சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம் 2.5/5 … கண்ணாமூச்சி விநாயகர்

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம் 2.5/5 … கண்ணாமூச்சி விநாயகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தெய்வ பக்தி நிறைந்தவர் ஊர்வசி. இவரது கணவர் குரு சோமசுந்தரம். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்களின் மகன் நாயகன் பாலு வர்கீஸ். மாலை கண் நோய் உடையவர்.

தன் குடும்ப கோயிலில் கைவிடப்பட்ட புராதான விநாயகர் சிலையை வைத்து ஒரு கோயில் கட்ட நினைக்கிறார் ஊர்வசி.

ஒரு கட்டத்தில் அந்த புராதான சிலையை தன்னுடைய வீட்டில் இருந்து திருடி அதை வைத்து புதிய தொழில் தொடங்க நினைக்கிறார் பாலு.

எனவே அந்த சிலையை விற்க திருடன் கலையரசனின் உதவியை நாடுகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது.? விநாயகர் சிலையை எப்படி விற்றார்கள்.? புராதான விநாயகர் சிலை என்ன ஆனது? சார்லஸ் என்ற கலையரசன் விற்றுக் கொடுத்தாரா? ஊர்வசி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார் ஊர்வசி. மாலைக்கண் உடைய மகனுக்காக கண்கலங்குவதும் விநாயகர் சிலைக்காக ஏங்குவதும் என தன் அனுபவ நடிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குரு சோமசுந்தரம் ஏதோ ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

கலையரசன் திருடனாக காட்டப்பட்டாலும் அவருடைய காட்சிகள் படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. மெதுவாக நகரும் திரைக்கதையில் கலையரசனின் நடிப்பு களை கட்டி உள்ளது.

ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து தான் நினைத்ததை சாதிக்கிறார் நாயகன் பாலு வர்கீஸ்.. இவரது காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டி இருந்தால் திரைக்கதையில் வேகம் எடுத்து இருக்கும்

சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவர் உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசன் ஜோடியான மிருதுளா ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு கேரள பகுதியை சென்னையாக காட்ட முயற்சித்திருக்கிறது. இதுதான் படத்தை ரசிகர்களிடம் ஒன்ற விமுயற்சித்துள்ளது.

முழுக்க முழுக்க இது கேரளாவை காட்டி இருக்கலாம் அல்லது கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி உள்ளிட்டவைகளை காட்டி இருக்கலாம். சென்னை கேரளா என எங்கோ செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது நெருடலாக உள்ளது.

இசையமைப்பாளர் சுப்ரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்துள்ளது

அச்சு விஜயணின் படத்தொகுப்பு தொகுப்புதான் இந்த திரைக்கதைக்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் படத்தை பார்ப்பதற்கு போதுமானதாக அமைந்திருக்கும்

விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.

என் பெயரில் கடை வைக்கலாம், ஆனால் நான் தான் இங்கு கடை வைக்க முடியாது. காரணம் நான் திருடன்.. என கலையரசன் பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

அடுத்தவர் வீட்டில் திருடுவது என்றால் கடினம். தன் வீட்டில் எளிதாக திருடி இருக்கலாம்.. காருக்குள் சிலையை வைப்பது.. சிசிடிவி இருப்பதால் பின்னர அதை எடுக்க முடியாமல் தவிப்பது என காட்சிகளை நீட்ட்ட்ட்ட்டி இருப்பதால் போர் அடிக்கிறது மேலும் அதில் பெரிதாக சுவாரசியமும் இல்லை என்பது தான் வருத்தம்.

ஆக இந்த சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்.. கண்ணாமூச்சி விநாயகர்

Charles Enterprises movie review and rating in tamil

எறும்பு விமர்சனம் 3.5/5.. எளியவர்களின் ஏணி

எறும்பு விமர்சனம் 3.5/5.. எளியவர்களின் ஏணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் சுரேஷ் ஜி இயக்கிய படம் தான் ‘எறும்பு’.

கதைக்களம்…

சார்லி – இவரது முதல் மனைவிக்கு மோனிகா மற்றும் சக்தி ரித்திக் என இரு குழந்தைகள். முதல் மனைவி இறந்து விடவே 2வதாக சூசன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

தன் அம்மா மனைவி தன் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார் சார்லி.

