பெல் விமர்சனம். ஆரோக்கிய அலாரம் அடித்ததா.?!

பெல் விமர்சனம். ஆரோக்கிய அலாரம் அடித்ததா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கை மருத்துவ சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படமாக ‘பெல்’ உருவாகியுள்ளது.

கதைக்களம்…

குரு சோமசுந்தரம் ஆரண்ய ஆர்கானிக் பார்ம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கார்ப்பரேட் பிசினஸ்க்கு ஒரு முக்கியமான மூலிகை ஒன்று தேவைப்படுகிறது.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அந்த மூலிகையை அங்கு வசிக்கும் நித்திஷ் வீராவிடம் (இவர்தான் பெல்) எடுத்து வர கட்டளையிடுகிறார். நிசம்பசூரிணி என்ற மூலிகையை எடுத்து வர சொல்கிறார்.

நித்திஷிடம் குரு சோமசுந்தரம் அதை சொல்ல என்ன காரணம்.? என்ற ஒரு பிளாஷ்பேக் கதையும் பயணிக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க.. நிதிஷ் பார்வையற்றவர்.. இவரது பார்வையில் தான் இப்படி இருப்போம் என நினைத்து ஒரு உருவத்தை கற்பனை செய்து கொள்கிறார்.. அவர்தான் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்.

ஒரு பக்கம் காதல்.. மூலிகை மருத்துவம் என கதை பயணிக்க.. மற்றொரு புறம் கார்ப்பரேட் பிசினஸ்.. இயற்கை வளம் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இறுதியில் என்ன ஆனது மூலிகை கொண்டுவரப்பட்டதா.? பிசினஸ் சாத்தியப்பட்டதா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பல படங்களில் நாம் சாதுவாக பார்த்த குரு சோமசுந்தரம் இதில் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.. அவரது சிரிப்பு பழைய கால வில்லன்களை நினைவுபடுத்துகிறது அதை தவிர்த்து இருக்கலாம்.

நிதிஷ் வீரா வளர்ந்த பிறகும் அதே இளமையுடன் குரு சோமசுந்தரம் இருப்பதன் காரணம் ? கொஞ்சம் முதுமையை காட்டி இருக்கலாம்.

பார்வையற்றவராக நடித்திருக்கும் நிதிஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இருந்தாலும் பல விஷயங்களை இவர்கள் முன்கூட்டியே சொல்வது ஏற்புடையதாக இல்லை.

நாயகிகளுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் பாடலுக்கும் கதை ஓட்டத்திற்கும் உதவியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

பெல் படத்திற்கு வெயிலோன்‌ கதை வசனம்‌ அமைக்க, பரணிக்கண்ணன்‌ ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட்‌ இசையில் இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கியுள்ளார்.

படத்தொகுப்பாளராக தியாகராஜனும், சண்டை பயிற்சியாளராக ஃபயர் கார்த்திக்கும் பணியாற்றியுள்ளனர். பாடல்களை பீட்டர் ராஜ் எழுத தினா நடனம் அமைத்துள்ளார். பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவு சிறப்பு.. ஆனால் படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி சுமாராகவே உள்ளன..

தமிழர்கள் மறந்து போன சித்த மருத்துவத்தை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர்.

ஆனால் திரைக்கதை அமைத்து விதத்தில் கூடுதல் தடுமாற்றம்.

ஆனால் பார்வையற்றவர்கள் பார்வையில் அவரின் முகம் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் காட்டியிருப்பது சிறப்பு. அது சில நேரத்திற்கு குழப்பமான மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தலாம்.

மற்றபடி இந்த பெல் சிறப்பாக அடித்திருந்தால் மணி ஓசை அதிகமாகவே ரசிக்கும் படி கேட்டிருக்கும்.

Bell movie review and rating in tamil

போர் தொழில் 3.75/5.. போலீஸ் டைரி

போர் தொழில் 3.75/5.. போலீஸ் டைரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இளம் பெண்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுகிறார்கள்.. அந்த சீரியல் கில்லரை தேடும் காவலர்கள் பற்றிய விசாரணை தான் இந்த போர் தொழில்.

