மரகத நாணயம் விமர்சனம்

மரகத நாணயம் விமர்சனம்

நடிகர்கள் : ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம் மற்றும் பலர்.
இயக்கம் : ஏஆர்கே சரவன்
இசை : திபு நைனன் தாமஸ்
ஒளிப்பதிவாளர் : பிவி ஷங்கர்
எடிட்டர்: ஜிகே பிரசன்னா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : அக்சஸ் பிலிம் பேக்டரி (ஜி. டில்லி பாபு)

Maragadha Naanayam nikki galrani

கதைக்களம்…

அரசர் காலத்தில் உள்ள ஒரு மரகத நாணயம் பல பேரிடம் கை மாறி கை மாறி, எம்எஸ் பாஸ்கரிடம் வந்தடைகிறது.

இந்நிலையில் சீனா நாட்டைச் சேர்ந்த ஒருவர் மைம் கோபியிடம் அதனை தனக்கு பெற்றும் தரும்படி வருகிறார்.

ஆனால் அந்த மரகத நாணயத்தை தொட்ட எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்பதால் எல்லாரும் பின்வாங்குகிறார்கள்.

அதனை தொட்ட 130க்கும் மேற்பட்டோர் அந்த மரகத நாணயத்தால் இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில் ரூ. 10 கோடிக்கு ஆசைப்பட்டு இந்த புரொஜக்டை எடுக்கின்றனர் ஆதி மற்றும் டேனி.

இவர்களுக்கு துணையாக இறந்துபோன முனிஷ்காந்த் வருகிறார். அவருக்கு துணையாக இறந்துபோன நிக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் வருகின்றனர். (அது எல்லாம் எப்படி என்று கேட்டால் லாஜிக் இருக்காது)

இதனிடையே ஆனந்த் ராஜ் கும்பலும் அந்த மரகத நாணயத்தை தேடி அலைகின்றனர்.

மரகத நாணயம் யாருக்கு கிடைத்தது? எப்படி கிடைத்தது? பேய்கள் எப்படி உதவியது என்பதே இந்த மரகத நாணயம்.

Maragatha-Naanayam-Movie-Video-Songs

கேரக்டர்கள்…

ஈரம் படத்திற்கு பிறகு ஒரு ஆதிக்கு இதில் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அவரது உடலுக்கு ஏற்ற ஆக்சன் இல்லையென்றாலும் கதையோடு ஒன்றிவிடுகிறார்.

அழகான நாயகி நிக்கி கல்ராணி அசத்தல். புடவை என்றாலும் ஜீன்ஸ் என்றாலும் அவருக்கு செம பிட்.

இதில் இவரின் கேரக்டருக்கு காளி வெங்கட் வாய்ஸ் கொடுத்திருப்பது கலக்கல். அதற்கான காரணத்தை படத்தில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆதிக்கு இணையாக ஸ்கோர் செய்பவர் முனிஸ்காந்த் ராமதாஸ்தான். எலுமிச்சை பழத்தை கொண்டு உயிர்தெழுத்துவதும், அதன்பின்னர் இவர் செய்யும் சேஷ்டைகளும் காமெடியின் உச்சம்.

டிவிங்கள் ராமநாதன் கேரக்டரில் அமர்களப்படுத்தியிருக்கிறார் ஆனந்த்ராஜ். இவரின் அடியாட்களும் அவர்களின் யூனிபார்ம் என அனைத்தும் கலக்கல்.

இப்ப காமெடி டிரெண்ன்ட் ஆனதால் வில்லன் நானும் காமெடி பண்ண வேண்டியதா போச்சு என்னும்போது சிரிக்க வைக்கிறார்.

Maragadha Naanayam arunraja kamaraj

அருண்ராஜா காமராஜ் அருமையான தேர்வு. இவர் முன் ஆனந்த்ராஜின் ரேடியோ பாட்டு பாட இவர் ஆடுவதும், பின்னர் யோவ் உங்க அண்ணன் எதுக்குயா? என்கிட்ட பேசுறாரு? நீ பாட்ட போடுயா? என்று சொல்லும்போது ரசிக்க வைக்கிறார்.

ரங்கூனில் கலக்கிய டேனி இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.

கேரளா நம்பூதிரியாக வரும் கோட்டா ஸ்ரீநிவாச ராவ், எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் பிரம்மானந்தம் ஆகியோருக்கு இன்னும் நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கலாம்.

maragatha-naanayam-aadhi-nikki-galrani-pictures

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிவி ஷங்கரின் ஒளிப்பதிவில் அந்த ஆவி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

பாடல்களை விட திபு நைனன் தாமஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

Maragatha-Naanayam-Movie-Songs

இயக்கம் பற்றிய அலசல்…

எல்லா படத்திலும் உயிரோடு இருப்பவர்களின் உடலில் ஆவி புகுந்துவிடும். ஆனால் இதில் இறந்தவரின் உடலில் சென்று, மற்றவரின் குரலை பெற்று வருகிறது என்று பல வித்தியாசங்களை காட்டியிருக்கிறார்.

பேய்களாக வரும் பிணங்களுக்கு வாய்ஸ் மாற்றி வித்தியாசம் காட்டிய இயக்குனர் ஏஆர்கே சரவனுக்கு வாழ்த்துக்கள்.

ஆவி எப்படி மனிதனுடன் இணையும்? பிணங்கள் எப்படி உயிரோடு வரும்? வாய்ஸ் எப்படி வந்தது? போன்ற லாஜிக்குகளை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்றால் நிச்சயம் இந்த மரகத நாணயத்தை ரசித்து சிரிக்கலாம்.

மரகத நாணயம் மயக்கும் நாணயம்

Comments are closed.

Related News

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும்…
...Read More
ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள 'மரகத…
...Read More