தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்.; மலையாள மசாலா.? கிச்சன் கிளிகள்.!

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்.; மலையாள மசாலா.? கிச்சன் கிளிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அடுப்படியில் தினந்தோறும் வேர்வை சொட்ட சொட்ட குடும்பத்திற்காகவே வாழும் பல பெண்களின் கண்ணீர் கதை..

கதைக்களம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கணவர் ராகுல் ரவி.. மாமனார் மாமியார் என ஒரு குடும்பம். இந்த குடும்பத்திற்கு வகை வகையாக சமைப்பது.. வீட்டை துடைப்பது.. பாத்திரம் கழுவுவது என தினசரி வாழ்க்கையில் தன் கனவுகளை துறந்து வேலை செய்கிறார் ஐஸ்வர்யா.

ஆனால் கணவரிடம் இருந்து எந்த ஒரு உதவியும் படுக்கை அறையிலும் சமையலறையிலும் கிடைக்காத போது வெறுத்துப் போகும் ஐஸ்வர்யா என்ன செய்தார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நவரசம் காட்டி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தன் கனவுகளை புதைத்து கணவனுக்காகவே வாழும் பல பெண்களை பிரதிபலிக்கிறார் ஐஸ்வர்யா.

காய்கறி வெட்டுவது.. காலை டிபன் சமைப்பது.. பாத்திரம் கழுவுவது.. பின்னர் காய் வெட்டுவது.. மதியம் சாப்பாடு சமைப்பது.. பாத்திரம் கழுவுவது.. பின்னர் காய்கறி வெட்டுவது… என காட்சிகளை திரும்ப திரும்ப வைப்பது சோர்வடைய வைக்கிறது.

கணவர் ராகுல் ரவிந்தர் பள்ளிக்கூட ஆசிரியர் என்ற காட்சியை காட்டியிருப்பது சிறப்பு..

இரவில்.. லைட்டை அணைக்கவா.?. லைட்டை அணைக்கவா.? என்ற வசனங்களை நாயகன் பேசும்போது சில ஆணாதிக்க நபர்களை அப்பட்டமாக காட்டி இருக்கிறார்.. முக்கியமாக படுக்கையில் தொடுதல்.. தடவல் (FOREPLAY) வேண்டாம்.. அது மட்டுமே வேண்டும் என்ற சில கணவன்மார்களின் ரசனையையும் காட்டி இருக்கிறார்.

மாமனாராக போஸ்டர் நந்தகுமார். வாஷிங்மெஷினில் துவைக்க கூடாது.. விறகு அடுப்பில் தான் சமைக்க வேண்டும் என கண்டிஷன்கள் போடும் மாமனராக நடித்திருக்கிறார்..

மற்றபடி மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையல் அறைக்கு வரக்கூடாது என்ற காட்சிகள் இன்றைய ட்ரெண்டுக்கு நம்பும்படியாக இல்லை..

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிந்து கவனிக்கப்பட வைக்கிறார்.. ராகுலின் தங்கையாக வரும் சிந்துவுக்கு இன்னும் கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

படத்தை இயக்கியிருப்பவர் ஆர். கண்ணன்.

மலையாள சினிமாவில் மிகவும் நடுத்தர குடும்பமாக வீடு அமைக்கப்பட்டு இருக்கும். அதற்கு ஏற்ப விறகு அடுப்பு… கையால் துணி துவைத்தல் போன்ற காட்சிகள் இருக்கும்..

ஆனால் தமிழில் ஒரு பணக்கார குடும்பமாக காட்டப்பட்டுள்ளது.. அப்படி இருக்கையில் விறகு அடுப்பு காட்சிகள் ஏற்புடையதாக இல்லை.. மேலும் பணக்கார குடும்பத்தில் பெரும்பாலும் யாரும் கையால் துணிகளை துவைப்பது இல்லை..

குடும்பத்தில் மொத்தமே ஒரு தம்பதி அவரது மகன் மருமகள் ஆகிய 4 பேரை மட்டுமே காட்டுகிறார்கள்.. ஆனால் வசனங்களில்.. ஐஸ்வர்யாவின் அம்மா.. “அது பெரிய குடும்பம்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என சொல்கிறார்..