கதைக்களம்…

தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு ஒரே மாதிரியான முறையில் கொல்லப்படுகிறார்கள். எந்த ஒரு தடயமும் இல்லாமல் இளம் பெண்கள் கொல்லப்படுவதால் திருச்சி நகரமே பரபரப்பாகிறது.

இந்த சீரியல் கில்லரை கண்டுபிடிக்க அதற்கான காரணத்தை அறிய சீனியர் போலீஸ் ஆபீஸர் சரத்குமார் மற்றும் இளம் போலீஸ் அசோக் செல்வன் இருவரும் நியமிக்கப்படுகின்றனர்.

விசாரணையில் சீரியல் கில்லரை கண்டுபிடித்தார்களா.? அவனின் நோக்கம் என்ன.? பெண்களை மட்டும் குறி வைப்பதன் காரணம் என்ன.? யார் அவன் என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை 40+க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸாக சரத்குமார் நடித்தாலும் இந்தப் ‘போர் தொழில்’ படத்தில் முற்றிலும் தன் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் சரத்குமார்.

ஒரு சீனியர் ஆபீசருக்கு உள்ள நிதானம் விவேகம் அனைத்தையும் சரியாக கலந்து கொடுத்து இருக்கிறார் சபாஷ் சாரே.

பயந்த சுபாவம் கொண்ட ஓர் இளைஞன் திடீரென போலீஸ் ஆனால் அவனின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை தன் கேரக்டரில் உணர்த்தியிருக்கிறார் அசோக்.

முறுக்கு மீசை.. டைட்டான ஷர்ட் என எந்த சினிமாத்தனமும் இல்லாமல் பக்கா சேவிங் செய்து தன் கேரக்டரை பக்காவாக செய்து இருக்கிறார் அசோக் செல்வன்.

இது போன்ற போலீஸ் விசாரணை படங்களில் நாயகிக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. நிகிலா விமல் கேரக்டர் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

முக்கியமான கேரக்டரில் மறைந்த நடிகர் சரத்பாபு நடித்திருக்கிறார். அவர் மறைந்துவிட்டாலும் இந்த கேரக்டர் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும்.

பி எல் தேனப்பன் சிறிது நேரமே வந்தாலும் தன்னுடைய கேரக்டரை தேனாகவே கொடுத்திருக்கிறார்.

சீரியல் கில்லர் தன் கேரக்டரை மிரட்டலாக கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

கலைச்செல்வன் சிவாஜி – ஒளிப்பதிவு

ஸ்ரீஜித் சாரங்கி – படத்தொகுப்பு

ஆக்சன் – பீனிக்ஸ் பிரபு

சச்சின் சுதாகரன் & ஹரிஹரன் – சவுண்ட் எஃபெக்ட்ஸ்

விக்னேஷ் ராஜா – இயக்குநர்

ஜேக்ஸ் பிஜோய் – பின்னணி இசை

மேற்கண்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணியை பாராட்டும் வகையில் செய்துள்ளனர்.

இது போன்ற திரில்லர் கதைகளுக்கு பின்னணி உசைதான் பலம். அதை உணர்ந்து இசையால் மிரட்டி இருக்கிறார் ஜேக்ஸ் பிஜோய்.

தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள் என பரபரப்பான காட்சிகளை கேமராவில் படம் பிடித்து பரபரப்பை கூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி.

எடிட்டரை பொருத்தவரை பிளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் கட் செய்து இருக்கலாம்.

சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒருவன் பிற்காலத்தில் சமூகத்தில் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறான் என்பதை படமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

ஆனால் இடைவேளையில் இந்த மர்மம் முடிச்சுகளை அவிழ்த்து விட்டதுதான் ஏமாற்றம் அளிக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

தொடர் கொலைகளை செய்யும் ஒருவனுக்கு இன்னும் அழுத்தமான காரணங்களை கொடுத்திருக்கலாம். தன்னுடைய குடும்பத்திற்காக அப்பாவி பெண்கள் கொலை செய்வது எந்த வித நியாயம்.?

