஒரு அழுத்தமான உணர்ச்சிமிக்க நடிப்பை கொடுத்திருக்கிறார் இவர்.

குற்ற உணர்வில் நொருங்கி போவது,  சிகிச்சை மற்றும் பணத்துக்காக அலைவது என ஒரு யதார்த்த மனிதரின் பிரதிபலிப்பாக வருகிறார்.

கண் பார்வை குறைபாட்டினால் பைக் ஓட்டும்போது தடுமாறுவது ரசிக்க வைக்கிறது. ஆனால் இவ்ளோ குறை பாடு உள்ளவரால், இந்த டிராப்பிக்கில் நிச்சயம் செல்ல முடியாது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பூஜா தேவார்யா என இரு நாயகிகள். இருவரும் தங்கள் கேரக்டர்களை பேசும்படியாக செய்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் இருவரின் கேரக்டர்களை மாற்றி கொடுத்திருந்தால் இன்னும் ஸ்வாரஸ்யம் கூடி இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவர்களுடன் மாரிமுத்து, ‘பசி’ சத்யா, ரகுமான் உள்ளிட்டோரும் பொருத்தமான தேர்வு.

ஜோக்கர் படத்தில் நம்மை சிந்திக்க வைத்த, குரு சோமசுந்தரம் இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.

நாசரின் அவரின் அனுபவ நடிப்பால், தனித்து நிற்கிறார். ஆனால் ஒரே இடத்தில் அவரை பார்ப்பது போரடிக்கிறது.

Kuttrame Thandanai stills 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் பாடல்கள் இல்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் என இசைஞானி தன் இசை சாம்ராஜ்யத்தை பின்னணி இசையில் நடத்தியிருக்கிறார்.

இவரது இசையே இந்த த்ரில்லர் கதைக்கு உயிரூட்டம் கொடுக்கிறது. இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவாளர் என்பதால், ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கி இருக்கிறார்.

மிகத் துல்லியமாக ஒரு க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்டை கமர்ஷியல் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ‘நம்ம ரேட்டை நாம்தான் முடிவு பண்ணணும்’, சரி தப்புன்னு எதுவும் இல்லை. நீ எடுத்த முடிவை நான் சொல்லணும்னு நினைக்கிற’, ‘எது தேவையோ அதுவே தர்மம், ஜி சொல்றவங்கள சுத்தமாக புடிக்கல…. உள்ளிட்ட வசனங்கள் நமக்கு நம் வாழ்வை நினைவுப்படுத்தும்.

இதற்கு ஆனந்த் அண்ணாமலை அவர்கள் மணிகண்டனுக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்.

Kuttrame Thandanai stills 2

குற்றம் செஞ்சிட்டு தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம். ஆனால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியாது.

அந்த குற்ற உணர்ச்சியே பெரும் தண்டனை என்பதை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் இந்த காக்கா முட்டை இயக்குனர்.

பணம் பறிக்க முயலும் ஆஸ்பத்திரிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் காட்டியிருப்பது சபாஷ்.

ஆனால் படம் ஒரு டாக்குமெண்ட்ரி டைப் ஆக இருப்பதால் எல்லாம் ரசிகர்களையும் கவருமா? என்பது சந்தேகமே.

மொத்தத்தில் குற்றமே தண்டனை… மனசாட்சியின் தண்டனை

 

வென்று வருவான் விமர்சனம்

வென்று வருவான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வீரபாரதி, சமீரா, எலிசபத், காதல் சுகுமார் மற்றும் பலர்.
இசை : முரளி கிருஷ்ணன்
ஒளிப்பதிவு : ஜெயச்சந்திரன்
படத்தொகுப்பு : ஆர் எஸ் சதீஷ்குமார்
இயக்கம் : கே. விஜேந்திரன்
பிஆர்ஓ : சக்தி சரவணன்
தயாரிப்பாளர் : சந்திரகாசன், வெங்கடேஷ், விஜேந்திரன்

கதைக்களம்…

தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி என்ற கிராமத்தில் வாழும் ஒரு பார்வையற்ற தாய் மற்றும் மகன் பற்றிய கதை.