நான்கு பேர் பெரிய குடும்பமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. மலையாளத்தில் இருந்த உணர்வு இந்தப் படத்தில் துளி கூட இல்லை..

ஐஸ்வர்யாவின் தோற்றம் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தாலும் மற்ற கேரக்டர்கள் தேர்வு சரியாக இல்லை..

ஆண்கள் மாறவே மாட்டார்கள்.. பெண்கள் நினைத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் மாற்றம் வரும் என கிளைமாக்ஸ் காட்சி காட்டப்பட்டுள்ளது..

பெண்களை எப்போதுமே கிச்சனில் வைத்திருக்கும் ஆண்கள் இந்த படத்தை பார்த்து திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி.. அந்தப் பெண் தன் அம்மாவாக இருக்கலாம்.. மனைவியாக இருக்கலாம்… சகோதரியாக இருக்கலாம்..

யாராக இருந்தாலும்.. தண்ணி கொண்டு வா… அதை செய்.. இதை செய் என்று வேலை வாங்கும் ஆண்களுக்கு இது ஒரு நெத்தியடி படம்..

படத்தின் கிளைமாக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது..

கிச்சனில் சிக்கித் தவிக்கும் பெண் கிளிகள் பற்றிய கதைதான் இந்த படம்… ஆக மலையாள மசாலா தமிழுக்கு செட் ஆகல…

The Great Indian Kitchen movie review and rating in tamil

தலைக்கூத்தல் விமர்சனம் 4/5.; குடும்பத் தலைவன்

தலைக்கூத்தல் விமர்சனம் 4/5.; குடும்பத் தலைவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பல மாதங்களாக படுத்த படுக்கையாக கிடக்கும் தன் தந்தைக்கு மகன் என்ன செய்கிறார்? அவரை கருணை கொலை செய்ய சொல்கின்றன உறவினர்கள்.. சமுத்திரக்கனி என்ன செய்தார்.? இதுவே படத்தின் ஒன்லைன்..

கதைக்களம்…

சமுத்திரக்கனி அவரது மனைவி வசுந்தரா இவர்களுக்கு ஒரு மகள். ஒரு விபத்தில் சமுத்திரக்கனியின் தந்தை காயம் அடைய படுத்த படுக்கையாகி விடுகிறார்.

இதனால் தந்தைக்கு பணிவிடை செய்ய பகலில் வீட்டில் இருக்கிறார் சமுத்திரக்கனி. இரவில் ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார்.

எனவே வசுந்தரா பகலில் தீப்பெட்டி தொழிற்சாலை வேலைக்கு செல்கிறார்.

இது பிடிக்காத வசந்தராவின் தந்தை சமுத்திரக்கனியின் தந்தையை கருணை கொலை செய்ய சொல்கிறார். இதனை மறுக்கிறார் சமுத்திரக்கனி.

பிறகு என்ன ஆனது என்பதே இந்த கதை.

ஒரு புறம் இருக்க கதிரின் காதல் கதை ஓட்டம் நகர்கிறது.. கதிர் யார் அவரின் காதலி யார் என்பதை சுவாரசியமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

கேரக்டர்கள்…

ஆக்ஷன் ஹீரோ என அறியப்பட்ட சமுத்திரக்கனி இதில் ஒரு யதார்த்த மனிதராக வாழ்ந்து இருக்கிறார்.. அப்பாவை நேசிக்கும் பாசமுள்ள மகனாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்..

தந்தைக்கு பணிவிடை செய்யும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதை வருடும்.

வசுந்தரா ஒரு இல்லத்தரசியாக யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார்.. இவர்களுடன் வசுந்தராவின் அப்பா தம்பி மகள் உள்ளிட்டோரின் பங்களிப்பும் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக இருக்கின்றன.

டெக்னீசியன்கள்..

லென்ஸ் படத்தை இயக்கிய ஜே பி என்ற ஜெயபிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்..