ஆல்ஃபிரட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜா ஆகியோரின் வஙிமையான எழுத்து பாராட்டுக்குரியது.

கிளைமாக்ஸ் காட்சியில் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் தம்பதியரை பார்த்து “நீங்க உங்க வேலைய சரியா செஞ்சிங்கனா எங்க வேலை குறைஞ்சிடும்” என்ற அசோக் செல்வன் சொல்வது பலருக்கு பாடம். எனவே அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு அப்ளாஸ் கொடுக்கலாம்..

ஆக போர் தொழில்.. போலீஸ் டைரி

Por Thozhil movie review and rating in tamil

டக்கர் விமர்சனம் 1.5/5 – மக்கர் ட்ரிப்

டக்கர் விமர்சனம் 1.5/5 – மக்கர் ட்ரிப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எதையாவது செய்து பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நாயகன்.. பணம் கோடி கோடியாக கொட்டி கிடந்தாலும் நிம்மதியான வாழ்க்கை இல்லையே என புலம்பும் நாயகி.. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு செல்லும் பயணமே இந்த டக்கர்.

கதைக்களம்..

காஸ்ட்லியான வாடகை கார் ஓட்டும் நபர் சித்தார்த். ஒரு கட்டத்தில் ஓனரை பகைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அந்த கார் டிக்கியில் நாயகி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு கும்பல் நாயகியை துரத்த அவர்களிடம் இருந்து ஹீரோ அந்த பெண்ணை காப்பாற்றினாரா.? ஏன் காப்பாற்றினார்.? என்பதுதான் இந்த ரோடு ட்ரிப்.. ( இதே போன்ற கதையை நீங்கள் பல படங்களில் பார்த்திருந்தால் நாங்கள் பொறுப்பல்ல.)

கேரக்டர்கள்…

சாக்லேட் பாய்.. ரொமான்டிக் ஹீரோ என அடையாளப்படுத்தப்பட்ட சித்தார்த் இதில் சீரும் சிங்கமாக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பயந்த சுபாவம் திடீரென ஆக்ஷன் என அந்நியன் போல மாற முயற்சித்து அதில் சோதித்து விட்டார்.

நாயகி தியான்ஷா கௌசிக்.. சிகரெட் அடித்துக் கொண்டு செக்ஸ் என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்பது போன்ற அடாவடி பெண். ஆனால் கிளைமாக்ஸில் இவரும் வழக்கமான நாயகி என்பதை காட்டிவிட்டார் இயக்குனர்.

வில்லனாக அபிமன்யுசிங்.. இவரும் இந்த ரோடு ட்ரிப்பில் தன்னை ஒரு காமெடியனாக ட்ராக் மாற்ற முயற்சித்துள்ளார்.. அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.

இவர்கள் இல்லாமல் காமெடியன்களாக யோகி பாபு, முனிஷ்காந்த், ஆர் ஜே விக்னேஷ் நடித்துள்ளனர். இதில் யோகி பாபு மட்டும் சில இடங்களில் சிரிக்க வைத்து செய்கிறார்.

ஆர் ஜே விக்கி.. ஒரு பிரெண்ட் கேரக்டர் என்ன செய்ய வேண்டுமோ அதை ஓரளவு செய்திருந்தால் கூட திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.. ஆனால் சோதித்துவிட்டார்.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் – நிவாஸ் கே.பிரசன்னா

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன்.

படத்தொகுப்பாளர் ஜி.ஏ.கௌதம்

ஆக்சன் – தினேஷ் காசி

இயக்குநர் – கார்த்திக் ஜி க்ரிஷ்

படத்தின் ஒளிப்பதிவாளர் தான் வாங்கிய சம்பளத்திற்கு நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்.. ஒரு ரோடு பயணத்தை அழகாக வேகமாக காட்ட முயற்சித்துள்ளார்.