படத்தின் முதல் காட்சியே விறுவிறுப்பாக செல்கிறது. எட்டு கொலைகளை செய்த வீரபாரதிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என அந்த கிராமமே சொல்கிறது.

ஆனால், அவன் செய்திருக்க மாட்டான் என அவனின் தாயும் காதலியும் நம்புகின்றனர்.

இதனிடையில் இந்த கொலைகளின் பின்னணி என்ன? நிஜமான கொலைக்காரன் யார்? என்ற உண்மைகளை ஒரு பத்திரிகையாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே மீதிக்கதை.

vv 1

கதாபாத்திரங்கள்….

நாயகன் வீரபாரதி. தாடியும் சோகமும் உள்ளவராக படம் முழுக்க வருகிறார். இவர்தான் கொலை செய்திருப்பார் என்பது போலவே இவரது தோற்றம் அமைந்துள்ளது ப்ளஸ் பாயிண்ட்.

நாயகி சமீரா கிராமத்து பெண்ணாகவும் குளிர்ச்சியாகவும் வருகிறார். காதலனையும் வருங்கால மாமியாரையும் பார்த்துக் கொள்ளும் பரிவு ரசிக்க வைக்கிறது.

கண் தெரியாத விதவைத் தாயாக எலிசபத். அவர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். மகனுக்காக உருகும் காட்சிகளிலும் பாட்டு பாடும் காட்சிகளிலும் கவர்கிறார்.

காமெடி நடிகர்கள் வையாபுரி, கிரேன் மனோகர், நெல்லை ஆகியோர் இருந்தும் காமெடி கடுப்பை ஏற்றுகிறது.

vv 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களும் கிராமத்து காட்சிகளும் படத்தின் போக்கை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

தாய் மகன் உறவு, காதல், தூக்குத் தண்டனை சட்ட விதிமுறைகள், தாலாட்டு இசை அனைத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

க்ளைமாக்ஸிஸ் இருந்தும் உயிர் கொடுப்பாள். இறந்தாலும் உயிர் கொடுப்பாள் தாய் என்பதோடு நிறைவு செய்து மனங்களை ஈரமாக்குகிறர்.

மொத்தத்தில் வென்று வருவான்… அனைத்தையும் தாய் வென்று விடுவாள்

பயம் ஒரு பயணம் விமர்சனம்

பயம் ஒரு பயணம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : டாக்டர் பரத் ரெட்டி, விஷாகா சிங், மீனாட்சி தீட்சித், ஊர்வசி, சிங்கம் புலி, மதுமிதா, யோகி பாபு மற்றும் பலர்.
இசை : ஒய் ஆர் பிரசாத்
ஒளிப்பதிவு : ஆண்ட்ரு
படத்தொகுப்பு : தாஸ் டேனியல்
இயக்கம் : மணி ஷர்மா
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : துரை மற்றும் சண்முகம்

bayam 2

கதைக்களம்…

இதன் டைட்டிலே இப்படத்தின் கதையை சொல்லிவிடும். பயம் என்றால் பேய்தான்.

தன் சாவுக்கு காரணமான நபர்களை பழிவாங்கும் வழக்கமான பேய் கதைதான்.

ஆனால் இதில் சம்பந்தமில்லாத பத்திரிகை போட்டோ கிராபரான பரத் ரெட்டியையும் பழிவாங்க துடிக்கிறது பேய்.

அது ஏன்? என்பதற்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் கதை சொல்லும்.

bayam 1

கதாபாத்திரங்கள்…

கமலின் உன்னை போல் ஒருவன் மற்றும் பயணம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த பரத் ரெட்டி இதில் நாயகனாக நடித்துள்ளார்.

ஆள் ஸ்மார்ட்டராக உயரமாக இருக்கிறார். பேயை பார்த்து பயப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஆக்ஷன் நன்றாக வரும் என்றாலும் இதில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை.

விஷாகா சிங் பேயாக வருகிறார். ஆனால், பழிவாங்க வேண்டிய நபர் அருகில் இருக்கும் போது அவரை சைட் அடித்து விட்டு செல்வதுதான் ஏன் என்று தெரியவில்லை. (இது மரண பேய் சைட் போலும்)

தான் குடிக்காமல் இருந்தாலும் குடிகாரர்கள் கூட்டத்தில் இருந்தால் சில சமயம் பிரச்சினைகள் வரும் என்பதை இவரது பாத்திரம் அப்பட்டமாக சொல்லியிருக்கிறது.