நாம் பார்க்க மறந்து போன கிராமத்து மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

ஒரு ஏழையின் வீடு எப்படி இருக்குமோ அதை தத்துரூபமாக செய்திருக்கிறார் கலை இயக்குனர்.

இந்த படத்திற்கு பெரிய பலமாக கருதப்படுவது பின்னணி இசை. லைவ் மியூசிக் கொடுத்து காட்சிகளை அப்படியே மனதில் பதிய வைக்கிறார் சவுண்ட் இன்ஜினியர் ராஜேஷ்.

இந்த தலைக்கூத்தல் என்ற சடங்கு ஒழிக்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் தமிழ்நாட்டில் எங்கோ ஒன்று அவ்வப்போது நடக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இந்த படம் மூலம் இது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ஆக இந்த தலைக்கூத்தல்.. குடும்ப தலைவன்

Thalaikoothal movie review and rating in Tamil

பொம்மை நாயகி விமர்சனம்.. 3.5/5..; நீதி தேவதை

பொம்மை நாயகி விமர்சனம்.. 3.5/5..; நீதி தேவதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

யோகி பாபுவின் 9 வயது மகள் ஸ்ரீமதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட அதற்கு நீதி கிடைக்க வேண்டி போராடும் கதைக்களமே இந்த பொம்மை நாயகி.

கதைக்களம்…

ஒரு டீ கடையில் வேலை செய்யும் ஏழை கூலித் தொழிலாளி யோகிபாபு. இவரது 9 வயது மகள் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.

இதனையடுத்து உயர் ஜாதியினர் பஞ்சாயத்து செய்ய, ஒரு நேர்மையான மனிதர் மூலம் போலீசில் புகார் கொடுக்க செல்கிறார் யோகி பாபு.

ஆனால் காவல்துறையும் உயர்சாதிக்கு ஜால்ரா அடிக்க நீதிமன்றத்தை நாடுகிறார் யோகி பாபு.

தன் மகளுக்கு நீதி கிடைக்கப்பெற்றாரா? போலீசும் அரசியலும் சேர்ந்த கூட்டணி வென்றதா.? அல்லது நீதிமன்றம் வென்றதா.? என்பதே இப்படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பல படங்களில் காமெடியனாக நாம் பார்த்து ரசித்த யோகி பாபு இந்த படத்தில் முழுக்க முழுக்க சீரியஸாக நடித்திருக்கிறார். பாசமான தைரியமான தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார்.

ஆனால் போதுமான உணர்ச்சிகளை அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. முக்கியமாக ஒரு காட்சியில் அவர் பின்னே கேமரா சென்று கொண்டே இருக்கும்.. அந்த காட்சியில் யோகி பாபு அழுவது போல் காண்பிக்கப்பட்டாலும் அவர் முகத்தை கூட காண்பிக்கவில்லை.

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. உணர்ச்சிமிக்க நடிப்பு

மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி சிறப்பு மதி. அம்மாவை விட அப்பாவிடம் காட்டும்
பாசம் ரசிக்க வைக்கிறது. நீதிபதியிடம் இவர் கேட்கும் கேள்வி சூப்பர்.

தாத்தாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

டெக்னீஷியன்கள்…

நீதிமன்ற காட்சிகள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. யோகி பாபுவின் வக்கீல் நடித்திருக்கும் அந்த பெண்மணி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

என்னதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் அதன் பின்னர் ஜாமீன் பெயில் உள்ளிட்டவை இருப்பதால் குற்றவாளிகளுக்கு குதூகலமே என்பதை இயக்குனர் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு தீர்வு என்ன என்பதையும் கிளைமாக்ஸில் ஆணித்தரமாக சொல்லி இருப்பது கூடுதல் சிறப்பு.

மேலும் சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் எப்படி எல்லாம் சாதகமாகிறது என்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷான்.

ஒளிப்பதிவு -அதிசயராஜ்,
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு.. ஆகியோரின் பணிகள் சிறப்பு… ஷான் என்பவர் இயக்க ரஞ்சித் தயாரித்துள்ளார்.