கதை முடிந்த பின்னரும் காட்டப்படும் காட்சிகளை எடிட்டர் வெட்டி எறிந்து இருக்கலாம்.

ஆக்சன் காட்சிகளில் மட்டும் பின்னணி இசையில் நம் கவனத்தை ஈர்க்கிறார் நிவாஸ் கே.பிரசன்னா. ஆனால் காமெடி காட்சியில் வரும் பின்னணி இசை காமெடியை விட மோசமாக உள்ளது.

பாடல்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.. நிரா… நிரா.. என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

10 எண்றதுக்குள்ள.. பையா உள்ளிட்ட படங்களில் இது போன்ற நாயகன் – நாயகி கார் சேசிங் சீன்களை பார்த்திருப்போம்.

அதே கதையை கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்.

முதல் பாதையில் கதை சூடு பிடித்தாலும் இரண்டாம் பாதையில் கதை எங்கெங்கோ பயணிக்கிறது.. கலகலப்பு படத்தில் சந்தனம் – மனோபாலா சேசிங் சீன் இருக்கும் ஒன்று இருக்கும். அதை காப்பி அடித்தால் கூட இயக்குனர் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கலாம்.

ஆக டக்கர்.. டுபாக்கூர் ட்ரிப்

Takkar movie review and rating in tamil

வீரன் விமர்சனம் 3/5..; எலெக்ட்ரிக் எனர்ஜீக்காரன்

வீரன் விமர்சனம் 3/5..; எலெக்ட்ரிக் எனர்ஜீக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவண் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’.

கதைக்களம்…

ஹிப் ஹாப் ஆதியின் கேரக்டர் பெயர் குமரன். சிறுவயதில் இவர் மீது இடி விழுகிறது. அப்போது சுயநினைவை இழக்கிறார். இதன் பின்னர் சிகிச்சைக்காக தன் அக்காவுடன் சிங்கப்பூர் செல்கிறார்.

அங்கு குணமான பின்னர் தான் அவருக்கு தனக்குள் ஒரு எலக்ட்ரிக் பவர் கிடைத்திருப்பதை உணர்கிறார். இதனால் அவர் உடம்பில் சில பின் விளைவுகளும் ஏற்படுகிறது.

14 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய வீரனூர் கிராமத்திற்கு வருகிறார் ஆதி. காதலி நண்பன் என ஜாலியாக சுற்றி தெரியும் அவருக்கு அந்த ஊருக்கு ஆபத்து வருவதை தன் சக்தியால் உணர்கிறார்.

வீரனூர் கிராமத்தில் அமைக்கப்படும் தனியார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கேபிள்களால் பெரும் ஆபத்தாக வரவிருப்பதை உணர்கிறார்.

ஆனால் ஊர் மக்களும் அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் கைகூலிக்கு துணை போக ஆதி அதை தடுக்க முடியாமல் திணறுகிறார்.

ஒரு கட்டத்தில் வீரன் சாமி துணையுடன் தன்னுடைய எலக்ட்ரிக் பவர் எனர்ஜியுடன் அதை சாத்தியப்படுத்த நினைக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது.? கடவுள் கை கொடுத்தாரா? சயின்ஸ் கை கொடுத்ததா? என்ன செய்தார் ஆதி என்பதே கதை.

கேரக்டர்கள்….

குமரன் என்ற தன் கேரக்டரை அசால்டாக செய்து இருக்கிறார் ஆதி. எங்கும் மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஆனால் சூப்பர் ஹீரோ ஆன பின்னரும் அதே முகபாவனையுடன் வருவது ஏன் ஆதி?

ஒரு சூப்பர் எனர்ஜி கிடைத்தபின் தன்னுடைய உடம்பிலும் தன்னுடைய முகத்திலும் பெரும் மாற்றம் வந்தால் மட்டும் தான் அந்த கேரக்டருக்கு கை கொடுக்கும் என்பதை இயக்குனரும் நாயகனும் கவனிக்கவில்லையோ.?