பெரிதாக வருமான இல்லாத காரணத்தினால் கரும்பு வெட்டும் வேலைக்கும் செல்கிறார். இதனிடையில் எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார்.

இதனால் எம்.எஸ். பாஸ்கர் கெடு விதிக்கிறார். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை கொடுக்காவிட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என மிரட்டுகிறார்.

இந்த சூழ்நிலையில் தன் மனைவி சூசனை அழைத்துக் கொண்டு கரும்பு வெட்டும் வேலைக்கு மூன்று வாரங்கள் வெளியூர் செல்கிறார் சார்லி.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சக்தி எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள தங்க மோதிரத்தை தொலைத்து விடுகின்றான்.

சித்திக்கு பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தங்களது சித்தி வருவதற்குள் ஒரு புதிய தங்க மோதிரத்தை வாங்க நினைக்கின்றனர்.

தம்பிக்கு உதவ அக்காவும் முற்படுகிறார். அவர்கள் என்ன செய்தனர்? சித்தி வருவதற்குள் மோதிரத்தை வாங்கி விட்டார்களா? எப்படி வாங்கினார்கள்? கடனை எப்படி அடைத்தார்கள்? பணம் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சார்லி மற்றும் சூசன் ஆகிய இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அனுபவ நடிப்பால் உணர்ந்து சிறப்பாகவே கொடுத்துள்ளனர்.

ஏழை வீட்டின் செல்வமே அவர்களின் குழந்தைகள் தான். அதை உணர்ந்து மோனிகா – சக்தி நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர். மேலும் தன் தம்பிக்கு உதவ மோனிகா எடுக்கும் ஒவ்வொன்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படி ஒரு அக்கா நமக்கு இருக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார்.

ஒருவரிடம் பணம் பெறும்போதே சார்லியிடம் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்க் வருகிறது.

எம் எஸ் பாஸ்கருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் பணம் கொடுத்தவரின் வேதனையை புரிய வைக்கிறார்.. பணம் வாங்கும்போது மட்டும் கெஞ்சி கேட்கும் மக்கள் பணத்தை தர மறுப்பது எந்த வீட்டில் நியாயம் என்ற வசனங்கள் பளிச்சிடுகிறது.

இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். ஒரு டம்மி செல்போனை வைத்துக் கொண்டு இவர் பேசும் காட்சிகள் சிரிப்பலை. மோனிகா – சக்திக்கு ஜார்ஜ் உதவும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கும்.

பாட்டி பறவை சுந்தரம்பாள், கங்கானியாக நடித்திருக்கும் ஜெகன் ஆகியோரும் நல்ல தேர்வு.

டெக்னீஷியன்கள்…

இசை அருண் ராஜ்.. பின்னணி செய்யும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன ஒரு கிராமத்து மண்வாசனைடன் தன் இசையை பகிர்ந்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு இயக்குனர் : கே எஸ் காளிதாஸ்.. காட்டு மன்னார் கோயிலின் அழகை கவிதையாக படம் பிடித்துள்ளார். முக்கியமாக படத்தில் காட்டப்படும் முயல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஒரு ஏழை குடும்பத்தில் ஒரு தங்கத்தின் விலை மதிப்பற்றது என்பதை காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார் சுரேஷ் ஜி.

அதேசமயம் இந்த படத்திற்கு எறும்பு என்று தலைப்பு வைத்ததை விட முயல் என வைத்து இருக்கலாம்.. முயல் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை செய்துள்ளது எனலாம்.

ஆனால் எறும்பு என்பது சிறுக சிறுக சேமிக்கும் ஒரு உயிரினமாகும். மேலும் தன் சக்திக்கு மீறி 40 மடங்கு எடையை தூக்கும் வலிமை கொண்டது எறும்பு.

இந்த குழந்தைகள் தங்கள் சக்திக்கு மீறி செயையும் செயலை உணர்த்தவே எறும்பு என தலைப்பு வைத்திருக்கிறார்.

ஆக.. எறும்பு.. எளியவர்களின் ஏணி

erumbu movie review and rating in tamil

விமானம் விமர்சனம் 3/5.. வாழ்க்கை பயணம்

விமானம் விமர்சனம் 3/5.. வாழ்க்கை பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

தன் மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் ஒரு ஏழை தந்தையின் கதை இந்த விமானம்.

