என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

நடிகர்கள் : அல்லு அர்ஜுன், அனு இமானுவேல், சரத்குமார், அர்ஜுன், நதியா, சாருஹாசன், போமன் இரானி, சாய்குமார், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர்
இயக்கம் : வி. வம்சி
இசை : விஷால் – சேகர்
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி
எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஸ்ரீசா ஸ்ரீதர் லகடபாடி

en peyar suriya en veedu india anu emmanuel

கதைக்களம்…

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.. இந்த டைட்டிலேயே நாயகனின் பெயரையும் அவரின் தேச வெறியையும் புரிந்துக் கொள்ளலாம்.

ராணுவ வீரரான அல்லு அர்ஜுன், தன் தாய் நாட்டு மீதும், ராணுவ பணி மீதும் வெறித்தனமான பாசம் வைத்திருக்கிறார்.

பசி வந்தால் அதிகமாக சாப்பிடுவேன். உறக்கம் வந்தாலும் அதிக நேரம் உறங்குவேன். கோபம் வந்தாலும் அப்படித்தான் என அதிரடியான மனிதர் இவர்.

இவரது கோப சுபாவமே ராணுவத்தில் இவருக்கு பின்னடைவாக அமைந்துவிடுகிறது. ஒரு முறை மேலதிகாரின் அனுமதியின்றி தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார்.

இதனால் இவர் நேசிக்கும் ராணுவ பணியையும் இழக்க நேரிடுகிறது. மேலும் இவரின் கோபத்தால் காதலியையும் இழக்கிறார்.

ஆனால் மீண்டும் ராணுவ பணியில் சேர வேண்டுமென்றால் இந்தியாவின் பிரபல மனநல மருத்துவரான அர்ஜுனிடம் சான்றிதழ் வாங்கி வர உயர் ராணுவ அதிகாரி உத்தரவு இடுகிறார்.

அர்ஜுன் தான் அல்லு அர்ஜுனின் அப்பா என்றாலும் இருவருக்கும் தீராத பகை ஒன்று இருக்கிறது.

இதனிடையில் 21 நாட்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியாக வாழ்ந்தால் சர்ட்பிகேட் தருகிறேன் என்கிறார் அர்ஜுன்.

இவரது தன் அமைதியான வாழ்க்கையை தொடங்கும்போது அந்த ஊர் தாதா கல்லாவால் (சரத்குமார்) பல பிரச்சினைகள் உருவாகிறது.

தன் கண் முன் நடக்கும் தவறுகளை தட்டிகேட்டாரா? அல்லது 21 நாட்கள் அடிதடியில் இறங்கினாரா? தந்தை போட்டியில் வென்றாரா? மீண்டும் ராணுவ பணியில் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

surya india song
கேரக்டர்கள்…

அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற பட்டம் உண்டு. அந்த பட்டத்தை அக்கறையுடன் படம் முழுவதும் நிறுத்தியிருக்கிறார்.

அப்படியொரு ஸ்டைலிஷ் லுக்கை தன் பாடி லாங்குவேஜ் முதல், ரொமான்ஸ், டான்ஸ், சென்டிமெண்ட், தேச பக்தி என அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

சுருட்டு குடிப்பது முதல் வில்லன்களை புரட்டி எடுப்பது வரை அமர்க்களம் பண்ணி விட்டார் அல்லு.

உடம்மை பிட்டாக வைத்திருப்பதால் ஒவ்வொரு காட்சியிலும் கம்பீரத்துடன் தெறிக்க விட்டுள்ளார் அல்லு.

நாயகி அனு இமானுவேல்… ரசிகர்களை அனு அனுவாக ரசிக்க வைக்கிறார்.

en peyar suriya en veedu india sarathkumar

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அர்ஜுன். தந்தையாகவும் ஆபிசராகவும் பேசும் காட்சிகள் அருமை.

சரத்குமாருக்கு மிரட்டல் வில்லன் வேடம். சாப்பிட்டுக் கொண்டே எதிரிகளை துவம்சம் செய்து செம. அதுபோல் இறுதியில் அல்லு அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டே சண்டை போடுவது செம மாஸ்.

ஆனால் க்ளைமாக்ஸில் சரத்குமாரின் மாஸ் கொஞ்சம் டம்மியாகி விட்டது.

நதியா மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோருகு குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவை தந்துள்ளன.

இவருடன் சாய்குமாரின் மகனாக வரும் அந்த அன்வர் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.

en peyar suriya en veedu india allu arjun anu

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் – சேகர் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் அந்த ஆட்டம் அருமை.

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அருமையான காட்சிகளை கண்முன் கொண்டு வந்து ரசிக்க வைக்கிறார்.

படத்தின் பைட் மாஸ்டர்களை (கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹைன்) பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

வழக்கமான தெலுங்குப் படம் போல அல்லாமல் நேரடி தமிழ் படத்தை பார்ப்பதை போன்று கொடுத்து அசத்தியிருக்கிறார் வம்சி.

ஒரு படத்தில் காதல், மோதல், ஆக்சன், சென்டிமெண்ட், தேச பக்தி, பாட்டு டான்ஸ் என அனைத்திலும் சரி சமமாக கொடுத்து விருந்து படைத்திருக்கிறார்.

படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் சரியாக வேலை வாங்கியிருக்கிறார் வம்சி.

இரண்டாம் பாதி இறுதியில் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். தெலுங்கு பாடல்கள் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டவில்லை.

மற்றபடி எந்த குறையும் இல்லை.

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.. படக்குழுவினருக்கு ராயல் சல்யூட்

Comments are closed.