சூப்பர் ஹீரோ கதைகளில் நாயகிக்கு பெரியதாக வேலை இருக்காது. ஆனால் இதில் நாயகனுடன் நாயகி எப்போது ஒட்டிக்கொண்டே வருகிறார். பெரிதாக வசனங்கள் இல்லை என்றாலும் ஆதிராவின் அழகும் நடிப்பும் நம்மை கவனிக்க வைக்கிறது.

சூப்பர் ஹீரோ கதைகளுக்கு வில்லன் கேரக்டர் மிகவும் வலுவுள்ளதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இதில் வினய் கேரக்டர் 10 நிமிடங்களே வந்து செல்கின்றன. அதை இன்னும் கொஞ்சம் மிரட்டலாக செய்து இருந்திருக்கலாம்.

ஆதியின் நண்பராக வரும் சசி என்பவர் கோவை பாஷையில் கலக்கியிருக்கிறார்.

செகன்ட் வில்லன் நடிகர் பத்ரியை பாராட்ட வேண்டும். இர்களுடன் நடிகர் செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பும் ஓகே.

கவுண்டமணி செந்தில் போல முனீஸ்காந்த் காளி வெங்கட் கேரக்டரை பயன்படுத்தி இருக்கலாம். ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. இன்னும் பட்டையை தீட்டினால் இவர்களின் கூட்டணி பெரிதாக வெற்றி பெறும்.

வீரனை மட்டும் நம்பும் முதியவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

ஆதிராவைப் பெண் பார்க்க வரும் முருகானந்த நடிப்பு படத்திற்கு பிளஸ்.. 38 வயதில் பெண் பார்க்கும்போது “பெண் கிடைக்க மாட்டாள் பொம்பள தான் கிடைப்பா” சொல்லுவாங்க.. இப்போ ரிசர்வ்ல ஓடிட்டு இருக்கு.. வண்டி எப்போ நிக்கும் என தெரியாது.? என்று அவர் கூறும் போது கல்யாணம் ஆகாத இளைஞர்கள் கண்டிப்பாக ஃபீல் பண்ணுவாங்க…

டெக்னீஷியன்கள்…

ஹாலிவுட்டில் நாம் பார்த்து வியந்த சூப்பர் ஹீரோ கதைகளை தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வகையில் தெய்வபக்தியுடன் கிராமத்து மண்வாசனையுடன் கலந்து கொடுத்துள்ளார் ஏவி ஆர் சரவன். இவர் மரகத நாணயம் என்ற சூப்பர் ஹிட்டை கொடுத்தவர்.

கடவுளை நம்பாதே.. உண்மையாக இரு என்ற வசனங்கள் ஆன்மீகவாதியை நிச்சயம் டென்ஷன் ஆக்கலாம்.

ஹிப் ஹாப் ஆதியின் இசை ஓர் அளவுக்கு மட்டுமே படத்திற்கு கை கொடுத்துள்ளது. பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. காமெடி காட்சிகளில் பின்னணி இசை போதுமானதாக இல்லை. ஆனால் வீரன் வரும் காட்சிகள் இசை ரசிக்க வைக்கிறது.

தீபக் டி. மேனனின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிக்கும் வகையில் உள்ளன. இரண்டாம் பாதியில் படத்தின் நீளத்தை எடிட்டர் வெட்டி எறிந்து இருக்கலாம்.

சிட்டியில் உள்ள மக்கள் இதுபோல பல சூப்பர் கதைகளை பார்த்திருப்பார்கள். ஆனால் கிராமத்து சிறுவர் சிறுமியருக்கும் கோவை மண்வாசனையுடன் கலந்து கொடுத்திருப்பதால் அவர்களை வெகுவாக ஈர்க்கும் என நம்பலாம். எனவே குழந்தைகளுக்கு இந்த வீரனை நிச்சயம் பிடிக்கும்.