வசனங்கள் சூப்பர்..

தீர்ப்புக்குப் பின்னும் நீதி கிடைக்கப் போராடனுமா.?… தப்பு செஞ்சவங்க சுதந்திரமா சுத்துறாங்க.. பாதிக்கப்பட்டவங்க நிலைமை மோசம்… போற உயிரு போராடியே போகட்டும் சார்… என்ற வசனங்கள் கைதட்டல்களை அள்ளும்.

ரஞ்சித் தயாரிப்பாளர் என்றாலே நம்பி போகலாம் என்பதை பொம்மை நாயகியும் உறுதி செய்துள்ளது. தயாரிப்பு நீலம் புரொடக்சன்ஸ்..

ஆக பொம்மை நாயகி்… நீதி தேவதை

——–

யோகிபாபு, சுபத்ரா, ஹரி,
ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப், நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதி என அனைவரின் நடிப்பும் அருமை.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ஷான்.

ஒளிப்பதிவு -அதிசயராஜ்,
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு

பாடல்கள் , கபிலன், அறிவு , லோகன், சித்தன் ஜெயமூர்த்தி,

சவுண்ட் – அந்தோனி ஜே ரூபன்.
சண்டைபயிற்சி – ஸ்டன்னர் சாம்.
உடைகள் – ஏகாம்பரம்.

பா.இரஞ்சித். மற்றும்
யாழி பிலிம்ஸ் மனோஜ் லியோனல் ஜேசன்.
இணை தயாரிப்பு.
வேலன், லெமுவேல்

Bommai Nayagi movie review and rating in tamil

Meippada Sei – மெய்ப்பட செய் விமர்சனம்.; இன்றே செய்

Meippada Sei – மெய்ப்பட செய் விமர்சனம்.; இன்றே செய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Adhav Balaji, Madunika, PR Tamil Selvam, Adukalam Jayabal, OAK Sundar, Super Good Subramani, Rajkapoor, Raghul Thatha, Benjamin
Directed By : Velan
Music By : Bharani
DOP : R.Vel
Produced By : SR Harshith Pictures – PR Tamil Selvam

ஒன்லைன்…

குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடுகின்றனர். அதன் பின் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள்? என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலர்கள்.

வழக்கம்போல காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது.

எனவே காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டு சென்னைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு துணையாக 3 நண்பர்களும் செல்கின்றனர். அங்கு தங்கும் வாடகை வீட்டினால் பெரிய பிரச்சனை வருகிறது.

அந்த பிரச்சினையை எதிர்த்து போராடி வில்லன் கும்பலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க களத்தில் இறங்குகிறார்கள்.

இறுதியில் என்னானது என்பதே ‘மெய்ப்பட செய்’.

கேரக்டர்கள்…

நாயகன் ஆதவ் பாலாஜிக்கு இதுதான் முதல்படம் என்பது போல் இல்லாமல் ரொமான்ஸ், ஆக்சன் என முயச்சித்துள்ளார்.

நாயகி மதுனிகா தன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். தாய்மாமனாக வந்த பி.ஆர்.தமிழ் செல்வம் அடாவடி வில்லன். இறுதியில் இவரது கேரக்டர் திருப்புமுனை எதிர்பாராத ஒன்று.

கட்ட கஜா என்ற தாதாவாக ஆடுகளம் ஜெயபால்.. இவரது தோற்றமும், வசன உச்சரிப்பும் பலம்.. நடக்க முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டலான நடிப்பு.

ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன் & நாயகனின் நண்பர்கள் அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

பரணியின் இசையில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு. பின்னணி இசையில் கூடுதல் கவனம் தேவை.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் கேமராவில் பாடல் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் ரசிக்கும் படி உள்ளது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாலியல் குற்றங்கள் படங்கள் நிறைய வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. அதே சமயம் பாலியல் குற்றங்களுக்கான தீர்வையும் இயக்குனர் வேலன் சொல்லி இருப்பது கவனம் பெறுகிறது. ஆனால் திரைக்கதையில் சொல்ல வேண்டிய விஷயத்தை கமர்சியல் கலந்து சொல்லி இருப்பதால் படம் வேறு பாதையில் பயணிப்பது போல உணர்வைத் தருகிறது..