நடிப்பு – சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், மொட்ட ராஜேந்திரன், தன்ராஜ், அன்சுயா பரத்வாஜ் மற்றும் ராகுல் ராமகிருஷ்ணா.

பாடல்கள் – சிநேகன்

இசை – சரண் அர்ஜுன்

தயாரிப்பு – கிரண் கொர்ராபட்டி கிரியேட்டிவ் ஒர்க்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்

இயக்கம் – சிவ பிரசாத் யனலா

கதைக்களம்…

விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு குடிசைப் பகுதியில் தன் மகனுடன் வசித்து வருகிறார் மாற்றித்திறனாளி சமுத்திரக்கனி. இவர் அந்த பகுதியில் உள்ள கட்டண கழிப்பிடத்தை நிர்வகித்து வருகிறார்.

இவரது நண்பர்கள் ஆட்டோ டிரைவர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர்களது வீட்டு அருகே விலைமாது பெண் வசிக்கிறார்.

சமுத்திரக்கனியின் மகன் விமானத்தில் பறக்க ஆசைப்படுகிறான். எப்போதும் விமான நினைவாகவே அவன் இருக்கிறான். பைலட் ஆகவும் ஆசைப்படுகிறான்.

தன் தந்தையின் வறுமையை உணர்ந்த மகன் துருவன் நன்றாக படித்து சைனிக் பள்ளியில் படிக்க தேர்வாகிறான்.

இந்த நிலையில் ‘லுகேமியா’ என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறான் துருவன். இன்னும் சில நாட்களே அவன் உயிரோடு இருப்பான் என டாக்டர்கள் சொன்ன நிலையில் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற பாடுபடுகிறார் சமுத்திரக்கனி.

விமானத்தில் சென்று வர ரூ 10000 பணம் தேவைப்படுகிறது.

இறுதியில் என்ன ஆனது.? தன் மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றினாரா சமுத்திரக்கனி.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இது போன்ற கேரக்டர்களை ஒரு முன்னணி நடிகர் ஏற்பதில்லை. அதற்காகவே சமுத்திரக்கனியை பாராட்டலாம்.

தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு வலு கொடுத்து நிமிர்த்தி நிற்கச் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன் மகனுக்காக அவரும் உருகி நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

மகனாக துருவன் நடித்திருக்கிறான். பள்ளியில் சிறந்த மாணவனாக பாசமிக்க மகனாகவும் வாழ்ந்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவராக தன்ராஜ்.. செருப்பு தைக்கும் தொழிலாளியாக ராகுல் ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். இருவரது கதாபாத்திரமும் படத்திற்கு வலு சேர்த்துள்ளன.

விலைமாதுவாக அன்சுயா பரத்வாஜ் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் குழந்தைகளுடன் பார்க்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு நெருடலை ஏற்படுத்தும்.

‘விமானம்’ படத்துடன் ஒட்டாத கேரக்டரில் மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் மீரா ஜாஸ்மின். அவரது கேரக்டர் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் – சரண் அர்ஜுன்
கலை இயக்குனர் – ஜே கே மூர்த்தி
படத்தொகுப்பு – மார்த்தாண்ட் கே வெங்கடேஷ்
இயக்கம் – சிவ பிரசாத் யனலா

சினேகன் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள் படத்திற்கு பலம். பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. கலை இயக்குனரின் செட் இது சினிமா செட் என்பதை காட்டுகிறது.

இது ஒரு தெலுங்கு படம் என்பதை முதல் காட்சி முதலே தோன்ற வைத்து விடுகிறது.

சமுத்திரக்கனி உள்ளிட்ட எல்லாருடைய உதட்டு அசைவுகளில் வசனங்கள் ஒட்டவில்லை என்பதால் நம் மனதிலும் பெரிதாக ஒட்டவில்லை.

விமானத்தில் பறப்பது என்பது ஒரு ஏழை குடும்பத்திற்கு எத்தகைய சவால் என்பதை அவர்கள் வாழ்வின் இருப்பிடத்திற்கே அழைத்துச் அழைத்துச் சென்று நமக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் சிவ பிரசாத் யனலா.

ஆக இந்த விமானம்.. வாழ்க்கை பயணம்

Vimanam movie review and rating in tamil

பெல் விமர்சனம். ஆரோக்கிய அலாரம் அடித்ததா.?!

பெல் விமர்சனம். ஆரோக்கிய அலாரம் அடித்ததா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கை மருத்துவ சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படமாக ‘பெல்’ உருவாகியுள்ளது.