ஆக.. வீரன்.. எலெக்ட்ரிக் எனர்ஜீக்காரன்

Veeran movie review and rating in tamil

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்.. 2/5.; முத்தையா வெத்தையா.. ஆர்யா தேறாதய்யா.!?

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்.. 2/5.; முத்தையா வெத்தையா.. ஆர்யா தேறாதய்யா.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் இனங்கள் மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போராட்டங்களை மையப்படுத்தியே இருக்கும்.. எனவே சுதாரித்துக் கொண்டு வாய்ஸ் ஓவரில் விளக்கம் கொடுத்துள்ளார் முத்தையா.
இந்த படம் பெண்ணுக்கு அடித்துக் கொள்ளும் கதை என முன்பே சொல்லி விடுகிறார்.

காதர் பாஷா என்ற இஸ்லாமிய பெயரும் முத்துராமலிங்கம் என்ற ஹிந்து பெயரும் ஏன் ஒருவருக்கு வைக்கப்பட்டது என்ற காரணத்தை நீங்கள் கேட்டால் எங்களிடம் பதில் இல்லை.. அதற்கு இந்த படத்திலும் பதில் கொடுக்கப்படவில்லை.

கதைக்களம்…

நாயகி தமிழ் (சித்தி இதானி)யின் குடும்பம் பெரிய குடும்பம். இரண்டு முறை மாமன்கள் இவரை கட்டிக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். இவர்கள் இருவரையும் மணக்க மனமில்லாமல் தவிக்கிறார்.

இவரைப் பெண் பார்க்க எவர் ஊருக்குள் நுழைந்தாலும் வெட்டுகிறார்கள். இந்த நிலையில் இவருக்கு உதவ வருகிறார் ஆர்யா (காதர் பாட்சா).

நாயகிக்கு நாயகன் உதவ என்ன காரணம்.? இவர்கள் இருவரும் யார்? முறைமாமன்கள் என்ன செய்தார்கள்.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த படம்.

கேரக்டர்கள்…

கிராமத்து கதை என்பதால் வேட்டியில் களம் இறங்கியுள்ளார் ஆர்யா. அடிதடி.. புழுதி பறக்க சண்டை.. கண்களில் தெறிக்கும் தீ என அதிரடி காட்டி உள்ளார் ஆர்யா.

சித்தி இத்னானி கிராமத்து பெண்ணாக அம்சமான நடிப்பை கொடுத்துள்ளார். சிரித்த முகத்துடனே நடித்திருப்பது சிறப்பு. இவருக்கு ரவீனா ரவி வாய்ஸ் கொடுத்துள்ளார். அதுவும் கூடுதல் கவனம் பெறுகிறது.

இஸ்லாமிய காதர் பாட்ஷாவாக பிரபு நடித்துள்ளார். தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார். ஆர்யா பிறக்கும் போது பிரபு அப்படியே இருக்கிறார். பாக்யராஜ் வயதான பிறகும் பிரபு அப்படியே தான் இருக்கிறார்.

பிரபு மகளாக வரும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் தன் நடிப்பில் கவனம் பெறுகிறார். அழகான முகத்தோடு அழவும் செய்து இருக்கிறார்.

சிங்கம்புலி ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். விக்னேஷ்காந்த், பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன் என ஒரு காட்சியில் வந்து செல்கிறார்கள்.

முக்கியமாக இந்த படத்திற்கு பிளாஷ்பேக் காட்சியே தேவையில்லை. கிளை கதைக்குள் கிளை கதையை வைத்து சோதித்துவிட்டார்.

விஜி, மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் உள்ளிட்ட பல வில்லிகளும் வில்லன்களும் உள்ளனர். ஒவ்வொருவரின் தோற்றமும் மிரட்டல் ஆகவே உள்ளது.. நல்லவேளை இந்த படத்தில் வேலராமமூர்த்தி இல்லை.