ஆக.. மெய்ப்பட செய்.. இன்றே செய்

Meippada Sei movie review and rating in tamil

FIRST ON NET துணிவு பட விமர்சனம்.; வங்கி கொள்ளை வல்லவன்

FIRST ON NET துணிவு பட விமர்சனம்.; வங்கி கொள்ளை வல்லவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கியை கொள்ளை அடிக்கும் கேங் லீடராக அஜித். இவருக்கு துணையாக மஞ்சுவாரியர். போலீசாக சமுத்திரக்கனி.

கதைக்களம்…

ஒரு சிட்டியின் மையப் பகுதியில் இருக்கும் வங்கியை கொள்ளை அடிக்க செல்கிறார் அஜித். இவருக்கு துணையாக செயல்படுகிறார் மஞ்சு வாரியர்.

கணக்கில் வராத பல கோடி ரூபாயை வங்கியில் பதுக்கி இருக்கிறார் வங்கியின் முதலாளி.

இதனை அறிந்து கொண்ட அஜித் கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்.. அதே சமயத்தில் வேறு இரண்டு கும்பலும் கொள்ளை அடிக்கத் திட்டமிடுகிறது.

பணம் யாருக்கு போனது? அஜித் என்ன செய்தார் ? கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடிக்க அஜித் திட்டம் போட்டது ஏன்? என்பதே கதை..

கேரக்டர்கள்…

கொள்ளையடிக்க போனாலும் மாஸ் காட்டியுள்ளார் அஜித்.. ஆரம்பம் முதலே ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

இடைவேளை காட்சி எதிர்பாராத ஒன்று.. ஆட்டம் போட்டுக் கொண்டே அஜித் பேசும் ஒவ்வொரு வசனங்களும் வேற லெவல்..

ஸ்டைலிஷ் மஞ்சுவாரியர் கேரக்டர் சூப்பர்.

நேர்மையான கமிஷனராக சமுத்திரக்கனி. கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர்..்இருவரும் கவனிக்க வைக்கின்றனர்

பேங்க் மேனேஜர் ஆக ஜிஎம் சுந்தர், மெயின் வில்லன் பேங்க் சேர்மன் ஜான் கொகேன், இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாள் சாமி..

சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், வீரா, பகவதி பெருமாள், ஜிஎம். சுந்தர் உள்ளிட்டோர் கச்சிதம்..

பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் காமெடி ரசிக்க வைக்கிறது. ஆனால் பாலசரவணன் பாவம்.. வங்கி அதிகாரியாக ஜிஎம் சுந்தர் மற்றும் பிரேம்குமார்.. இதில் பிரேம் குமார் கதாபாத்திரம் செம ட்விஸ்ட்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு நீரில் ஷா.. எடிட்டர் விஜய் வேலுக்குட்டி.. வங்கி கொள்ளை காட்சிகள் அதிர வைக்கின்றன.. முக்கியமாக வங்கி செட்டப் ரசிக்க வைக்கிறது..

கலைப்பணி கச்சிதம்… ஸ்டன்ட் இயக்குனர்… தங்கள் பணிகளில் கச்சிதம்.. சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர் பாராட்டுக்குரியவர்..

ஜிப்ரான் இசையில் உருவான சில்லா சில்லா பாடல் வேற லெவல் ரகம்.. பாடலுக்கு தியேட்டர் அதிருகிறது.. அஜித் மாஸ் லுக்கில் ஆட்டம் போட்டு உள்ளார்.

ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.

வங்கிக் கொள்ள என்றாலும் அதனை ஹாலிவுட் லெவலில் படமாக்கி உள்ளார் வினோத்..