கதைக்களம்…

குரு சோமசுந்தரம் ஆரண்ய ஆர்கானிக் பார்ம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கார்ப்பரேட் பிசினஸ்க்கு ஒரு முக்கியமான மூலிகை ஒன்று தேவைப்படுகிறது.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அந்த மூலிகையை அங்கு வசிக்கும் நித்திஷ் வீராவிடம் (இவர்தான் பெல்) எடுத்து வர கட்டளையிடுகிறார். நிசம்பசூரிணி என்ற மூலிகையை எடுத்து வர சொல்கிறார்.

நித்திஷிடம் குரு சோமசுந்தரம் அதை சொல்ல என்ன காரணம்.? என்ற ஒரு பிளாஷ்பேக் கதையும் பயணிக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க.. நிதிஷ் பார்வையற்றவர்.. இவரது பார்வையில் தான் இப்படி இருப்போம் என நினைத்து ஒரு உருவத்தை கற்பனை செய்து கொள்கிறார்.. அவர்தான் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்.

ஒரு பக்கம் காதல்.. மூலிகை மருத்துவம் என கதை பயணிக்க.. மற்றொரு புறம் கார்ப்பரேட் பிசினஸ்.. இயற்கை வளம் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இறுதியில் என்ன ஆனது மூலிகை கொண்டுவரப்பட்டதா.? பிசினஸ் சாத்தியப்பட்டதா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பல படங்களில் நாம் சாதுவாக பார்த்த குரு சோமசுந்தரம் இதில் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.. அவரது சிரிப்பு பழைய கால வில்லன்களை நினைவுபடுத்துகிறது அதை தவிர்த்து இருக்கலாம்.

நிதிஷ் வீரா வளர்ந்த பிறகும் அதே இளமையுடன் குரு சோமசுந்தரம் இருப்பதன் காரணம் ? கொஞ்சம் முதுமையை காட்டி இருக்கலாம்.

பார்வையற்றவராக நடித்திருக்கும் நிதிஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இருந்தாலும் பல விஷயங்களை இவர்கள் முன்கூட்டியே சொல்வது ஏற்புடையதாக இல்லை.

நாயகிகளுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் பாடலுக்கும் கதை ஓட்டத்திற்கும் உதவியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

பெல் படத்திற்கு வெயிலோன்‌ கதை வசனம்‌ அமைக்க, பரணிக்கண்ணன்‌ ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட்‌ இசையில் இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கியுள்ளார்.

படத்தொகுப்பாளராக தியாகராஜனும், சண்டை பயிற்சியாளராக ஃபயர் கார்த்திக்கும் பணியாற்றியுள்ளனர். பாடல்களை பீட்டர் ராஜ் எழுத தினா நடனம் அமைத்துள்ளார். பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவு சிறப்பு.. ஆனால் படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி சுமாராகவே உள்ளன..

தமிழர்கள் மறந்து போன சித்த மருத்துவத்தை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர்.

ஆனால் திரைக்கதை அமைத்து விதத்தில் கூடுதல் தடுமாற்றம்.

ஆனால் பார்வையற்றவர்கள் பார்வையில் அவரின் முகம் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் காட்டியிருப்பது சிறப்பு. அது சில நேரத்திற்கு குழப்பமான மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தலாம்.

மற்றபடி இந்த பெல் சிறப்பாக அடித்திருந்தால் மணி ஓசை அதிகமாகவே ரசிக்கும் படி கேட்டிருக்கும்.

Bell movie review and rating in tamil

போர் தொழில் 3.75/5.. போலீஸ் டைரி

போர் தொழில் 3.75/5.. போலீஸ் டைரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இளம் பெண்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுகிறார்கள்.. அந்த சீரியல் கில்லரை தேடும் காவலர்கள் பற்றிய விசாரணை தான் இந்த போர் தொழில்.

கதைக்களம்…

தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு ஒரே மாதிரியான முறையில் கொல்லப்படுகிறார்கள். எந்த ஒரு தடயமும் இல்லாமல் இளம் பெண்கள் கொல்லப்படுவதால் திருச்சி நகரமே பரபரப்பாகிறது.