டெக்னீஷியன்கள்…

சென்டிமென்ட் காட்சி.. காமெடி காட்சி.. பாடல் காட்சி.. சண்டை காட்சி என அனைத்தும் கலவையாக கோர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கு நடுவே மற்ற காட்சிகளை மட்டும் திணித்து வைத்துள்ளதாக தெரிகிறது.

பஞ்சாயத்து காட்சிகளில் பிற்போக்கான சிந்தனைகள் நிறைந்துள்ளன. மேலும் பெண் சிசு கொலை ஏன்.?

அதேசமயம் ராமநாதபுரம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் வகையில் நிறைய காட்சிகளை வைத்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த உணர்வும் ஒட்டவில்லை.

அண்மையில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. ஆனால் காதர் பாஷா என்ற முத்துராமலிங்க படத்தில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

கறி குழம்பு என்ற பாடல் மட்டும் வழக்கம் போல முத்தையா பாணியில் உள்ளது. மற்றபடி பின்னணி இசையில் அனல் தெறிக்க விட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

ஸ்டண்ட் மாஸ்டர்’ அனல் அரசு : இவருக்கும் இவரது குழுவினருக்கும் டபுள் பேட்டா கொடுத்திருப்பார்கள். ஷூட்டிங் முடியும் வரை சண்டை போட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் போல.. ஆக்சன் பிரியர்களிடம் அப்ளாஸ் அள்ளும்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் : இவர் எப்போதுமே தன்னுடைய பங்கை சிறப்பாக நேர்த்தியாக செய்பவர். இந்த படத்திலும் கிராமத்து மண்வாசனையுடன் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் : எடிட்டிங் செய்யாமல் வெங்காயத்தை உரித்து கொண்டு இருந்தாரோ.? என்பது போல தோன்றுகிறது. முக்கியமாக படத்தின் முதல் காட்சியில் நாயகி யார் என்று தெரியாமல் தேடிச் செல்கிறார் ஆர்யா. ஆனால் பிளாஷ்பேக் காட்சியில் ஆர்யாவும் சித்தி இத்னானி சந்தித்துக் கொள்கிறார்கள். என்னய்யா லாஜிக்.?

கர்வம், கௌரவம் தான் முதல்ல அதுக்கு அப்புறம் தான் எல்லாம்” என்ன பஞ்ச் டயலாக் பேசுகிறார் ஆர்யா. ஆனால் அதில் ஓரளவு கூட கம்பீரமே இல்லை.

பெரும்பாலும் முத்தையா படங்களில் கொம்பன் மருது தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் பஞ்ச் வசனங்கள் அனல் தெறிக்கும். ஆனால் இதில் ஏதோ போகிற போக்கில் டயலாக் பேசுவது போலவே உள்ளது.

சண்டை காட்சிகள் மட்டும் கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது வரை உள்ளன.. சண்டையில் ஆரம்பித்து படம் சண்டையிலே முடிவடைகிறது..

ஆர்யாவுக்கு வேற கருப்பு கலரை தவிர வேற எந்த கலரும் கொடுக்கப்படவில்லை. கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, கருப்பு பனியன்.. கருப்பு ஜட்டி என படம் முழுக்க வருகிறார் ஆர்யா. (காஸ்ட்யூமர் கவனிக்க)

கிராமத்து மண்வாசனை.. மாமன் மச்சான் உறவு.. அண்ணன் தங்கை உறவு.. மாமன் மகள் உறவு.. அங்காளி பங்காளி சண்டை வெட்டு குத்து என எத்தனை படங்களில் தான் முத்தையா இதே ரூட்டில் பயணிப்பாரோ.? முத்தையா இனிமேல் இதெல்லாம் வெத்தையா.. ஆர்யா இதுபோல் நடித்தால் தேறாதய்யா! என சொல்லத் தோன்றுகிறது.