வெறும் கொள்ளை என்பதோடு முடிக்காமல் அதில் மியுச்சுவல் பண்ட், பேங்க் மினிமம் பேலன்ஸ், டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு என பல விஷயங்களை பாடம் எடுத்துள்ளார்…

ஆனால் படம் முழுவதும் லட்சணக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் வெடித்து இருக்கும்.. அதுபோல ஆயிரம் பாம்கள் வெடித்து இருக்கும்..

ஆக பொங்கல் பாம் கொடுத்துள்ளனர்.

ஆக ‘துணிவு… வங்கி கொள்ளை வல்லவன்

Thunivu movie review and rating in tamil

FIRST ON NET வாரிசு பட விமர்சனம் 3/5..; விஜய் இருக்கூ.. விஷயம் இருக்கா.?

FIRST ON NET வாரிசு பட விமர்சனம் 3/5..; விஜய் இருக்கூ.. விஷயம் இருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தொழில் அதிபர் சரத்குமார் குடும்பத்திற்கு 2 மூத்த மகன்கள் மூலம் பிரச்சினை வருகிறது.. அந்த குடும்பத்தின் 3வது வாரிசு விஜய் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? என்பதே கதை.

கதைக்களம்…

சரத்குமார் ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள்.. முதல் மகன் ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்) 2வது மகன் ஷாம்.. 3வது மகன் விஜய்.

ஒரு கட்டத்தில் தனது பிசினஸை விஜய்யிடம் கவனிக்கு சொல்கிறார் சரத்குமார்.. ஆனால் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ நினைக்கிறார் விஜய்.

இதனால் அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் வெடிக்க குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார் விஜய்.

இதன் பின்னர் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் என 2 மகன்களும் சொத்தை அடைய சதி திட்டம் தீட்டுகின்றனர்.

மற்றொரு பக்கம் சரத்குமாரின் தொழில் சாம்ராஜ்யத்தை வீழ்த்த நினைக்கின்றனர் பிரகாஷ்ராஜ் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன்.

இறுதியில் யார் வென்றார்கள்? விஜய் திரும்பி வந்தாரா? சரத்தின் அடுத்த வாரிசு யார்.? வாரிசு என்ன ஆனார் என்பதே கதை..

கேரக்டர்கள்…

ஸ்டைலிஷ் ஆக ஸ்மார்ட்டாக வருகிறார் விஜய்.. அலட்டிக் கொள்ளாத அறிமுகம்.. ஆனால் சில காட்சிகளில் ஹேர் ஸ்டைல் சுத்தமாக செட்டாகவில்லை..

வழக்கமான பன்ச் டயலாக்.. துள்ளல் ஆட்டம்.. அதிரடி ஆக்ஷன் என தெறிக்கவிட்டுள்ளார் விஜய்.. சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் கூடுதல் உணர்ச்சிகள் தேவை…

கொஞ்சி கொஞ்சிப் பேசி உடலை ஆட்டி, ஆட்டி நடித்த காட்சிகள் மோசமாக உள்ளது.. சில நேரம் காஞ்சனா பட லாரன்ஸ் காட்சிகளை நினைவுபடுத்துகிறது.. டி ஆர் ஸ்டைலில் இது தமிழ் புலி.. வீர புலி என்பது போல விஜய் பேசும் வசனங்கள் சிரிப்பை கூட வர வைக்க வில்லை..

ராஷ்மிகாவுக்கும் தமிழுக்கும் ராசியியே இல்லை போல.. ஏதோ இரண்டு காட்சிகளில் வருகிறார்.. ஆட்டம் போடுகிறார் கிளைமாக்ஸில் வருகிறார் அவ்வளவுதான்..

பிரகாஷ்ராஜ் சரத்குமார்… வலி மிக்க வலிமையான தந்தையாக சரத்குமார் தெரிகிறார்.. பிரகாஷ்ராஜ் பெரிதாக பிரகாசிக்கவில்லை..

கிளைமாக்ஸ் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார் ஷாம்.. அதுபோல ஹீரோவுக்கு இணையாக ஸ்மார்ட்டாக இருக்கிறார்..