இந்த சீரியல் கில்லரை கண்டுபிடிக்க அதற்கான காரணத்தை அறிய சீனியர் போலீஸ் ஆபீஸர் சரத்குமார் மற்றும் இளம் போலீஸ் அசோக் செல்வன் இருவரும் நியமிக்கப்படுகின்றனர்.

விசாரணையில் சீரியல் கில்லரை கண்டுபிடித்தார்களா.? அவனின் நோக்கம் என்ன.? பெண்களை மட்டும் குறி வைப்பதன் காரணம் என்ன.? யார் அவன் என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை 40+க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸாக சரத்குமார் நடித்தாலும் இந்தப் ‘போர் தொழில்’ படத்தில் முற்றிலும் தன் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் சரத்குமார்.

ஒரு சீனியர் ஆபீசருக்கு உள்ள நிதானம் விவேகம் அனைத்தையும் சரியாக கலந்து கொடுத்து இருக்கிறார் சபாஷ் சாரே.

பயந்த சுபாவம் கொண்ட ஓர் இளைஞன் திடீரென போலீஸ் ஆனால் அவனின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை தன் கேரக்டரில் உணர்த்தியிருக்கிறார் அசோக்.

முறுக்கு மீசை.. டைட்டான ஷர்ட் என எந்த சினிமாத்தனமும் இல்லாமல் பக்கா சேவிங் செய்து தன் கேரக்டரை பக்காவாக செய்து இருக்கிறார் அசோக் செல்வன்.

இது போன்ற போலீஸ் விசாரணை படங்களில் நாயகிக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. நிகிலா விமல் கேரக்டர் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

முக்கியமான கேரக்டரில் மறைந்த நடிகர் சரத்பாபு நடித்திருக்கிறார். அவர் மறைந்துவிட்டாலும் இந்த கேரக்டர் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும்.

பி எல் தேனப்பன் சிறிது நேரமே வந்தாலும் தன்னுடைய கேரக்டரை தேனாகவே கொடுத்திருக்கிறார்.

சீரியல் கில்லர் தன் கேரக்டரை மிரட்டலாக கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

கலைச்செல்வன் சிவாஜி – ஒளிப்பதிவு

ஸ்ரீஜித் சாரங்கி – படத்தொகுப்பு

ஆக்சன் – பீனிக்ஸ் பிரபு

சச்சின் சுதாகரன் & ஹரிஹரன் – சவுண்ட் எஃபெக்ட்ஸ்

விக்னேஷ் ராஜா – இயக்குநர்

ஜேக்ஸ் பிஜோய் – பின்னணி இசை

மேற்கண்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணியை பாராட்டும் வகையில் செய்துள்ளனர்.

இது போன்ற திரில்லர் கதைகளுக்கு பின்னணி உசைதான் பலம். அதை உணர்ந்து இசையால் மிரட்டி இருக்கிறார் ஜேக்ஸ் பிஜோய்.

தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள் என பரபரப்பான காட்சிகளை கேமராவில் படம் பிடித்து பரபரப்பை கூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி.

எடிட்டரை பொருத்தவரை பிளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் கட் செய்து இருக்கலாம்.

சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒருவன் பிற்காலத்தில் சமூகத்தில் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறான் என்பதை படமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

ஆனால் இடைவேளையில் இந்த மர்மம் முடிச்சுகளை அவிழ்த்து விட்டதுதான் ஏமாற்றம் அளிக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

தொடர் கொலைகளை செய்யும் ஒருவனுக்கு இன்னும் அழுத்தமான காரணங்களை கொடுத்திருக்கலாம். தன்னுடைய குடும்பத்திற்காக அப்பாவி பெண்கள் கொலை செய்வது எந்த வித நியாயம்.?

ஆல்ஃபிரட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜா ஆகியோரின் வஙிமையான எழுத்து பாராட்டுக்குரியது.

கிளைமாக்ஸ் காட்சியில் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் தம்பதியரை பார்த்து “நீங்க உங்க வேலைய சரியா செஞ்சிங்கனா எங்க வேலை குறைஞ்சிடும்” என்ற அசோக் செல்வன் சொல்வது பலருக்கு பாடம். எனவே அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு அப்ளாஸ் கொடுக்கலாம்..