பரத்தின் மனைவியாக வரும் மீனாட்சி திக்ஷித் ஏனோ வந்து போகிறார். பேபி அனுவின் செயல்கள் செயற்கைத் தனமாக தெரிகிறது.

bayam oru payanam hero bharath

இவர்களுடன் ஊர்வசி, யோகி பாபு, சிங்கம் புலி, லொள்ளு சபா மனோகர், மதுமிதா மற்றும் கிங் காங் ஆகியோர் இருந்தும் யாருக்கும் சொல்லும் படியான காட்சிகள் இல்லை.

நம் கலாச்சாரத்தை அழிக்கும் நவீன இளைஞர்களை பழிவாங்கும் கும்பல் தலைவனாக வருகிறார் ஜான் விஜய்.

தோற்றத்தில் டெரர் காட்டியிருக்கிறார். ஆனால் அவர்களை கொடுமைப்படுத்தும் விதத்தை பார்த்தால் இனி கலாச்சார சீர்கேடு வராது என்றே தோன்றுகிறது.

Bayam-Oru-Payanam

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பேய் படம் என்றாலே கேமரோமேன் மற்றும் மியூசிக் டைரக்டர்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். பாடல்களைவிட பின்னணி இசை கைகொடுக்கிறது.

ப்ரிட்ஜில் இருந்து ரத்தம் வரும் காட்சிகள். அந்த பேய் வீடு என அனைத்தும் பயமுறுத்துகின்றன.

இயக்குனர் மணிஷர்மா ஒரு வித்தியாசமான களத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக பரிமாற கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.

பயம் ஒரு பயணம்… ப்ரேக் டவுன்

54321 விமர்சனம்

54321 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஷபீர், அரவிந்த், பவித்ரா, ரவி ராகவேந்திரா மற்றும் பலர்.
இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவு : பானு முருகன்
எடிட்டிங் : எம்ஆர் ரஜீஷ்
இயக்கம் : ராகவேந்திர பிரசாத்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் (ஜிவி கண்ணன்)

54

கதைக்களம்…

அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், நம் பிள்ளைகள் எப்படியெல்லாம் திசை மாறுவார்கள் என்பதே இதன் ஒன்லைன்.

எந்தவொரு விஷயத்திற்கும் அடுத்த வீட்டு பையன் வினோத்தை உயர்வாக சித்தரித்து பேசுகின்றனர் விக்ரமின் பெற்றோர்.

ஒரு சூழ்நிலையில் வினோத்தின் தாயை கொல்கிறார் விக்ரம். இதனால் வினோத்தை தத்தெடுத்து வளர்க்கின்றனர் விக்ரம் பெற்றோர்.

இதனால் மேலும் இந்த பகை வன்மமாக மாறி சொந்த குடும்பத்தையே எப்படி சீரழிக்கிறான் விக்ரம் என்பதே கதை

543

கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் மொத்தமே நான்கு ஐந்து கேரக்டர்கள் மற்றும் ஒரு ஒரு வீட்டின் சிறிய அறைதான். அதற்குள் தன் கற்பனைகள் மற்றும் அழகான பதிவை செய்திருக்கிறார் இயக்குனர் ராகவேந்திர பிரசாத்.

ஷபீர், அரவிந்த், பவித்ரா, ரவி ராகவேந்திர உள்ளிட்ட அனைவரும் அந்த சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் காட்சிகள் அருமை.

ரோகினி மற்றும் பசங்க சிவக்குமார் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் நாயகனை ஒரு கொலை செய்ய வற்புறுத்த வில்லன் கவுண்ட்டவுன் கொடுப்பது நிச்சயம் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது.

அதற்காக அவர் குழந்தையே கொல்ல வைக்கும் அந்த காட்சி பதறவைக்கிறது.

54321 movie stills

திரைக்கதையில் ஒரு அறையை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால், நிச்சயம் போரடிக்கும்.