பிரபு ஸ்ரீகாந்த் ஜெயசுதா ஸ்ரீமன் சுமன் விடிவி கணேஷ் வெங்கட்ராமன் சங்கீதா உள்ளிட்டோருக்கு பெரிய வேலையில்லை..

விடிவி கணேஷ் & ஸ்ரீமன் ஏன்..?? குஷ்பூ படத்தில் இருப்பதாக சொன்னார்கள்?? எங்கே வந்தார் என்றே தெரியல.. அது சரி ராஷ்மிகாவுக்கும் அதே நிலைமைதான்.

யோகி பாபு காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். எஸ்ஜே சூர்யா கேரக்டர் டோட்டல் வேஸ்ட்.

டெக்னீஷியன்கள்..

தமனின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே மிரட்டலாக உள்ளது.. காமெடி காட்சிகளில் பின்னணி இசை ஒலிக்கிறது அவைஎல்லாம் குழந்தைத்தனமான இசையாக இருக்கிறது.

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் மட்டுமே ரசிகர்களை எழுந்து ஆட்டம் போட வைக்கிறது.. பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.. முக்கியமாக விஜய்யின் வீடு.. விஜய் அறிமுக காட்சி… ஆபிஃஸ் இடம்… வில்லனுடன் மோதும் காட்சி என ரசிக்க வைக்கிறார்..

படத்தில் ஒரு காட்சியிலாவது சேரி மக்களை காட்ட வேண்டும் என்பதற்காகவே விஜய்யின் அண்ணன் மகள் காணாமல் போகும் காட்சி திணித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். இடைவேளைக்கு பின்னர் வரும் போர்ட் மீட்டிங் காட்சிகள் தேவையே இல்லை.. 170 நிமிடங்கள் ஓடும் படத்தை குறைத்து இருக்கலாம்..

முக்கியமாக சரத் – ஜெயசுதா 60வது கல்யாணம்… அந்த காட்சியில் ஒரு பாடலை வைத்திருக்கலாம்.. குழந்தைகள் பெற்றோருக்கு செய்து வைக்கும் திருமணம் அது ஒன்றுதான்.. அதில் அழகான வார்த்தைகளை போட்டு ஒரு இசையாக கொடுத்திருக்கலாம்.. தேவையில்லாமல் தாளம் மட்டுமே போட்டு ஆட்டம் போட வைத்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தை தில் ராஜு சிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.. விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கமர்ஷியல் கலந்து குடும்ப செண்டிமெண்ட் உடன் விருந்து படைத்துள்ளார் வம்சி.

எவ்வளவு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்றாலும் அதிலும் சொத்து பிரச்சனை இருக்கும் குடும்ப பிரச்சனை இருக்கும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் வம்சி..

அதுபோல மகன்கள் அடித்து கொண்டு பிரிந்து சென்றாலும் தாய் பாசம் என்றுமே குறையாது.. தாய் படும் வேதனைகளை காட்டி இருப்பது தாய்மார்களை கண்கலக்க வைக்கும்..

ஒரு சில வசனங்கள் குடும்ப செண்டிமெண்ட்டை அழகாக சொல்கிறது.. சரத்குமாரை பார்த்து விஜய் பேசும்போது.. “அப்பா நான் உங்க வழியில் நடக்கல.. ஆனால் எனக்கு நடக்க சொல்லி கொடுத்தது நீங்க தான்..

பிடிக்காம வாழ்றதை விட பிரிஞ்சு போயிடலாம்…. உள்ளிட்ட சில வசனங்கள் கவனம் பெறுகின்றன..

குடும்பப் பெண்களை கவரும் வகையில் சில குடும்ப பிரச்சினைகளை காட்டி இருப்பது பெண்களுக்கு பிடிக்கும்.. கூட்டுக் குடும்பம் என்பதால் குழந்தைகளுக்கான சில காட்சிகளை வைத்திருக்கலாம்..

இடைவேளைக்கு முன்னர் வரும் நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன..

ஆக இந்த வாரிசு… குடும்பச் சொத்து.!!

விஜய் இருக்கூ.. விஷயம் இருக்கா.??

Varisu Varasudu review and rating..

More Articles
Follows