ஆக போர் தொழில்.. போலீஸ் டைரி

Por Thozhil movie review and rating in tamil

டக்கர் விமர்சனம் 1.5/5 – மக்கர் ட்ரிப்

டக்கர் விமர்சனம் 1.5/5 – மக்கர் ட்ரிப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எதையாவது செய்து பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நாயகன்.. பணம் கோடி கோடியாக கொட்டி கிடந்தாலும் நிம்மதியான வாழ்க்கை இல்லையே என புலம்பும் நாயகி.. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு செல்லும் பயணமே இந்த டக்கர்.

கதைக்களம்..

காஸ்ட்லியான வாடகை கார் ஓட்டும் நபர் சித்தார்த். ஒரு கட்டத்தில் ஓனரை பகைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அந்த கார் டிக்கியில் நாயகி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு கும்பல் நாயகியை துரத்த அவர்களிடம் இருந்து ஹீரோ அந்த பெண்ணை காப்பாற்றினாரா.? ஏன் காப்பாற்றினார்.? என்பதுதான் இந்த ரோடு ட்ரிப்.. ( இதே போன்ற கதையை நீங்கள் பல படங்களில் பார்த்திருந்தால் நாங்கள் பொறுப்பல்ல.)

கேரக்டர்கள்…

சாக்லேட் பாய்.. ரொமான்டிக் ஹீரோ என அடையாளப்படுத்தப்பட்ட சித்தார்த் இதில் சீரும் சிங்கமாக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பயந்த சுபாவம் திடீரென ஆக்ஷன் என அந்நியன் போல மாற முயற்சித்து அதில் சோதித்து விட்டார்.

நாயகி தியான்ஷா கௌசிக்.. சிகரெட் அடித்துக் கொண்டு செக்ஸ் என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்பது போன்ற அடாவடி பெண். ஆனால் கிளைமாக்ஸில் இவரும் வழக்கமான நாயகி என்பதை காட்டிவிட்டார் இயக்குனர்.

வில்லனாக அபிமன்யுசிங்.. இவரும் இந்த ரோடு ட்ரிப்பில் தன்னை ஒரு காமெடியனாக ட்ராக் மாற்ற முயற்சித்துள்ளார்.. அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.

இவர்கள் இல்லாமல் காமெடியன்களாக யோகி பாபு, முனிஷ்காந்த், ஆர் ஜே விக்னேஷ் நடித்துள்ளனர். இதில் யோகி பாபு மட்டும் சில இடங்களில் சிரிக்க வைத்து செய்கிறார்.

ஆர் ஜே விக்கி.. ஒரு பிரெண்ட் கேரக்டர் என்ன செய்ய வேண்டுமோ அதை ஓரளவு செய்திருந்தால் கூட திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.. ஆனால் சோதித்துவிட்டார்.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் – நிவாஸ் கே.பிரசன்னா

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன்.

படத்தொகுப்பாளர் ஜி.ஏ.கௌதம்

ஆக்சன் – தினேஷ் காசி

இயக்குநர் – கார்த்திக் ஜி க்ரிஷ்

படத்தின் ஒளிப்பதிவாளர் தான் வாங்கிய சம்பளத்திற்கு நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்.. ஒரு ரோடு பயணத்தை அழகாக வேகமாக காட்ட முயற்சித்துள்ளார்.

கதை முடிந்த பின்னரும் காட்டப்படும் காட்சிகளை எடிட்டர் வெட்டி எறிந்து இருக்கலாம்.

ஆக்சன் காட்சிகளில் மட்டும் பின்னணி இசையில் நம் கவனத்தை ஈர்க்கிறார் நிவாஸ் கே.பிரசன்னா. ஆனால் காமெடி காட்சியில் வரும் பின்னணி இசை காமெடியை விட மோசமாக உள்ளது.

பாடல்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.. நிரா… நிரா.. என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

10 எண்றதுக்குள்ள.. பையா உள்ளிட்ட படங்களில் இது போன்ற நாயகன் – நாயகி கார் சேசிங் சீன்களை பார்த்திருப்போம்.

அதே கதையை கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்.

முதல் பாதையில் கதை சூடு பிடித்தாலும் இரண்டாம் பாதையில் கதை எங்கெங்கோ பயணிக்கிறது.. கலகலப்பு படத்தில் சந்தனம் – மனோபாலா சேசிங் சீன் இருக்கும் ஒன்று இருக்கும். அதை காப்பி அடித்தால் கூட இயக்குனர் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கலாம்.

ஆக டக்கர்.. டுபாக்கூர் ட்ரிப்

Takkar movie review and rating in tamil

More Articles
Follows