Kathar basha Endra Muthuramalingam movie review and rating in tamil

துரிதம் விமர்சனம் 3.25/5.. துரித பயணம்

துரிதம் விமர்சனம் 3.25/5.. துரித பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Sandiyan Jegan, Edan, A.Venkatesh, Bala Saravanan, Poo Ram, Raams, Vaishali, Srinikila, Aiswarya
Directed By : Srinivasan
Music By : Song – Isai Amuthan Background Music – Naresh
Produced By : Thiruvarul Jeganathan

கதைக்களம்…

நாயகன் ஜெகன் ஒரு கால் டாக்ஸி டிரைவர். நாயகி ஈடன் ஐடி ஊழியர். வேலை காரணமாக அடிக்கடி நாயகன் காரில் பயணிக்கிறார் நாயகி. இவருடன் தோழிகளான வைஷாலி , ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் தினசரி அலுவலகத்திற்கு பயணிப்பது வழக்கம்.

மணிக்கு ஒரு முறை போன் செய்து எங்க இருக்க? என்ன பண்ற? என கேட்கும் சுபாவம் கொண்டவர் நாயகியின் தந்தை வெங்கடேஷ்.

நாயகியை பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு காதல் வளர்கிறது. ஆனால் ஒரு கால் டாக்ஸி டிரைவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் நாயகி.

ஒரு நாள் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பைக்கில் நெடுந்தூரம் பயணிக்க நேர்கிறது. அப்போது நாயகி கடத்தப்படுகிறார்.

இறுதியில் என்ன ஆனது.? நாயகியை கண்டுபிடித்தாரா.? நாயகனின் காதல் நிறைவேறியதா? நாயகி யார்.? அவரை கடத்துபவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் ‘துரிதம்’ படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சண்டியர் படத்தில் நடித்த ஜெகன் தான் இந்த படத்தில் நாயகன். ஆக்சன் சேசிங் ரொமான்ஸ் ஏக்கம் என அனைத்தையும் சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

ஜெகனின் நண்பனாக பால சரவணன் இருவரும் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்ட்டி.

நாயகி ஈடனும் கதைக்கு ஈடுகொடுத்து தன் கேரக்டரை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மகளை சந்தேகப்பட்டு இப்படியே ஒரு டார்ச்சர் தந்தை இருப்பாரா? என பயப்படும் அளவுக்கு சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார் வெங்கடேஷ்.

ராம்ஸ் மற்றும் பூ ராமு ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளன.

டெக்னீஷியன்கள்…

இசை : நரேஷ்
இயக்குநர் : சீனிவாசன்
ஒளிப்பதிவாளர்கள் : வாசன் & அன்பு டென்னிஸ்.
படத்தொகுப்பாளர்கள் : நாகூரான் & சரவணன்..

நரேஷின் பின்னணி இசை கதையின் வேக ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துள்ளது.

முக்கியமாக ரோட்டில் பயணிக்கும் போது..் வேன் சீன் & பைக் & ஆட்டோ சீன்ஸ்என அனைத்தையும் ஒலிப்பதிவாளர்கள் திறம்பட நேர்த்தியாக படம் பிடித்துள்ளனர்.

துரிதம் என்ற தலைப்புக்கு ஏற்ப விறுவிறுப்பாக ரோட்டில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் சீனிவாசன். சிட்டியில் நடக்கும் காதலையும் கிராமத்தில் நடக்கும் சாதி மோதலையும் தன்னுடைய தன் திரைக்கதையில் பயணிக்க வைத்து துரிதப்படுத்தி இருக்கிறார்.

இறுதி காட்சியில் நாயகனை நாயகி பார்க்கும் அந்த காட்சி காதலர்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த ஒன்றாகும்.

ஆக… துரிதம்.. துரித பயணம்

#Thuritham from tomorrow in Cinemas..

#ThurithamFromJune2

#SandiyarJegan @actorjegan #EdenKuriakose @Bala_actor #Srinivasan #Naresh #Vasan #Nagooraan #Saravanan @tipsofficial @KskSelvaPRO

Thuridham movie review and rating in tamil

More Articles
Follows