ஆனால் அதற்குள் சிறிய சிறிய ப்ளாஷ்பேக்குகள் என கொண்டு சென்று, கதைக்கு என்ன காரணம்? என ஒவ்வொன்றையும் சொல்லியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

இக்கதைக்கு ஜோசுவா ஸ்ரீதரின் பின்னணி இசையும், பானு முருகனின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளன.

54321 இந்த கவுண்ட் டவுன் நிச்சயம் ஏறுமுகம்தான்

மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் உள்ளிட்ட தனுஷின் மூன்று படங்களை தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த தட்டத்து மறையத்து என்று படத்தை ரீமேக் செய்து தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் மித்ரன் ஜவஹர்.

நடிகர்கள் :
வால்டர் ப்லிப்ஸ், இஷா தல்வார், மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து, ஷான், நாசர், தலைவாசல் விஜய், அர்ஜீனன், வித்யூலேகா ராமன், வனிதா மற்றும் பலர்.
இசை : ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : விஷ்னு ஷர்மா
படத்தொகுப்பு : தியாகராஜன்
இயக்கம் : மித்ரன் ஜவஹர்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : சங்கிலி முருகன்

Meendum-Oru-Khadhal-Kathai-movie-still

கதைக்களம்…

ஒரு இந்து பையன் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறார். ஒரே மதம் என்றாலே பல பிரச்சினைகள் இருக்கும்.
இது இரண்டு மதங்கள் என்பதால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது. அதை அவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

மலையாளத்தில் நிவின் பாலி இஷா தல்வார் நடித்திருந்தனர். ஆனால் இங்கு நாயகன் மாற்றப்பட்டு இருக்கிறார்.

அறிமுக நாயகன் ல்டர் ப்லிப்ஸ் நடனங்களில் அசத்தியிருக்கிறார். நடிக்கவும் சில சமயம் முயற்சித்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் அழகாய் வர்ணித்து உருகுவது யதார்த்தம் என்றாலும், கொஞ்சம் ஓவராய் வழிவதாய் தெரிகிறது.

இஷா தல்வாரின் துப்பட்டா பற்றியும், காதலியை பற்றியும் ஜெயிலில் பேசிக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.

meendum5

முஸ்லீம் பெண்ணாக இஷா தல்வார். கண்களால் கவிதை பேசியிருக்கிறார். வீட்டிற்கு தெரியாமல் காதலை மறைப்பதும், பின்னர் வெளிப்படுத்தும் காட்சியும் நச்.

போலீஸின் கம்பீரம் எல்லாம் காமெடியாகி இருக்கிறது. மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து இருவரும் கதை கேட்டுக் கொண்டே இருப்பது எல்லாம் ரொம்ப ஓவரோ ஓவர்.

அர்ஜீனன் மற்றும் வித்யூலேகா ராமன் வழக்கம்போல காதலுக்கு உதவுகிறார்கள்.

நாசர், தலைவாசல் விஜய், வனிதா என பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் அவர்களுக்கான காட்சிகள் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்னு ஷர்மா… இவர்கள் இல்லை என்றால் படமே இல்லை என்கிற அளவுக்கு படத்தை தங்கள் பணிகளால் தாங்கி நிற்கிறார்கள்.

சில பாடல்கள் கேட்ட டியூன்களாக இருந்தாலும், மெலோடியில் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் வீடு முதல் கல்லூரி இடங்கள் வரை ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • ஒளிப்பதிவு மற்றும் மெலோடி பாடல்கள்
  • கேரக்டர்கள் தேர்வு

படத்தின் மைனஸ்…

  • காதல் கதை தெரிந்த ஒன்றுதான். அதில் எந்த ட்விஸ்டும் இல்லை.
  • முதல் பாதி முழுவதும் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது.

Meendum Oru Kadhal Kadhai Movie Stills

இதற்கு முன் மித்ரன் ஜவஹர் எடுத்த படங்களில் இருந்த செண்டிமெண்ட், காமெடி இதில் மிஸ்ஸிங்.

முஸ்லிம் வீடு, கல்யாண பாடல், கேரளாவையே ஞாபகப்படுத்துகின்றன.

காவல் நிலையத்தை காதல் நிலையமாக மாற்றி, போலீஸ் அதிகாரிகள் அட்வைஸ் செய்ய வைத்திருப்பதெல்லாம் டூ மச்.

பெண்களின் பர்தா, உடலை மூடுவதற்குதான். மனசை மூடுவதற்கு அல்ல என்று முடித்திருப்பதால் இயக்குனர் சபாஷ் பெறுகிறார்.

மீண்டும் ஒரு காதல் கதை… காதலர்களை கவரும்

நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம், ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு மற்றும் பலர். ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன் (சிறப்பு தோற்றம்).
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : எம். எஸ். பிரபு
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கணேசா
பிஆர்ஓ : ஜான்
தயாரிப்பாளர் : கோல்டன் ப்ரைடே பிலிம் (வந்தனா ஸ்ரீகாந்த்)

கதைக்களம்…

மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் அவர்களுக்குள் இருக்கும் நம்பியாரின் (சினிமாவில் வரும் அந்த வில்லன் நம்பியாரை மட்டுமே சொல்கிறோம்.) கெட்ட எண்ணங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் கதை.

nam 1

கதாபாத்திரங்கள்…

எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதராக ஸ்ரீகாந்த், அவரது கேடு கெட்ட மனசாட்சியின் உருவமாக சந்தானம் நடித்துள்ளனர்.

சுனைனாவின் காதலுக்காக ஏங்குவது, தண்ணி அடித்துவிட்டு ரகளை செய்வது, பொறுப்பில்லாமல் திரிவது என நம்பியார் குணத்தால் ரசிக்க வைக்கிறார் ஸ்ரீகாந்த்.

நல்லவனாக வாழ முடியாமல் தவிக்கும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இன்னும் ஸ்மார்ட்டாகவே இருக்கீங்களே பாஸ் எப்படி?

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானத்தின் கல கல. ஆனால்… நிறைய காட்சிகளில் எரிச்சலை செய்யும் விதமாக ஓவராகவே பேசியிருக்கிறார். குறைத்திருக்கலாம்.

தன் உதடுகளாலும் கண்களாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் சுனைனா. ஒரு காட்சியில் நைட்டியில் வந்து கிறங்கடிக்கிறார்.

இவர்களுடன் ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோரும் கொடுத்த பணியை செய்துள்ளனர்.

கௌரவ தோற்றத்தில் வந்து நண்பேன்டா ஆக வந்து செல்கிறார்கள் ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன். ஒரு பாடலுக்கு விஜய் ஆண்டனியும் வருகிறார்.

nambi

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்கள் தாளம் போட வைக்கிறது.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு ‘பளிச்’ பதிவு. விவேக் ஹர்சன் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • விஜய் ஆண்டனியில் இசையில், “தூங்கும் பெண்ணே தூங்காதே…”  பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
  • ஸ்ரீகாந்த் – சந்தானத்தின் கெமிஸ்ட்ரி
  • கண்களுக்கு விருந்தாக கலர்புல் ஹீரோயின் சுனைனா
  • சில காட்சிகளில்….  ஸ்ரீகாந்த் டீசர்டில் Together சந்தானம் டீசர்டில் To Get Her, Now Here – No Where என்ற க்ரியேட்டிவ்வாக யோசித்து இருக்கிறார் கணேஷா.

படத்தின் மைனஸ்…

  • சந்தானத்தை ஒரு கேரக்டராக உருவாக்கி கலாய்க்க விட்டிருந்துதால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
  • எல்லா காட்சிகளிலும் ஸ்ரீகாந்துக்கும் சந்தானத்திற்கும் ஒரே உடையாக இருக்கும்போது ஒரு சில காட்சிகளில் மனசாட்சியின் உடை மாறியது ஏன்? உதவி இயக்குனர்கள் கவனிக்க வில்லையா?

nam 2

இயக்குனர் பற்றி…

கெட்ட எண்ணங்களை அழித்தால் மட்டுமே நல்ல மனிதனாக வாழமுடியும் என்பதை  நீளமாக சொல்லிவிட்டார் இயக்குனர் கணேஷா.

அதற்கு ஒரு உருவம் கொடுத்து நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் ஸ்வாரஸ்யமான திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.

இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து கொண்டிருப்பதை விட நிகழ்காலத்தை நினைத்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.

மிரட்டாத இந்த நம்பியாரை பார்க்கலாம்.

 

More Articles
Follows